-
பாடினார் கவிஞர் பாடினார் - 5
*
ஸ்டார்ட்
டேப் சுழல ஆரம்பிக்க – மெட்டு – தானனா தன தானனா – என்பதற்கேற்ப எழுதப் பட்ட பாடலைப் பார்த்து பாடகர் பாட ஆரம்பிக்க – டபக்… இருள்.. கரெண்ட் கட்..
யாரங்கே..
அந்த யாரங்கேயும் எதுவும் செய்ய இயலவில்லை.. இருபது நிமிடம் கடந்து தான் வந்தது கரண்ட்.
இசையமைப்பாளருக்கோ எரிச்சல்.. என்னையா இது காலைலருந்து ஒழுங்கா நடக்க மாட்டேங்குது..
என்ன ஆச்சுதுங்க
அதையேன் கேக்கற போ..இட்லிக்குத்தொட்டுக்க வித்யாசமா ஒரு வடகறியோ என்னவோ புதுசா ப்ண்ணியிருந்தா வீட்டுக்காரி..ஏதோ மசாலா தூக்க்லோ என்னவோ.. ஒரே கலக்கல்.. இப்ப பரவாயில்லை இங்க வந்தா கரெண்ட் கட்.. இதோ வந்துடுச்சே.. எங்கே செளந்தர்ராஜன்..
செளந்தர்ராஜன் என விளிக்கப் பட்ட டி.எம்.எஸ். இல்லை.. எதற்கோ அல்லது அருகிலோ தொலைபேசி பண்ணிவிட்டு வருவதாகத் தகவல் வர, இசையமைப்பாளருக்கு மறுபடிகோபம்..அடச் சே. ரிகர்ஸல்பண்ணனுமா மறுபடியும்.. எல்லாம் இந்தப் புதுசா பாட்டெழுத வந்தவனால…
ஒல்லி ஒல்லியாய்க் கண்ணில் கனவு மின்ன அமர்ந்திருந்த புதுப்பாடலாசிரியருக்கு ஒரு மயக்கம்.. நாமென்ன தவறு செய்தோம்..
ஆரம்பிச்சதுலருந்தே சகுனம் சரியில்லை – என்றார் இசை.. என்ன பண்ணலாம்.. பேசாம இந்தப் பாட்ட நமக்குத் தெரிஞ்ச பிரபலகவிஞர்கிட்டயே கொடுத்துடலாமா என்ன சொல்றீங்க ப்ரொட்யூஸ்..
ப்ரொட்யூஸர் பவ்யமாய் ‘ நீங்க சொன்னா சரிண்ணா”
அவருக்கு ஒரு ஃபோனைப் போடும் )கேட்டுக் கொண்டிருந்த புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞருக்கு பக் பக்) ஓ.. நூறு ஆயுசு அவரே வந்துட்டாரே..
ரொம்ப சிம்ப்பிளாய் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய பழகியபாடலாசிரியரிடம் இசை சொன்னார்.. இதாங்க மெட்டு ஒரு பாட்டுப் போட்டுத்தாங்களேன்..
“பேஷா..” என்ற ப.பா “இது யாரு பையன்..”
ப்ரொட்யூஸர் “ இவரு ஒரு பாட்டுப் போட்டாரு.. என்ன காரணமோ இசைக்குப் பிடிக்கலை”
“எங்கே.. அந்தப் பாட்டைக் கொடும்” புது ப் பாடலாசிரிய இளைஞன் பவ்யமாய் தான் எழுதிய பாடலைக் கொடுக்க ரசித்துப் படித்து – மலர் மழை போலே மேனியின் மீதே குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே..வாவ். நன்னா எழுதியிருக்கயேப்பா “ (இளைஞன் முகத்தில் மலர்ச்சி) எங்கே இசைப்பாப்பா..
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா – என்னங்க
இந்தப்பாட்டே நல்லாத் தான் இருக்கு இதை வச்சுக்கும் – நான் அப்புறமா வர்றேன்.. எனச் சொல்லி பெரிய கவிஞர் (மனதால்) புறப்பட பு.பா.எ.வ கவிஞருக்குக் கண்ணில் நீர் முட்டியது..
நிற்க நாம் சொல்லப் போவது அந்தக் காலத்தில் புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞர்.. பிற்காலத்தில் வாலி என அறியப்பட்டவர் – அவரைப் பற்றி இல்லை..
வாலியின் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் நன்றாக எழுதியிருக்கிறார –எனப் பெருந்தன்மையுடன் சொல்லிச் சென்ற கவிஞர் பற்றி..
வாலி எழுதிய பாடல் – சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் (படம் நல்லவன் வாழ்வான்)-
(நிகழ்வின் வர்ணனை என் கற்பனையூர்)
அவர்…மருதகாசி..
*
திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக ஆர்வம்.
சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..
ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..
மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..
சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..
தூக்குத்தூக்கியில்…
இதுவும்,
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
குமரியே சூலியெனும் உமையே குமரியே
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்
கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே!
https://www.youtube.com/watch?featur...&v=VlULJclM6IQ
*
கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..
*
இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..
"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950)
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)
ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து.. இருந்தாலும் அந்த அருவிப்பாட்டு..
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடுகொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்னும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டு தான் நினைவுக்கு வரும்.. சி.எஸ் ஜெயராமன்,தோற்ற்ப்பொலிவுடன் ந.தி இன் பாவை விளக்கு..
பாடல் முடிந்தவுடன் கொய்ங்க் கொய்ங்க் என்று ஒயிலாக அசைவதாக நினைத்து அசைந்தவண்ணம் :”எண்ணக்கிளி வண்ணக் கிளியிடம் சொல்லுதோ” என ந.தியிடம் கேட்பார் எம்.என். ராஜம்
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே..
https://www.youtube.com/watch?v=vW-5...yer_detailpage
*
1949 இலிருந்து 1960 வரை பறந்த மருதகாசியின் கொடி கண்ணதாசனின் வரவிற்குப் பிறகு கொஞ்சம் இறங்கியது எனத் தான் சொல்லவேண்டும்.. இவரது குடும்பம் விவசாயக் குடும்பம் எனில் ஊருக்கே சென்றுவிட்டார்..பின் மறுபடி வந்து பாடல்கள் எழுதி..பின் 1989 இல் மறைந்தார்.
கவிஞர் வாலி தனது இரங்கற்பாவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டது:
எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல் இவரது பாடல்;
எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல்
எழுதுவதற் கிவரே இலக்கண மானார்!
பாக்களின் மேன்மை படித்தால் புரியும்;
பாமரன் என்னால் புகலத் தரமோ?
செய்யநற் றமிழின் சீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம் செப்பிய மேதை
உண்மை தான்..
**
இன்னொரு பாட்டுப் போட்டுக்கறேனே..
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
https://www.youtube.com/watch?featur...&v=JoyCPyBySrc
*
அடுத்து வரப்போகும் கவிஞர் ஒரு சமூகப் படத்திற்காக எழுதிய சோழன் பாட்டு பிரபலமான ஒன்று..
அவர்ர்ர்ர்ர்...
(அப்புறம் வாரேன்) :)
-
kaN vazhi pugundhu karuthinil kalandha minnoLiye yen mounam
veredhile undhan gavanam.......
:)
Nice to see a list of songs from my days ChinnakkaNNan ! :)
-
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.
இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.
நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.
நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.
இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.
பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?
இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?
மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.
எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.
இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.
அடானா ராகத்தை முதலில் பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S )
அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம் படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.
ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.
தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???
-
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.
ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.
எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )
எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு மூன்று உதாரணங்கள் .
1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?
2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.
3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.
4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)
எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.
இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.
-
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.
ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.
ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)
எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.
இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.
chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.
கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.
இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.
அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.
மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.
சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?
இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.
நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.
அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.
அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.
இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.
"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.
கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.
"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.
ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.
"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.
பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
-
இது நான் கார்த்திக்கிற்காக எழுத ஆரம்பித்து ,பாதியில் விட்டது.இதற்கு இப்போது கிடைக்க போகும் வரவேற்பை பொறுத்து தொடரலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பேன்.
கார்த்திக்கே மீண்டு வந்து சொன்னால் ,கூடுதல் உற்சாகம்.
-
கோபால்.. காலையிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் -அடடா அடடா அடடா எனை ஏதோசெய்கிறாய்” என்ன இது என இங்கு வந்து பார்த்தால் உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைகள்.. நீங்கள் தான் ஏதோ செய்கிறீர்கள்..எங்களை..
எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கிறோம் ( நான் செய்வதெல்லாம் ரோடு ரோலர் போவதற்கு முன் செய்யப் படும் விஷய்ம் - ஜல்லி :) ) உங்கள் அனலிஸிஸ் அப்ப்டி இல்லை..எழுதுங்கள்..
கொஞ்சம் உடல் நிலை சரியில்லை..இருப்பினும் அலுவ்லுக்குக் கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்..விரிவாய் பின்னர் எழுதுகிறேன்..தொடருங்கள்
(இப்படிக்கு..
சினா கனா :)
-
ராஜ் ராஜ் சார்.. நன்றி.. :)
-
கோபால்,
சிறிது நாட்களுக்கு முன் msv பற்றி கட்டுரை தொடர் எழுதப் போவதாக நீங்கள் சொன்னபோது சந்தோஷப் பட்டேன். இப்போது நீங்கள் எழுதியதை பார்த்ததும் இரட்டை சந்தோஷம். ஏன் கார்த்திக் மட்டும் வரவேண்டும். வாசுவும் வரவேண்டும் . வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள கிருஷ்ணாவும் வரட்டுமே. எப்போதோ வரும் ராஜேஷ்-உம் அதிக முறை வரட்டுமே. ராஜ்ராஜ் அவர்களும் தனது வருகையை அதிகமாகட்டும். நீங்கள் எழுதுவதையெல்லாம் பார்த்து சி.க. வும் இங்கே அதிகமாக பதிவார். இந்த மதுர காண திரியே களை கட்டட்டும்.
மதுர கான திரியில் பாடல்களையும் அதன் ராகங்களையும் மட்டுமே நீங்கள் அதிகம் எழுதியுள்ளீர்கள். நான் அறிந்து இப்போதுதான் இசைக் கருவிகளையும் விஸ்தாரமாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள். Msv அவர்கள் ஸ்ரீதர், கண்ணதாசன், தேவர் போன்றோருடன் கொண்டிருந்த நட்பு அத்துடன் மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்கள் வாய்ப்பு கெடாமல் அவர் நடந்து கொண்ட விதம் என்று நல்ல நல்ல தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதிது. எழுதுங்கள். எழுதுங்கள். தெரிந்து கொள்கிறோம். சில சமயம் தனிப் பாடல்களை எடுத்துக் கொண்டு ஆராய வேண்டுகோள் விடுக்கிறேன்.
எல்லோரும் திரும்பி வாருங்கள். மதுர காணத் திரி களை கட்டத் துவங்கிவிட்டது.
-
//"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.// இதை நானும் யோசித்திருக்கிறேன்..எஸ்பெஷலொஇ சி.சிக சிரித்துக் கொண்டே சகஜமாக எழும்பும் பாடல், நினைத்தால் போதும் பாடுவேன்.. டாப் பிட்ச்..ஓஹ்..
(அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )// அது என்ன என்பதையும் சொல்லி விடுங்க்ளேன்..