-
பதிவு 1
குருவிடம் செல்லும் முன் அதை ஒற்றிய கிரகத்தைப்பற்றிய சில உண்மைகளை ஆராயலாம் - இந்த குரு வினால் ஒருவர் வாழ்க்கையில் என்னல்லாம் பழங்கள் வருகிறது என்பதையும் பதிவு 2இல் பார்ப்போம் .
http://i818.photobucket.com/albums/z...psgepx1rsj.png
Jupiter is the largest planet in the solar system. Fittingly, it was named after the king of the gods in Roman mythology. In a similar manner, the ancient Greeks named the planet after Zeus, the king of the Greek pantheon.Jupiter is the fifth planet from the Sun and the largest planet in the Solar System. It is a giant planet with a mass one-thousandth that of the Sun, but is two and a half times that of all the other planets in the Solar System combined. Jupiter is a gas giant, along with Saturn (Uranus and Neptune are ice giants).
-
ரவி ஜி
எனது திரையில் பக்தி யும் உமது தெய்வங்களும் சேர்ந்தே இருக்கட்டுமே
ஏன் தொடரக்கூடாது.. தொடருங்கள் ப்ளீஸ்
அதே போல் ஆச்சார்ய தேவோ பவா .. ஆம் குருவிற்கு வணக்கம் சொல்வது மிகவும் அவசியம். தொடருங்கள்
-
பதிவு 2
http://i818.photobucket.com/albums/z...psbve9mvrd.jpg
வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள்
அடைக்கலம் போற்றி போற்றி
குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம். குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்க்கும் பொருள் சேமிப்பிற்கும் சகல சௌபாக்கியத்திற்க்கும் புத்திர பாக்கியத்திற்க்கும் அன்பிற்கும் பண்பிற்கும் காரகராகவும் ஓளிபடைத்த மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குபவராகவும் தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.
'குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
-
பதிவு 3 - குறள்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
-
-
ரவி
குரு பக்தியை வலியுறுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் ஸ்கூல் மாஸ்டர். தமிழ் சினிமா வரலாற்றில் குருபக்தி என்கிற வார்த்தைக்கு விளக்கமாய் உடனே நினைவுக்கு வருவதும் இப்படமே. 70களில் வெளிவந்த ஸ்கூல் மாஸ்டர் தமிழில் மெல்லிசை மன்னரின் இசையில் எல்.ஆர். அஞ்சலி குழுவினர் பாடிய மிகச் சிறந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த, ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா பாடலாகும்.
முதல் சில வரிகள் நினைவில் உள்ளன.
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே பெருகி வாங்கடா
வானரப் படை பாலம் போட்டது ராமனுக்காகவே - இந்த
மாணவர் படை சேவை செய்வது குருவினுக்காகவே..
அருமையான பாடல். இதனுடைய ஆடியோ அல்லது வீடியோ எதுவுமே இணையத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.
-
ரவி சார்,
அவ்வளவு எளிதில் மறக்கக் கூடிய பதிவுகள் அல்ல உங்கள் பதிவுகள். அழகான சிறு கதைகள், அறிவுறுத்தும் விஷயங்கள் என்று அம்சமான, உபயோகமான தலைப்புகளில் பாடல்கள் மூலம் நீங்கள் திரிக்கு தந்தது ஏராளம். உழைப்பும் அதிகம். இப்படி இருக்க திடீரென்று மறந்து விட்டோம் என்று ஏன் வீணே சந்தேகம் வந்தது? வரலாமா? குளியல் காட்சிகள், தலையணை பாடல்கள் எல்லை மீற வில்லையே! அது ஒரு ஜஸ்ட் ஜாலிதானே! அதைக் கூட செந்தில் சார் இப்போது தவிர்த்து விட்டாரே. எவ்வளவு அருமையான அபூர்வப் பாடல்கள் நடுவே வருகின்றன!
தங்களின் 'குரு' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் தங்கள் பாணியில் அமர்க்களமாகத் தருவீர்கள் என்றும் நம்புகிறேன்.
-
vanakkam Ji
vanakkam raghav ji
-
-