Un nadayazhagum, udayazhagum, idayazhagummmmm......un kattazhagum, pottazhagummm !!!Quote:
Originally Posted by P_R
Printable View
Un nadayazhagum, udayazhagum, idayazhagummmmm......un kattazhagum, pottazhagummm !!!Quote:
Originally Posted by P_R
டியர் பம்மலார்,
'பாகப்பிவினை' பொன்விழா ஆண்டில் அப்படத்தின் சாதனைகள் அனைத்தும் தேன் துளிகள். அதைச்சேகரித்துத்தரும் தேனீக்களாக நீங்களும் முரளியண்ணாவும் இருக்கையில் என்ன குறை?. வெறுங்கையோடு சண்டைக்குப்போகும் எங்களுக்கு அவை மகத்தான ஆயுதங்களாய் அமைகின்றன. சாதனைகள் மட்டுமல்லாது, அப்படத்தில் அண்ணனின் பெர்ஃபாமென்ஸும் இன்றைக்கும் எல்லோராலும் சிலாகித்துப்பேசப்படுகிறது. நன்றிகள்
டியர் முரளி,
'பைலட் பிரேம்நாத்' படத்தின் 31 வது ஆண்டு நிறைவை நினைவூட்டி, பழைய காலத்துக்குக்கொண்டு சென்றுவிட்டீர்கள். எத்தகைய தீபாவளி அது...!!. பட்டுப்பாவாடை கட்டிய சிறுமியாக வலம் வந்த நாளில், அந்த தீபாவளி வெளியீடுகள் இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளதே...
பைலட் பிரேம்நாத் - அலங்கார், (மகாராணி, ஈகா).
தச்சோளி அம்பு - சாந்தி
சிகப்பு ரோஜாக்கள் - தேவி பாரடைஸ்
தாய்மீது சத்தியம் - வெலிங்டன்
வண்டிக்காரன் மகன் - கெயிட்டி (3காட்சிகள்), சத்யம் (பகல் காட்சி)
தங்க ரங்கன் - பிளாசா
அதிஷ்டக்காரன் - மிட்லண்ட்
தப்புத்தாளங்கள் - பைலட்
கண்ணாமூச்சி - ஓடியன்
காஞ்சி காமாட்சி - பாரகன் (?)
மனிதரில் இத்தனை நிறங்களா - சித்ரா
அந்த அற்புத நாட்களெல்லாம் திரும்பி வாராதோ...
Sister Saradha
I think you love Pilot Premnath very much ! How good was the movie ? How about Sivaji's performance ? Any review available ?
I am keen to read reviews of Sivaji movies from the date RK / KH became stars. I mean after 75 ? Are they available here ? What was the performance levels of Sivaji then ? Were they matching with the earlier years ? I am sure, he would have collected well at the BO.
Waterloo, first you make arguments about BO stats. When those are countered then you switch to performance 'quality'. Is it hard to pick a lane ?
btw you only have to read the archives to see the contributing fans in this thread making no bones about the ordinariness of many of Sivaji's later films.
Moderator Sir,Quote:
Originally Posted by P_R
The noof days run details have been posted in MGR site which for strange reasons have been shifted to an argument thread ! :oops:
And there is no lane switching . I have been posting more details of hit stats of MGR.
I went through the archives now but couldnt see any major listing of reviews of Sivaji's late 70s and onwards. A review can be made still no ? Wish to know how he had performed when the next gen started rolling. One thing for sure. Still his movies would have run well. Tks
Probably we take even movies from 70 onwards to see overall how he had performed as an artist . Normally an artist's performance will improve over a period of time and can only do better.Classic examples are RK / KH etc. Wish to know more about Sivaji .
If you can analyse , fine. Otherwise just leave it and be another hubber.
Nakkeeran Sir, eppadi irukkeenga?
Sappa ..mudiyalla :rotfl:Quote:
Originally Posted by Waterloo
It seems Malini Ponsekha is still active in doing films. An advertisement of one of her recent films came in THE HINDU.Quote:
Originally Posted by saradhaa_sn
For those who missed.....
Quote:
Originally Posted by rangan_08
Quote:
Originally Posted by rangan_08
Quote:
Originally Posted by rangan_08
Sheer brilliance...
Mohana goes to Thiruvarur to meet Jillu, knowing that Shanmugam is staying with her. She watches Jillu's " koothu " and even Shanmugam is present there. They exchange hating glances at each other. Then during the koothu's interval she meets Jillu and comes to know the truth and at the same time understands the true love of Jillu.
Now that she is determined to prevent Shanmugam from going to Malaya, she deliberately teases him in front of the audience and throws an open challenge.
Ippo gavanikkanum, thalaivara.....summa kodhichu poiduvaru. Being a short tempered man, Shanmugam readily accepts the challenge. He will be in extreme anger that he will not be able to say the words completely...padhi padhi solluvaru.....like....
yei, irudi, irud (i)....unna vandhu pesikk....yenkitta, yenkit....paakalam..paaka....
He vigorously hits the screen that covers the entrance and leaves. Withing a few seconds, comes back again and warns Mohana.
It's almost more than a decade since i watched the film in theatre and that was a re-re-re-re-re-release. Even at that time itself, the audience response for this scene was amazing. The entire theatre was in uproar and there was deafening whistles and applause. I'm 100% sure that even if the movie is released now or even much later it will get the same kind of response !!!
:notworthy: :clap: :thumbsup:
A'noon came home for lunch. Jaya max was playing, " Andha naal nyabagam nenjile vandadhe, nanbane......."
I know this has been beaten to death here, but still... :D
A neat light coloured striped shirt whose sleeves are carefully rolled up and goes above the elbow. It is perfectly tucked inside a dark coloured pant. A nice belt, shining leather shoes and a simple walking stick. A decent looking grey side burns - and what a magic this man does !!! :cool2:
And when the lyrics goes, " periyavan, siriyavan, nallavan, kettavan - ullavan, ponavan ulagiley parkirom...... ennamey sumaigalai, idhayamey bhaaramai...."
Verum rendu kayya vechikitte pinniyiruppar !!! :notworthy:
parka parka salikkadha oru paatu.
With all those great looks & style, this man has got complete right to deny the saying, " Born with a silver spoon "
Rangan_08 :clap:
NT's contributions live on..... even during this IT age. A small sample (just for laughs):
வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ். என்னோடு கடைக்கு வந்தாயா? செல் வாங்கித் தந்தாயா? ஓசி சிம்கார்டு கொடுத்தாயா? பில் பணமாவது கட்டினாயா? அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும் உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு என் நம்பரையாவது கொடுத்தாயா!! மானங்கெட்டவனே! யாரிடம் கே...ட்கிறாய் எஸ்.எம்.எஸ். எடு உன் செல்லை; போடு அதைக் கீழே; எடு ஒரு கல்லை; கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை!
:rotfl:
:thumbsup: @ rangan_08 Re. TM challenge scene.
Beyond the fiasco over the NT’s the so called over acting and BO hero and in some ways the cause, lies an unpleasant truth. The result is that every contention issue ends up in a cacophony instead of a sober debate. The NT fiasco is only the latest example.
First, here are some facts. It is incorrect to say that NT acting was over and he was not a BO hero.
All we have are photos and some articles and studies. (THIS IS ALREADY DONE BY THE GREAT MR.MURALI, MR.PAMMALAR, MR. RAGHAVENDRA, AND MANY OTHERS). According to others(fans), these are inconclusive and subject to varying interpretations. Without thorough research one cannot say that no such existed simply because there are no physical evidence remains since he was lived before IT age. If IT age exist in 60s and 70s itself, who knows we might have strong enough evidence.
It is necessary to correlate data from the wide range of sources including material evidence such as old books, advt., and from other sources.
No comparable research has been done. We are unlikely to find evidence for proving the historicity of NT unless we do the research. This being the case, to argue , because we have no evidence is dogmatic and unscientific. We won’t find any evidence unless we look for it. But we have ample reasons to believe that such evidence can be bound once we are prepared to do the research.
Proved beyond all doubt both the Natural and Over acting and BO (since he has not got any national award), but the same people who are now claiming that NT lacks Natural acting and BO, refused to acknowledge these facts even when proved. Can you convenience such people with any amount of evidence ?
To understand the motives behind the attack on NT and his acting and BO, we need to recognize that NT is more than Personality. He is a symbol of VALUES that all Tamilians, Non Tamilians and TF Industry hold dear. He is a symbol of UNITY. The NT MYTH is not just a personality cult of the founder. TF Industry can exist without NT for he is not its founder. But NT represents the highest values of the Tamilian civilization. HE IS ADARSHA PURUSHOTTAMA.
In attacking NT and everything associated with him the unity and greatness of Tamilians can be destroyed.
We may have gained some time with protests and debates, but it would be a serious error to assume that destruction forces have been fully uprooted. Bad ideas have a way of resurfacing especially when SELF INTEREST is at stake.
So let us understand what really is not stake, it is not whether NT acting was over nor even we can prove he was not a BO hero, but something is far more important - NT is a symbol of the VALUES that we hold sacred. What this campaign represents is on attack on NT as a value more than personality, as a step towards destroying the values and humanity that he stands for.
abkhlabhi
http://ithayakkani.com/CPDF/August.pdf
Some nice photos of Madurai function , statue opening ceremony for Sivaji.
Sivaji's old radio interview
http://marancollects-music.blogspot.com/
வேட்டைகாரன்புதூர் முத்துமாணிக்கம் அவர்கள் எழுதிய வேட்டைக்கு வந்த சிங்கம் புத்தகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்கள் படித்தேன். நடிகர் திலகத்தின் வேட்டை அனுபவங்கள் என்று சொன்னாலும் கூட முதல் அத்தியாயத்தில் அவரைப் பற்றி மட்டும் எழுதாமல் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் குடும்ப சூழல், அவரின் கிராமத்து பின்புலம், அவர் கல்லூரியில் படித்த போது ஈடுபட்ட தொழில் என பலவற்றையும் சொல்கிறது.
இரண்டாவது அத்தியாயம் இன்னும் சுவாரசியம். வேட்டையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் என்னென்ன? Double Barrel Gun-ற்கும் Rifle-கும் என்ன வேற்றுமை, தோட்டாக்கள் எத்தனை வகைப்பட்டவை, ரவைகளில் எத்தனை விதங்கள், எந்தெந்த மிருங்களுக்கு எந்தெந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட வேண்டும், வேட்டைக்கு செல்லும் போது எப்படிப்பட்ட Torch Lights தேவை, வேட்டையின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்று பல அரிய தகவல்களை அள்ளி தருகிறது. மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் நடை சுவை.
அன்புடன்
ஆனந்த விகடன் 4.11.2009 இதழில் , விக்ரம் 25 என்கின்ற கட்டுரையில் , நடிகர் விக்ரம் அவர்களைப் பற்றி 25 தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் தகவல் :
"விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல் 'பொன்னொன்று கண்டேன் , பெண் அங்கு இல்லை'. தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ். , பி.பி.எஸ். குரலில் கேட்டு விட்டுத் தான் தூங்குவார் !"
பொன்னான ரசனை !
அன்புடன்,
பம்மலார்.
மதுரையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 6.11.2009 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக , இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் , காலத்தை வென்ற காவியமாம் , நமது நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. முதல் நாளான 6.11.2009 வெள்ளியன்றே , கன மழையையும் பெரு வெள்ளத்தையும் பொருட்படுததாமல், பெருங்கூட்டம் அலை மோதியுள்ளது. 6.11.2009 , முதல் நாள் மொத்த வசூல் மட்டும் ரூ. 9890 /- (ஒன்பதாயிரத்து எண்ணூற்றி தொண்ணூறு). பழைய படங்களின் , முதல் நாள் வசூலில் , இது அசுர சாதனை.
இன்று 8.11.2009 ஞாயிறு மாலைக் காட்சிக்கு , மழையையும் மீறி , பெரும் ஜனத்திரள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விக்ரமனையும் , பார்த்திபனையும் , வெள்ளித்திரையில் என்றென்றும் தரிசித்தே தீர வேண்டும் , என மக்கள் நினைக்கும் போது மழையாவது , வெயிலாவது !!!
அன்புடன்,
பம்மலார்.
9.11.2009 , நமது நடிகர் திலகத்தின் நடிப்பில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில், சித்ராலயாவின் தயாரிப்பில் , ஷ்ரீதரின் கதை , வசனம் , இயக்கத்தில் 9.11.1969 , தீபாவளியன்று வெளியான , பிரம்மாண்ட படைப்பான சிவந்த மண் திரைக்காவியத்தின் 40வது ஆண்டு நிறைவு. நடிகர் திலகத்தின் இமாலய வெற்றிப்படங்களுள் ஒன்றான சிவந்த மண் திரைப்படம் நிகழ்த்திய சாதனைகளில் சில :
சிவந்த மண் , நடிகர் திலகத்தின் 134வது திரைக்காவியம் , 13வது வண்ணப்படம். அயல் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படமான இக்காவியம் , 9.11.1969 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று , சென்னை மற்றும் தென்னாடெங்கும் வெளியானது.
இத்திரைக்காவியம் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள் :
(28.12.1969 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த 50வது நாள் விளம்பரத்தின் அடிப்படையில்)
1. சென்னை - குளோப் (1282 இருக்கைகள்) - 145 நாட்கள்
2. சென்னை - அகஸ்தியா (1005 இருக்கைகள்) - 117 நாட்கள்
3. சென்னை - மேகலா (984 இருக்கைகள்) - 103 நாட்கள்
4. சென்னை - நூர்ஜஹான் (919 இருக்கைகள்)- 103 நாட்கள்
5. மதுரை - சென்ட்ரல் (1108 இருக்கைகள்) - 117 நாட்கள்
6. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 103 நாட்கள்
7. திருச்சி - ராஜா (728 இருக்கைகள்) - 100 நாட்கள்
8. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 100 நாட்கள்
9. தூத்துக்குடி - பாலகிருஷ்ணா (1102 இருக்கைகள்) - 101 நாட்கள்
10. தாம்பரம் - நேஷனல் (1057 இருக்கைகள்) - 50 நாட்கள்
11. காஞ்சீபுரம் - கிருஷ்ணா (1200 இருக்கைகள்) - 50 நாட்கள்
12. கடலூர் - ரமேஷ் (917 இருக்கைகள்) - 50 நாட்கள்
13. திருவண்ணாமலை - பாலசுப்ரமண்யா (992 இருக்கைகள்) - 50 நாட்கள்
14. வேலூர் - அப்ஸரா (901 இருக்கைகள்) - 54 நாட்கள்
15. பாண்டிச்சேரி - ராமன் (1040 இருக்கைகள்) - 50 நாட்கள்
16. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 66 நாட்கள்
17. காரைக்குடி - அருணாசலா (1017 இருக்கைகள்) - 50 நாட்கள்
18. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 50 நாட்கள்
19. பழநி - சந்தானகிருஷ்ணா (1087 இருக்கைகள்) - 50 நாட்கள்
20. ஈரோடு - முத்துக்குமார் (1220 இருக்கைகள்) - 66 நாட்கள்
21. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 50 நாட்கள்
22. ஊட்டி - ஏ.டி.சி. (638 இருக்கைகள்) - 66 நாட்கள்
23. ஆத்தூர் - ஷ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 50 நாட்கள்
24. நாமக்கல் - ஜோதி (741 இருக்கைகள்) - 50 நாட்கள்
25. தர்மபுரி - கணேஷ் (866 இருக்கைகள்) - 50 நாட்கள்
26. பரமத்திவேலூர் - கணேசா (903 இருக்கைகள்) - 50 நாட்கள்
27. தஞ்சாவூர் - ஜூபிடர் (1009 இருக்கைகள்) - 50 நாட்கள்
28. மாயவரம் - கெளரி (1460 இருக்கைகள்) - 50 நாட்கள்
29. கும்பகோணம் - ஜூபிடர் (1137 இருக்கைகள்) - 50 நாட்கள்
30. பட்டுக்கோடை - நீலா (935 இருக்கைகள்) - 50 நாட்கள்
31. நெல்லை - சென்ட்ரல் (1405 இருக்கைகள்) - 76 நாட்கள்
32. நாகர்கோவில் - பயனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 76 நாட்கள்
33. பெங்களூர் - ஸ்டேட்பிக்சர்ஹவுஸ் - 50 நாட்கள்
34. பெங்களூர் - அஜந்தா - 50 நாட்கள்
35. கொச்சி - ஸ்டார் - 50 நாட்கள்
36. கோட்டயம் - ஆனந்த் - 50 நாட்கள்
37. திருச்சூர் - மாதா - 50 நாட்கள்
38. தெள்ளச்சேரி - பிரபா - 50 நாட்கள்
39. ஆலப்புழை - சாந்தி - 50 நாட்கள்
நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் திரைக்காவியம்,
20 வாரங்களுக்கு மேல் ஓடிய அரங்கு : 1
100 நாட்களிலிருந்து 19 வாரங்கள் வரை ஓடிய அரங்குகள் : 8
50 நாட்களிலிருந்து 99 நாட்கள் வரை ஓடிய அரங்குகள் : 30
ஆக, நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் , இமாலய வெற்றி பெற்ற மெகா ஹிட் காவியம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு , நிரந்தர சக்கரவர்த்தி , சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
சுவாமி,
நல்ல செய்தியை, மனம் மகிழும் செய்தியை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று மாலைக்காட்சியில் விக்ரமன் யாரடி நீ மோகினி என்று நடக்கும் போது அலப்பரையால் டவுன்ஹால் ரோடே அதிர்ந்திருக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி இதே சென்ட்ரலில் வெளியிடப்பட்ட தங்கப்பதக்கம் பெற்ற ரிகார்ட் வசூலை இது முறியடிக்கும் என்றே தோன்றுகிறது. என்றுமே எங்கள் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம்.
இதை எழுதும்போது வேறு ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே சென்ட்ரல். இதே நவம்பர் 9ந் தேதி. அதுவரை இந்தி படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை மாறி முதன் முதலாக ஒரு தமிழ் படம் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு வெளியான நாள். ஆம். கலையுலகில் ஒரு புதிய சரித்திரம் எழுதிய சிவந்த மண் வெளியாகி நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது [1969 - 2009]. பாரத மண்ணின் காவிய நாயகன் பாரத் என்ற பாத்திரம் நடிகர் திலகத்தால் உயிர் பெற்ற நாள். முன்பே இங்கே பதிவு செய்தது போல் அந்த சென்ட்ரல் சினிமா சுற்று வட்டாரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்த நாள். படம் பார்க்க காத்திருந்த அந்த ஒரு வாரமும் எதிர்பார்ப்புகளும் இன்றும் பசுமரத்தாணி.
இனிமையான அந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட அந்த நாட்களும் வந்திடாதோ என ஏக்கத்தை தூண்டுகிறது. நல்ல நினைவுகளுக்கு மீண்டும் அழைத்து சென்றதற்கு மீண்டும் நன்றி சுவாமி.
அன்புடன்
" I will sing for you, I will dance for you ...". I don't know the film's name, but this is how the song goes, which was recently played in mega tv. The song featured NT alongwith Manorama & another girl whom i doubt to be Pramila. Or is it Vanishree ?? Not sure :confused2:
I should really than Mega TV because i thoroughly enjoyed this song. NT was so very hilarious and funny. He was sporting a french beard, wearing a banian and a pant which was rolled up. Though the opening words were in English, it was sung in typical classical style by TMS who has done a great job.
I think it was manidharul manickam where NT played a guest role while AVM rajan was the hero.
yes, it indeed is in manidharul maanikkam, set to the raaga for sore throats by MSV - Karaharapriya. :lol:
I think a mad pramila will hold a knife and force sivaji to sing, thus I will sing for you I will dance for you :rotfl:
Manidharul Manickam...NT not only in guest role, but that of a side comedian as well. Film watchable only for NT. Those b*tching about NT and his over-performance should see this movie, look at AVM Rajan and repent.
'மனிதரில் மாணிக்கம்' படத்தில் கெஸ்ட் ரோல் என்று பெயரே தவிர படம் முழுதும் நடிகர்திலகம் வருவார். முக்கியமான கட்டங்களில் வந்து, படத்தின் கதையோட்டத்துக்கு காரணமாக இருப்பார். ஏ.வி.எம்.ராஜன் ரொம்ப எமோஷனலாக நடித்திருப்பதால், படம் பார்ப்பவர்களுக்கு பெரிய ரிலீஃப் தருவதே நடிகர்திலகம் ஏற்றிருந்த அந்த டாக்டர் பாத்திரம்தான். அவர் வரும் காட்சிகளனைத்தும் நமக்கு விருந்து படைக்கும். குறிப்பாக ' I will sing for you... I will dance for you...' பாடல் காட்சி. ராகேஷ் சொன்னதுபோல, படத்தின் காமெடி பகுதியை நடிகர்திலகம்தான் பூர்த்தி செய்வார். கடைசியில் 'Love is God' என்று சொல்லி குளோசப்பில் சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் அவர்தான்.
(கின்னஸ் சாதனைக்காக, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு, பெரும்பாலான நடிக, நடிகையர் பங்குபெற்ற "சுயம்வரம்" படத்தில் கார்த்திக் ஏற்றிருந்த அந்த ஞாபகமறதி டாக்டர் ரோல், கிட்டத்தட்ட மனிதரில் மாணிக்கம் படத்தில் நடிகர்திலகம் ஏற்றிருந்த ரோலை நினைவுபடுத்தும். ஆனால் கார்த்திக் கொஞ்சம் ஓவராக போனதால் அது கோமாளித்தனமாகப் போய்விட்டது).
மோகன்.... பிரமீளாவும் வாணிஸ்ரீயும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா அப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள்..?.
டியர் பம்மலார்....
சாதனைப்படமான 'சிவந்த மண்' நாற்பதாண்டுகளைப்பூர்த்தி செய்ததற்கான சிறப்புப்பதிவு அருமை. (பத்தாண்டுகள் ஆனமாதிரிதான் இருக்கிறது, அதற்குள் 40 ஆண்டுகள் ஓடி விட்டன....!!!!!!). தியேட்டர் வாரியான இருக்கை விவரங்கள், படம் ஒடிய நாட்களின் விவரங்கள் என சாதனைப் புள்ளி விவரங்கள் மலைக்க வைக்கின்றன.
திட்டமிட்டு செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களின் காரணமாக முன்பு இப்படததைப்பற்றி "இது ஓடாத படம்" என்ற ஒரு மாயை பரப்பப்பட்டிருந்தது. அதை நம்பி சிலரும், இத்திரியின் முந்திய பாகங்களில் 'சிவந்தமண் ஒரு ஃப்ளாப் மூவி" என்று வாதிட்டிருந்தனர். அத்தகைய பொய்ப்பிரச்சாரங்களில் இருந்து எல்லோரையும் தெளிய வைக்கும் விதமாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.... நன்றிகள்.....
மனிதரில் மாணிக்கம் - படத்தின் சரியான பெயர். மிகவும் வெற்றிகரமாக பைலட் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த இப்படத்துக்கு போட்டியாக வந்ததும் நம்முடைய படமே. ராஜபார்ட் ரங்கதுரை. முதல் நாள் முதல் காட்சியிலேயே பைலட் தியேட்டரே அதிரும் வண்ணம் அளப்பரை, ஒவ்வொரு காட்சியிலும் புன்னகையுடன் நடிகர் திலகம் தோன்றும் போதெல்லாம் அரங்கமே எழுந்து நின்றாடும். ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பைலட் தியேட்டர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு அந்தப் படத்திற்கு வரவேற்பிருந்தது. அதன் தொடர்ச்சியாக ராஜபார்ட் ரங்கதுரைக்கும் இருந்தது. என்றாலும் இதை எடுத்து விட்டு அதா என்பதே எங்களின் மன வருத்தமெல்லாம். குறிப்பாக "பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தா எல்லோரும் ஆடணுமா, ராஜாதி ராஜரும் ரவிக்கைக்கு பயந்து பின் பாட்டு பாடணுமா" , இந்த வரிகளை திரையரங்கில் கேட்டு பார்த்து ஆர்ப்பரித்த காட்சி இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.
பம்மலார் முரளி மற்றும் சாரதா உட்பட அனைத்து ரசிக இதயங்களுக்கும் சிவந்த மண் 40வது ஜெயந்தி நல் வாழ்த்துக்கள். குளோப் தியேட்டரில் தீபாவளி கொண்டாடினோம் நாங்கள். நான் ஏற்கெனவே இத்திரியில் கூறியிருந்தது போல, தீபாவளி என்றாலே நடிகர் திலகம் தான் அவர் படம் தான். அவர் படம் வராத தீபாவளி பருப்பில்லாத சாம்பார் போல. இதே நவம்பர் 10, 1969 அன்று மிகவும் சிரமப்பட்டு டிக்கெட்டு கிடைத்து உள்ளே போனால் எல்லோருக்கும் சாக்கலேட் .. உபயம் .. சைதை சிவந்த மண் ரசிகர் மன்றம்... வெளியே மலர் என்ன ... நோட்டீஸ் என்ன ... ஸ்டார்கள் என்ன ... பேனர்கள் என்ன ... அப்போதெல்லாம் இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரமெல்லாம் கிடையாது. அவரவர் தம் கையில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காசில் டிக்கெட் போக மிச்சத்தை நோட்டீஸ் அச்சடிக்க கொடுத்து விடுவோம். சாப்பாடு டிபனெல்லாம் நினைவுக்கு வராது. முதல் நாள் முதல் காட்சியில் அதிக ஆரவாரம் பெற்ற காட்சி அந்த செங்கல்பட்டு மலையடிவாரத்தில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சிதான். டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக நடித்து அனைவரின் முகத்திலும் கரி பூசி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்த காட்சி ... அதன் பின் அந்த மாளிகையில் அணிவகுப்பு ... பின்னர் பட்டத்து ராணி பாடல் ... இவை ஆரவாரத்தை அதிக அளவில் பெற்ற வரிசையில் குறிப்பிடப் பட்டுள்ளன.
இடைவேளையில் ரசிகர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி ஆரவாரம். படம் முடிந்து வெளிவரும் போது ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டோம். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பனிடம் சொன்னேன். இப்படம் 100 நாட்கள் நிச்சயம். வெள்ளி விழா ஒடும். குறைந்தது 20 வாரங்களுக்குக் குறையாமல் கூட்டம் இருக்கும். என் கணிப்பு ஒரளவு பலித்து 154 நாட்கள் 22 வாரம் குளோப்பில் ஓடியது.
வாய்ப்புக்கு நன்றி
ராகவேந்திரன்
DEAR PAMMAL SIR,
சிவந்த மண் சாதனையை ஒரு வாரம் முன்பாக NT vs mgr திரியில் போஸ்ட் செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
ராகவேந்தர் சார்,
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி
indeed a good movie. I was wondering why did Sivaji act in such a movie but I would he is the fulcrum of the movie. As a Doctor he did well. I thoroughly enjoyed the movie when they put it on Sun TV one afternoon.Quote:
Originally Posted by groucho070
முதல் நாள் முதல் காட்சியில் அதிக ஆரவாரம் பெற்ற காட்சி அந்த செங்கல்பட்டு மலையடிவாரத்தில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சிதான். டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக நடித்து அனைவரின் முகத்திலும் கரி பூசி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்த காட்சி
Dear Raghavendra and others,
You have taken back us to 69's. I still remember the Helicapter Scene. This is one scene I like very much. When some scenes or stories made in Tamil or any other languages, normally we say imported from Bollywood or hollywood. I think this one particular scene was not imported or copied from BW / HW. But I have seen this helicapter scene in an HW movie. SM was released 69's and this English movie was released 96's.
The movie name is Broken Arrow, released during Feb' 1996 , starring John Travolta, Christian Slater, etc. The helicapter scene (whole chasing scenen) in this movie is more or less similar to our SM.
Dear NT Devotees...
Due to the 41st 'Sivandha Mann Jayanthi', i think it will be nice to share the sweet memories about some very special scenes of that special movie.........
"சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் CAMERA ANGLES செட் செய்த இயக்குனர் SREEDHAR க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்
சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு சில:
1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.
2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.
3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.
5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.
6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.
7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.
9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.
Wow.... What a movie 'Sivandha Mann' is.......!!!!!!!!.
dear harish, nov, groucho, saradha mam & raghavendra sir, thanks for not only giving the movie's name but also for giving some excellent info's about the film.
Congrats for Sivandha Mann 40th year celebrations. It would be a great treat for fans if the movie is re-released now in theatres.
செந்தில்,
முன்பொரு முறை ஜோ அவர்கள் சிவந்த மண் படத்தின் வெற்றி விவரங்களை பற்றி கேட்க அந்த படத்தின் வசூல் விவரங்களைப் பற்றியும் நமது திரியிலே வெளியிட்டோம். சென்ற வருடம் 2008 மார்ச் ஏப்ரல் என்று நினைவு. பின் மீண்டும் ஒரு முறை நமது ஹப்பிலேயே வேறொரு திரியில் அது இடம் பெற்றது. இப்போது வசூல் விவரங்களை தவிர்த்து, ஆனால் தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையோடு அதை அழகுபடுத்தியிருக்கிறார் நண்பர் சுவாமி அவர்கள். முதலில் பதிவு செய்த போது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளின் விவரங்கள் கூட இடம் பெற்றது.
ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.
செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள மலையில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகர் திலகம் நூலிழையில் உயிர் தப்பினார். அது போல வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஏரி செட் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை சரி செய்து மீண்டும் செட் போட்டார்கள். இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மோகன் சொன்னது போல் இப்போது தியேட்டர் ரிலீஸ் நடந்தால் ஒரு திருவிழாவை மீண்டும் பார்க்கலாம். அதெல்லாம் நடப்பதற்கு நாம் என்ன மதுரையிலா இருக்கிறோம்?
அன்புடன்
yes, i remember that.Quote:
Originally Posted by Murali Srinivas
:shock: :(Quote:
Originally Posted by Murali Srinivas
Oh !Quote:
Originally Posted by Murali Srinivas
:(Quote:
Originally Posted by Murali Srinivas
As fans of Nadigar Thilagam, we have immensely enjoyed his performance in various films. Now, I've just tried to list out some of NT's best performance in a particular song sequence, that i liked the most. Hope other's will continue the list.
1. Yaradi nee mohini - Style king !
2. Yaar andha nilavu - I've nothing new to say :)
3. Nalanthana - without any lip movements, see how this man stole the show with just a wink !!
4. Andha naal nyabagam - STYLE ! STYLE !! STYLE !!!
5. Neeyum naanuma kanna & Palooti valatha kili - expressions !
6. Un kannil neer vazhindhal - emotions
7. Devaney ennai parungal - again, walk, style, emotions...
8. Deivame deivame - anxiety, energy, wild joy !!!
9. Sakka podu podu raja - amazing swithover of expression on his face & body language
10. Yarai nambi naan porandhen - you will see only a desperate old man on screen - simply superb !
11. Oh! manida jadhiye, Yen yen yen & Mayakkamenna - just pierces your heart !
12. Ennirandhu 16 vayadhu - enna nada !!!
13. Engey nimmadhi - kaekkanuma, theatre-e chumma adhirumilla !!
14. Kadavul ninaithan mananal koduthan - graceful & subtle movements & eye expressions
15. Kodi asaindhadhum katru vandhadha - the lymping would be very rhythmic. And almost throughout that song he would sport a " vetkam kalandha punnagai " !!
16. Neeya enakku endrum nigaranavan - enna lip movement !!!
17. Malarndhum malaradha - aludhuduven !!
18. 6 maname 6 - ivar ippadi nadikka vendum enbadhu Aandavan Kattalai . Kadal saapidura scene onney podhum
19. All songs featuring NT in Mudhal Mariyadhai - kurippa " Poongathu thirumbuma "
20. Ponmagal Vandhal - style
21. Chinna Chinna kadhal from Once more - very graceful & smart looking
22. Sirippil undagum ragathile - amazing body language & expressions
23. Navarathiri therukoothu - quintessential !!
Sorry !! the films are not given in order - the list will continue...