-
நன்றி கோபால்,
நான் நடிகர் திலகம் திரிக்கு வந்து எல்லோருடைய பதிவுகளையும் படிப்பது உங்களுக்கும் தெரியும். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் எனது சிறிய நகைச் சுவைப் பதிவுகள் ஒன்றுமே இல்லை என அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அதுவுமில்லாமல் நடிகர் திலகத்தை பற்றி பெரிதாக எழுத வேண்டுமானால் நிறைய பயிற்சி வேண்டுமென நினைக்கிறேன். அதற்கு அவ்வளவாக நேரம் கொடுக்க முடியவில்லை. நமது சின்ன கண்ணனும் தமிழ் பற்றி நிறைய எழுதுகிறாரா ஆர்வத்தில் அப்படியே இறங்கி விட்டேன். நிச்சயம் நடிகர் திலகம் திரிக்கு நான் வருவேன். எழுதுவேன். நான் எழுத அவர்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்ன!!!
வாய்ப்புகள் அமைந்து பார்த்து கொண்டுதான் உள்ளேன். இருந்தாலும் இப்போதைக்கு வேண்டாம் என்று ஓய்வு.
-
அருமை அருமை சி.க.,
கொத்தமங்கலம் சுப்பு எனக்கு மிகவும் பிடித்த பழம் பெரும் இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர். நீங்கள் சொன்ன அவ்வையார், வஞ்சிக்கோட்டை வாலிபன், தில்லானா மோகனாம்பாள் படங்கள் மிகவும் பிரபலமானவை. முதல் இரண்டு படங்களையும் மிகவும் பிற்காலத்திலேயே என்னால் காண முடிந்தது. ஏன் அவரது திரைப் படங்கள் இவ்வளவு புகழ் பெற்று விளங்குகின்றன என்ற காரணமும் புரிந்தது. ஒரு சமயத்தில் கொத்தமங்கலம் என்ற ஊர் எங்கிருக்கிறது என்று தேடி அது எர்ணாகுளம் பக்கத்தில் என்று பார்த்துவிட்டு கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் (கதை, பாடல்கள் எழுதி) இவ்வளவு புகழ் பெற்றிருக்கிறாரா என்று தவறாக கூட நினைத்து விட்டேன். பின்னர்தான் தெரிந்தது அது சிவகங்கை அருகே என்று.
"மனமே முருகனின் மயில் வாகனம்" பாடலைப் பற்றி எழுதியிருந்தீர்கள். இதுவும் எனது அலைபேசியில் அமர்ந்து நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. சந்திரலேகா படம் சில முறை பார்த்திருந்தாலும் "ஆத்தோரம் கொடிக்காலாம்" பாடல் நினைவில் இல்லை. அந்த பிரமாண்டம் தான் ஞாபகம் வருகிறது. எனது நினைவுகளை பின்னோக்கி ஓட வைத்து விட்டீர்கள். நன்றி. அடுத்த கவிஞருக்காக காத்திருக்கிறேன்.
-
கோபால் நன்றி :)
போல என்றால் காசு வாய்ப்பாடு கிடையாது தேமா.. போலும் எனச் சொல்லலாம் (ம் சைலண்ட்) காசு வரும்.. :)
-
நன்றி கல் நாயக் :)
குபு குபு குபுவென நான் இன் ஜின் டகடக டக டக நான்வண்டி..
இஞ்சின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டுப் போகாதே.. என்ன எளிய உவமை.. சிவகங்கைப் பக்கமெல்லாம் சின்னவயசில் போயிருக்கிறேனா என நினைவில் இல்லை..முடிந்தால் ஒரு ட்ரிப் அடிக்க வேண்டும்..
-
சொல்ல மறந்துட்டேன்.. மானாடக் கோழிக்கும் நிலாப் பாட்டுக்கும் தாங்க்ஸ் (ரம்யா - இளமைக்கும் இப்போது இருப்பதற்கும் அவ்வளவு வித்யாசம் தெரியவில்லை (கொஞ்சம் ஹைட் ஆன மாதிரிப் படுகிறது))
-
நிலாப் பாடல் 37:"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"
--------------------------------------------------------------------------------------------------------
மிகப் பிரபலமான ஒரு பாடல். தமிழ் திரை உலகில் நினைவில் கொள்ளவேண்டிய படம். இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த படம். பாடல்களினாலேயே படமும் புகழடைந்தது. இப்படிப்பட்ட படத்தில் ஒரு நிலாப் பாடல் இல்லையென்றால் என்ன செய்வது? யோசித்தார்கள். வைத்துவிட்டார்கள். மச்சக்காரர் மோகனும், மச்சக்காரிகள் அமலாவும், ராதாவும் (இப்படிப்பட்ட படத்தில் நடித்ததால்) இருக்கிறார்கள். இந்த காதல் பாடலுக்கு மோகனும் அமலாவும் மட்டுமே. எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது. அதனால் தொடர்ந்து சில பிரபலமான பாடல்கள் வரும். பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகியுடன் பாடிய பாடல்.
இந்த மாதிரி பத்து பதினைந்து நிலாப் பாடல்களை கேட்டால் எல்லோருமே நிலாப் பாடல் எழுதிவிடலாம் என்று தோன்றுமே.நாம்தான் எத்தனை விதமான நிலப் பாடல்களை பார்த்துவிட்டோம்!!! இங்கே வெண்ணிலாவை வானம் தேடுவதாக கவிஞர் ஆரம்பிக்கிறார். மேலாடை மூடி போவது ஏன் என்று அதனிடம் கேள்வி கேட்பது நன்றாகவே இருக்கிறது அல்லவா?
சரி. பாடல் வரிகள் இங்கே:
---------------------------------------------------
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்
எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
----------------------------------------------------------------
பாடலை பாருங்கள் இங்கே :
---------------------------------------------
https://www.youtube.com/watch?v=9VMs5JITg5Q
மெல்லத் திறந்தது கதவு - இன்னாத்துக்கு இப்பிடி சொல்றாங்கோ? வேகமாய் திறக்காதே கதவை என்று ஏன் உத்தரவிடவில்லை.
-
//எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது// அப்படில்லாம் பயப்பட வேண்டாம்.. எனக்கு பிரபலமான பாடல்கள் தான் தெரியும்.. நான் சொல்லிடுவேனாக்கும் :)
மெ தி க பாடல்களுக்காகவே ஓடிய படம்.. இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட் சொர்ண புஷ்பம்.. அதுவும் ப்ளாக் அண்ட் ப்ளாக் ட்ரெஸ்ஸில் கண்கள் மட்டும் பேசும் கவிதை..
கருப்பென ஆடை அணிந்தவள்தான்
..கண்களில் இசையைப் பொழிந்தவள்தான்
விருப்பமோ துக்கமோ எஃதெனினும்
..விளக்கமாய்ச் சொல்லிடும் விழிமலர்கள்
கருக்கலில் மெல்லிய தென்றலைப்போல்
..கன்னியின் கண்மொழி பேசிடுமே
புருவமும் வளைந்துதான் நெஞ்சகத்தை
..புரட்டியே போட்டதும் அறிவீரே..
ஹி ஹி.. மூணு நிமிஷால எழுதின பாட்.. குறையிருந்தால் மன்னிக்க :)
-
இன்னிக்கும் நாளைக்கும் மழையாம் சோன்னு கொட்டப்போகுதாம்.. வானத்தைப் பார்த்தாக்க அப்படித் தெரியில..சோகையா சில வயசான ஒல்லி மேகங்கள் வாக் போயிட்டிருக்கு.. ம்ம்.. சரி நாம என்ன பண்ணலாம்..இப்பவே கிளம்பிடலாம் வீட்டுக்கு :)
அதுக்கு முன்னால ஒரு காம்போதி ராகப் பாட்டு..( சரிதானா) கேக்கலாமா..
https://www.youtube.com/watch?v=NZrpLo9NCiw
-
Jugalbandi 26
From Avan, Tamil dubbed version of Aah(1953):
KaariruL neram kaalaiyo dhooram......
http://www.youtube.com/watch?v=hnLptfnezZs
From the Hindi original:
Raath andheri dhoor saveraa......
http://www.youtube.com/watch?v=5Len9ZbotAU
-
ராஜ் ராஜ் சார்..ஜூகல் பந்தி பாடல்களுக்கு நன்றி நான்கேட்டதிலலை இதுவரை என நினைக்கிறேன் :) அடுத்த போஸ்ட் புதிர்ல நீங்க வர்றீங்க..! :)