-
வினோத் சார்,
சண்டைக் காட்சிகளில் மக்கள் திலகம். நினைத்தாலே இனிக்கும். பொதுவாக சண்டைக்காட்சிகள் என்றாலே வன்முறை என்று ஆகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் துளியும் வன்முறைக்கு இடமின்றி ரசிக்கும்படியாக அமைந்த சண்டைக் காட்சிகள் என்றால் அவை நம் மக்கள் திலகத்தின் திரைப்படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள் மட்டுமே. இந்த சாதனையை உலக அளவில் வேறு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. சண்டைக் காட்சிகளிலும் நீதியை நிலைநாட்டி பின்புறமிருந்து தாக்கக் கூடாது, நிராயுதபாணியைத் தாக்கக் கூடாது, வலியச் சென்று தாக்கக் கூடாது, என்று பல நியதிகளைக் கடைபிடித்து தனது கடைசி படம் வரை இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்த ஒரே நடிகர் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. பொன்னிற முகத்தில் புன்னகை தவழ எதிரியை அவர் எதிர்கொள்ளும் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரூப் சார் கூறியது போல் உழைக்கும் கரங்கள் மான்கொம்பு சண்டை நம்மை பிரமிக்க வைக்கிறது என்றால் அதற்கு ஈடாக மாட்டுக்கார வேலன் சண்டைக் காட்சியும் மலைக்க வைக்கிறது. மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் இரு கைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுழன்றாடும் காட்சி , மந்திரிகுமாரி படத்தில் கதாநாயகி ஜி.சகுந்தலா அவர்களைத் தோளில் சுமந்து கொண்டு சுழன்றாடும் சண்டைக் காட்சி, ராஜாதேசிங்கு படத்தில் குறவன் வேடத்தில் இரு கைகளிலும் வாளேந்தி வரும் சண்டைக் காட்சி இப்படி பல சண்டைக் காட்சிகள் . இவற்றில் எதை மிகவும் பிடித்தது என்று சொல்வது? மனதிற்குள் ஒவ்வொரு முறையும் ஒரு மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஒவ்வொரு காட்சியையும் காணும் போது அது தான் மற்றெல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று தோன்றுகிறது. இது தான் மக்கள் திலகத்தின் உச்ச பட்ச சாதனை. நாம் ரசிப்பது மட்டுமல்ல அவர் ரசிப்பது மிக அருமையாக இருக்கும் . எனவே தான் பல படங்களில் அவர் போடும் சண்டையை அவரே ரசிப்பது போல காட்சிகள் அமைந்திருக்கும். உதாரணமாக மாட்டுக்கார வேலன் படத்தில் ரப்பர் பந்து போல அவர் இங்கும் அங்கு துள்ளித் துள்ளி போடும் சண்டைக் காட்சி ஓர் அழகு என்றால் அதை தன் விழிகளில் வியப்பும் இதழ்களில் சிரிப்பும் பொங்க ரகு எம்.ஜி.ஆர். ரசிப்பது அழகோ அழகு.இது போலவே நீரும் நெருப்பும் படத்தில் கத்திக் குத்து பட்டு உயிருக்குப் போராடும் கட்டத்திலும் அண்ணன் போடும் கத்திச் சண்டையை ரசிப்பது. குடியிருந்த கோயில் படத்தில் அடடா என்னா போடு போடறாரு அண்ணன்னா அண்ணன் தான் என்று சொல்லி ரசித்துக் கொண்டே அண்ணே நானும் வரட்டுமா எனக் கேட்பது. மேலும் ராஜா தேசிங்கு படத்திலேயே தம்பி தேசிங்கு இருகைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுற்றிச் சுழன்று போடும் சண்டையை விழிகள் விரிய ரசிக்கும் அழகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
-
-
இடது கையில் வாள் சண்டை செய்வது போல் தலைவர் ராஜகுமாரி படத்தில் செய்து இருக்கிறார். அதன் பின்பு அதிக நேரம் செய்தது நீரும் நெருப்பும் படத்தில் தான்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
-
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தலைவர் மற்றும் நம்பியார் சண்டை காட்சியில் தனியாக ஒரு கதையே இருக்கும். மிகவும் வித்தியாசமான சண்டை காட்சி.
-
https://www.youtube.com/watch?v=HoK_vxpZXG4
இடது கை சண்டை காட்சி நீரும் நெருப்பும்.
தியேட்டரில் படம் பிடித்தது திரு.சத்யா அவர்கள்.
-
https://www.youtube.com/watch?v=y1mXzD6gktY
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சண்டை காட்சி. இதை நான் வேறு விதமாக எடிட் செய்து இருக்கிறேன்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
-
திரு ரவிச்சந்திரன் சார்
சந்திரபாபு பற்றி கண்ணதாசன் எழுதிய கட்டுரை மூலம் எந்த அளவிற்கு அவர் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது நிருபணம் ஆகிறது .
மக்கள் திலகத்திற்கும் அவர் பலவித தொந்தரவுகள் தந்தாலும் அதனை மக்கள் திலகம் மன்னித்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து உதவிகளும் புரிந்தது மனித நேயத்திற்கு எடுத்து காட்டு.
-
ரூப் சார்
மக்கள் திலகத்தின் [ எ ]தங்களுக்கு பிடித்த அருமையான சண்டை காட்சிகள் பதிவிட்டமைக்கு நன்றி .
அன்பே வா படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - நெல்லூர் காந்தராவ் சண்டை காட்சியும்
நெல்லூர் காந்தாரவை மிகவும் லாவகமாக ஒரே ஷாட்டில் தூக்கி மறுமக்கம் வீசும் அழகே அழகு .
மற்றும் இரண்டு பயில்வானின்
உதவியாளர்களை பம்பரமாக தூக்கி அடிக்கும் காட்சியும் பிரமாதம் .
மான் கொம்பு சண்டை பற்றி கேட்கவே வேண்டாம் . அந்த வயதிலும் இளமையுடன் பம்பரமாக சுழன்று கொண்டே போடும் சண்டை காட்சி - மறக்கவே முடியாது .
-
ஜெய் சார்
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றிய விரிவான உங்களின் கட்டுரை அருமை .
என்றென்றுமே மறக்க முடியாத - பலவிதமான சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் நமது மக்கள் திலகம் .
-
ரவிச்சந்திரன் சார்
நீங்கள் 15-1-2013 அன்று துவங்கிய மக்கள் திலகம் mgr part -4 இன்று 3000 பதிவுகள் என்ற பெருமை பெறுகிறது . 51 நாட்களில் , நமது நண்பர்கள் அனைவரின் சிறப்பான மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - நிழற்படங்கள் - ஆவணங்கள் - வீடியோ என்று பதிவிட்டு பெருமை சேர்த்தனர் .
பார்வை யாளர்களின் எண்ணிக்கையும் இன்று 47,777 [காலை 5.50 மணி ].
அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றி .