விண்ணுலகை ஆளும் எங்கள் குலசாமி.
Printable View
வடக்கே கங்கையாறு
தெற்கே காவிரியாறு
வாழும் போதும் வாழ்ந்த பின்பும் வரலாறு
அவர் தான் வள்ளல் எம் ஜி ஆரூ ...............
எம்.ஜி.ஆர். தமிழ் மக்களின் இதயத்தை ஆட்டி படைக்கும் மூன்று எழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர். புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது "மனிதருள் மாணிக்கம்" பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும்.
இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர். என்ற ஈகை பெருந்தகையாளரை, ஜாதி-மத மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துவோர் என்றும் உண்டு. அவரது பெயரை முன் நிறுத்தாமல், இன்றைக்கும் யாரும் அரசியலில் அடையாளம் பெற்றுவிட முடியாது.
கலை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிருந்து பவர் ஸ்டார் சீனுவாசன் வரை எல்லாருமே எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தை உச்சரிக் தவறியது இல்லை இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்து எப்படி எம்.ஜி.ஆர். ஒட்டுமொத்த தமிழகத்தையே வசீகரிக்கும் கலையை கற்றுக்கொண்டார் என்பது, அவரோடு பயணித்தவர்களால் கூட கற்றுக் கொள்ள முடியாத ரகசியம் எந்த நேரமும், ஈரம் கசியும் அவரது பொன் மனமும், கொடைத்தன்மையும் தான் என்பது ஊரே அறிந்த ரகசியம்…….
ஆனால், அவர் ஒருவர் மட்டுமே, உயிருள்ள மட்டும் அதை பின்பற்றியது அதிசயம் பொருளாதாரமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே, கலை உலகில் இரட்டை வேடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் காட்டிய புதுமை, இன்றைக்கும் ஆலிவுட்-ஆஸ்கரை நோக்கி செல்லும் உலக நாயகனையே வியக்க வைக்கும் உத்திகளாகும் நடிப்பு, நடனம், தற்காப்பு கலை, புகைப்பட கலை, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு என்று பன்முகக் கலைஞராக ஒளிர்ந்தார் காலம், நேரம், யோகம் இவற்றுடன் கடின உழைப்பு,வசீகரம், கெட்டிகாரத்தனம் கலந்ததால் உயர்ந்த இமயமே, எங்கள் உற்சாக ஊற்றே எங்கள் வாழ்வின் வழிகாட்டி எம்.ஜி.ஆர். வாழ்க நின் புகழ்
courtesy - thiru chandran - france
1) முல்லை பெரியாறு-நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை இலவச காலனி இலவச மிதிவண்டி 7) இந்தியாவுக்கே வழிகாட்டியான 108 ஆம்புலன்ஸ் அறிமுகம் 8) நடுத்தர ஏழை மக்களுக்காக ஆட்சி முழுவதும் அரிசி விலை பால் விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 9) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 10) உலக தமிழ் மாநாடு 11) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 12) தமிழ் மொழி வளர்ச்சி பெற உலக தமிழ் சங்கம் 13) தமிழின் சிறப்பை உலகம் அறிந்து கொள்ள கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்கம் 14) பகுத்தறிவு பகலவன் பெரியார் நூற்றாண்டு விழா 15) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் நடைமுறைக்கு கொண்டு வருதல் 16) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 17) கோயில் பூசாரி உதவி தொகை 18) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 19) அமைச்சர்களை சுதந்திரமாக செயல்பட வைத்தவர் 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில முதல்வர்களுடன் சுமுகமான உறவுகள் 23) மாநில வளர்ச்சியை மனதில் வைத்து மத்திய அரசுடன் சுமுகமான உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு - ஒரு பக்கம் தமிழ் போராளிக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த போதும் மறுபக்கத்தில் ராஜதந்திரத்துடன் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் நட்புறவு (இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட ஒரே ஒரு தமிழக தலைவர்) தலைவா டிசம்பர் 24 உனக்கு நினைவு நாளும்..... உன்னை மறந்தால்தானே..... நினைப்பதற்கு? என்றென்றும் தமிழ் மக்கள் நெஞ்சில் வாழும் ஒரே தலைவன் நீ.... தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைத்து இருக்கும்..... காலம் கடந்து நிற்ப்பவன் நீ
கடந்த ஞாயிறு அன்று (21/12/2014) காலை நடிகர் சத்யராஜ் அவர்கள் இல்லத்தில்
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், "ஆயிரத்தில் ஒருவன் " வெள்ளிவிழா கேடயம் மற்றும் விழா நிகழ்ச்சியின் சி .டி. ஆகியன பரிசளிக்கும்போது உடன் இருந்தவர்கள்
திருவாளர்கள் :.பி.எஸ்.ராஜு,, எஸ். ராஜ்குமார், ஹயாத் , எஸ். செல்வகுமார், இளங்கோ, ரமேஷ் , சுப்பிரமணி ஆகியோர்.
http://i59.tinypic.com/vnpa84.jpg