http://i64.tinypic.com/99m8o9.jpg
Printable View
http://i68.tinypic.com/5ufwhx.jpghttp://i68.tinypic.com/acg94.gif
மக்கள் திலகம் எம்ஜிஆர் 101வது இனிய பிறந்த நாள் .
http://i68.tinypic.com/2m4ofmd.jpg
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக என்னுடைய பொன்விழா ஆண்டு.
http://i63.tinypic.com/210h9x5.gif
50 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் , அரசியல் என்று அவரின் நினைவாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் .
http://i63.tinypic.com/v8lvg9.jpg
1968 பொங்கலுக்கு முன்பு வெளிவந்த ரகசிய போலீஸ் 15 முதல் 1978 பொங்கல் அன்று வெளிவந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
http://i67.tinypic.com/9syrn6.jpghttp://i67.tinypic.com/91070l.jpg
வரை 41 படங்களை முதல் நாள் முதல் காட்சி மற்றும் முதல் வாரத்தில் ரசிகர்கள் வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது . அந்த இனிய நாட்களை என் வாழக்கையில் என்றென்றும் மறக்க முடியாது .
1978 முதல் 2018 இன்று வரை மக்கள் திலகத்தின் பல படங்களை பல்வேறு ஊர்களில் பல்வேறு திரை அரங்குகளில் மறு வெளியீடுகளில் பலமுறை காணும் வாய்ப்பு கிடைத்தது மக்கள் திலகத்தின் மன்றங்கள் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நட்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் . இன்றும் நட்பு வட்டம் தொடர்கிறது .
மக்கள் திலகத்தின் மறக்க முடியாத நினைவலைகள் .
1968 -- ரகசியபோலீஸ் 115 , குடியிருந்தக்கோயில் , ஒளிவிளக்கு படங்கள் மேலும் எம்ஜிஆர் நடிப்பின் மீது தீவிர பக்தி .
1969 - வரலாற்று காவியம் அடிமைப்பெண் மற்றும் நம்நாடு . எம்ஜிஆர் மீது மேலும் பற்று அதிகமானது .
1970 - உலகம் சுற்றும் வாலிபன் விமான நிலையத்தில் மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரை பார்த்து பரவசம் .
1971 பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆருக்காக எங்கள் மன்றம் சார்பாக ஓட்டு சேகரித்தது .
1972- பாரத் பட்டம் கிடைத்த நேரத்தில் பிரமாண்டமாக கொண்டாடியது .
1972 புரட்சி நடிகரை புரட்சித்தலைவராக ஏற்று கொண்டது . அதிமுக இயக்கத்தில் தொண்டனாக மாறியது .
1973 உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி முழக்கங்கள்
1974 உரிமைக்குரல் இமாலய வெற்றி . கோவை - புதுவை தேர்தல்களில் வெற்றி
1975 இதயக்கனி பிரமாண்ட வெற்றி
1976 மக்கள் திலகத்தின் தீவிர அரசியல் பிரச்சாரம்
1977 நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி .
1977 உலக வரலாற்றில் ஒரு நடிகர் எம்ஜிஆர் தமிழ் நாட்டின் முதல்வர்
1977, 1980,1985 சென்னை நகரில் மக்கள் திலகத்தை மக்கள் வெள்ளத்தில் கண்டு களித்தது
http://i65.tinypic.com/2e3pifs.jpg
1977 - 1987 அரசியல் வரலாற்றில் எம்ஜிஆரின் திறமையான ஆட்சியின் அணுகுமுறைகள் , கட்சியின் கட்டுப்பாடு , துரோகங்களை முறியடித்தல் சிறந்த தேசியா தலைவர் எம்ஜிஆர் இப்படி பல்வேறு புகழின் உச்சியில் எம்ஜிஆர் வாழ்ந்து காட்டிய சகாப்தம்
1987 முதல் இன்று வரை எம்ஜிஆரின் திரைப்படங்கள் திரை அரங்குகளிலும் , ஊடகங்களிலும் வலம் வந்த வண்ணம் உள்ளது .
2005க்கு பிறகு சமூக வலை தளங்கள் மூலம் மேலும் மிகப்பெரிய அளவில் உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் கிடைத்தது மறக்க முடியாத நட்பு பாலம் . குறிப்பாக மய்யம் இணையதளம் மூலம் பல நட்பு வட்டங்கள் கிடைத்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அருமையான பதிவுகள் நமக்கு பொக்கிஷமாக இடம் பெற்றுள்ளது .
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் . மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவுகள் ஒரு அமுதசுரபி .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாக்கள் உலகமெங்கும் மிக சிறப்பாக கொண்டாடினார்கள் .
மக்கள் திலகத்தின் 101வது இனிய பிறந்த நாளில் இனிக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது .
மக்கள் திலகத்தின் நினைவுகளை போற்றி கொண்டே இருப்போம் .
தின இதழ் -16/01/18
http://i63.tinypic.com/2qdwxoj.jpg
மக்கள் குரல் -16/01/18
http://i67.tinypic.com/63xhtx.jpg