75 வது பிறந்தநாள் காணும் அபிநயசரஸ்வதி
சரோஜாதேவி மேடம்
அவர்களை வாழ்த்த
வயது இல்லை
வணங்குகிறேன்
http://i47.tinypic.com/347wbhf.jpg
Printable View
75 வது பிறந்தநாள் காணும் அபிநயசரஸ்வதி
சரோஜாதேவி மேடம்
அவர்களை வாழ்த்த
வயது இல்லை
வணங்குகிறேன்
http://i47.tinypic.com/347wbhf.jpg
http://www.youtube.com/watch?v=88QvR...ature=youtu.be
KUMARI KOTTAM1
GOKULAM KATHI 2013 JANUARY
http://i49.tinypic.com/al1d1t.jpg
SINGAPORE TAMIL MURASU
http://i47.tinypic.com/157hq4m.jpg
திருப்பூர் குடிநீர் அபிவிருத்தி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நமது இதய தெய்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள். பின்னலாடை நகருக்கு குடிநீர் வழங்கிய வள்ளலை திருப்பூர் நகர மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
எஸ் ரவிச்சந்திரன் http://i1273.photobucket.com/albums/...ps04600f70.jpg
article from net
'சந்திரமுகி', 'சின்னத்தம்பி' ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் பி.வாசு. இவரின் தந்தை பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப்மேனாக இருந்தார்.
தன் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார் ஸ்ரீதர். அதற்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. 'உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம். ஆனால் நாம் இருவரும் இது குறித்து பேசவேண்டும். ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்தித்துப் பேசுவோம்' என்று எம்.ஜி.ஆர். தகவல் அனுப்பினார்.
இதனால் நெகிழ்ந்து போன ஸ்ரீதர், 'உங்கள் வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன்' என்று எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். மறுநாள் காலை தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறும், இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிடுவோம் என்றும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அதன்படி மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்குச் சென்று அவரை சந்தித்தார் ஸ்ரீதர்.
'உங்களை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்' என்று ஸ்ரீதர் கூற, 'உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சி' என்றார், எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிட்டபடி, இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். 'நீங்களும், நானும் ஒன்று சேருவதை விரும்பாதவர்கள் நமக்குள் பிளவு ஏற்படுத்த ஏதாவது முயற்சி செய்யக்கூடும். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். என்னிடம் விளக்கம் கேளுங்கள்' என்று ஸ்ரீதர் கூறியபோது, எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.
'நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம் ஸ்ரீதர்! உங்களுக்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுத்து தேதி ஒதுக்கித் தருகிறேன். எப்படியும் மூன்று மாதங்களுக்குள் உங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன். கவலையை விடுங்கள். மேலே ஆக வேண்டியதை கவனியுங்கள்' என்றார்.
ஸ்ரீதர் விடைபெற எண்ணியபோது, 'ஒரு நிமிஷம் உட்காருங்கள்' என்று கூறிய எம்.ஜி. ஆர்., தன் செயலாளரை அழைத்து ஒரு கடிதம் தயாரிக்கச் சொல்லி, அதில் தன் கையெழுத்தைப் போட்டு, ஸ்ரீதரிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் மெய் சிலிர்த்துப் போனார், ஸ்ரீதர். 'நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்' என்று அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்தார்.
'நீங்கள் சொன்னால் போதாதா? எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டுமா?' என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஸ்ரீதர் கூறினார். 'ஸ்ரீதர்! இது உங்களுக்காக அல்ல; பைனான்சியர்களுக்காக! இது பெரிய பட்ஜெட் படம். பணப்பற்றாக்குறையால் நீங்கள் சிரமப்படக்கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால், பைனான்சியர்கள் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.
இதைக்கேட்டு ஸ்ரீதர் கண் கலங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையாயிற்று. ஸ்ரீதர் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே, பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் ஸ்ரீதர் வீட்டை மொய்க்கத் தொடங்கினர். படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் கிடைத்துவிட்டது. ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த அந்தப்படம் 'உரிமைக்குரல்.' இதில் எம்.ஜி.ஆரின் ஜோடி லதா. வேட்டியை புது மாதிரி (ஆந்திர பாணியில்) கட்டிக்கொண்டு எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆர். முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், படம் வேகமாக வளர்ந்தது.
எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் மனத்தாங்கல் இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆரைத் தாக்கி, கண்ணதாசன் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அப்படியிருந்தும், கண்ணதாசன் எழுதிய பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்தார். குறிப்பாக, 'விழியே கதை எழுது' என்ற பாடல் காட்சி, மிகச்சிறப்பாக அமைந்தது.
1974-ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆயிற்று. 'எம்.ஜி.ஆர்- ஸ்ரீதர் இணைந்து எடுத்த படம் வெற்றி பெறாது' என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்யானது. படம் சூப்பர் ஹிட்! எம்.ஜி.ஆர். ரசிகர்கள், 'இது எம்.ஜி.ஆர். படம். பிரமாதம்!' என்றார்கள். ஸ்ரீதர் ரசிகர்கள், 'இது ஸ்ரீதர் படம்தான். அவருடைய தனித்தன்மையை விட்டுவிடவில்லை' என்றும் புகழ்ந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றி, சித்ராலயாவை நிதி நெருக்கடியில இருந்து பெரும் அளவுக்கு மீட்டது. ஸ்ரீதர் உற்சாகம் அடைந்தார். சிவாஜி நடித்து, பாதியில் நின்ற 'ஹீரோ 72' படத்தின் பெயரை 'வைரநெஞ்சம்' என்று மாற்றி, விரைவாகப் படப்பிடிப்பு நடத்தி, ரீலீஸ் செய்தார்.
பத்மபிரியா அறிமுகமான படம் இது. இந்த சமயத்தில், சடையப்ப செட்டியார் என்ற தயாரிப்பாளரும், மதன் என்ற பைனான்சியரும் ஸ்ரீதரை சந்தித்தனர். 'நாங்கள் இருவரும் உங்களுடன் கூட்டாக சேர்ந்து, எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறோம்' என்று கூறினார்கள். அதற்கு ஸ்ரீதர் சம்மதித்தார். படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதம் தெரிவித்ததுடன், 'கதையைக்கூட எனக்குக் கூறத் தேவை இல்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல் நாள் வந்து என் கேரக்டர் பற்றி சொல்லுங்கள், போதும்' என்றார். 'மீனவ நண்பன்' என்ற பெயரில் படத்தைத் தயாரிக்க ஸ்ரீதர் தீர்மானித்தார். இதே நேரத்தில் ஜேயார் மூவிசார் ஸ்ரீதரை அணுகி, 'எம்.ஜி.ஆரை வைத்து நாங்கள் ஒரு படம் தயாரிக்கிறோம். அதை நீங்கள் டைரக்ட் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீதர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். படத்துக்கு 'அண்ணா! நீ என் தெய்வம்' என்று பெயர் சூட்டப்பட்டது. 'இந்தப்படத்தை பிரமாதமாக எடுப்போம்' என்றார், எம்.ஜி.ஆர். முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வேகமாக வளர்ந்து வந்த இப்படம் இடையில் சில மாதங்கள் தடைப்பட்டு நின்றது. காரணம், ஸ்ரீதருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து. அதுபற்றி தன் வாழ்க்கை வரலாற்றில் ஸ்ரீதர் எழுதியிருப்பதாவது:-
'ஒரு நாள் இரவு நான் பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது தரை வழுக்கி, தலைகுப்புற விழுந்துவிட்டேன். கீழே கிடந்த ஒரு இரும்புக்கம்பி இடது கண்ணில் குத்த, என் விழியே வெளியே வந்துவிட்டது. நடு இரவில் பிரபல கண் டாக்டர் பத்ரிநாத்தைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்து, உடனடி சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்குப் போனேன். இரவு டியூட்டியில் இருந்த டாக்டர், விழியைப் பொருத்தித் தைத்துவிட்டார். மறுநாள் டாக்டர் பத்ரிநாத்திடம் போனபோது அவர் ரொம்ப வருத்தப்பட்டுவிட்டார். 'உடனே என்னிடம் வந்திருக்க வேண்டியதுதானே?' கண் சிகிச்சை என்பது ஸ்பெஷலிஸ்டுகள் கவனிக்க வேண்டியது அல்லவா? இது கூட தெரியவேண்டாமா? இப்போது விஷயம் சிக்கலாகிவிட்டதே!' என்று கூறி, சிகிச்சை ஆரம்பித்தார்.
அவரிடம் முதலிலேயே சென்றிருந்தால் சீக்கிரம் குணமாகியிருக்கலாம்; தாமதம் செய்ததால் குணம் அடைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.' இவ்வாறு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
குணம் அடைந்ததும், 'அண்ணா, நீ என் தெய்வம்', 'மீனவ நண்பன்' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பையும் தொடங்கினார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. தேர்தல் இந்த சமயத்தில் 1977 தேர்தல் வந்தது. அதனால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றார், எம்.ஜி.ஆர். தேர்தலில் அவருடைய 'அண்ணா தி.மு.க' வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார். 'மீனவ நண்பன் முடிவடைய இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும்' என்று கேட்டார். 'இரண்டு நாட்கள் கொடுத்தால் போதும்' என்றார், ஸ்ரீதர். உடனடியாக எம்.ஜி.ஆர். தேதி கொடுத்தார். அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடந்து, 'மீனவ நண்பன்' பூர்த்தி ஆயிற்று. ('அண்ணா, நீ என் தெய்வம்' படம், 4 ஆயிரம் அடிதான் தயாராகி இருந்தது. அந்தக் காட்சிகளை, பின்னர் நடிகர் - டைரக்டர் கே.பாக்யராஜ் தன்னுடைய 'அவசர போலீஸ் 100' படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.) தமிழக முதல்-அமைச்சராக 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.
பதவி ஏற்பு விழாவுக்கு ஸ்ரீதரை அழைத்து வி.ஐ.பி.க்களின் வரிசையில் அமரச் செய்தார். 'மீனவ நண்பன்' 14-8-1977 அன்று வெளிவந்தது. 'உரிமைக் குரல்' போல் சூப்பர் ஹிட்டாக அமையவில்லை என்றாலும் நூறு நாள் ஓடியது. (முதல்-அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்து முடித்த மற்றொரு படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த படம். இது 14-1-1978-ல் வெளியானது.)
''அவளுக்கென்று ஒரு மனம்' படத்தை 1971-ல் ஸ்ரீதர் தயாரித்தார். இதில் ஜெமினிகணேசன், பாரதி, காஞ்சனா ஆகியோர் நடித்தனர். இதே கதை இந்தியிலும் தயாராகியது. இந்த இரண்டு படங்களுடன், 'உத்தரவின்றி உள்ளே வா' படத்தையும் சித்ராலயா உருவாக்கியது. அதுவரை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சக்ரவர்த்தியை, இந்தப் படத்துக்கு டைரக்டர் ஆக்கினார், ஸ்ரீதர். ஏக காலத்தில் மூன்று படங்களை சித்ராலயா தயாரித்தது.
இந்திப் படங்களை ரிலீஸ் செய்வதில், முன்காலத்தில் புதுமையான முறை கையாளப்பட்டது. முதலில், மும்பை ஏரியாவில் மட்டும் திரையிடுவார்கள். அங்கு எப்படி ஓடுகிறது என்பதைப் பொறுத்து, மற்ற ஏரியாக்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். சில படங்களுக்கு விலை கூடும்; சில படங்களுக்கு விலை குறையும். 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தின் இந்திப்பதிப்பு, மும்பையில் ரிலீஸ் ஆயிற்று. படம் படுதோல்வி! எனவே, மற்ற ஏரியாக்களை சேர்ந்த விநியோகஸ்தர்கள், படத்தை வாங்க மறுத்தனர்.
அட்வான்ஸ் கொடுத்தவர்களும் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். நிலைமையை சமாளிக்க, ஸ்ரீதர் ஒரு சமரச ஏற்பாட்டை செய்தார். 'படத்தின் சில காட்சிகளை மாற்றி அமைக்கிறேன். சுமார் 4 ஆயிரம் அடிக்கு படத்தை மீண்டும் எடுக்கிறேன்' என்று சொன்னார். விநியோகஸ்தர்கள் சம்மதித்தார்கள். படத்தில் புது முகங்களே நடித்திருந்ததால், சில காட்சிகளை மீண்டும் படமாக்குவதில் `கால்ஷீட்' பிரச்சினை ஏற்படவில்லை.
விநியோகஸ்தர்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, சுமார் 5 ஆயிரம் அடி நீளத்துக்கு மீண்டும் படம் எடுத்துக் கொடுத்தார். விநியோகஸ்தர்கள் திருப்தி அடைந்து, படத்தை ரிலீஸ் செய்தனர். அப்படியும் படம் சரியாக ஓடவில்லை. இதற்கு இடையே 'அவளுக்கென்று ஓர் மனம்' தமிழ்ப் பதிப்பும் வெளிவந்தது. இந்தி அளவுக்கு மோசம் இல்லை என்றாலும், வசூல் சுமார்தான். 'உத்தரவின்றி உள்ளே வா' படம், ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. அப்போது, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' என்ற ஆங்கில வார இதழ் மிகப்பிரபலமாக இருந்தது.
'அவளுக்கென்று ஓர் மனம்' இந்திப்படத்தை அந்தப் பத்திரிகை விமர்சனம் செய்தபோது, 'ஸ்ரீதருக்கு டைரக்ஷனே தெரியவில்லை. இனி அவர் படங்களை டைரக்ட் செய்யாமலேயே இருக்கலாம். அவர் படங்களை வாங்க இனிமேல் எந்த விநியோகஸ்தரும் முன்வரமாட்டார்கள்' என்று எழுதியிருந்தது. இதனால் மனம் புண்பட்ட ஸ்ரீதர், ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு, வீக்லி மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த சமயத்தில் 'வீக்லி'யின் ஆசிரியராக இருந்தவர், பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங். அவர் எழுத்தின் மீது ஸ்ரீதருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஸ்ரீதருடன் சமரசம் செய்து கொள்ள குஷ்வந்த்சிங் விரும்பினார். இருவரும் சந்தித்துப் பேசினர். உடன்பாடு ஏற்பட்டது. ஸ்ரீதரைத் தாக்கி வெளியிட்ட விமர்சனத்துக்காக, 'வீக்லி' வருத்தம் தெரிவித்தது. வழக்கை ஸ்ரீதர் வாபஸ் பெற்றுக் கொண்டார். தமிழில் 'அலைகள்' என்ற படத்தை ஸ்ரீதர் எடுத்தார். கன்னடத்தில் பெரிய ஹீரோவாக விளங்கிய விஷ்ணவர்த்தன் அதன் கதாநாயகன்.
சந்திரகலா கதாநாயகி. இதன்பின் 'ஹீரோ 72' என்ற பெயரில் இந்தியிலும், தமிழிலும் படம் எடுக்க ஏற்பாடு செய்தார். தமிழ் படத்தில் ஹீரோ சிவாஜிகணேசன். அவர் கால்ஷீட் கிடைக்காததால், படம் மெதுவாகவே வளர்ந்தது. இந்திப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் வேகமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ருசிகர நிகழ்ச்சி: ஸ்ரீதரின் இந்திப் படங்களுக்கு வழக்கமாக வசனம் எழுதி வந்தவர் ராஜேந்திரகிஷன். இந்திப்பட உலகின் `நெம்பர் 1' வசன கர்த்தா.
அவர் ஒரு 'ரேஸ் பைத்தியம்.' எந்த ஊரில் குதிரைப் பந்தயம் நடந்தாலும் அங்கு போய் விடுவார்! அப்போது, மும்பையில் குதிரைப்பந்தயம் நடந்து வந்தது. பெரிய ஜாக்பாட் பரிசு காத்திருந்தது. ஸ்ரீதரிடம் ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு ரேசுக்குப் போனார், ராஜேந்திரகிஷன். அவருக்கு அடித்தது 'ஜாக்பாட்!' பரிசுத்தொகை 48 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்! குதிரைப்பந்தய வரலாற்றிலேயே, ஒரு ஆளுக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைத்தது இல்லை. ஸ்ரீதரிடம் வந்து இந்த செய்தியை சொன்ன ராஜேந்திரகிஷன், 'ஸ்ரீதர்! இந்தப் பரிசு பெரியதுதான்.
உங்களால்தான் இதை அடைய முடிந்தது. அதே சமயம், நான் இதுவரை குதிரைப் பந்தயத்திற்கு செலவிட்ட தொகை, ஏறத்தாழ இந்த அளவுக்கு இருக்கும்!' என்று கூறிச் சிரித்தார். இந்தி 'ஹீரோ 72' வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. தமிழ் 'ஹீரோ 72' குறிப்பிட்ட நேரத்தில் வெளிவராத சூழ்நிலை. ஏற்கனவே எடுக்கப்பட்ட சில படங்களும் தோல்வி அடைந்திருந்ததால், மொத்தத்தில் கணக்கு போட்டுப் பார்த்தபோது, சித்ராலயாவின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது.
இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜேந்திரகுமார், ஸ்ரீதரை சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சித்ராலயாவின் பொருளாதார நிலை சரியில்லை என்பது ராஜேந்திரகுமாருக்கு தெரிந்தது. உடனே அவர், 'ஏன், ஸ்ரீதர்! நீங்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தால் என்ன? உங்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடுமே!' என்றார். ஸ்ரீதருக்கு தூக்கி வாரிப்போட்டது. முன்பு எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் எடுக்கத் தொடங்கிய 'அன்று சிந்திய ரத்தம்', சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதோடு நின்று போய்விட்டது.
பிறகு அதே கதையை, 'சிவந்த மண்' என்ற பெயரில் சிவாஜிகணேசனை வைத்து எடுத்து வெளியிட்டார். இப்போதும் சிவாஜியை வைத்து 'ஹீரோ 72' என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், எம்.ஜி.ஆரிடம் போய் அவரை நடிக்கும்படி கேட்டுக்கொண்டால் அவர் சம்மதிப்பாரா? -ஸ்ரீதர் தயங்கினார். 'ஸ்ரீதர்! யோசிக்காதீர்கள். தயங்காமல் எம்.ஜி.ஆரைப் போய்ப்பாருங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினை தீர அதுதான் வழி!' என்று அடித்துச் சொன்னார், ராஜேந்திரகுமார்.