-
திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது .திரும்பிய இடமெல்லாம் எம்ஜிஆரின் நிழற்படங்களுடன் பதாகைகள் மற்றும் எம்ஜிஆரின் திரைப்பட பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது .
வீதியெங்கும் வாழை மர தோரணங்கள் அலங்கரித்து மின்விளக்குடன் நகரமே ஜொலித்து கொண்டுள்ளது . ஏராளமான பொதுமக்கள் விழா நடைபெறும் திடலை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர் .
வேலூர் , ஆரணி , விழுப்புரம் , வந்தவாசி ஊர்களில் இருந்தும் எம்ஜிஆரின் தொண்டர்கள் பஸ் , வேன் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர் .
வழி நெடுகிலும் எல்லா இடங்களிலும் எம்ஜிஆரின் படம் அலங்கரிப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .
மேற்கண்ட நிகழ்ச்சிகளை காணும் போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உயிரோடு நம்முடன் இருப்பதை போல் உணர்வு ஏற்படுகிறது .
எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்கள் உருண்டோடிவிட்டாலும் அவருடைய ரசிகர்கள் , தொண்டர்கள் மக்கள் என்று மக்கள் சக்தி இன்னமும் உயிர்ப்புடன் அறிந்து மனம் பேரானந்தம் கொள்கிறது .
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்
என்ற கேள்விக்கு ஒரே பதில்
எங்கள் எம்ஜிஆர் .
எம்ஜிஆருக்கு என்றென்றும் உண்மையான ரசிகர்கள் தொண்டர்கள் துணையாக நின்றார்கள் . வெற்றி பெற்றார்கள் .சவால்கள் விட்டவர்கள் பலரும் காணாமல் போய் இன்னமும் கனவுலகில் மிதக்கிறார்கள் .
எம்ஜிஆர் ஒரு சரித்திர சகாப்தம்
எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு இன்றளவும் குறைவில்லாமல் புதிய தலைமுறை மக்களுடன் புகழ் மிக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .. அதற்கு சாட்சி இன்று நடைபெறும் திருவண்ணாமலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா .
-
-
-
-
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ .மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஸ்டால் பற்றிய
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...ps8vbwxhaw.jpg
-
-
-
-
-