Originally Posted by
g94127302
கோபால் சொன்னது போல நம்மிடம் நிறைய விஷயங்கள் பேச,எழுத உள்ளன - அங்கு நடப்பதை இங்கு விமர்சனம் செய்துதான் நம் திரியை ரொப்ப வேண்டும் என்ற ஒரு கட்டாயம் நமக்கில்லைதான் - இருந்தாலும் சற்றே மனம் விட்டு சிரிக்கவாது அவர்கள் பதிவுகளை படிப்பதிலும் அவைகளை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் தவிறில்லை என்று நினைக்கிறேன் ----- இந்த பதிவு ஒரு கற்பனையே ( யார் கண்டது கூடிய சீக்கிரத்தில் அங்கு உண்மையாகவே இவைகளை பதிவிடலாம் )
நாகேஷ் நவாப் : ஒரு இனிய செய்தி - AO வின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு சொக்கலிங்கம் ரிக்க்ஷாகாரனை டிஜிட்டல் மூலமாக வெளியிட திட்டம் போட்டுள்ளார் - அவர் அவர் குடும்பத்துடன் பேசி கொண்டிருக்கும் போது இந்த செய்தி நம் நண்பருக்கு தெரிய வந்தது - சுமார் 350 திரை அரங்குகளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது - அமெரிக்காவிலும் அன்றே விவேகானந்தா தெருவில் இருக்கும் 10 திரை அரங்குகளிலும் வெளியிட எண்ணம் உள்ளதாம் - இந்த படம் 25, 50 , 75, 100 நாட்கள் ஓட்டியாக வேண்டும் என்ற சொக்கலிங்கத்தின் நிபந்தனையை ஒப்புக்கொள்ளாத திரை அரங்குகளில் இந்த படம் வராது என்று தெரிய வருகிறது .
பெரிய கண்ணன் : அருமையான செய்தி நாகேஷ் -- உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை விபரங்கள் கிடைகின்றன ?? நீங்கள் இந்த திரியில் ஒரு புரியாத புதிர் - விளையாத கதிர் - யாரும் வரார் உங்கள் எதிர் !!
நாகூர் ரஹீம் : அருமை PK சார் ; Illogic என்ற பத்திரிகையில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பதிவை இங்கே போடுவதில் பெருமை படுகிறேன் - அந்த பதிவில் பீர்பால் என்பவர் சொல்லுகிறார் இப்படி :
MGR நேற்றைக்கு ஒன்று , இன்றைக்கு ஒன்று என்று சொல்பவர் இல்லை - அவர் படங்களை பார்த்தாலே தெரியும் - எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் படங்களில் அன்று வந்த கதை தான் இன்றும் இருக்கும் - அன்று கேட்ட பாடல்கள் தான் இன்றும் அந்த படங்களில் கேட்கலாம் - இவ்வளவு ஏன் - அன்று அந்த படங்களில் நடித்த கதா நாயகிகள் தான் இந்த ரீ -ரிலீஸ் இல் வருவார்கள் - இந்த அதிசயம் MGR படங்களில் மட்டுமே சாத்தியம் ----
MGR முருகன் : ஆஹா --ஆஹா இதுவல்லவோ சாதனை !!1
கவி கிரண் காவியா : AO வெற்றியை ஜீரணிக்க முடியாத புல்லுருவிகளை நாடு கண்டுகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை - 25800KM தொலைவில் மட்டுமே உள்ளது
மகுடி யாத்திரிநிவாஸ் : பொய்மை விழிக்கும் நேரம் - பகுதி 1
இந்த திரியில் இந்த பதிவை இடுவதில் மிகுந்த மன வேதனை அடைகிறேன் - AO சரியாக ஓடவில்லை என்ற உண்மையை நம் திரியை சார்ந்த நண்பர்கள் மாற்று திரியில் உள்ளவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது - உண்மையே பேச கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்கள் நாம் - நான் எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறேன் உண்மைக்கும் நமக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்று - தொடர்ந்து நம் உண்மைகளை சொல்லி கொண்டிருந்தால் அது நம் தலைவருக்கு நாம் இழைக்கும் அநீதி - கொடுமை - நம் திரி நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
=====