ராகவேந்திரன் சார்!
'துள்ளல் போடுது என் மனமே' 'கண்ணோடு மீனக் கண்டு' பாடல் கேட்டு. என்ன ஒரு பாட்டு! தொடரில் வரும் கண்டிப்பாக.
Printable View
ராகவேந்திரன் சார்!
'துள்ளல் போடுது என் மனமே' 'கண்ணோடு மீனக் கண்டு' பாடல் கேட்டு. என்ன ஒரு பாட்டு! தொடரில் வரும் கண்டிப்பாக.
இன்று இரண்டு முத்தான பாடல்கள்
சுசீலா அம்மாவின் இன்னொரு முத்தான பாடல். தேவிகா அண்ணி குட்டிப் பெண் ராஜியைக் கொஞ்சிக் குலாவி மகிழும் பாடல். தேவிகா சற்று வயது முதிர்ந்து தெரிந்தாலும் அழகாக இருக்கிறார். ஹேர் ஸ்டைல் பேசுகிறது.
http://raretfm.mayyam.com/pow07/imag...veegauravu.jpg
'தெய்வீக உறவு' படத்தின் தேன் பாடல் இது. நாயகன் ஜெய். இசை 'திரை இசைத் திலகம்'
இனிமையான தாலாட்டும் தென்றல் சுகம் இப்பாடலில்.
மரம் பழுத்தால் பறவையெல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னையென்று பேரெடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்
(மரம் பழுத்தால்)
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வாழை இல்லை நாரெடுத்து வளர்க்கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பான் உலகிலே
அந்த மகிமைதன்னை சொல்வதென்ன மொழியிலே
(மரம் பழுத்தால்)
கோடி பெறும் கோபுரமே! குறையாத தேன் குடமே!
கனிக்குலையே உன் அழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே! குறையாத தேன் குடமே!
கனிக்குலையே உன் அழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணை இருந்து கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கின்றேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கின்றேன்
(மரம் பழுத்தால்)
https://youtu.be/GVpFZMj_GD0
அதே 'தெய்வீக உறவு' படத்தில் மேஜிக் ராதிகாவும், மனோகரும் ஜோடி போட்டு இணையும் அபூர்வப் பாட்டும் ஒன்னு இருக்கு.
https://i.ytimg.com/vi/B8c7tTO-hE8/hqdefault.jpg
ராட்சஸி பாடியிருப்பார். மனோகர் மனோகரமாக பிளாக் அண்ட் பிளாக்கில் அழகாக இருப்பார். ராதிகாவும் ஓகே. ராட்சஸி வழக்கம் போல பின்னல். ரகளை.
'செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ?!
என்று உச்சரிக்கும் போது அமர்க்களம். இந்தப் படத்தில் எ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ நடித்திருக்கிறார்கள் என்று பாடலை அப்லோட் செய்த Best of Tamil and Telugu Movies - SEPL TV தகவல் சொல்கிறது. எங்கே போய் அழ?
அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பணுமா
செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தைத் தேடுகின்றதோ
செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்காரப் பெண்மை கண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தைத் தேடுகின்றதோ
பாலாடை வண்ணம் தொட்டு
மேலாடை மின்னும் மொட்டு
தாளாது மோகம் தந்ததோ
அந்த தாகத்தில் வேகம் வந்ததோ
(அறிமுகமா)
கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆடவிட்டு
உண்ணாத கோலம் என்னவோ:)
இந்த உலகத்தில் லாபம் என்னவோ
கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆடவிட்டு
உண்ணாத கோலம் என்னவோ
இந்த உலகத்தில் லாபம் என்னவோ
பொல்லாத ஆசை வந்து
தள்ளாடும் அல்லிச் செண்டு
உன் மார்பில் சாய வேண்டுமா
இன்னும் உயிரெல்லாம் பாய வேண்டுமோ
(அறிமுகமா)
https://youtu.be/B8c7tTO-hE8
மது அண்ணா!
'சமுத்திர ராஜகுமாரியை' ஞாபகப்படுத்தி விட்டீர்களே!:) சரி! தொடரில் பார்த்துக் கொள்ளலாம்.
ரவி சார்,
உங்கள் குரு கண்ணீர் வடிக்கிறாரே!
'நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்'
நாகேஷ் 'மெல்லிசை மன்னர்' குரலில் பாடுகிறார்.
'என்றோ புலவன் பாடியதை நான்
இன்றே பாடுகிறேன்'
https://youtu.be/b8T-eFv0vFo
பிள்ளைகளால் கைவிடப் பட்ட 'school master' (Hindi) குருவுக்கு பழைய மாணவனான நடிகர் திலகம் வாழ்வு அளிப்பதைப் பாருங்கள். 2011 ல் நான் 'you tube' ல் அப்லோட் செய்தது.
https://youtu.be/q8vxKpQy2RM
வாசு ஜி... தெய்வீக உறவைச் சொன்னதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது..
ஜெய்யின் போஸை எல்லாம் கவனியுங்க.. ஹிஹி
முத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ
கட்டழகுத் தாமரையோ காரோட்ட வந்ததுவோ
https://www.youtube.com/watch?v=QhGXkM1IIBI
எண் ஒன்றை சிலாகிக்கும் விதமாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தும் வாசு சாரின் பாடும் நிலா பாலாவின் குரல் குழைவில் குட்டி ஜெமினி ராஜன் நிர்மலா இணையில் தெய்வம் பேசுமா என்னும் மறக்கப்பட்ட படத்திலிருந்து மறக்க முடியாத மதுர கீதம் !
https://www.youtube.com/watch?v=VlCqmLDN5ds
Good morning all
like laam veetku pOi paat kaet thaan pOduvEn..
அது சரி..தெய்வீக உறவுல்ல இன்னொரு தேவிகா பாட் இருக்குமே.. அதை ஏன் விட்டுப் புட்டீஹ..
**
காலங்காலையிலே கொஞ்சம் வேதாந்த சிந்தனை ப்ரதோஷமும் அதுவுமா..
யோசிச்சுப் பார்த்தா வாழ்க்கையே ஒரு நாடக்ம் தானே
வேடம் பலகொண்டு விந்தைமிக வாழ்வில்
வேகமாய்ச் செல்பவ ரே - இங்கு
நாடகம் போலத்தான் வாழ்விலே ஆட்டங்கள்
முடியவும் கலையுமய்யா - காற்றில்
கலந்திட மறையுமய்யா..
ஊடலில் பாடலில் ஆடலில் சாடலில்
கூடி ஒளிந்திருந்தீர் - பல
உண்மைகள் தெளிந்திருந்தீர்
தூறலாய்த் துளிகளாய்ச் சேர்ந்த மழைபொலும்
வாழ்வதில் மகிழ்ந்திருந்தீர் - சுகம்
ஆயிரம் கண்டிருந்தீர்..
நாடகம் முடிந்திட நேரமும் உண்டென
நாவலர் எழுதிவைப்பார் - நல்ல
பாவலர் பாடி வைப்பார் - வாழ்வின்
நாடகம் முடிவது எங்ஙனம் என்பதும்
ஈசன் அறிந்திடுவான் - வேளை
வரவும் அழைத்திடுவான்..
ம்ம் இன்னும் எழுதலாம் டைம் இல்லியோன்னோ..
*
சரி ஈ.ஈ..எதுக்காக இது இப்போ.. எஸ்.. அதே தான்..
டி.ராஜேந்தரின் பாட்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம்..
மைதடவும் விழியோரம்
மோகனமாய் தினமாடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்..
ம்ம் கிளிஞ்சல்கள்... பூர்ணி..
இன்னும் எத்தனை நாடகம் இருக்கிறது
இந்த நாடக்ம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா
நாடகம் நிறைவேறும் நாள் உச்சக் காட்சி நடக்குதம்மா - கமல்
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே - ம.தி
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் - ந.தி
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்தக் கவிதையின் ஆலயம் - ம.தி.
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ. செளசெள கார்
நாளை வருவது யாருக்குத் தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலக் கிளியே
நாடகத்தின் கதையும் புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன...
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கள நாடகம் ஆட வந்தாயே
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ..
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட
நடிகனின் காதலி நாடகம் ஏனடி..
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது
நான் நால்வகை நாடகம் ஆடிடும் (பாட் கேட்டதில்லை பார்த்ததிலலை..ஜெ.கு ஆடறாஙக் மெளனமா!)
எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம்..
நாடகம் ஆடும் கலைஞனடா...போனால் போகட்டும் போடா
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்..
நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்..
**
விளையாட்டா நாடகம் போட்டா நிறைய ப் போய்க்கிட்டே வருதுங்க.. நின்வில் வந்தது பாதி..வாசு.. பண்ணியது மீதி!
இன்னும் விட்டுப்போன நாடகங்கள் போடப் போறீங்க தானே :)
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு
நடிகர்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !Quote:
இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !
காதல் என்பது சுகானுபவமே ..காதலர்கள் கருத்தொருமித்து காத்திடும் வரை...கருத்து விரிசலில் காதல் சுவர் ஆட்டம் கண்டால் ...மனித மனமும் விரிசல் கண்டு...இரண்டாகிறதே!
காதலியை நினைத்து வாழ்ந்திட ஒரு மனம் ....அவளை மறந்து வாழ்ந்திட இன்னொரு மனம்....Dr Jekyll and Mr Hyde போல!!
இரண்டின் முதலிடம்: இரண்டாட்டத்தில் திண்டாடும் வசந்த மாளிகை வேந்தர் !!
https://www.youtube.com/watch?v=Z2VHhYADomI
Place 2 : Raja / இரண்டிலொன்று நீ என்னிடம் சொல்லு ..பூவா தலையா...காயா பழமா...உண்டா இல்லையா....
https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY
இரண்டு கைகள் நான்கானால் ....இருவருக்கேதான் எதிர்காலம்!!
[url]https://www.youtube.com/watch?v=G8U1ACU5Hdk