:rotfl: நம்ம சங்கதியே வேற!
Printable View
பிரியா...
கறுப்பு வெள்ளைப் படத்தில் கலரில் வரும் பாட்டு என்பதும் ஒரு தனி விசேஷம்..
நல்ல வேளையாக நூலிடை என்று பாட்டில் சொல்லி திரையில் உண்ணிமேரியை காட்டியிருந்தால் கலவரம் ஆகியிருக்கும்.
(உண்ணிமேரி.. ஹி ஹி.. நடிகை தீபாதான் )
மன்மதனின் ரதியும் முன்னாள் ( முந்தைய நாளில் )
பொன் வதனம் பெற்றதென்னால் ( பெற்றது என்னால்தானுங்க )
என்பது சரியாகத் தோன்றுகிறது.
அழகு தேவதையான ரதி கூட தங்க நிற உடல் பெற்றது எங்க பியூட்டி பார்லரில்தான் என்று அர்த்தம் :)
இதுக்கு முதலில் பவர் விளக்கம் கொடுக்கட்டும்.
ஓ! அது...'எந்நாள்' 'எந்த நாள்'-ன்னு நம்மளையே கேள்வி கேக்கறாருன்னு நான் நினைச்சுட்டேன்! Oops! :ashamed:
ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு என்பது சூரியனைக் குறிக்கும். காலைப் பொழுதின் இதமான ஒளிக்கிரணங்கள் அவள் மேனியில் பூசப்பட்டு, அவளை மினுக்கச் செய்கிறது. திங்களைப் போன்ற குளுமை வாய்ந்தவள் நாயகி, அந்த ஒளிமழையில் நனைந்து புதுப் பொலிவு பெறுகிறாள். திங்கள் என்றால் சந்திரன். சந்திரனைப் போன்ற அழகுள்ளவள். சந்திரனைப் போன்ற குளுமையைக் கொண்டவள். சூரிய ஒளியால் மினுக்கப் பெற்று ஒளி பெறுவதாலும் சந்திரனைப் போன்றவள் என்று கொள்ளலாம்.
அப்படி வந்தவளின் மென்மையான பூவைப் போன்ற, (தற்போது ஒளியும் கொண்டு திகழும்) மேனியில், நாயகன புது அழகைப் படைக்கிறான். ஏனெனில் இவன் வருகையால் அவள் மேலும் பொலிவுறுகிறாள். வெட்கம் கொள்கிறாள். புன்னகைக்கிறாள். உடலிலும் மனத்திலும் காதலனைக் கண்ட மகிழ்ச்சியில் பூரிக்கிறது.
பின்னால் வரும் பாடல் வரிகளில் நாயகனின் பெருமையை புரிந்து கொண்டு, "ஞாயிறு ஒளி மழையில்" என்றால், இவன் எழில் சூரியனைப் போல் (ஞாயிறைப் போலே) அதன் ஒளியில் திங்களைப் போன்ற அவர்களும் ஒளியை கடன் வாங்கி பொலிவு பெறுகிறார்கள். அவனைப் போன்ற ஒருவனின் அருகாமையால் திங்களைப் போன்ற பெண்மை பொலிவு பெற்றது என்று சுய புகழ்ச்சியில் ஈடுபடுகிறான் என்றும் அர்த்தம் வருகிறது. மேலும், சூரியனின் வருகையால் பொலிவுறும் கோடி மலர்கள், அழகாய் பூத்துக் குலுங்கும் ரம்யம், அது போல் அவனின் அண்மையில் ஆடி அடங்கும் பெண்மை.
உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
நாயகன் (பல அழகிய பெண்களை தன் வசப்படுத்துபவனாய் இருக்கலாம்) இறுமாப்புடன் சொல்வதாக அடுத்த வரிகள் அமைகிறது. உலகம் எங்கும் இப்படிபட்ட இள மங்கையரின் அழகுகள் எல்லாமே அவன் ஆணைப்படி ஆட்டுவிக்க வல்லவன். அவன் ஆணைப்படி அவர்களை ஆடச் செய்வதில் தேர்ந்தவன். (சூரியனைக் கண்ட மலர்கள் வண்ணம் பெற்று, மலர்ந்து தேன் சொறிவதைப் போல) இவனின் அருகாமையில், அழகிய மங்கையரின் அங்கங்கள்(உடல்) மெருகேறி, மயக்கும் மாயங்கள் எல்லாம் செய்பவர்கள் ஆகிறார்கள். (He can seduce them, to seduce him)
மன்மதனும் ரதியும் முன்னால்
பொன் வதனம் பெற்றதென்னால்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
காதல்/காமத்தின் வடிவங்களாகக் கருதப்படும் மன்மதனும் ரதியும் கூட முன்னாளிலே இவனால் தான் அழகு மெருகேறி பொன் போன்ற மின்னும் வசீகரம் பெற்றார்களாம். ஊர்வசி போன்ற பேரழகிகளும் இவனிடமே தங்கள் அழகை கடன் வாங்கிச் சென்றனர். (சூரியன் ஒளியில் மிளிரும் சந்திரனைப் போல்)
தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிக
அப்படிப்பட்ட பெருமைக்குறியவன் நம் நாயகனிடம், தங்கத்தையொத்த அங்கத்தை உடைய பெண்களே, வந்தும் இன்னும் மெருகுக் கூட்டி செல்லுங்கள். புது வடிவமும், பொலிவும் கூடப் பெற்றுச் செல்லுங்கள், என்று தங்கத்தையொத்த பெண்களையெல்லாம் தன்னிடம் அழைக்கிறான். தங்கம் என்பது இங்கே மின்னும் அங்கத்தை மட்டுமே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது தங்கம் போன்ற குணமுடைய குணவதிகளும் கூட இவனிடம் பாடம் பெற வரலாம் என்று பாரபட்சமின்றி அனைவரையும் அழைப்பதாகவும் அமைகிறது.
/A man who knows the art of seducing any woman, is calling-out to all types of women to please his thirst. அவ்வளவு தான் பாடல்/
http://www.inbaminge.com/t/a/Andhara...aiyil.vid.html
i am kind of obsessed with these first two lines :)
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில் புது அழகினைப் படைக்க வந்தேன் !
what a perfect way to begin the song ,
since it was specially written for an aesthetician
hero as 'spa cosmetologist , right ?
moon bathing in sunlight , rising full moon
seems like an appropriate time to throw some extra 'magic touch
like the old say
'அமாவாசையில் கழிதல் , பௌர்ணமியில் புதியன புகுதல்
same generally goes with spa treatment too in achieving the best
according to moon 's wax or wane ritual ,
as waning for detoxification due to body's cleansing capability during new moon phase
and on the contrary to our skin’s absorption potential being much higher than normal days on brighter full moon ,
it is ready at its peak to suck any lotions ,creams any beauty minerals , any changes or portions ,you name it
since waxing is for beautifying
புது அழகினை படைக்க நல்ல தருணம் , இல்லையா ?
sounds like a perfect part of the song's character hence
rest of the lyrics match well in terms of rhyme and content
cannot say for sure if the song writer Nethaji
has had the these notions while writing it
but i am just laboring under
finding it interesting in my own way of thinking
cannot say much about the young new singer though,
pat on the back for MD G Devarajan for taking the initiative
to introduce kamalahasan as a singer
தீபாவை பார்க்கும் போது கமலஹாசனின் கண்கள்
கொஞ்சம் மிரண்டு போனதாக தெரிந்தன
பாடும் போது குரலும் கூட கொஞ்சம் கம்மித்தான் போய்விட்டது
குரல் பிரமாதம் இல்லையென்றாலும்
சும்மா பரவாயில்லை
தீபாவின் இடையை விட்டு விடுங்கள் மது
தமிழ் சரித்திர நாவல்களின் அட்டைப்பட
சித்திர இளவரசி போல களையான முகம்
அவர் அவசர அவசரமாக குண்டாகி
....விடுங்கள்
Priya have you seen this song ?
கலரில் வந்ததா மது ? கருப்பு வெள்ளையில் பார்த்த எண்ணம்
more songs like பாடகனைத் தேடிக் கொண்டு பாட்டு ...Madhuri வந்தது
புதுமுகமே சிறு மதுக்குடமே..கமல 'காந்த் ஆன பாடல் -PS KJY
thanks
Regards
SP & TFMLover for putting the effort to elaborate the fullest meaning of the song! :)
TFMLover: I remember watching this song in black and white, I might have gotten color blind too...who knows!
ட்TFML and piriya
naan parthabodhu reNdu songs "pudhumugamE" and "gnAyiRu" mattum jigu jigu color-il parthEn. athanaal nanRAga ninaivu irukku.
may be only some prints adhu pola irunthadho ennavO ?
nambuveengaLO matteengaLO ... pudhiayal padathil varum "thanga mohana thamaraiyE" song mattum color-il oru theatre-il parthEn.
athuvum dark blue water... padminikku blood red sari.. sky color light yellow... kadaisiyil shivaji brown color dress-la vandi-yil pogumbodhu black and white aagividum.
appuram veru ooril veru theatre-il paarthappO black and white !!
thuNaivan padathil kooda kadaisiyil varum songs and scenes color-il pottanga !
//since it was specially written for an aesthetician
hero as 'spa cosmetologist , right ?
//
oh okei. I was unaware of the movie, or hero or song...and hence the background.
This throws a new dimension and understanding... :thumbsup:
..
//to introduce kamalahasan as a singer
/
ok...anything about the song is news. I should have bothered to check...lol
//தமிழ் சரித்திர நாவல்களின் அட்டைப்பட
சித்திர இளவரசி போல களையான முகம்
//
:thumbsup: :2thumbsup:
deepa thaan heroine aa...
and then madhu ,
"உண்ணி மேரி"யா...அல்லது
'உன்னி மேரி'யா :roll: ?
song oda background theriyaama, pattaiye keduthu vitten...mannikkavum :sad:
I should have known more about the situation, before deciding on intepretation.
Anyway u can dismiss this as a random poetical intepretation.
power...
மலையாளத்துல உண்ணி என்றால் சின்ன என்று அர்த்தம் போலிருக்கு. So... சின்ன மேரிதான் உண்ணி மேரி... எனக்கும் அவ்வளவுதான் தெரியும்.
( தீபா கொஞ்சம் பெரிய உருவம் என்பதால் மூணு சுழி போட்டுக்கலாம். தப்பில்லை )
oh cool... periya uruvama iruntha enna...divya face... :thumbsup: athukkaagave ethana suzhi vena pottukonga ...!!
TFML.. :rotfl:
naan romba deep-A think paNNavillai :)
Hi tfml.. :clap:
unga VILAKKam pramAtham :P
http://www.youtube.com/watch?v=ZfSf_...eature=related
படம் : 180 No Rules (2011)
இசை : சரத்
பாடியவர் : உண்ணி மேனன், சித்ரா, சௌமியா
பாடல் வரிகள் : மதன் கார்க்கி
ராகம் : கரஹரப்ரிய
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
யோகம் செய்தேனில்லை..
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள்
கதைத்துவிட்டு போகாமல்
விதைகள் விதைகள்
விதைத்து விட்டு போவோமே
நி... நி... ரி... க.. ரி...
திசையறியா!..
ரி... நி... ப... க... ரி...
பறவைகளாய்
நி... நி... ச.... நீ..
ரி............. நான்..
க............. நீல்..
ம............. வான்
ப... த... நி... ச...
வெளியிலே
மிதக்கிறோம்..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
போகும் நம் தூரங்கள்..
நீளம் தான் கூடாதோ
இணையும் முணையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும்
பயமும் விட்டுப் போகாதோ..
த... நி... க... ம... த... ரி...
முடிவறியா..
ரி... ப... ம... நி... ப... க... ரி...
அடிவானமாய்..
த... நி... ச............. ஏன்..
ரி............................ ஏன்..
க............................. நீ
ம............................. நான்
ப... த... நி... ச...
தினம் தினம்
தொடர்கிறோம்..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யபோகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
வாவ்.. ராக தேவரே எனக்கு இந்தப் பாட்டு பிடிக்குமாக்கும்..ஆனா கரஹரப் ப்ரியான்னு தெரியாது...வளர தேங்க்ஸ்.
வளர ந்னா மிக்க என்று அர்த்தம்.. ஆசீர்வாதம் சின்னக் கண்னன் எப்படிச் செய்ய முடியும்..ரொம்ப கன்ஃப்யூஷனா இருந்தா கானடா ராகத்தில ஒரு பாட்டு போட்டு விடுங்க..!
Thank you for clarifying that. The next song that I post would be in கனடா ராகம்! :)
நன்றி ஷக்தி குருஜி.. நாளை கொஞ்சம் விலாவாரியா எழுதறேன்..(இப்போ பில்லால ரஜினி ஆடறார்...சன் டிவில)
ck,
Ezhuthunga nalaikku. btw, I would be happy if u stick to 'shakthi' alone. thanks :)
never tired to listen to this song...priceless lyrics
http://www.youtube.com/watch?v=UEao9rctBBw
Hi Power
அதான் "பணத்தை எங்கே தேடுவேன்" அப்படின்னு சொல்றாங்களே ! அப்புறம் அது priceless lyrics- ஆகத்தான் இருக்க முடியும்.
( அட நெசமாவே நல்லா இருக்குதில்லே...சன்னியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?" என்பது latest சில news clips பார்க்கிறப்போ நெசமாவே தோணுதே " )
madhu, athuaaga thaan apdi sonnen....since its on money...lyrics are priceless too ! and u hit the bulls eye. lyrics holds good for any era or scenario...ithaan DHEERGA DHARISI lyrics
சில சமயங்களில் மனதிற்குள் ஞொய் ஞொய் எனக் கவலைகள் ஏற்படுவதுண்டு..அலுவலகமோ வீடோ ஏதோ ஒரு பிரச்னையை நினைத்தபடி ஃப்ளாட் நோக்கி நடந்து கொண்டிருப்போம்... லிப்டில் ஏறுவதற்கு முன்னால் ஒருசின்னஞ்சிறு குழந்தை எதற்கோ ஓடி வந்து ஹாய் பை சொல்லிச் சிரித்து விட்டுச் செல்லும்..அவ்வளவு தான்.. பிரச்னைகளெல்லாம் டபக்கென்று மறைந்து விட்டு அந்தக் குட்டிப்புன்னகை மனசிலேயே இருக்கும்..
சிமிலர்லி, இந்தப் படமும் அப்படித்தான்..பெயரைப்பார்த்ததும் வித்யாசமாச் செய்யப் போறாங்கய்யா என நினைத்தபடி அமர்ந்திருந்தால் கொஞ்சம் மெதுவாக கிராமம், சில கொலைகள் பின் கல்லூரி என்ச் சென்று கடைசியில் ஏதாவது செய்யணும்னு ஹீரோ நம்மிடம் கூற படக்கென வெண் திரை விழ படம் அம்புட்டுத் தானா என முழித்தபடி வீடியோவை அணைத்திருந்தேன்..
ஆனா...ல்...ஹீரோயின் கொஞ்ச்ம அழகாக..இல்லை..இல்லை..துறுதுறுப்பாகக் கவர்ந்திருந்தார்.. படம் மெதுவாகப் போகும் போது சடக்கென கீழே உள்ள ரொமாண்டிக் பாடலும் அப்புறம் இன்னொரு பாடலும் படம் விட்டும் நெஞ்சில் ரீங்காரம் செய்தன..
படம் சிவப்பதிகாரம்..விஷால், ஹீரோயின் மம்தா மோகன் தாஸ் (பாவம் நெஜம்மாவே யாரோ கண் வச்சதனால கான்ஸர் வந்து இப்போ தேவலையாம்.. அம்மணி தீர்க்காயுசோட நன்னா இருக்கட்டும்) பாடும்.. சித்திரையில் என்ன வரும்..பாட்டும் இந்த அற்றைத் திங்களும்..எனக்குப் பிடிக்கும்..
பாடியவர்கள் மதுபாலகிருஷ்ணன், சுஜாதா...பாட்ல் வரிக்குச் சொந்தக்காரர் யுகபாரதி (இவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட செய்தி: மன்மத ராசா பாடலையும் எழுதியவர் இவர் தான்..முதலில் அவருக்குக்கொடுக்கப்பட்ட வரிகள்..காதலா காதலா கற்பழிக்க வாடா சம்திங்க் லைக் தட்..இல்லீங்கோவ்..உணர்ச்சி வசப்படற மாதிரியான (எரோட்டிக்னு தமிழ்ல சொல்வாங்க) பாட்டுன்னா நானே எழுதித் தாரேன் வேற வார்த்தை போட்டுன்னூ சொல்லி ம.ராசா எழுதினாராம்..(எந்தளவு உண்மை எனத் தெரியாது))
இனி பாடல் வரிகள்..
**
பெண்
அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்
பெண்
காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்
பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
பெண்
அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை
ஆண்
பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை
பெண்
முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
ஆண்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர் வீசும்
பெண்
குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட
ஆண்
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட
பெண்
காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்
உடலெது உடையெது தேடும் நிலையிது
காதல் கடலிது அடையாது
பெண்
இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது
ஆண்
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது
பெண்
வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது
ஆண்
நடுங்காலம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்
பெண்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்
ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்
பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
kangayen kaaLaigaLe odungada govt saalaiyile
kaalu vali theriyaama naanum paatu paadikittu vaaren
http://download.tamilwire.com/songs/...ilWire.com.mp3
சில பாடல்கள் ஏன் சலிப்பதேயில்லை???!?!?!?
http://www.youtube.com/watch?v=6sxvlUDNt8k
One of "the best" song depicting brother-sister love.
http://www.youtube.com/watch?v=aN09nwF1lag
This song does something to me.................. ennavo edho...ennam puraLudhu manathil :think: everytime I hear....
http://www.youtube.com/watch?v=q3NcdhWUMco
aahaa.... :musicsmile: :musicsmile: :musicsmile: :musicsmile:
Though its showing two girls.... the meaning is universal
http://youtu.be/YlnBv7EDaXw
Dedicating this to my lovely friend
some songs... stay etched :bow: esp its so interesting to watch anyone in B/W....I personally feel their very profile is enhanced and adds to the depth.
mhm.....ahaaha....
oru raagam paadalodu kathil kettatho
manathodu oonjal aadutho
...
oh nenjame oraayiram sugam idhu.....
...
en uLLam ingu vaanil poguthe :musicsmile:
http://www.youtube.com/watch?v=GGekC...feature=relmfu
scintilatting music! vidhyasagar! .... ramky (designer) used to post this song often.. I guess his fav song too..
(please listen to "kavithai iravu")
http://www.raaga.com/channels/tamil/album/T0000628.html
http://www.raaga.com/player4/?id=166...55652971349064
magudikku mayangiya paambu pola mayangum isai.....
:bow: :bow: :bow:
enappan allava en thaayum allava ponappan allava ponambalathava
http://www.youtube.com/watch?v=k9_sKWt3wBc
aNivaaga chatril naan unarnnnnu kaNNa...
mizhineeril kaaLindhi ozhugi kaNNa
arunaazhi eLLEnna aadakkaiyo
maru janma podi meyyil aNiyettayo
http://youtube.com/watch?v=CAs-HRtVGD8
Oru pidi avilumaai kanmangaL thaandi gnaan
varikayaay dwaraka thedi
Guruvayur kaNNanai thedi....
http://youtube.com/watch?v=oL4O6FofpUw&feature=related
RD, you sometimes capture 'VERY RARE SONGS'...of 70z or 80z !!! :ty: and such songs sure sweeps me back to beautiful school days / vividh bharathi memories. I never have seen the video for the song so far..thanks to you I did see the video you had posted some days back in pp.... and my memories travelled back to long long years ago.... lol
GLORIOUS melody ....... Shnakar-ganesh :bow:
KJY with KALYANI menon
Kalyani also sang a memorable duet with KJY for S-G – ‘naan iravil ezhuthum kavithai muzhuthum’ (Suba Muhoortham/1983).
http://www.last.fm/music/Kalyani+Menon/+wiki?ver=1
http://www.youtube.com/watch?v=Z-Hk-JPTyRY
Hi Shakthi:
I am happy that the video of "நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்..."
made you feel happy and nostalgic! :) There were several such great songs
in the 1970-s, , 1980-s and even early 1990-s; composed by music directors
other than MSV, Ilaiyaraja and Rahman.
By the way, do you know who wrote these lyrics?
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் சுட்டதும் என்ன மாயங்களோ
உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மூடும் ஆடையிடு சுமையென ஆடும் வேளையிடு
மேலாடை தாங்கட்டுமா கொஞ்சம் நானாடை ஆகட்டுமா
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தன கிண்ணம் தந்தனமென்னும் பாவங்களோ
நிலவின் ஒளியிலே துகிலிடு என
நினைவு மயங்கியே அதை எடுத்திட
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி இரவினில் கண்ணே நீ பாடடி
வானத்து நட்சத்திரம் வந்து காணட்டும் மெத்தை சுகம்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்
லா லா லலல லலல லலல ல ல ல