yaarukku theriyum ungala maathiriye Bala kooda yosichirukkalam..avara villain ah pottu kadasila oru Bala-style killing climax vaikka kooda yosichirukkalam........
Printable View
oru nalladhu kettadhu nadakkattum aprama pesikkivom...
கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ள போடா போடி
http://tamilcnn.com/upload-files/mar...dapoti_001.jpg
சிம்பு நடித்துள்ள போடா போடி திரைப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் சிம்பு நடிக்கும் போடா போடி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்துள்ளார். தரண் இசையமைக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார்.
போடா போடி படப்பிடிப்பு முழுவதுமே லண்டனில் நடத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் LOVE ANTHEM பணிகளை முடித்து விட்டு சிம்பு சென்னை திரும்பி இருப்பதால், போடா போடி படப்பணிகளில் ஈடுபட இருக்கிறார்.
வருகிற 20ம் திகதி முதல் சீனாவின் ஆட்சியில் உள்ள MACAU- நாட்டில் போடா போடி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படப்பிடிப்போடு படத்தின் அனைத்து காட்சிகளும் முடிகின்றன. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்து, படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழுவினர் தீர்மானித்துள்ளார்கள்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
mount?
unga gang dhaan andha last row seat ellaam odachi vechavangalaa???
சகுனி - ஒரு வில்லங்க செய்தி
http://tamil.webdunia.com/articles/1...312044_1_1.jpg
WD
சகுனி படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்த கார்த்தியின் குடும்பம் படம் குறித்து கவலை கொண்டதைப் பற்றி எழுதியிருந்தோம். *ரீஷூட் பண்ணப்படலாம் என்று நாம் எழுதியதுதான் நடக்கும் போலிருக்கிறது.
சகுனியில் வில்லனாக வரும் சலீம் கௌசின் பகுதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாக கார்த்தியும், குடும்பமும் கருதுகிறது. சலீம் கௌஸ் வெற்றிவிழா படத்தில் அசத்திய நடிகர். சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருப்பார். மலையாளம் தாழ்வாரம் படத்தில் மோகன்லாலுக்கு இணையாக இவர் காட்டிய நடிப்பு இப்போதும் அங்கு சிலாகிக்கப்படுவதுண்டு.
சகுனியில் எது ச*ரியில்லை என*த் தெ*ரியவில்லை, சலீம் கௌஸை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறார்கள். அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைப்பதாக திட்டம். ஏறக்குறைய படம் முடிந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது படத்துக்கு நெகடிவாக அமைந்துவிடும் என்பதால், சலீம் கௌஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் முன் அவரை நீக்கிவிட்டதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மேலும், இந்த மாற்றம் இயக்குனர் சங்கர் தயாள் இல்லாமல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையா பாஸ்?
http://tamil.webdunia.com/entertainm...20312044_1.htm
ரஹ்மான் இசையில் தனுஷ் - இது ரொம்ப லேட்டஸ்ட்
http://tamil.webdunia.com/articles/1...310025_1_1.jpg
3 படத்துக்குப் பிறகு தனுஷ் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்விக்கு ஆச்ச*ரியமான பதில் கிடைத்திருக்கிறது.
கொலை வெறி புகழ் தனுஷை நார்த் இந்தியா வரை கொண்டு சேர்த்திருக்கிறது. தனுஷின் புதிய படத்தை இயக்குகிறவர் பரத்பாலா. ரஹ்மானின் ஜன கண மன ஆல்பத்தை இயக்கியவர்.
இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சர்வதேச புராஜெக்ட்களில் பிஸியாக இருக்கும் ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், கௌதமின் இதுவரை தொடங்கப்படாத படமான யோஹன் அத்தியாயம் ஒன்று போன்ற சொற்பப் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்.
ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainm...20310025_1.htm
idhu romba old....
Rajini does it after two decades!
http://www.accesskollywood.com/akd-i...n-14-03-12.jpg
Rajinikanth had sung a song in Mannan which was set to tune by maestro Ilayaraja. This was in the year 1992. After two decades, the Superstar is to do it again and this time it is for Kochadaiyaan. This is not exactly a song but poetic verses penned by Vairamuthu. Rajini will narrate these poetic verses. Interestingly, Oscar winner AR Rahman has scored the music for this song.
The recording has been completed already. Sources say that Rahman had recorded this song with Rajini’s voice on March 11th.
http://www.accesskollywood.com/news-...-03-122255.htm
EMITAA-international-award for Gaurav- Best Debut Director -thoonga Nagaram
Attachment 1140
Found this on fb:
இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!
இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;
வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.
அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.
உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.
விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.
https://fbcdn-sphotos-a.akamaihd.net...38631384_n.jpg
இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.
இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.
கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.
Sonam to romance Dhanush - Times of India
டிராஃபிக் போலீஸாக சரத்குமார்!
http://cinema.vikatan.com/images/Art...s/17sarath.jpg
மலையாள திரையுலகினர் அனைவருமே புகழ்ந்து தள்ளிய படம் 'டிராஃபிக்'. இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், அடுத்தடுத்த படங்களுக்காக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் இப்படத்தின் ரீமேக்கில் இருந்து கமல் விலகிவிட்டார்.
சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய பாத்திரமான டிராஃபிக் போலீஸாக சரத்குமார்.
மலையாளத்தில் இப்படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழிலும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கில் இருந்து ராஜேஷ் பிள்ளை விலகிவிட்டார்.
இப்போது இந்தி ரீமேக்கான டிராஃபிக்கை இயக்க இருக்கிறாராம் ராஜேஷ்.
தமிழ் ரீமேக்கை உடனே இயக்க திட்டமிட்டாராம், ஆனால் தமிழ் ரீமேக் ஆரம்பிக்க தாமதம் ஆவதால் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் ராஜேஷ்.
தமிழ் ரீமேக்கை ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த SHAHEED KADER இயக்க இருக்கிறார்.
இப்படத்தினை ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் ராதிகா சரத்குமார்.
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
பட்ட கடனுக்காக வீட்டை விற்றாரா விஷால்!
கடனை அடைக்க நடிகர் விஷால், அவர் ஆசையாக கட்டிய வீட்டை விற்றுவிட்டாராமே? என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சு!!
புஸ்ஸென போன சமீரா – விஷால் நடித்த வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது ராடான் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து, வளர்ந்து வரும் நேரத்தில் ஏனடா வீண் வம்பு என்று ,அநாவசிய சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விஷால் ரூ.9 கோடி பணத்தை அடித்து, பிடித்து சமர்த்தாக செட்டில் செய்து விட்டாராம்.
விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.
இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி தருவதாக விஷால் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டி, நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது ராதிகா புகார் கூறினார் என்பது தெரிந்ததே.
ஆனால் இந்த தெரிந்த விவகாரத்தை, வீட்டை விற்று தான் செட்டில் செய்தார் விஷால் என்பது தான் இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டது என்கிறது கோடம்பாக்கம்.
“இது எல்லாம் வெறும் கட்டுக்கதை, எந்த வீட்டையும் நான் விற்கவில்லை..ஆனால் பணத்தை பைசா பாக்கியில்லாமல் ஃபைசல் பண்ணியாச்சு என்கிறார் விஷால். இந்த மாதிரியான வதந்திகள் கிளம்பிய வேகத்திலேயே காணாமல் போகும். இவற்றிற்கு எல்லாம் விளக்கம் சொல்ல எனக்கு நேரம் இல்லை, அவசியமும் இல்லை. எந்த சொத்தை எப்போது வாங்க வேண்டும்..என்பது தனிநபர் விருப்பு, வெறுப்பு பொறுத்தது என்றார் கொஞ்சம் காட்டமாக”!
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
தீபாவளிக்கு கோச்சடையான் ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி!!
கோச்சடையான் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான கோச்சடையான், படப்பிடிப்பு லண்டனில் சுமார் 20 நாட்கள் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், தனது மகளும் இப்பட இயக்குனருமான சவுந்தர்யாவுடன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். இவர்களுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு, ரஜினி அளித்த பேட்டி:
கோச்சடையான் படத்தை எனது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இது எனக்கு ஒரு புதிய அனுபவம். என் மகள் சிறந்த அறிவாளி. அவரது டைரக்ஷனில் நடிப்பது சந்தோஷம். இந்த படத்தில் பழைய ரஜினியை பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். பழைய ரஜினியை அல்ல, அதைவிட சூப்பரான ரஜினியை பார்ப்பீர்கள்.
படம் நன்றாக இருக்கும். ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் முடியும். அநேகமாக இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் வெளிவரலாம்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘இந்த படத்தை முழுக்க முழுக்க சவுந்தர்யாதான் டைரக்ஷன் செய்கிறார். இந்த படத்தில் நான் மேற்பார்வையாளராகத்தான் இருப்பேன். கோச்சடையான் பட ஷூட்டிங் லண்டனில் 20 நாட்கள் நடக்கும். படத்தின் 40 சதவீத பணிகள் அங்கு முடிவடையும்.
வரும் ஏப். 6ம் தேதி வரை ஷூட்டிங் நடக்கிறது. 7ம் தேதி சென்னை திரும்புகிறோம். அதன் பின்பு, தமிழகத்திலும், கேரளாவிலும் ஷூட்டிங் நடத்த உள்ளோம். கோச்சடையான் பணிகள் முடிந்த பின்பு அடுத்தகட்டமாக ‘ராணாÕ படத்தின் பணியை தொடங்க இருக்கிறோம் என்றார்.ரஜினியின் லண்டன் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏராளமான ரசிகர்கள், சென்னை விமான நிலையத்தில் கூடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!
நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,
திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.
ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.
சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
Reema Sen- Married
Attachment 1148Attachment 1149
not a latest news, but jus wanted to share this pic...
one of the rare times when she looks good for me...
http://i42.tinypic.com/oizk9f.jpg
ஓகேஓகே, 3 படங்களுக்கு யு
விரைவில் வெளிவரவிருக்கும் இரு முக்கியத் திரைப்படங்களுக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
தேர்வு நேரம் என்பதால் எந்தப் பெரிய படமும் இப்போது வெளியாகவில்லை. தேர்வுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படமும், தனுஷின் 3 படமும் வெளியாகின்றன. இவ்விரு படங்களும் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன.
படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள். இரு படங்களுக்கும் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கினர். இரு படங்களின் ரிலீஸ் தேதியும் இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainm...20320021_1.htm
பூபதி பாண்டியன் இயக்கத்தில் நயன்தாரா
நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தியை ரப்பர் போட்டு அழித்துவிடுங்கள். அந்த புராஜெக்டில் நயன் இதுவரை கையெழுத்திடவில்லை. அதேநேரம் வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார்.
மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் விஷாலும், விக்ரமும் நட்டாற்றில் விட்டதால் தெலுங்குப் பக்கம் போய் ஹீரோ ஒருவரை பிடித்தார். அவர் கோபிசந்த். இவர் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்கில் இப்போது டாப் ஹீரோ.
இவரை வைத்து இயக்கும் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கிறார் கோபிசந்த். ஜெய பாலாஜி ரியல் மீடியா என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில்தான் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதவிர இரு தெலுங்குப் படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainm...20320024_1.htm
சிம்பு - இன்னொரு வடையும் போச்..
சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டு கடைசி நிமிடத்தில் கே.வி.ஆனந்தின் அளவுக்கதிகமான டாமினேஷனால் கழன்று கொண்ட படம் கோ. அதில் பிறகு ஜீவா நடித்தார். படம் பம்பர் ஹிட். அதிலிருந்து தொடங்கியது அடாவடி. ஹீரோ வேற... ஸ்டாரிங்கிறது வேற. நான் ஸ்டார், ------ வெறும் ஹீரோதான் என்றெல்லாம் தத்துவமழை அவிழ்த்துவிட்டார் சிம்பு. அந்த அடை மழை இப்போதுதான் அடங்கியிருக்கிறது. அதற்குள் வடக்கே இடிஇடிக்கத் தொடங்கியிருக்கிறது.
வெற்றிமாறனின் வட சென்னையில் சிம்பு நடிப்பதாக இருந்ததல்லவா? சமீபத்தில் நடக்கும் இலைமறை பேச்சுக்களை கவனித்தால் சிம்பு வட சென்னையில் நடிக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. சிம்புவால்தான் ராணா வட சென்னையிலிருந்து விலகினார் என்றொரு பேச்சிருக்கிறது. தவிர சிம்பு வேட்டை மன்னனையும், போடா போடியையும் எப்போது முடிப்பார் என்பது சிந்துபாத் கதையாகிவிட்டது. இரண்டை முடித்தாலும் லவ் ஆங்த்தம் மாதிரி வேறெதும் ஆங்த்தத்துக்கு தாவுவாரா என்பதும் உறுதியில்லை.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து ஜீவாவை வைத்து படத்தைத் தொடங்கலாமா என்று யோசித்து வருகிறது தயாரிப்பாளர் சர்க்கிள். அப்படி ஏதாவது நடந்தால் பேஸ்புக்கில் புயல் கிளம்பும், ரசிகர்களா ஜாக்கிரதை.
http://tamil.webdunia.com/entertainm...20321046_1.htm
மார்ச் 30 முதல் தனுஷின் 3 ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
கொலவெறி என்ற ஒரே ஒரு பாட்டுக்காகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தனுஷின், 3 படம் மார்ச் 30ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல்படம் 3. தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் எல்லா ஏரியாக்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஆந்திராவில் ஒரு ஏரியாவில் மட்டும் இப்படம் ரூ.3 கோடிக்கு விலை போய் உள்ளது. இந்த அளவுக்கு தனுஷின் படம் விலை போய் இருப்பதற்கு முக்கிய காரணம் 3 படத்தில் உள்ள கொலவெறி பாடல் தான்.
புதுமுகம் அனிரூத் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் ஒய்திஸ் கொலவெறி… என்ற பாடலை தனுஷே எழுதி, பாடியிருக்கிறார்.
இந்தபாடல் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் இந்த ஒருபாட்டுக்காகவே 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் படம் எப்போது வெளிவரும் என்று அனைத்து தரப்பிலும் ஒரு ஆவல் இருந்து வந்தது. இந்நிலையில் 3 படத்தை மார்ச் 30ம் *தேதி முதல் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பாட்டு மூலம் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்த தனுஷூக்கு, அந்தபாடல் வெளிவந்த பிறகு பிரதமர் விருந்தில் பங்கேற்பு, சச்சினுக்கு ஆல்பம், இதுதவிர ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஆல்பம் இயக்கும் வாய்ப்பு, இந்திபட வாய்ப்பு என்று தனுஷ் டாப் ரேஞ்சுக்கு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
கார்த்தி, ராஜேஷ் கூட்டணியின் ஆல் இன் ஆல் அழகுராஜா!!
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டு படங்களுமே ராஜேஷ் இயக்கத்தில் ஹிட். மூன்றாவது ஒரு கல் ஒரு கண்ணாடி. இதுவும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதற்கு சந்தானமே சான்று. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தையடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். அவரது ஸ்டைலில் படத்துக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா என பெயர் வைத்துள்ளார். கதையில்லாமல்கூட படமெடுப்பேன், சந்தானம் இல்லாமல் எடுக்கமாட்டேன் என்று ஏற்கனவே ராஜேஷ் சபதம் செய்திருப்பதால் சந்தானம் அழகுராஜாவின் நண்பனாக அறிமுகமாவார்.
இதுவரை படத்தின் நாயகியை தேர்வு செய்யவில்லையாம். சந்தானம் இருக்கையில் கார்த்திக்கு ஜோடி எதுக்கு.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
Two big stars' fans clash
http://www.accesskollywood.com/akd-i...r-21-03-12.jpg
It may be decade since the death of the two stalwarts of Tamil cinema – MGR and Sivaji Ganesan but their fans continue to wage war during their films’ release. Recently, the digitized version of the Sivaji Ganesan starrer Karnan was released amidst much fanfare and as a competition MGR fans urged the re-release Kudi Iruntha Koil.
Both these films had a simultaneous release at the theatres. And to the shock of the theatre owners, the fans, who were mostly past 60 years of age, clashed at the theatre premises rising slogans about their idols. Well, the clash continues even after Sivaji and MGR’s deaths.
http://www.accesskollywood.com/news-...-03-122296.htm
ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.
வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
is monojsmba a Hub Bot??? :think:
SS , Chanceless..
:rotfl3::rotfl3::rotfl3:
unga nalla manasu puriyuthu manoj..
bt neenga ellarukkum therinja vishayathai oru vaaram kazhitchu post pandringa..
athaan kastama irukku.. vaanga.. ellar kooda frndlya pesunga.. jus info/post mattum paNNaathinga..
Enai vida neenga senior.. naan sollanum nu avasiyam illa..
மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்!
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் அதன் தயாரிப்பாளர்கள். திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள் தவறான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெட்டிக்குள் முடங்கியிருக்கின்றன.
ஒரு சில படங்கள் பரபரப்பான விளம்பரங்கள் மற்றும் சீன்களில் மாற்றம் செய்து மீண்டும் ரிலீஸ் செய்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் வெங்காயம், ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் ரீ-ரிலீஸாக இருக்கிறது.
இதேபோல சமீபத்தில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்காததால் கத்தரித்த சில சீன்களை சேர்த்து ஏ சான்றிதழோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
STR-at-7UP-Lemon-Pattalam
Attachment 1194Attachment 1195Attachment 1196
Lady Broker To Repair Nayan's Affair
Sources are saying that Kushboo a common friend is attempting to broker a settlement between Nayan and Prabhudeva.
What was considered as a wildest affair once came to a shocking halt with the happening celebrities calling it quits. Sources are saying that a common friend is attempting to broker a settlement between the two.
Known for her open talks about sex and her sexiness yesteryear, Kushboo took charge to repair this affair. But, when Kushboo is asked about the same, she responded that she cannot flag peace between them as it is their personal problem, though I'm their common friend. However she has given a hint that she is in the process by saying that she will not reveal any such attempt to media even if she does one.
With Prabhudeva becoming busy with work in Hindi circuit, Nayan is getting hard to forget him. She is signing all films that are coming her way to wipe out the traces of our dancer-man. We have to see what 'fevi-quick' Kushboo uses to glue these shattered film celebrities!
-Times of India
https://fbcdn-sphotos-a.akamaihd.net...72539441_n.jpg
Vaali advised 2 months rest for injury;
The octogenarian lyricist suffered a fall back home, slipping on his wet bathroom floor. Even though he took it lightly first, it was hard to find balance and walk properly after the fall. Worried he sought professional help, who told him that things could get worse if he didnt take enough rest. Doctors advised that until and unless he takes a 2 month rest, they can’t assure him of a full recovery. Vaali too has taken the advice seriously and is being attended with proper treatment, resting home. Friends and family members have been dropping in with visits and phone calls, inquiring about his condition. He maintains that there’s no reason to worry and will be back to normal in a little while...
Hi
This is not her baby, I read some where this is actually her brother's kid. Besides she looks younger in this pic. :)
சிம்புவின் 'வாலு'!
http://cinema.vikatan.com/images/Art...9simbulove.jpg'LOVE ANTHEM' பணிகளை முடித்துவிட்டு தற்போது தான் ஒப்பந்தமான படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் சிம்பு.
' வேட்டை மன்னன் ',' போடா போடி ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. ' வட சென்னை ' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
' வேட்டை மன்னன் ' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னையில் நடைபெற்று வருகிறது. ' போடா போடி' படத்தின் பாடல் காட்சிகளுக்காக விரைவில் MACAU நாட்டிற்கு செல்ல இருக்கிறார்கள்.
' போடா போடி ' படத்திற்காக MACAU சென்று திரும்பிய உடன், ' வேட்டை மன்ன'னுக்காக பிரேசில் செல்ல இருக்கிறார் சிம்பு.
இவ்வாறு தான் ஒப்பந்தமான படத்திற்காக முழுவீச்சில் ஈடுபட்டு வரும் சிம்பு, நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.
' வேட்டை மன்னன் ' படத்தினை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ், அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தினை தயாரிக்க இருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் விஜய் இயக்க இருக்கிறார். படத்திற்கு ' வாலு ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைக்க தமன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=192:s imbu-new-film-named-vaalu&catid=9&Itemid=103