வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..
Printable View
வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..
'விஜயா' படத்துக்கு 'vijaya' ன்னு டைப் அடிச்சா படம் கிடைக்காது. 'vijeya' அப்படின்னு அடிக்கணும்.:)
மதுண்ணா!
சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.
கண்ணா....மணிவண்ணா
முகுந்தா முராரே ம் ..ஹூம்
கனவு கண்டேன் கண்ணா!
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!
மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!
(சரண வரிகள் ராக்கெட் வேகத்தில் பறக்கும்)
பந்தல் மீதொரு கூந்தல் தோரணம்
வாழைகள் ஆடிடக் கண்டேன்
வாடும் மங்கள மேளம் தாளமும்
ஊர்வலம் போய் வரக் கண்டேன்
மாதர் கூட்டம் கைகளில் தாங்கும் மஞ்சள்
குங்குமம் கண்டேன்
மாலை சூடும் மங்கை நானும்
மாயக் கருணையைக் கண்டேன்
(அடடாடா! இப்போ பாடுவார் பாருங்கள்).....
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!
ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!
இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.
என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!
கேட்டுக் கொண்டே இருக்கலாமே!
https://youtu.be/YCvYMjmzogo
வாசு - வாழ்த்துக்கள் சீக்கிரமாய் அமைந்தால் , வரமும் சீக்கிரமே கிடைக்கும் என்பார்கள் . சுமூகமான முடிவுடன் தான் strike விடை பெற்றது என்று நினைத்தேன் . மது சார் சொன்னதுபோல் " பிரார்த்தனைகளுக்கான பலன்கள் தாமதம் ஆகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. விரைவிலேயே எல்லாம் சுபமாக முடியட்டும்" .
உங்கள் மகிழ்ச்சியில் தான் எங்கள் இன்பமும் அடங்கி உள்ளது .
நன்றி வாசு - நல்ல நடிப்பு - ஒரு நல்ல ஜோடியை , டீச்சர் / மாணவன் என்று பிரித்து வயத்தெரிச்சலை வேறு வாங்கி கொள்வார்கள் - ஆனால் அந்த வயத்தெரிச்சல் அவர் நடிப்பில் நாம் சுத்தமாக பார்க்க முடியாது . ஒரு உண்மை மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக எடுத்துக்காட்டுவார் நடிகர் திலகம் .
Very correct Vasu. Mesmorising song . Song deserves to be added in the music folder of our cell phones .
Vasu - for U
https://www.youtube.com/watch?t=23&v=YofxxvjzSLM
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு
PART 2/2Quote:
இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !
மக்கள்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !
கண்களிரண்டும் விடி விளக்காக .....
https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ...
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0