இந்தப் பாட்டும்முதல் முதல் பார்க்கிறேன்..ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்குமாக்கும்
ஆவணி மலரே ஐப்பசி மழையே ( ஜெய்-ஜெய்சித்)
https://www.youtube.com/watch?v=yJwg...yer_detailpage
Printable View
இந்தப் பாட்டும்முதல் முதல் பார்க்கிறேன்..ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்குமாக்கும்
ஆவணி மலரே ஐப்பசி மழையே ( ஜெய்-ஜெய்சித்)
https://www.youtube.com/watch?v=yJwg...yer_detailpage
தாங்க்ஸ் ராஜேஷ்,
தவறாய் பாடலாசிரியரை கொடுப்பதை விட கொடுக்காமலிருப்பது நல்லது என்று அந்தபாடல்களுக்கு*பாடலாசிரியர்களை கொடுக்க வில்லை. அதை கொடுப்பதற்காவது நீங்கள் வந்தீர்களே. நிறைய எழுதுங்கள்.
மருதகாசி அய்யா அவர்களைப் பற்றிய உங்கள் கட்டுரைக்கு காத்திருக்கிறோம்.
நான் ராதைதான் முதல் முறையாக கேட்கிறேன். நன்றாக இருக்கிறது. இந்த பாட்டுமூலம் சி.க. வை ஒரு ஜெயசித்ரா தொடர் போட வைத்து விட்டீர்கள். நன்றி.
சி.க.,
மு.மேத்தா பற்றிய "பாடினார் கவிஞர் பாடினார்" கட்டுரை நன்றாக இருந்தது. அப்பவே நீங்க காலேஜா. சரி சரி. மு.மேத்தா உங்களுக்கு பிடித்த கவிஞர்-னு சொல்லிட்டீங்க. முழுசா படிச்சால் காரணம் புரியுது. நீங்களும் கவிஞர்தானே. ஆகாய கங்கை பாட்டை கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான். மு.மேத்தா நிறைய நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லவா? நானும் ஒன்றிரண்டு அவரின் நாவல்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் கதைகள் படிப்பதையே நிறுத்திவிட்டேன். நேரமில்லை.
மற்றபடி நல்ல பாடல்களையே கொண்டிருக்கிறது அவருடய திரைப்பட பாடல்கள் வரிசை. நீங்கள் குறிப்பிட்ட உதயகீதம் பாடல் என்னுடைய அடுத்த பாடல்.
அஹோ வாரும் கல் நாயக்.. நன்றி..
ஹையாங்க்..எ ப்படி மறந்தேன்.. ஆனந்த விகடன் பொன்விழாப் போட்டியில் மு.மேத்தா வின் சோழ நிலா முதல் பரிசு பெற்றது..அந்தத் தொடரை விகடனிலேயே தொடர்ந்துபடித்தவன் நான்.. அப்புறம் மகுட நிலா என்று ஒரு நாவல் அதுவும் விகடனிலேயே வந்தது.. பின் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார்..அப்பவே நீங்க காலேஜா..யார் சொன்னா.. ஹி.ஹி..:)
நிலாப் பாடல் 40: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"
----------------------------------------------------------------------------------
இளையராஜாவின் உச்சக்கட்ட காலம் என்று இந்த திரைப்படம் வந்த காலத்தைத்தான் சொல்வார்கள். மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பாடல்கள் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. இந்த பாட்டிற்கு பின்புதான் SP. பாலசுப்ரமணியம் பாடும் நிலாவாக புதுப் பட்டம் பெற்றார். S. ஜானகி அம்மாவுடன் அவர் பாடிய இந்த பாடல் மிகவே புகழ் பெற்றது. மச்சக்கார மோகனும், ரேவதியும் நடித்திருக்கிறார்கள். அதுதான் சி.க. சொல்லிவிட்டாரே கவிஞர் மு. மேத்தா எழுதினார் என்று. அவர் மட்டும் நிலாவை வைத்து காதல் பாடல் எழுதக் கூடாதா என்ன. ஆனால் சி.க. சொன்ன அந்த கவிதா விலாசம் தெரிகின்றது தேன் கவிதை பூ மலர நிலாவை பாடச் சொல்லும்போதே.
பாடல் வரிகள்:
-----------------------
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்
(பாடு நிலாவே)
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே
பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்
(பாடு நிலாவே)
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
(பாடு நிலாவே)
----------------------------------------------------------------
காணொளிக் காட்சி:
https://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg
உதய கீதம் என்றுதான் சி.க. சொல்லி விட்டாரே. நான் என்ன டையலாக் சொல்றது.
தாங்க்ஸ் சி.க.,
அந்த சோழ நிலா தொடரைத்தான் நானும் நினைத்தேன். உடனடியாக தலைப்பு ஞாபகத்தில் வரவில்லை. நீங்கள் சொன்னதும் நினைவில் ஏறியது. ஆம் நானும் அதை படித்திருக்கிறேன் விகடனில். ஆனால் இப்போது கதை ஞாபகத்தில் இல்லை. எனது நினைவில் பொன்னியின் செல்வரும், யவன ராணியும் நினைவில் இருக்கிறார்கள். மற்றவர்கள் மறைந்து போனார்கள்.
பொன்னியின் செல்வன் - மணியத்தின் படங்களுடன் -விகடன் பப்ளிகேஷ்ன்ஸ் -இரண்டு வருடம் முன் வாங்கினேன்.. வெகு அழகாக இருக்கும்..எத்தனை முறை சின்ன வயதிலிருந்து படித்திருப்பேன் நினைவிலில்லை.. சிவகாமியின் சபதம் மும் இப்போது வ்ந்திருக்கிறதாம்.. கல்கியில் வினு படங்களுடன் வந்தபோது படித்த நினைவு - பைண்ட் புத்தகமாய்.. ஊருக்குப் போகும்போது வாங்க வேண்டும்
யவன ராணி,கடல்புறா, ஜீவ பூமி,மலைவாசல், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜ முத்திரை, ராஜ திலகம் - சாண்டில்யனின் எனதுஃபேவரைட்ஸ். ஃபுல் கலெக்*ஷன் என்னிடம் உண்டு..
சரித்திர நாவல்களில் உங்களுக்கு விருப்பமா கல் நாயக்.. எனது சிபாரிசுகள்
திருமலைத் திருடன், விசித்திர சித்தன், எம்டன் 1914 - திவாகர் என்பவர் எழுதியது அவரே கலிங்கத்துப் பரணியை வைத்து வம்ச தாரா என்ற நாவல் எழுதியிருக்கிறார்..இப்பொழுது பதிப்பில் இல்லை..வந்தால் வாங்கவேண்டும்..
ராஜ கேசரி, பைசாசம் - கோகுல் சேஷாத்ரி
கடாரம் - மாயா..
உடையார் (6 பாகங்கள்) கங்கை கொண்ட சோழன் - 4 பாகங்கள் - பால குமாரன்..இன்னும்க.கொ.சோ 4ம்பாகம் முடிக்கவில்லை.. பட் பொறுமையாய்ப் படித்தால் மிக சுவையாக் இருக்கும்..உடையார் முடிக்க 4 மாதங்களும் க.கொ.சோ 3 பாகம் முடிக்க 3 மாதங்களும் ஆயின எனக்கு.
ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை - ஜெகச் சிற்பியன்
அடிமையின் காதல், வாளின் முத்தம், நான் - கிருஷ்ண தேவ ராயன் - ரா.கி ரங்கராஜன்
திருவரங்கன் உலா மோகினித் திருக்கோலம் - ஸ்ரீ வேணு கோபாலன்
கயல் விழி - ஐலன்
மணி பல்லவம், பாண்டி மா தேவி - நா.பார்த்த சாரதி இன்னும் லிஸ்ட் நீளும்..
சோழ நிலாவில் லதா வின் படங்கள் -கஷ்கு முஷ்க் இளவரசிகள்...திக்க்க் மீசை வாலிபர்கள் அழகு..மகுட நிலாவிற்கு ம.செ (மணியம் செல்வன் என நினைக்கிறேன்)
பாடு நிலாவே எனக்கு ரொம்பப்பிடிக்கும் .. போட்டிருப்பேன் உங்கள் நினைவு வந்ததால் இடவில்லை (என்னே ஒரு தியாகம்!) :)
ராஜேஷின் மருதகாசி ரைட் அப் எப்படி ப் படிக்க விட்டேன்..ராஜேஷ் மறுபடி இடுங்கள்..( வாலி பற்றி எழுத வ்ரும் போது எனக்குச் சிரமமேகிடையாது கல் நாயக்.. முக நூலில் வாலி ஐயா நினைவலைகள் என ஒரு தொடர் கட்டுரை ராஜேஷ் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்..)
கடாரம் - மாயா ( இந்த மாயா என்பவர் நம் மய்யம் டாட்காமில் எழுதியிருப்பதாகச் சொல்கிறார் தன் முன்னுரையில் ( அவர் ஒரு பெண்)) ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பைப் பற்றி செம த்ரில்லிங்காக சஸ்பென்ஸ் அத்தியாயத்துக்கு அத்தியாயம் வைத்து - கொஞ்சம் தலைகுழம்பி விடும் அளவுக்க்கு க் கேரக்டர்ஸ் வைத்து- நேர்த்தியாகக் கையாண்டிருப்பார்..
சி.க.,
கல்கியின் சிவகாமியின் சபதமும் படித்திருக்கிறேன். பார்த்திபன் கனவு-தான் படமாகியதே. அது பார்த்திருக்கிறேன். அவரின் மற்ற சரித்திர தொடர்கள் படித்ததில்லை.
சாண்டில்யனின் நீங்கள் குறிப்பிட்ட எல்லா சரித்திர நாவல்களும் படித்திருக்கிறேன். மன்னன் மகள் வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடக வடிவில் கூட வந்தது. வானொலியில் சில நாட்களில் நாடகத்தை கேட்டிருக்கிறேன். நன்றாகவே இருக்கும்.
ரா.கி. ரங்கராஜனின் 'நான் கிருஷ்ணதேவராயன்' படித்திருக்கிறேன். அருமையாக எழுதியிருப்பார். நினைவில் உள்ளது. திருப்பதி திருமலை கோயில் செல்லும்போது மறக்காமல் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது இரு மனைவிகள் சிலைகளை காணும்போது இந்த கதை நினைவில் வரும்.
சுஜாதாவின் பல நாவல்கள் படித்திருக்கிறேன். அவரது நின்று போன சரித்திர நாவல் 'இரத்தம் ஒரே நிறம்'. அடுத்த சரித்திர நாவல் படித்திருக்கிறேன். அதன் பெயர் என்ன?
மற்ற நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களை படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. இப்போது அவ்வளவு பொறுமை இல்லை நீண்ட புதினங்களை படிப்பதற்கு. பொன்னியின் செல்வனையே திரும்ப என்னால் படிக்க முடியவில்லை.
சோழ நிலா சித்திரங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
மன்னன் மகளைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டேன் .. நல்ல நாவல்..சரித்திர நாவல்க்ள்னு பார்த்தீங்கன்னா இந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனைப் பத்தி மட்டுமே நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன..
சுஜாதா ஆரம்பத்தில் சிகப்பு கருப்பு வெளுப்பு எனக் குமுதத்தில் எழுத ஆரம்பித்தார்.. மூன்றே மூன்று வாரங்களில் நிறுத்தப்பட்டது..பின் வெகுகாலத்திற்குப்பிறகு ஒரு வருடத்திற்குப்பின் என நினைக்கிறேன் - ரத்தம் ஒரே நிறம் என ஜாலியன் வாலா பாக் பேஸ் பணணி எழுதியிருந்தார்.. ( இந்தக் க.வெ.சி வந்த காலகட்டத்தில் தான் பத்திரிகைகள் வண்ணப்படங்களுக்கு மாறின) ர.ஒ. நி யும் நன்றாக இருக்கும் (ஒருமுறை தான் படித்திருக்கிறேன்..மறுமுறை படிக்க இயலவில்லை) பின் காந்தளூர் வசந்த குமாரன் கதை..எனக்குப் பிடிக்கவில்லை..
அவரது இரண்டாவது நாவல் அனிதா - இளம் மனைவி -அதுவே பிற்காலத்தில் இது எப்படி இருக்கு என ஜெய்சங்கர் ஸ்ரீதேவி வைத்துப் படமாக ஆனது..அந்தப்படத்தை நான் பார்க்கவில்லை..
ம்ம்
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ என ஜெய் ஸ்ரீதேவியைப் பார்த்துப் பாடுகிறார்..ஸ்ரீதேவி தான் இயற்கையோ
(இ.எ .இ படப் பாடல்)
https://www.youtube.com/watch?featur...&v=dtv165n4KlI