Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.:)
ராஜேஷ் சார்,
'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.
அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.
ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?