Originally Posted by
KALAIVENTHAN
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெற்றி விழாவின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட வெள்ளி விழாவைத் தொடர்ந்து கோவையிலும் வெள்ளி விழா கொண்டாட்டம் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை வெற்றிகரமாக்கிய புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். வெள்ளி விழா கொண்டாட்ட பணிகள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை.
கொண்டாட்டம், விழா என்றால் திருஷ்டி பரிகாரம் வேண்டுமே? எதிர் முகாமில் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. ‘ஓட்டப்பட்ட படம்’ என்று தொடர்ந்து பொருமுகிறார்கள். ஒரு பெரியவர் சத்யம் தியேட்டரில் படம் எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்து தர்மத்தின் வெற்றி என்கிறார். ஆனால், காலை காட்சியாக படம் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கர்ணனை ஆயிரத்தில் ஒருவன் விஞ்சி விட்டது என்று நடுநிலையான இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை விழா நடந்த அரங்கில் பேனராக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சொல்லவில்லை. இந்து நாளேடு சொல்கிறது. அதை குறிப்பிட்ட அந்த வரியை எடுத்துப் போட்டு எந்த நூற்றாண்டில் நடந்தது? என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர். கண்ணுக்கு எதிரிலேயே ஆயிரத்தில் ஒருவனின் வெள்ளி விழாவைப் பார்த்தும் இப்படி ஒரு கேள்வி.
தடயங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கும் முயற்சி என்றும் அவர் கூறுகிறார். சாந்தி தியேட்டரில் அவர்களது அபிமான நடிகர் நடித்த படங்களை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். அதில் ஓடாத ராஜராஜசோழனுக்கு பக்கத்தில் 100 நாள் ஓடியது என்பதைக் குறிக்கும் வகையில் எச் என்று போட்டு வைத்துள்ளனர். எங்கே ஓடியது என்று கேட்டால் நைஜீரியாவில் என்று ஒரே போடாக போடுவார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் (அந்த முகாமை சேர்ந்தவர்தான்)மனசாட்சியுடன் அப்படம் வெளியான மார்ச் 31ம் தேதி கருப்பு நாள் என்று அவர்கள் திரியில் பதிவிட்டால் அவரை மிரட்டி பதிவை நீக்கச் சொல்கிறார்கள். நமக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி பழக்கம் இல்லை. தலைவரின் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு கல்வெட்டுகள் எதற்கு?
வெள்ளி விழாவில் தலைவரின் புகழை பாடிய நம் சத்யராஜ் அவர்களை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு தடித்த வார்த்தைகளை அந்த ஒருவர் இன்று பயன்படுத்தியுள்ளார். இதற்காக, நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் வந்த வழி அப்படி. 1977 தேர்தலின்போது அவர்களது அபிமான நடிகர், தனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் திமுக தலைவரை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு, பதிலுக்கு அவர் ‘நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்ததே நான்தான், எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பதிலடி கொடுத்த கதை உலகத்துக்கே தெரியுமே.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாம் செல்லும் பாதை சரியா என்று பார்க்க ஒரு வழி காட்டியிருக்கிறார். ‘எதிரிகள் நம்மை திட்டுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம்’ என கூறியுள்ளார். அதை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் எதிர் முகாமில் இருந்து வரும் தாக்குதல்கள் மூலம் (அவை முனை மழுங்கியவை என்பது வேறு கதை) நாம் சரியாகத்தான் செல்கிறோம் என்று தெரிகிறது. எனவே, பொறாமையால் பொருமும் அவர்களை புறந்தள்ளி விட்டு நமது பணி இன்று போல் என்றும் வாழ்க.
ஆயிரத்தில் ஒருவனின் வார்த்தைகளிலேயே அவர்களுக்கு சொல்வதென்றால், ‘‘வீழ்ந்தது நீங்கள் அல்ல, உங்கள் ஆணவம், வென்றது நானல்ல, தர்மம்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.