சேண்பாக்கம்
http://i59.tinypic.com/34gtt7a.jpg
Printable View
சேண்பாக்கம்
http://i59.tinypic.com/34gtt7a.jpg
வேலூர் கிரீன் circle
http://i60.tinypic.com/20k7jn9.jpg
வேலூர் கோட்டை circle
http://i62.tinypic.com/20gd409.jpg
வேலூர் கோட்டை circle
http://i59.tinypic.com/rh8my8.jpg
வேலூர் கோட்டை circle
http://i61.tinypic.com/cuycg.jpg
இப்போதுதான் போலிருக்கிறது...!
ஆனால் ,எம்.ஜி.ஆர். மறைந்து இருபத்தாறு வருடங்கள் ஆகி விட்டன...!
அன்றைய ஜூனியர் விகடனில் இருந்து சில நேரடிக் காட்சிகள்....
சிவாஜி , எம்ஜிஆரின் உயிரற்ற உடலைப் பார்த்து குமுறி அழுதபடியே....”இன்னிக்கா, நேத்திக்கா… நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே… ‘எதுன்னாலும் நீ என்னை வந்து பார்… ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே… இனி நான் யார்கிட்ட போவேன்?” என்று கலங்கி நின்றாராம்...!
கலங்காமல் எம்.ஜி.ஆர். தலைமாட்டில் அசையாமல் நின்ற ஜெயலலிதாவிடம் ஒரு காவல்துறை அதிகாரி,கனிவோடு சொல்லிப் பார்த்தாராம்...
”காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்…”
ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லையாம்...!
டிரக்கில் இருந்து எம்ஜிஆரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப் படாத பாடுபட்டது. முடியவில்லை.
எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது.
”அடப் பாவிங்களா… தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா…” என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர்.
இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ”வாத்யாரே… தெய்வமே… அப்பா…” என்றெல்லாம் கதறித் துடித்தார்கள்.
வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது.
ஆவேசமாக வந்த கூட்டம்… ”தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்… சுடுங்க…!” என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது...
அந்த இடத்தில் ஒலித்த மக்கள் குரல்களில் சில...
”அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்… என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க… என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!”
”நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே… எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே… ஐயா, ஐயா…”
. கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ”இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு…”
# இருபத்தாறு வருடங்கள் ஆனாலும் ..இதையேதான் சொல்ல வேண்டியதிருக்கிறது...!
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் “
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் என்று அஞ்சலி செலுத்துகிறார்கள் நினைவுதினம் என்று சொல்லுவதை விட நிறைஞ்ச தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஏன் என்றால் தெய்வத்துக்கு யாரும் நினைவுதினம் கொண்டாடபடுவதில்லை.
இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் வந்துட்டு போய்ட்டாங்க. தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களின் இன்றும் தெய்வமா வாழ்ந்துக்கொண்டுருக்கிறார்.
அதனால்தான் அவருக்கு மக்கள் திலகம் என்று பெயர் வைத்தார்களோ!!!
சிங்கப்பூர் வாழ் எம்ஜிஆர் விசுவாசிகளின் பத்திரிகை அஞ்சலி.
கடல்கடந்த மக்கள் மனதில் நிறைந்திருக்கும் கடவுள்.
http://i1170.photobucket.com/albums/...pscee61240.jpg