http://s2.postimg.org/v7awcxay1/ggg.jpg
Printable View
http://s11.postimg.org/abfx5ad4j/122...95000378_n.jpg
Courtesy : Mr.S.Vijayan - Face Book.
அடாது மழை பொழிந்தாலும், விடாது ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரசிக்கும் படி உள்ளது நம் மக்கள் திலகத்தின் காவியங்களே ! இத்தனைக்கும் இந்த காவியங்கள் சமீபத்தில் தான் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
இன்றைய கால கட்டத்தில், புதிய திரைப்படங்களே 2வது வாரம் ஓடுவதற்கு சிரமப்படும் நிலையில், நம் பொன்மனசெம்மலின் காவியங்கள் (அதுவும் முன்னரே திரையிடப்பட்டவை) வெகு சாதரணமாக முதல் வாரத்தில் வசூலை வாரிக் கொடுத்து தற்போது இந்த இரண்டு காவியங்களுமே 2வது வாரம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று எண்ணும்போது மிக மிக மகிழ்ச்சியாக இரூக்கிறது.
பார்வையாளர்கள் பலரும் இதே திரைப்படங்களின் தகவல்களை இதற்கு முன்பு தாங்கள் பதிவிட்டு பார்த்திருக்கின்றார்கள். தங்களின், தொடர் தகவலுக்கு நன்றி திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களே !
நேற்று நான் தெரிவித்த கருத்துப்படி உலகிலேயே repeated audience கொண்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் அவர்கள் மட்டுமே என்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளார்.
விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு,print எப்படியிருந்தாலும் பரவாயில்லை, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் திருமுகத்தை காண ரசிகர்கள் திரளுவார்கள் என்ற நம்பிக்கையிலும், வசூலை அள்ளி விடலாம் என்று கணக்கிட்டு, நம்பிக்கை நாயகன் நம் புரட்சித்தலைவர் காவியங்களை தொடர்ந்து திரையிட்டு, ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், தாங்களும் பயன் பெறுகின்றனர்.
தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். தான் என்பதை உணர்த்துகின்றனர், இந்த விநியோகஸ்தர்கள்.
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார்
கோவை நகரில் மக்கள் திலகத்தின் தேடி வந்த மாப்பிள்ளை மற்றும் நினைத்ததை முடிப்பவன் 2 வது வாரமாக தொடர்வது மிகவும் வியப்பை அளிக்கிறது .புது படங்கள் 3 நாட்கள் மட்டுமே ஓடுகின்ற சூழ்நிலையில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் ரசிகர்களின் வெள்ளத்தில் கோவை நகரில் சாதனைகள் புரிவது அறிந்து மிக்க மகிழ்ச்சி
மக்கள் திலகத்தின் வசூல் சாதனைகள் பற்றி ரசிகர்கள் , விநியோகஸ்தர்கள் , தயாரிப்பாளர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , பத்திரிகைகள் பாராட்டியுள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம் .
https://youtu.be/_P0GtO90ZfY
1968ல் வெளிவந்த தேவரின் தேர்த்திருவிழா படத்தில் நடிகர் நாகேஷ் அவர்கள் ஒரு காட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிட்டால் வசூல் அள்ளி குவியும் என்று மக்கள் திலகத்திடமே கூறும் வித்தியாசமான காட்சி புதுமையாக இருந்தது . படத்தில் இந்த காட்சி இடம் பெற்று இருந்தாலும் உண்மை நிலவரம் தானே .இன்றும் அவர் படங்கள் மறு வெளியீடுகளில் வசூலை குவித்து கொண்டிருப்பது உண்மை . தற்போது கோவை நகரில் 2015 ல் மக்கள் திலகத்தின் தேடி வந்த மாப்பிள்ளை மற்றும் நினைத்தை முடிப்பவன் உதாரணம் .
1971- PESUM PADAM .
http://i64.tinypic.com/347zkf5.jpghttp://i67.tinypic.com/2583pqs.jpg
தீபாவளி அன்று திரைக்கு வந்த நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றி ரசிகர்களை கொண்டு தொகுத்து வழங்கிய "இமயம்" தொலைக்கட்சிக்கு நன்றி தெரிவித்து சென்னை மாநகரில் ஓட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி
http://i66.tinypic.com/2eqgw9y.jpg
நம் மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெறும் காட்சிகள் எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை. நம் பொன்மனசெம்மலின் காவிய்கங்களில் இடம் பெற்ற அனேக காட்சிகள் தீர்க்கதரிசனமாக இருப்பதும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
பதிவுக்கு நன்றி திரு. வினோத் அவர்களே !
http://i63.tinypic.com/n2eccy.jpg
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தமிழக முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தின் மேல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த நம் இதய தெய்வம் மக்கள் திலகமும் புன் சிரிப்புடன் இருப்பதை காணலாம் .