for ALL thread members.
Printable View
பார்த்ததில் பிடித்தது -36
இந்த பதிவில் நடிகர் திலகத்தின் 211 வது படமான 1980 ல் வெளிவந்த விஸ்வரூபம் படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்
கதை :
சத்யமூர்த்தி (சிவாஜி ) கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார் . கொஞ்சம் வாய் துடுக்கு , மற்றவர்கள் நினைப்பதை பற்றி கவலை படாமல் உண்மையை பேசி வம்பை வளர்த்து கொள்ளுகிறார் . அந்த கிராமத்துக்கு வரும் நகரவாசிகளை காட்டை சுற்றி காட்ட பணிகபடுகிறார் சத்யமூர்த்தி , அந்த நகரவாசிகள் (மனோகர் , பிரேமானந்த் ,ராமதாஸ் மற்றும் சில நபர்கள் ).
சத்யமூர்த்யின் வயலில் தீயை வைத்து கொளுத்தி விடுகிறார் அந்த ஊரின் பண்ணையார் . அந்த கிராமத்தை வெறுக்கும் சத்யமூர்த்தி சென்னைக்கு போய் வாழ நினைக்கிறார் , தான் காப்பாற்றிய மனோகர் தன்னுடன் சென்னைக்கு வரும் படி குறி தன் விலாசத்தை கொடுத்தது நினைவுக்கு வர அதை எடுத்து கொண்டு தன் குழந்தைகள் , மனைவி , தங்கை உடன் புறபடுகிறார்.
சென்னைக்கு வந்த உடன் பெட்டியை பரி கொடுத்து விட்டு , தெருவில் படுத்து உறங்கும் பொது அந்த பேட்டை பிஸ்தா தேங்காய் ஸ்ரீனிவாசனின் நட்பு கிடைகிறது , அத்துடன் மனோகர் சத்யாவை பார்க்க , சத்யாவுக்கு தன் factory ல் வேலை போட்டு கொடுக்கிறார் , அந்த factory godown ல் கள்ளகடத்தல் நடப்பது தெரியாமல் வேலை பார்க்கும் சத்யா முதலாளி நீட்டும் பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார்
போலீஸ் raid ல் மாட்டி கொண்டு சத்யா தண்டனை அடைகிறார் , பணத்துக்கு கஷ்டப்படும் சத்யா குடும்பம் , சத்யாவின் பெண் குழந்தையை காப்பாற்ற வழி தெரியாமல் சத்யாவின் தங்கை பிரேமனாத் அந்த பெண்ணை கெடுத்து விடுகிறார் , சத்யாவின் தங்கை தற்கொலை செய்து கொள்ளுகிறார் .தண்டனை முடிந்து வெளியே வரும் சத்யாவை கண்காணிக்கிறார் இன்ஸ்பெக்டர் (மேஜர் ) சத்யா சட்டத்தை கையில் எடுத்து கொள்ளுகிறார் , முதலில் பிரேம் கொல்லபடுகிறார் , பிறகு சத்யாவை கொள்ள முயற்சி நடக்க , அதில் காயம் அடையும் சத்யா மருத்துவமனையில் சேர்க்க படுகிறார் , அங்கே இருந்து தப்பித்து ராமதாசை கொலை செய்து விட்டு , மீண்டும் மருத்துவமனையில் வந்து படுத்து கொண்டு போலீஸ் கண்களில் மண்ணை தூவுகிறார் , மனோகரை கொலை செய்யும் பொது பலத்த தீ காயங்கள் உடன் அவர் தப்பி விட , சத்யாவுக்கு ஒரு டானின் நட்பு கிடைகிறது . தன் மகன் ராஜாவை வெளி நாட்டில் படிக்க அனுப்புகிறார் சத்யா , இங்கே தன் மனைவி சுஜாதா , உதவிக்கு தன் நண்பர் தேங்காய் ஸ்ரீநிவாசன் உடன் வசிக்கிறார் , கள்ள கடத்தல் தொழில் கொடி கட்டி பறக்கிறார் . பணம் சேர ,famous ஆகிறார் , notoriously famous , இது தெரியாமல் தாயகம் திரும்பும் ராஜா (சிவாஜி ) ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறார் (ஸ்ரீ தேவி ) அவர் தந்தை கல்யாணத்துக்கு மறுத்து , ராஜாவின் தந்தை ஒரு கள்ளகடதல்காரன் என்று சொல்லி விட , ராஜா தன் தந்தையுடன் வாக்குவாதம் செய்கிறார் , பல வருடங்கள் முன்பு தப்பி விடும் மனோகர் சத்யாவை பழி வாங்க நினைக்க , அதில் பலி ஆவது சத்யாவின் மனைவி சுஜாதா , சத்யா திருந்த நினைத்து , வாக்குமூலத்தை எழுதி , தன் நண்பர் (மேஜர் ) போலீஸ் அதிகாரிடம் கொடுக்கிறார் , மனோகர் ராஜாவை பிடித்து வைக்க , சத்யா ராஜாவை தன் உயிரை கொடுத்து காப்பாற்றுகிறார்
சுபம்
படத்தை பற்றி :
படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா , இவர் தான் இந்தியாவின் முதல் cowboy படத்தை தயாரித்து நடித்தார் , மேலும் தெலுங்கு படஉலகில் cinemascope ,70 MM , east man கலர், DTS என்று பல டெக்னாலஜி யை தெலுங்கு திரை உலகத்துக்கு கொண்டு வந்தார் .
மேலும் ரஜினிகாந்த நடித்த மாவீரன் படத்தை ரஜினியுடன் இணைந்து தயாரித்தும் இவரே
நடிகர் திலகத்துக்கு பல நட்சதிரங்கள் உடன் நல்ல நட்பு இருந்தது , தெலுங்கு பட உலகில் ANR , மற்றும் கிருஷ்ணா உடன் நல்ல நட்பு இருந்தது , இந்த படத்தின் ஆரம்பம் அந்த நட்பு தான் இரண்டு பெரும் காங்கிரஸ் இயக்கத்தின் மேல் அபார பற்று வைத்து இருபவர்கள்
சிவாஜி சிவாஜி சிவாஜி இந்த ஒரே நடிகரை மட்டுமே நம்பி எடுக்க பட்ட எடுக்க பட்ட பல படங்களில் இந்த படமும் ஒன்று , சிவாஜி என்ற நடிகனை தூணாக எழுப்பி ஒரு மாபெரும் மாளிகையை கட்டி இருக்கார்கள் , எந்த தூண் சரிந்தாலும் இந்த சிவாஜி என்ற தூண் சரியாமல் படத்தின் குறைகளை மறைக்க உதவுகிறது .
முதல் காட்சியில் சத்யா மரத்தை அப்புற படுத்தும் காட்சியில் அவர் மூக்கில் ரத்தம் வரும் வரை அவர் மரத்தை அப்புறபடுத்துவது காட்சிக்கு ஓகே என்றாலும் கொஞ்சம் ஓவர் exaggeration
கோர்ட் காட்சிகளில் முதலில் தன் முதலாளி உண்மையை சொல்லுவதை போலே பொய் சொல்லும் பொது அவர் முகத்தில் காட்டும் reaction அபாரம்
அதே சிவாஜி சிறையில் இருந்து வெளியே வந்து தன் வாழ்கையை அழித்த நபர்களை கொள்ளும் பொது அவர் கொடுக்கும் dead pan expression க்கு தாரளமாக 100 மார்க் . தொடர்ந்து அவர் டானாக மாறும் காட்சிகளும் அதை அடுத்து வரும் அவர் லைப் ஸ்டைல் ல் வரும் மாறுதல்களையும் , அவர் உடை , பேச்சு மாறுவதையும் அழகாக காட்டி இருப்பார் நடிகர் திலகம் , அதுவும் அந்த ராயல் old get up fits him like a glove . என்னை யாரென்று பாடல் -அரசியல் அதிகம்
மகன் சிவாஜி பாத்திரம் பொருந்த வில்லை அதற்கான காரணத்தை சொல்லி விடுகிறேன்
தந்தை மகன் என்ற உடன் சிவாஜி சார் நடித்த படம் தெய்வ மகன் என்ற கிளாச்சிக் தான் அதுவும் திர்லோக்ச்சந்தர் தான் டைரக்டர் என்ற உடன் இந்த comparison தவிர்க்க முடியாமல் போகிறது . மேலும் மகன் சிவாஜி இங்கிலீஷ் slang ல் தமிழ் பேசும் பொது compare செய்யாமல் இருக்க முடியவில்லை
இரண்டு
தெய்வமகன் போல் பாத்திரங்களில் அழுதம் இல்லை , தெய்வமகன் படத்தில் 2 பிரதான சிவாஜி தந்தை , மற்றும் கண்ணன் என்ற முத்த மகன் இருவரின் பார்வையிலும் ஒரு நியாயம் இருக்கும் இந்த படத்தில் அது மிஸ்ஸிங்
படத்தில் தெலுங்கு வாசனை ரொம்ப அதிகம் , .
சுஜாதா வழக்கம் போல் குடுத்த பாத்திரத்தில் அழகாக பொருந்தி இருக்கிறார் . சில நடிகைகள் தான் get old majestically , அந்த வரிசையில் சுஜாதாவின் நடிப்பு பிற்பாதியில் அபாரம் , தன் கணவர் செய்வது அவரை பொருத்தவரைக்கும் சரி என்பது அறிந்தும் , சட்டப்படி குற்றம் என்பதும் , தெரிந்து துடிக்கும் காட்சிகள் அவர் நடிப்புக்கு சான்று
ராஜாதி , ராஜனான் என்ற பாடல் டூயட் என்றாலும் அது எடுக்க பட்டு இருக்கும் காஷ்மீரை அழகாக காட்டி இருப்பார் ஒளிபதிவாளர் , அந்த பாடல் பார்க்கவும் , கேட்கவும் நன்றாக இருக்கிறது
நான் பட்ட கடன் என்ற பாடலில் இருவரின் நடிப்பும் பாடலை எங்கேயோ கொண்டு செல்லுகிறது , தன் வாழ்கையை திரும்பி பார்ப்பது போல் நடிகர் திலகம் பாடும் பாடல்
thengai ஸ்ரீநிவாசன் வளம்கம் போல் அதுவும் அவர் பாடும் கதா காலட்ச்யம் கிருஷ்ணரை பற்றி அவர் versatility யை அழகாக காட்டுகிறது .sridevi - பல veterans இருக்கும் படத்தில் ஸ்க்ரீன் space கம்மி தான்
படம் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்தாலும் , சிவாஜி சிறையில் இருந்து வந்த உடன் வேகம் எடுக்கிறது , அந்த வேகம் படம் முடியும் வரை இருக்கிறது , படத்தின் குறைகள் படம் முடிந்த உடன் தான் தெரிகிறது
படத்தை பற்றி ஒரே வரியில் : விஸ்வரூபம் தரிசனம் இல்லை என்றாலும் , தரிசனம் OK
திரைப்படம் வெளியானபோது பள்ளிச்சிறுவனாகப் பார்த்தது. வெளியான தேதி, எவ்வாறு ஓடியது போன்ற விபரங்கள் நினைவிலில்லை. "நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து. அடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரமிருந்தும்" பாடல் வரி நன்றாக நினைவிலிருக்கிறது.
சாரதா மேடம் விஸ்வரூபம் பட வெற்றிவிழாவில் பங்கு எடுத்ததாக எழுதி படித்ததாக ஞாபகம்.
படத்தை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனாலென்ன ராகுல். நீங்கள்தான் கதையை முழுவதுமாக சொல்லி கதாபாத்திரங்களை சொல்லி அந்த உணர்வை கொண்டுவந்து விட்டீர்களே!!! பிடியுங்கள் பாராட்டுக்களை!!!
The Movie released during Diwali time along with Varumaiyin Niram Sigappu and
Pollavathavan and it touched the Victory Line in style.
Regards
Dear Khalnayak sir,
This is for you,
http://en.wikipedia.org/wiki/File:Vishwaroopam_1980.jpg