-
மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் நடித்த படம் .
தொழில் அதிபராகவும் , துப்பறியும் அதிகாரியாகவும் வித்தியாசமான நடிப்பில் வந்த படம் .
வாணிஸ்ரீ - வெண்ணிற ஆடை நிர்மலா -குமாரி பத்மினி
mn ராஜம் -ps வீரப்பா -தேங்காய் ஸ்ரீனிவாசன் -கண்ணன் நடித்தது .
பிள்ளை தமிழ் பாடுகிறேன் ......
இரவு பாடகன் ...ஒருவன்
அழகெனும் ஓவியம் .....இங்கே
இது தான் முதல் ......
போன்ற இனிய பாடல்கள் .
மக்கள் திலகம் - ஷெட்டி மோதும் சண்டை காட்சிகள் சென்ஸார் பல இடங்களில் வெட்டியதால் சண்டை காட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .
மெல்லிசை மன்னரின் இசை சுமாரக அமைந்த படம் .
Tms பாடல் இல்லாதது - குறைதான் .
1976 அன்றைய அரசியல் நெருக்கடி சூழ் நிலையில் மக்கள் திலகம் இப்படத்தை மிகவும் சிரம பட்டு எதிர்ப்புகளை மீறி வெளியிட்டார் .
ஊருக்கு உழைப்பவன் - ரசிகர்களின் மனதை கவர்ந்தவன் .
-
மக்களின் நாயகன்!
எம்.ஜி.ஆர்! தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் இன்னமும் நீங்கா இடம் பெற்றிருக்கிற மூன் றெழுத்து மந்திரச் சொல் இது.
அண்மையில் சென்னையில் ‘நாடோடி மன்னன்’ திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் அந்தப் படத்தின்மீது காட்டிய ஆர்வத்தைக் கண்டு தமிழக மெங்கும் வியப்பின் வெளிச்சம்! பல புதிய படங்கள் பெறாத வசூலை ‘நாடோடி மன்னன்’ பெற்றதைக் கண்டு, திரையுலக பெரும் புள்ளிகளே அசந்து போயினர்.
காலத்தால் அழியாத அவரது இந்த வெற்றிக்கும் புகழுக்குமான அடிப்படைக் காரணம், சினிமாவிலும், நிஜத்திலும் உளவியல் ரீதியாக எம்.ஜி.ஆர். மக்களோடு ஊடுருவிய விதம்தான்!
கூட்டத்தைக் கண்டுமிரளும் நட்சத்திரங்களிடையே, மக்களிடம் நெருங்கிப் பழக ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர். சென்னை கமலா தியேட்டரில், ‘ஊருக்கு உழைப்பவன்’ ரிலீஸான (1976, நவம்பர்) ... திடுதிப்பென்று ஒரு மாலைக் காட்சிக்கு வந்திருந்தவர், படம் முழுக்க மக்களோடு இருந்து பார்த்தார். பிதுங்கி வழியும் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பத்திரமாக அனுப்பிவைக்க முடியுமா என திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் பதற, ‘‘கவலைப்படா தீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது!’’ என்று புன்சிரிப்போடு அவருக்கு தைரியம் சொல்லி, உள்ளே இருந்த ரசிகர்கள், வெளியே இரவுக் காட்சிக்காகக் காத்திருந்தவர்கள் என அனைவரிடமும் கையசைத்து அளவளாவிவிட்டு, வடபழனி பகுதியையே அதிரவைத்த அவர்களின் ஆரவாரக் கூச்சலிடையே நிதானமாகக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார் எம்.ஜி.ஆர். அவர் சென்ற பின்பும், தியேட்டரில் இருந்த பரபரப்பு அடங்க நீண்ட நேரமானது.
எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவுக்கு ஆளாகி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவருக்கென்று ஒரு ஸ்பெஷல் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. பிறரிடமிருந்து முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நோய்க்கிருமி எதுவும் தொற்றிக்கொள்ளக் கூடாது என்ற டாக்டர் களின் முன்யோசனையில் ஏற்படுத்தப்பட்ட குழு அது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு அதெல் லாம் பிடிக்கவில்லை. பொதுமக்களிடமிருந்து தன்னை யாரும் பிரிக்கக்கூடாது என்றே விரும்பினார் அவர். அதனால் அந்தப் பிரத்யேகப் பாதுகாப்புக் குழுவினரையும் மீறிப் பொதுமக்களை நெருங்கி வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதி நாள் வரையிலும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது (1965), எம்.ஜி.ஆர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப் பிடிப்புக்காக கோவாவில் இருந்தார். அதை அன்றைக்குக் காங்கிரஸாரும், பின்னர் 1972&ல் தி.மு.க&வை விட்டு எம்.ஜி.ஆரை விலக்கிய பின் தி.மு.க.வினரும் கடுமையாகச் சாடிப் பேசினார்கள். ‘‘அண்ணா வேண்டுகோளுக்கு இணங்கியே நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அது மட்டுமல்ல, இங்கே இந்திப் போராட்டத்தில் உயிர்கள் பலியானபோது, நான் மட்டும் கோவாவில் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. கறுப்பு பாட்ஜ் அணிந்து மவுனம் காத்தேன்’’ என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.
‘‘எம்.ஜி.ஆரால் ஒரு நாள்கூட போராட்டம் என்ற பெயரில் சிறையில் இருக்க முடியாது’’ என்று தி.மு.க., காங்கிரஸ் எனப் பல கட்சியினரும் கேலியாக விமர்சனம் செய்தபோது, எம்.ஜி.ஆர். அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் பதில் சொல் லாததாலேயே அவர்கள் சொன்னது உண்மையென்று ஆகிவிடாது. 1958&ல் பிரதமர் நேரு, அண்ணாவை ‘நான்சென்ஸ்’ என்று கூறியதற்காக, நேரு சென்னை வரும்போது கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்று தி.மு.க.வினர் திட்டம் தீட்டியிருந் தார்கள். ‘‘கலைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’’ என்று அண்ணா கூறியிருந்தாலும், போலீசார் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ஆகியோரைக் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
உயர்ந்த வசதிகள் உள்ள பிரிவுக்கு மாற்றவேண்டு மென்று மற்றவர்கள் முயன்ற போதும், ‘‘இங்குள்ள மற்ற கைதிகளுக்கு என்ன வசதிகள் தரப்பட்டிருக்கிறதோ அதுவே எனக்கும் போதுமானது!’’ என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். ஜாமீனில் வெளி வரவும் மறுத்து, துர்நாற்றம் மிகுந்த அறையில், கொசுக் கடியில் ஐந்து நாட்கள் கழித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இந்தச் சிறை அனுபவத்தை அவர் எந்த ஒரு பொதுக்கூட்ட மேடையிலும், ஏன்... ஆனந்தவிகடனில் அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ வாழ்க்கைத் தொடரில்கூட ஒருபோதும் வெளிப் படுத்திக்கொண்டது இல்லை. இந்தப் பண்பு எத்தனை பேருக்கு வரும்?
நன்றி ஆனந்த விகடன்
-
-
-
-
-
-
-
-