-
ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ''ராஜகுமாரி '' - 1947.
மருத நாட்டு இளவரசி
மக்கள் திலகம் - வி .என் .ஜானகி ஜோடி சேர்ந்த முதல் வெற்றிக் காவியம்
குமாரி - 1953
மதுரை வீரன் - 1956.
மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா மற்றும் 30 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடி 1978 வரை அந்த சாதனையை தக்க வைத்து கொண்ட படம் .
ராஜ ராஜன் - 1957
தாயை காத்த தனயன் - 1962
கலை அரசி - 1963
பணக்கார குடும்பம் - 1964
நாடோடி - 1966
கண்ணன் என் காதலன் - 1968
ராமன் தேடிய சீதை - 1972
-
எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.
முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.
- தி இந்து .
-
எல்லோரும் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொன்னதில் மதிமயங்கி இது போன்ற பிதற்றல்கள் வருகின்றன.
புரட்சி தலைவர் அவர்கள் திரைத்துரையில் நுழையுமுன்பே காங்கிரஸில் இருந்து நாடகங்களில் இந்திய விடுதலை நாடகங்களில் சிறுவனாக நடித்து அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளார். இரவில் நாடகம் நடிப்பதும் பகலில் கதர் விற்பதுமாக அரசியலில் ஈடுபட்டார்.
திரைத்துறையில் நுழைந்த பின் காங்கிரஸிலிருந்து வெளியேறி பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
திமுக விலும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் அண்ணா அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து, தேர்தல் பிரச்சாரங்களைப் பொறுப்புடன் முன் நின்று நடத்தி, தன் செல்வாக்கை திமுகவுக்காகப் பயன்படுத்தி, திரைப்படங்களில் திமுக சின்னம், கொடி ஆகியவற்றை காண்பித்து, 30% மட்டும் இருந்த திமுகவை தான் குண்டடி பட்ட படத்தை ஒட்டி ஆழுங்கட்சியாகக் கொண்டு வந்தவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் அவர்கள்.
அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியின் ஆட்சி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த போது, தைரியமாக எதிர்த்து இந்திரா காந்தியிடம் ஊழல் புகார் கொடுத்து, கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவுகட்டி அஇஅதிமுக வைத் தொடங்கி 2 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்து மாயத்தேவரை 2,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட அரசியல் நிபுணர் புரட்சித்தலைவர் அவர்கள்.
அன்று தொடங்கி தொடர்ந்து மக்களின் செல்வாக்குடன் கருணாநிதியை 10 வருடம் முதல்வர் நாற்காலியை அண்ட விடாமல் வைத்திருந்த துணிச்சல் மிக்க அரசியல் வித்தகர் புரட்சித் தலைவர் அவர்கள்
தனக்குப் பின் தன் கட்சி திறமையாக நிர்வகிக்கப் பட வேண்டுமென்றால் அது
புரட்சித் தலைவி அவர்களால் தான் முடியும் என கணித்து தீர்க்கதரிசனமாய் புரட்சித்தலைவி அவர்களை வாரிசாக்கிய அரசியல் சாணக்கியன் புரட்சித்தலைவர் அவர்கள்.
அவருக்கு இணையாக விஜயகாந்தை சொல்ல என்ன தகுதி உள்ளது.
courtesy net
-
1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.
பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.
‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.
- தி இந்து .
-
முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று
இருந்தவர் இன்றில்லை . இன்றிருப்பவர்
நாளை .............. ? ஆட்சியில் இருக்கும்
காலம் சிறிதளவாக இருந்தாலும் ஏழை
மக்களுக்கு , எந்த அளவு நன்மை செய்ய
இயலுமோ அதைச் செய்வதுதான் என்
முதல் வேலை !
- உரையாடல்; கண்ணதாசன் .
Thirayil sonathai nijathil seitha ore arasiyal thalaivar engalin mudalvar mgr oruvar than
-
விநாசகாலே விபரீத புத்தி எனும் ஒரு சொல் உண்டு- இதன் அர்த்தம் என்னவெனில் ஒருவருக்கு அழிவு காலம் நெருங்கும் பட்சத்தில் எண்ணங்களும் செயல்களும் மிகவும் விபரீதமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் என்பதே.. இதை நாம் கூறக் காரணம் உலகத்தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒளி விளக்காகவும் இதய தெய்வமாகவும் ஒளிர்ந்து வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசியதன் விளைவாக அல்லிராணியும்,கோமளவல்லியுமான பிரேமலதா தற்போது தனது கணவர் விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்துள்ளார். எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க உயர்ந்த தலைவர்கள் களம் கண்ட தமிழக அரசியலில் அறிவு முதிர்ச்சியற்ற காட்டு ராணி பிரேமலதாவின் வருகை மிகவும் கொடுமையானது அவலமானது. தனது திரையுலக வாழ்விற்கும் நிஜ வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரைப் படங்களில் தான் உழைத்து சம்பாதித்த பெரும் செல்வங்களை ஏழை எளிய தமிழ் மக்களின் நல் வாழ்விற்கே அர்பணித்த புரட்சித் தலைவர் எங்கே? தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரையில் புகைத்தும்,குடித்தும் நடித்து நிஜவாழ்விலும் அவ்வாறே வாழ்ந்து அப்படி சம்பாதித்த பணத்தை கல்லூரி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அத் தொழில்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அரசியல் அரங்கிற்கு வந்த ஸ்டெடி மன்னன் விஜயகாந்த் எங்கே? யாரை யாருடன் ஒப்பிடுகிறாய் பிரேமலதா? கங்கையுடன் சாக்கடையை ஒப்பிடுவதா? சந்தனத்துடன் மலத்தை ஒப்பிடுவதா,{ சாணிகூட விராட்டி தட்ட பயன்படும் } சிங்கத்துடன் சிறு முயலை ஒப்பிடுவதா? ஒப்பிட்டிற்கு அளவுகோல் வேண்டாமா? முதலமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் விற்கும் கடலை உருண்டையா உடனே உனது கணவருக்கு வழங்கி விடுவதற்கு. தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்களாக இளிச்சவாயர்களாக நீ நினைத்து இருந்தால் அப் பதவிக்காக மேடை போட்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பாய். எதிர்கட்சி கட்சிப் பதவி எனும் உயர்ந்த மக்கள் நலன் சார்ந்த பணிக்கு சற்றும் பொருத்தமில்லாத உனது கணவருக்கு அப் பதவியை பெற்றுத் தந்ததே எங்கள் புரட்சித் தலைவர் கண்டெடுத்த கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் என்ற உண்மையை மறந்து விட்டு நீ பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிரேமலதாவை நாம் கேட்பது அரசியல் அரங்கில் உமது வரலாறு தான் என்ன? விஜயகாந்த் மனைவி என்ற அடையாளத்தை தவிர வேறு என்ன தகுதி உமக்கு உள்ளது. தமிழக அரசியல் களத்தில் மக்களுக்காக பல்வேறு தியாகங்களும் சாதனைகளும் செய்துள்ளார் எனது கணவர் விஜயகாந்த் என்பதால் அது ஒன்றே எனக்கு போதும் நான் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு என்கிறீர்களா? அம்மையார் பிரேமலதாவே உமக்கு விவரம் இல்லாததால் ஒரு உண்மையை தெரியப் படுத்துகிறேன் தெரிந்து கொள். உலக அரசியல் அரங்கில் ஒரு நடிகர் முதல் முறையாக முதல்வராகி தமிழ் நாட்டிற்கு காலத்தால் அழியாத பெரும் புகழை தேடிக் கொடுத்தார் என்றால் அது இம் மண்ணில் புரட்சித் தலைவர் ஒருவரே. அவ் விஷயத்தில் இங்கு முதலும் இறுதியும் புரட்சித் தலைவர் ஒருவரே. தமிழக மக்கள் முட்டாள்கள் அவர்களை வாய் ஜாலத்தால் ஏமாற்றி உமது கணவரை அரியணை ஏற்றி தம்பியுடம் தமிழ் நாட்டை கொடுத்து விடலாம் என மனப் பால் குடிக்க வேண்டாம். விவரமான எங்களைப் போன்ற வாக்காளர்கள் இருக்கும் வரை உமது கனவு பலிக்காது. இந்த நூற்றாண்டில் ஒரு வியக்கத்தகு சம்பவம் தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியுள்ளது. அது தனது மனைவியை முன்னிலைப் படுத்தி அவருக்கு பின்னே நின்று அரசியல் செய்யும் ஒரே தமிழக அரசியல் தலைவராக விஜயகாந்த் பரிமளித்து வருகிறார். இந்த சரித்திர சாதனைக்கு வித்திட்ட அம்மையார் பிரேமலதா மிகவும் பாராட்டத் தக்கவர். இப்படியெல்லாம் கேவலமாக அரசியல் செய்யும் அம்மையார் பிரேமலதாவா கோடிக் கணக்கான உலக தமிழ் மக்களின் இதய தெய்வமாக ஒளிர்ந்து வரும் ஒப்பாரும் மிக்காரும் மிக்க மிக உயர்ந்த மக்கள் தலைவரான புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசுவது. அம்மையார் பிரேமலதாவே இது போன்ற அர்த்தமற்ற சிறுபிள்ளை தனமான பேச்சே உமக்கும் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். . பக்கம் பக்கமாக உமது அரசியலை விமர்சித்து எம்மால் எழுத முடியும். புரட்சித் தலைவரின் பக்தன் என்ற வகையில் நாகரீகம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசி கோடிக் கணக்கான தமிழ் மக்களின் உள்ளக் கொதிப்பிற்கு ஆளாகி விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்த அம்மையார் பிரேமலதாவிற்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆர்.கோவிந்தராஜ்,
பத்திரிக்கையாளர்.
-
-
-
-