http://i62.tinypic.com/10fpbfk.jpg
Printable View
http://timesofindia.indiatimes.com/photo/49311522.cms
மனோரமா பெண் நடிகர் திலகம்... முதலமைச்சர் ஜெயலலிதா அஞ்சலி...
https://www.youtube.com/watch?v=oaopEP6sJr0
மனோரமா அவர்களின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அஞ்சலி
https://www.youtube.com/watch?v=DmUcQ9WBu3o
தம்பி செந்தில்வேல்,
அதிகம் பேசப்படாத 'கல்தூண்' படத்தின் 'சிங்காரச் சிட்டுத்தான் எண்ட புள்ள' பாடலை எடுத்து அலசி சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். நிஜமாகவே அருமையான பாடல் அது. நம் மண்ணின் கலாச்சாரத்தையும், கொங்கு நாட்டின் பெருமையையும் பறை சாற்றும் இப்பாடலுக்கு சரியான அங்கீகாரம் எதிர்பார்த்த மாதிரி கிடைக்காதது பெரும் வருத்தமே. நாம் நேற்று கூட இது பற்றி செல்லில் பேசும்போது ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தோம். அது போலத்தான் நான் கொஞ்ச நாட்களுக்கு முன் எழுதிய பரமேஸ்வர கவுண்டரின் வேல் சரித்திரப் பாடல். பின்னாளில் வந்த நடிகர் திலகத்தின் நிறையப் பாடல்கள் இது போன்ற விஷயங்களும், இனிமையும் உடையவை. ஏனோ பழைய படங்களின் அளவிற்கு நம்மில் சிலர் கூட இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரொம்ப சுமாரான 'தர்மராஜா' படத்தில் கூட 'ஜெயித்துக் கொண்டே இருப்பேன்...இந்த தேசத்தின் பெயர் காக்க' என்ற நல்ல தேச பக்தியை ஊட்டும் பாடல் ஒன்று உண்டு. படங்கள் அப்படி இப்படி எந்தக் காலத்திலேயும் உண்டு. ஆனால் காட்சிகள், பாடல்கள் என்று நடிகர் திலகம் முத்திரை என்பது ஒவ்வொரு படத்திலும் எப்போதுமே உண்டு. அவற்றை அனைவரும் இணைந்து வெளிக்கொணர்வோம்.
தங்களின் நடிகர் திலக படங்களின் ரிலீஸ் விளம்பர ஆவணங்கள் அருமை என்பது மட்டுமல்ல. வெரி நீட். அழகாக இருந்தது. என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
நேற்று 'பாக்கியவதி' திரைப்படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ராகவேந்திரன் சாரிடம் கூட அடிக்கடி அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவேன். அந்தப் படத்தின் டிவிடி வராத காலத்தில் ஒரு சமயம் பல்வேறு சிரமங்களுக்கிடையில் ஜெயா மூவீஸ் சானலில் ஒருமுறை அந்தப் படத்தைப் போட்டபோது பதிவு செய்தேன். மிக அருமையான படம். நீங்கள் கூட நேற்று முன் தினம் பார்த்ததாகக் கூறினீர்கள்.
பழைய படங்களிலும் எடுத்து அலச வேண்டிய முத்துக்கள் நிறைய உண்டு. அதில் பாக்கியவதி, வாழ்விலே ஒரு நாள் போன்ற படங்கள் நிச்சயம் உண்டு. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்கள் உழைப்புக்கு என் இனிதான வாழ்த்துக்கள்.
இதோ சிங்கார சிட்டுத்தான் பாடல் வீடியோவாக.
https://youtu.be/HtI2WuwCvyI
வாசு சார்
தாங்கள் கூறியதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
தம்பி செந்தில்வேல் போன்றவர்கள், நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்களால் ஈர்க்கப்பட்டு ரசிகர்களானவர்கள். இதிலேயே நடிகர் திலகத்தின் ஆளுமை புலனாகும். எந்த வயதினரையும் எந்தக் காலத்திலும் எந்தப் படத்தின் மூலமும் ஈர்க்கும் வல்லமை படைத்தவர் நடிகர் திலகம் என்பதற்கு இது சரியான சான்று. பின்னாளைய படங்களில் எந்தெந்த படங்களில் நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பு அலசப்படவில்லை என்பதைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றிய சரியான அணுகுமுறையை நமது ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செவ்வனே செய்ய தாங்களே பொருத்தமானவர். இதில் தங்களுடன் சேர்ந்து நானும் கலந்து கொள்கிறேன்.
அவருடைய நடிப்பு இறுதி வரை முழுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாக்கியவதி படத்தில் திருடனாக, பெண்ணின் பெருமை படத்தில் வில்லனாக, திரும்பிப்பார் படத்தில் ஸ்த்ரீலோலனாக என்று நெகடிவ் பாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல், இமேஜ் என்கிற வளையத்திற்குள் சிக்காமல், நடித்தவர் நடிகர் திலகம்.
விரைவில் இப்பணியைத் தாங்கள் தொடர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
'நடப்பது சுகமென நடத்து'
https://i.ytimg.com/vi/svRAEAfMiwk/hqdefault.jpg
'மூன்று தெய்வங்கள்'
படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.
கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.
அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.
http://i.ytimg.com/vi/9YiNDzAL3P4/hqdefault.jpg
காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச்
சான்றுகள்.
ச்சும்மா ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.
http://i57.tinypic.com/23ickex.jpg
ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
https://youtu.be/ZQABO4Dk7hQ
அருமை..வாசு சார்.
விமர்சனம், விளக்கம்,வர்ணனை.. இதற்கெல்லாம்
பொருள்,உங்கள் எழுத்தில்தான்
இருக்கிறது எனலாம்.
நன்றி.
Sent from my GT-S6312 using Tapatalk
சூப்பர்Quote:
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.