நடிகர் திலகத்தின் நடை
*
3. மன்னனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி
*
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..
*
எல்லாரும் செளக்கியமா இருக்கேளோன்னோ.( என்னடா அம்பி..என்ன சொல்றே..இனிமே தான் மாறப் போறதுன்னா…படவா..சமர்த்தா ஒக்காரு..என்ன!)
*.
அதுல பாருங்கோ மொதல்ல ஒரு பாட்டுப் பாடலாமா..
*
மோகம் பெருமாள் மேலே கொண்ட மன்னனவன்
பாகப் பணத்தில் பக்தி வளர்த்த மன்னனவன்
வேகங் கொண்டே விரைவாய் நடந்த மன்னனவன்
தேகம் பதறித் தாளில் விழுந்த மன்னனவன்
*
தெரியுது.. யாராக்கும் இதுன்னு நீங்க யோசிக்கறேள்.. நானே சொல்றேன்..
*
ஒரு தளபதி..பேர் மறந்து போச்சு.. படக் படக்குன்னு வாளெடுத்து வெற்றிகரமாப் போர் பண்ணி சோழ மகாராஜா குலோத்துங்கனுக்குப் பல நாடுகள் ஜெயிச்சுத் தர்றான்.. சோழச் சக்கரவர்த்திக்கோ ஒரே குஷி..
*
ஓ மை பாய்.. நீ தான் என்னோட ஃபேவரிட்னு சொல்லி ஒரு குட்டி அரசை அவனுக்குக் கொடுத்துடறார்.. வேணாம் ராஜான்னு இந்தத் தளபதி மறுக்கறான். நோ நோ நோ..யூ ஷீட் நாட் டெல் லைக் தட்..அப்படின்னு ராஜா கம்பெல் பண்ணி சிற்றரசுக்கு மன்னனாக்கறார்..
*
பாருங்கோ.. ராஜ்யம் கிடச்சுடுத்து அந்தத் தளபதிக்கு..அது இன்பம்.. ஆனா வாழ்க்கைல இன்பத்தைத் தொடரும் துன்பம்னு பெரியவாள்ளாம் சொல்லியிருக்காளோல்லியோ..யெஸ்.. மகாராஜா அந்தத் தளபதி பேர் நீலன்னு நினைக்கறேன் அவனுக்கு ஒரு அழகான(?!) பொண்ணாப் பார்த்து கல்யாணமும் பண்ணி வச்சுடறார்..
*
ம்ம் கல்யாணம் ஆனாலே ஆண்களுக்கெல்லாம் கொஞ்சம் தடுமாற்றமாத் தான் இருக்கும்.. என்ன சொல்றீங்க.. அதுவும் புதுசா கிளி கொஞ்சறா மாதிரி ஆத்துக்காரி.. அவளைப் புரிஞ்சுக்கணும்.. அதுக்காக எந்த விதமான மெளண்டெய்னையும் எடுத்துத் தா ந்னு அவ கேட்டா அவன் முடிஞ்சா எடுத்துத் தந்துருவான்.. ஏன்..அவளோட குட் புக்ஸ்ல இடம் பிடிக்கணுமேன்னு..
*
ஸோ நீலன் கேட்டான்..ஸ்வீட் ஹார்ட்.. ஐயாம் வெரி ஹாப்பி..ஆனா இன்னும் என்னல்லாம் நான் செய்யலாம்..இது வெள்ளித் திரை.. நிறைய பேர் பாக்கறா.. அதனால சொல்ல முடிஞ்சத மட்டும் சொல்லுன்னான்.. சம்சாரம் கொஞ்சம் வெக்கத்தோட கக்னு சிரிச்சுட்டு
நீங்க என்ன பண்றேள்.. பெருமாளுக்கு உண்டானதப் பண்றேள்..அழகா ஒரு கோவில் கட்டினீங்கன்னா அந்தப் பெருமாள் ஒங்களுக்கு ஆல் குட்திங்க்ஸ் தருவாராக்கும்னா..
*
நீலன் யோசிச்சான்..சரின்னு பட்டதுனால பெருமாள் கோவில் திருப்பணிக்கு நிறைய செலவு பண்ண ஆரம்பிச்சான்..பணம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைய ஆரம்பிச்சது.. எதுவரைக்கும்.. மகாராஜாவுக்கு கப்பம் கட்டக் கூட முடியாமப் போய்டுத்து
*
மகாராஜா பார்த்தார்.. ஆர்டினரி மெய்ல், ரிஜிஸ்ட்ர் போஸ்ட், ஈமெய்ல்னு வசதி எதுவும் அந்தக்காலத்துல இல்லாததுனால ஆளனுப்பியும் கேட்டுப் பார்த்தார்..பதில் சரியா வரலைன்னவுடனே கொஞ்சூண்டு கண் சிவந்துச்சு.. ம்ம்.. சரி படையெடுப்போம்னு போய் அவனோட கோட்டையைச் சூழ்ந்துக்கிட்டார்..
*
நீலனுக்கா கோபம்.. ம்ம் நான் எதற்காகச் செலவு செய்கிறேன்..பெருமாள் திருப்பணிக்குத் தானே.. என கர்ஜித்துட்டுப் கம்பீரமா போருக்குப் போறான்..கோட்டை வாயில் கதவு திறக்குது..பட் அங்க அவனுக்கு ஸர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு
*
மகாராஜா மட்டும் புன்சிரித்து கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல நிக்கறார்.. வா.. நீலா..உன்னை வளர்த்து போர்த்தொழில் புரிய வைத்து ராஜ்யமும் கொடுத்த பெருந்தன்மையான என் நெஞ்சில் வந்து வாள் பாய்ச்சு.. என வாளை விட வார்த்தையால அவனைக் கொல்றார்..
*
அந்தக் கொஞ்ச தூரத்துலருந்து நீலன் நடக்கறார் பாருங்க ஒரு நடை..வாவ்…அப்படியே நடந்து மகாராஜா கிட்டக்க ப் போய்…டபக்குன்னு கம்பீரம் குலையாம மண்டியிட்டு வேந்தே ஸாரின்னு உருகறது இருக்கே.. ம்ம் ரொம்ப நல்லா இருக்குமாக்கும்..
*
ஸோ.. என்ன மொதல்ல இருந்த பாட்டு பொருத்தமா இருக்கா இல்லியா.. இது என்ன படம்னு தெரிஞ்சுருக்கும்.. திருமால் பெருமை..மன்னன் நீலனா நடிகர் திலகம் மகாராஜாவா எம்.என் நம்பியார்.. நீலன் வைஃபா… வேறுயார்.. செளகார் ஜானகிதான்..ம்ம்ம்.
*
முடிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.. ஹோன்னு சத்தம் போட்டுக்கிட்டு அலைகள் ஓயாம இருக்கற கடல் மாதிரி ந.தியின் நடிப்பு..அதை எத்தனை பேர் எத்தன விதமா ரசிச்சுப் பேசினாலும் எழுதினாலும் ந்ல்லாத் தான் இருக்கும்.. என்ன சொல்றேள்..
*
உருவாய் அருள்வாய் உளதா இலதா..
…
அருள்வாய் குகனே..
• டைட்டில் இந்தக் காலத்த நினைவு படுத்தினா என்னை ஷமிக்கணும்
**(வாசக தோஷ சந்தவ்யஹ)