-
பொங்கும் பூம்புனல்
என்ன தீர்க்கதரிசனமான வரிகள்.. இன்றைய காலகட்டத்தில் பலித்தே விட்டது..
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு (ஷாதகம்...மன்னிக்கவும்...) சாதகம்... அது
பொல்லாதவன் கையில் இருந்தால் எல்லார் உயிருக்கும் பாதகம்...
பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொருவர் வாழ்விற்கும் இன்று பொருந்தும் வரிகள்..
யார் ஜம்புலிங்கம் படத்தில் சி.என்.பாண்டுரங்கன் இசையில் சி.எஸ்.ஜெயராமன் குரலில்..
http://www.inbaminge.com/t/List%20Of...In%201972.html
-
பொங்கும் பூம்புனல்
யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி...
அது யாரது.. அது என்ன கேள்வி.. எதைப் பார்த்தான்... ஏன் சிரித்தான்...
இவையனைத்திற்கும் விடையளிக்கிறார் ராட்சஷி...
சரணத்தின் மெட்டு... ஆஹா...சூப்பர்.. என்று கேட்கும் ஒவ்வொருவரும் சொல்லக் கூடும்...
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சூப்பர் டூப்பர் பாட்டு....
வாசு சார்... இது உங்களுக்காக...இனிமேல் உங்கள் பிளேயரில் தினமும் ஒலிக்கப் போகிற பாடல்
http://www.inbaminge.com/t/p/Ponmagal%20Vandhal/
-
பொங்கும் பூம்புனல்
மச்சான் ஏன் மாலை நேரம் மட்டும் பார்த்து பார்த்து வருகிறார்.. அவருடைய ஆசை என்ன...
சூப்பர் டூப்பர் மெட்டோடு ஈஸ்வரி கேள்வி கேட்கிறார்..யாராவது விடை தாருங்களேன்...
http://www.inbaminge.com/t/p/Ponmagal%20Vandhal/
வாசு சார்... சங்கர் கணேஷ் ஈஸ்வரி காம்பினேஷன் பற்றி தனியாக ஒரு பத்து பக்கத்திற்காவது விவாதிக்க வேண்டும்.. அவ்வளவு நுணுக்கமான சங்கதிகள் இந்த படைப்புக்களில் உள்ளன.
இதுவும் வாசு சார் பிளேயரில் அன்றாடம் ஒலிக்கப் போகும் பாடலானால் வியப்பில்லை.. இதுவும் பொன்மகள் வந்தாள் படத்தில் தான்.
-
பொங்கும் பூம்புனல்
யாரப்பா இது காலையில் ஒரு மாதிரியான பாட்டாகப் போட்டு கடுப்பேத்துவது என்று யாரோ மனதுக்குள் திட்டுவது தெரிகிறது.. திட்டிக் கொண்டே இந்தப் பாடலைக் கேளுங்கள்... இசையரசியின் சூப்பர் குரலில் அட்டகாசமான பாடல்.. நடுவில் அவரது சிணுங்கலான சிரிப்பும் உங்களை வசீகரிக்கும்..
ராணி யார் குழந்தை படத்தில் டி.வி.ராஜு இசையில் ராஜா என் மோகத்தைத் தூண்டாதே... அருமையான பாடல்... பாடலில் கிடாரின் இசை நம்மை வசப்படுத்தி விடும்..
http://www.inbaminge.com/t/r/Rani%20Yaar%20Kuzhandhai/
-
பொங்கும் பூம்புனல்
நானென்னும் அகந்தை கொண்ட ஆண்கள் முன்னே தாழ்ந்தவரல்ல. பெண்கள் தாழ்ந்தவரல்ல...
மிக மிக அபூர்வமான பாடல்... ஒவ்வொரு வரியும் கருத்துள்ள பாடல்... இப்பாடலுக்கு நன்றி நமது tfmlover அவர்களுக்கு..
உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் மெல்லிசை மாமணி இசையில் இசையரசியின் குரலில்..
http://www.inbaminge.com/t/u/Unakkum%20Enakkum/
-
[QUOTE=rajraj;1167325]T.V.Rathinam, a popular singer in the 50s. I will post one of her song later. I think I posted her song about 'Radio petti' in some thread! :) Those days radio was a luxury item! :lol:
-------------------------------------
TV RATHNAM- SINGER
http://i60.tinypic.com/2cibfvq.jpghttp://i58.tinypic.com/vpw1sh.jpg
-
-
-
டி..வி.ரத்னம் அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நடிகர் திலகம் நடித்து வெளியான 'முதல் தேதி' திரைப்படம் கன்னடத்தில் தயாரானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை பி.ஆர்.பந்துலுவும், அஞ்சலிதேவி கதாபாத்திரத்தை பந்துலுவின் மனைவி எம்.வி.ராஜம்மாவும் ஏற்று நடித்தனர்.
அதிலிருந்து முதல் தேதி என்ற பாடலை ரத்னம் அட்டகாசமாகப் பாடியிருப்பார்.
http://www.youtube.com/watch?v=kWVY0...yer_detailpage
-