-
27.3.1965 ''பணம் படைத்தவன் ''
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி, அவற்றை முறியடிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. எம்ஜிஆருக்கு சண்டை போடக்கூட பெரிய ஸ்கோப் இல்லை. மனோகருடன் க்ளப்பில் ஒரு சண்டை, அசோகனுடன் கல்யாண மண்டபத்தில் பேருக்கு ஒரு சண்டை, அசோகனுடன் ஒரு க்ளைமாக்ஸ் சண்டை, அவ்வளவுதான். மனோதருக்கும் அசோகனுக்கும் பேருக்கு கூட ஒரு அடியாள் இல்லை. எப்போதும் தென்படும் ஜஸ்டின், குண்டுமணி போன்ற யாருமே இல்லை.
எம்ஜிஆர் பணக்கார ஸௌகார் வீட்டு வேலைக்காரி கே.ஆர். விஜயாவை காதலிக்கிறார், தம்பி நாகேஷுக்காக ஸௌகாரையெ கல்யாணம் செய்து கொள்கிறார், நாகரீகத்தின் அபாயங்களை ஸௌகாருக்கும் படம் பார்க்கும் பெண்களுக்கும் எடுத்து சொல்கிறார், தன் தவறுகளை உணரும்போது சரியாக ஸௌகார் இறந்ததும் முகத்தை கையில் புதைத்துக்கொண்டு அழுகிறார், பிறகு கே.ஆர். விஜயாவை அப்பா பாலையாவை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார், “எனக்கொரு மகன் பிறப்பான்” என்று பாடுகிறார், பிறந்த மகனை கொடுத்துவிடும் மனைவியை பார்த்து “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க” என்று இன்னொரு பாட்டு பாடுகிறார், கடைசியில் ரசிகர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அசோகனுடன் ஒரு சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை இணைக்கிறார். பெற்றால்தான் பிள்ளையா ஒன்றுதான் அவரது செண்டிமெண்டல் படம் என்று நினைத்தேன், இதுவும் அந்த ரகம்தான்.
படத்தில் ஸௌகார் கொஞ்சம் ஈகோ உள்ள பணக்காரக் குடும்பத்து பெண்ணை அவர் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. முதல் இரவில் ஹாஸ்பிடலில் இருக்கும் காதலி கே.ஆர். விஜயாவை பார்க்க எம்ஜிஆர் போய்விடுவார். தான் போவது சரி என்பதற்காக நிறைய வசனமும் பேசுவார். இப்போது பார்த்தால் எம்ஜிஆரை மேல் ஷாவினிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள். அடுத்த இரவு ஸௌகார் அந்த வசனங்களை திருப்பி எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு க்ளப்புக்கு போவார். அந்த காட்சியில் நன்றாக நடித்திருந்தார். இன்றைய பெண்கள் விசில் அடிக்கலாம்.
சிறு பிள்ளைத்தனம் என்றாலும் எம்ஜிஆரும் நாகேஷும் இரவில் அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யும் காட்சி எனக்கு பிடித்திருந்தது. அதுவும் இருவரும் தரையில் ஊர்ந்து வந்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நாகேஷ் தந்தால் எடுக்கிறேன் என்று சமாளிக்கும்போது நான் சிரித்தேன்.
7 பாட்டுகள். எல்லாமே நல்ல பாட்டுகள். “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்! டி எம் எஸ்ஸும் கலக்குவார்.
“கண் போன போக்கிலே” எம்ஜிஆரின் தத்துவ பாட்டு லிஸ்டுகளில் தவறாமல் இடம் பெறுவது. டிஎம்எஸ், வாலியின் நல்ல பாட்டு.
“அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்” எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரலில் இருக்கும் ஒரு கொஞ்சல் அபாரம்! டி எம் எஸ் அதற்கு பதில் பாட்டு பாட “ஒஹொஹொ ஒஹொஹொ” என்று ஆரம்பிக்கும் இடம் அருமை. எம்ஜிஆர் சூப்பர் ஸ்டெப் போடுகிறார். Really fancy footwork. கே.ஆர். விஜயா நல்ல அழகாக இருக்கிறார், டான்ஸ் ஆடுகிறார்.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை” ஒன்றுதான் இன்னும் யூட்யூபில் இருக்கிறது.
“எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க”, “பருவத்தில் கொஞ்சம்” பாட்டுக்களும் பிரபலமானவையே.
COURTESY - RV
-
-
-
-
-
-
நற்பதிவுகள் 4௦௦௦ கண்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு, புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி ஆசியுடன், நல் வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/v3hkwz.jpg
-
எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.
கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.
பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.
„அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.
அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும்.
Courtesy - net
-
பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'
„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.
டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
Courtesy - thiru ayya pillai - net
-
Congrats Mr.Sailesh basu for crossing 4000 posts.