http://i61.tinypic.com/2mmwcnd.jpg
Printable View
வினோத் சார், தங்களது அருமையான திரையுலகம் பதிவுகளுக்கு நன்றி. மேலே பதிவிட்டுள்ள அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரமாக அபூர்வமான பல பதிவுகள் தங்களால் மேற்கொள்ளப்பட்டு இத்திரியினை மேலும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. நன்றிகள் பல.
வினோத் சார்,
மக்கள் திலகம் நடிக்காத வேறு பல பழைய படங்கள் பற்றிய தங்களது பதிவுகளும் மிக அருமையாக இருக்கின்றன. இருப்பினும் எனது கருத்தையும் பரிசீலிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவற்றை ஒரு தனி திரியில் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.
நேற்று சன் லைப் தொலைக்காட்சியில் நீதிக்குப் பின் பாசம் படத்தினை நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திலகத்தின் மிகச் சாதாரணமான (பெருவெற்றி பெறாத ) படத்தில் கூட அவரது அதிஅற்புதமான நடிப்பு பிரமிக்க வைத்தது. சாதாரண காட்சிகளைக் கூட தனது இயல்பான நடிப்பினால் உள்ளத்தைத் தொடும் காவியமாக மாற்றிவிடும் மக்கள் திலகம் இந்தப் படத்தில் சோகக் காட்சிகளுக்கு அதிக இடமளித்து அவற்றில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ளார். ,இந்தப் படத்தினைப் பற்றிய எனது விரிவான கருத்துக்களை விரைவில் எழுதவிருக்கிறேன். அதே போல மற்ற நண்பர்களும் ஒவ்வொரு படத்தினையும் விரிவாக காட்சி வாரியாக தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டால் திரி இன்னமும் சுவையாக அமையும் என்று கருதுகிறேன்.
http://i57.tinypic.com/29ig55.jpg
தன்னை அறிதவர்க்கு தானாகி நிற்பவரே என்னை ஆரிந்து கொண்டேன் மன்னனே எங்களுக்கு கீதை எடுத்து உரைத்த கலியுகக் கர்ணனே.
இன்றைய மாலை முரசு மற்றும் மாலை மலர் தினசரிகளில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/jj7oue.jpg
உலகிலேயே எம்.ஜி.ஆர். என்கிற தனிப்பெருந்தலைவர் ஒருவருக்குத்தான்
இதுவெல்லாம் சத்தியமாக சாத்தியம்.
ஆர். லோகநாதன்.
11.4.2014-
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படம் ''ராஜகுமாரி '' இன்று 68வது ஆண்டு துவக்க நாள் .
மக்கள் திலகம் நடித்த ''குமாரி '' படம் இன்று 63 வது ஆண்டு துவக்க நாள் .
திரை உலகில் ராஜகுமாரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் கலைப்பயணத்தில் ராஜகுமாரி படம்
1947ல் மாபெரும் புரட்சியை உருவாக்கி வெற்றி பெற்றது . 1947-1977 கலைப்பயணத்தில் 30 ஆண்டுகளில் 115
படங்களில் ஒரேமொழியில் கதாநாயகனாக நடித்து உலகமே திரும்பி பார்க்கும் வகையில் பல சாதனைகள்
புரிந்து இன்றும் திரை உலகில் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் புகழ் - வரலாற்று
சாதனையாகும் .