Originally Posted by
KALAIVENTHAN
‘ஆடி ஜெயித்தவர்’
‘ஊருக்கு உழைப்பவன்’..... படத்தின் பெயரே தலைவரைத்தான் குறிக்கும். 100 நாள் என்ற எல்லைக் கோட்டை தொடாவிட்டாலும் 50 நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றிப் படம்.
பொதுவாக நான் தலைவரின் எல்லாப் படங்களையும் அவருக்காகவே பல முறை பார்ப்பதுண்டு. இந்தப் படத்தை பாடல்களுக்காகவும் பல முறை பார்த்ததுண்டு.
* இதுதான் முதல் ராத்திரி... அருமையான மெலடி.
* இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்... தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பாடலை ஜேசுதாசின் மயக்கும் குரலில் கேட்டால் ஆனந்தமான தூக்கம் கியாரண்டி.
*பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்.... படத்தின் காட்சி அமைப்பையொட்டி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இந்தப் பாடல். மகிழ்ச்சியையும் அதேநேரம் தன் குழந்தையின் நிலையை நினைத்து இழையோடும் சோகத்தையும் கலந்து காட்டும் முகபாவனை தலைவரின் நடிப்பு திறனுக்கு சான்று.
* உடல் நிலை சரியில்லாத தன் குழந்தையை பார்க்க எஸ்டேட்டில் இருந்து வீடு வந்ததும், பின்னணியில் மீண்டும் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...’ ஒலிக்க (குழந்தை இறந்திருக்கும்) காலியாக இருக்கும் தூளியின் துணியை எடுத்து அணைத்தபடி தலைவர் கலங்கி அழும்போது கலங்குவது தியேட்டரும்.
*இதற்கு முன் நான் ரசித்த காட்சி ஒன்று. தலைவர் இரவில் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வாணி ஸ்ரீ, வீட்டு வாசலுக்கு வந்து பார்க்கும்போது அவர் கையில் வைத்திருக்கும் குழந்தையும் கொட்டாவி விடும். நிச்சயம் அந்தக் குழந்தை நடித்திருக்கப் போவதில்லை. எதேச்சையாக அந்த குழந்தை கொட்டாவி விடுவது காட்சிக்கு அற்புதம்.
* அழகெனும் ஓவியம் இங்கே, உன்னை இயற்றிய ரவிவர்மன் எங்கே?.... பாடலை தலைவரை மனதில் கொண்டே கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில் தலைவர் உண்மையிலேயே ரவிவர்மன் ஓவியம் போல இருப்பார். அதிலும், கடைசி பத்தியான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) சிமெண்ட் நிற குர்தாவில் கதவை மூடியபடி கட்டான உடலும் திரண்ட புஜங்களோடும் தலைவர் வரும் அழகும் ஸ்டைலும் தனி. அதிலும் அந்தக் காட்சியில் முதலில் தலைவர் எதிரே வருவது போல இருக்கும். ஆனால் அது கண்ணாடியில் காட்டப்பட்ட பிம்பம் என்பது பின்னர் தெரியும். கண்ணாடியில் கேமரா விழாமல் படமாக்கப்பட்ட அற்புத கோணம் அது.
* இடைவேளைக்கு முன்பு கோயிலுக்கு நிர்மலாவுடன் வரும் காட்சியில், வாணி ஸ்ரீ தன்னை பார்த்து விடக் கூடாதே என்ற அவசரத்தில், காரில் ஏறும்போது துண்டு காரின் கதவுக்கு வெளியே இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பதை காட்டும் தலைவரின் நுணுக்கமான நடிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
‘ஊருக்கு உழைப்பவன் ’..படத்தின் தலைப்பே எவ்வளவு உன்னதம். நீதிக்குத் தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என்று தலைவரின் படத் தலைப்புகளிலேயே நல்ல கருத்துக்களும் இருக்கும். அக்கால படங்களின் தலைப்புகளில் நல்ல கருத்துக்கள் இருக்கிறதோ இல்லையோ மோசமான கருத்துக்கள் நிச்சயம் இருக்காது. இப்போது, வரும் மோசமான படத் தலைப்பால் நானும் இன்னொருவரும் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஒரு மாதத்துக்கு முந்தைய பிளாஷ் பேக்...
...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்