Originally Posted by
pattaakkathi
நடிகர் திலகத்தின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள தலைமை கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அனுப்பும் தமிழக ஜூரிக்கள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில்
உங்கள் சார்பாக வழக்காடத் தயாராகும்
உங்கள் பட்டாக்கத்தி.
பட்டாக்கத்தி :
நீதிபதிகளே! இதோ என்னுடைய வழக்கின் சாராம்சம். நடிகர் திலகம் நடித்த படங்களில் பல சிறந்தவை. ஆனால் அவர் 200 படத்திற்கு மேல் சிறந்த படங்களைக் கொடுக்கவில்லை... திரிசூலம் படத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு நல்ல படங்களையே தந்துள்ளார் என்று இங்கு எனது எதிர் கட்சிக்கார் ஜெயபால் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அதை நான் எதிர்த்து சிவாஜி அவர்கள் அவருடைய 200 படமான திரிசூலத்திற்கு பிறகு பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார்... அந்தப் படங்களையும் அவருடைய நல்ல படங்களின் பட்டியலில் ஏற்க வேண்டும் என்றே நான் இங்கே ஜெயபாலுக்கு எதிராக வழக்கு தொடுக்க வந்துள்ளேன். நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை தேர்வு குழுவான நால்வர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் என்னுடைய மனுவை ஏற்று நான் குறிப்பிட்டிருக்கும் படங்களையும் நடிகர் திலகத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாளை வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது நடிகர் திலகத்திற்கு வழங்க நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவருடைய மிகச் சிறந்த படங்களோடு இன்று என்னுடைய வழக்கின் முதலாவதாக நான் தரும் சிவாஜி படம் ஒன்றையும் சேர்த்து டெல்லியில் உள்ள இந்தியா சார்பான தலைமை ஆஸ்கார் கமிட்டி குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பெஞ்ச் குழுவை கேட்டுக் கொள்கிறேன்.
பட்டாக்கத்தி :
(உரக்க கோபத்துடன்)
இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? சிவாஜியின் பிற்காலப் படங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? யாராவது ஹெல்ப் செய்யுங்களேன். ப்ளீஸ்.
பட்டாக்கத்தி செய்வதறியாது நிற்கிறார்.
என்ன செய்யப் போகிறார் பட்டாக்கத்தி? ஜெயபால் சொன்னது போல் பாவம் பட்டாக்கத்தி இப்போதைக்கு.
ஆனால் நாளை?
அதுவரை பொறுத்திருங்கள்.