ராஜேஷ் சார்,
இனிமை மெட்டுக்களில் இன்னொன்று
இதோ நம் 'இனிமைக் குயில்' தாலாட்டும் ஒரு அருமையான பாடல்.
மாணிக்கத் தொட்டில் படத்தில்
'ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்த குமாரன்'
அப்படியே அந்தக் குரல் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்க் கிடாசும் சார். குரலில் இனிமை இருக்க வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா?
சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாராம் தந்தையடி
பச்சை மகன் படுத்துறங்க பவளமணிக் கட்டிலடி
மன்னவனும் கண்ணுறங்க மாணிக்கத் தொட்டிலடி
புன்னைகை அரசி பாந்தம். ஜெமினியின் இயற்கையான கைகொட்டல்.
அருமையான சகோதரிகளின் கோரஸ்.
https://www.youtube.com/watch?featur...&v=XV9OzWrGrj8