pudhu mugame - antharangam
http://music.cooltoad.com/music/song.php?id=202335
புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே.. அனுபவமே..
எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே.. என் முகமே..
புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே.. அனுபவமே..
சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே
கண்டதில்லை இதை மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவதிலே
தீபா.... தீபா..
புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே.. அனுபவமே..
ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை
காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா.... தீபா..
காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும் தான் இன்று கனிகின்றது
கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்
காந்தா... காந்தா...
புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே.. அனுபவமே..
எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே.. என் முகமே..
poovinum melliya - kannan varuvaan
http://music.cooltoad.com/music/song.php?id=173729
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி நாடக காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
மூன்றாம் பிறையில் பார்த்தது
பூரண நிலவாய் ஆனது
பிள்ளை தமிழை கேட்டது
கன்னித்தமிழில் பாடுது
மூன்றாம் பிறையில் பார்த்தது
பூரண நிலவாய் ஆனது
பிள்ளை தமிழை கேட்டது
கன்னித்தமிழில் பாடுது
கண்கள் பேசும் ஜாடை என்னவோ
கால்கள் போகும் பாதை என்னவோ
பெண்மை மாலை சூடும் அல்லவோ
சொந்த வீடும் மாறும் அல்லவோ
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி நாடக காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
சேலை கட்டும் தேன் நிலா
வாழ்வில் இன்று திருவிழா
பருவம் இந்த பெண்ணிலா
பார்க்க போகும் கண்ணிலா
சேலை கட்டும் தேன் நிலா
வாழ்வில் இன்று திருவிழா
பருவம் இந்த பெண்ணிலா
பார்க்க போகும் கண்ணிலா
அந்த வானில் செல்லும் மேகமே
அந்த வானுகென்ன சொந்தமோ
அன்று நானும் அந்த மேகமே
இனி நாளை காலம் மாறுமோ
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி நாடக காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
Re: poovinum melliya - kannan varuvaan
http://psusheela.org/tam/audi/ra/tam...aresong151.ram
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
ஓடும் மேகம் ஓடினால்
தேடும் நெஞ்சம் தேடலாம்
தேடும் நெஞ்சம் தேடினால்
செல்லும் மேகம் திரும்புமோ !
அன்று காதல் தேவன் பாடினான்
அதை காலத் தேவன் மூடினான்
அன்று பாடச் சொன்ன பாடலை
ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே !
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
நாங்கள் எழுதிய புத்தகம்
நானே சொன்ன தத்துவம்
இங்கே அந்த தத்துவம்
எங்கே அந்த புத்தகம் ?
ஒரு பக்கம் பார்த்தால் கற்பனை
மறுபக்கம் பார்த்தால் அற்புதம்
அதை முற்றும் பார்க்கும் முன்னமே
ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே ?
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக !
:mrgreen: ganshu :noteeth:
Re: poovinum melliya - kannan varuvaan
Ganesh : Beautiful song, one of my favorites :)
Quote:
Originally Posted by mgb
http://music.cooltoad.com/music/song.php?id=173729
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன் நிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி நாடக காவியம்
அவள் வாழ்க.. தினம் வாழ்க..
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக
sippiyile muththu - anbai thedi
http://music.cooltoad.com/music/song.php?id=191211
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை
ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக்கொண்டு போனால் அது கொடிக்கு சொந்தமில்லை
எடுத்துக்கொண்டு போனால் அது கொடிக்கு சொந்தமில்லை
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
ஜனகன் மகள் இல்லையடி வேதவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளியெனும் கோதை
இருவருமே போன கதை இரண்டு வழி பாதை
இருவருமே போன கதை இரண்டு வழி பாதை
எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டு பிள்ளை
கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டு பிள்ளை
அன்னை என்ன அன்னை இதில் தந்தை என்ன தந்தை
அன்னை என்ன அன்னை இதில் தந்தை என்ன தந்தை
ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணை இல்லை
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக்கொண்டு போனால் அது கொடிக்கு சொந்தமில்லை
அது கொடிக்கு சொந்தமில்லை....
Re: raamanin mohanam ( netri kann )
Quote:
Originally Posted by mgb
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
Just listening :musicsmile: :ty:
Re: raamanin mohanam ( netri kann )
Quote:
Originally Posted by mgb
ராமனின் மோகனம் :flute:
ஜானகி மந்திரம் :flute:
oh wow...that flute tune there is SO LOVELY
Re: raamanin mohanam ( netri kann )
Quote:
Originally Posted by mgb
:BG:
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
:BG:
OMG that veena bg is EVEN more awesome.
Re: pudhu mugame - antharangam
Quote:
Originally Posted by mgb
http://music.cooltoad.com/music/song.php?id=202335
புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே.. அனுபவமே..
எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே.. என் முகமே..
sumaara irukku :?
Quote:
தீபா.... தீபா..
காந்தா... காந்தா...
nice pair
deepa and kantha :lol2:
mrs. deepa kantha :lol2:
Re: sippiyile muththu - anbai thedi
Quote:
Originally Posted by mgb
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்
ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக்கொண்டு போனால் அது கொடிக்கு சொந்தமில்லை
nice :)
good lyrics. manasu baaram aagirathu ...
Quote:
Originally Posted by mgb
அன்னை என்ன அன்னை இதில் தந்தை என்ன தந்தை
அன்னை என்ன அன்னை இதில் தந்தை என்ன தந்தை
ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணை இல்லை
:roll: :mad:
though true :)