http://i60.tinypic.com/m92h50.jpg
Printable View
Courtesy: Webdunia Tamil
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணி மண்டபம் கட்ட கோரிக்கை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணி மண்டபம் கட்டித்தர வேண்டும் என சிவாஜி கணேசன் சமுகநலப் பேரவை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது, நடிகர் திலகம் சிவாஜி மீது மிகுந்த மரியாதை கொண்ட பல்வேறு அமைப்புகள் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் இதே கோரிக்கையை அரசுக்கு விடுத்தது.
இதனையடுத்து, 2002 ஆம் வருடம் ஜன் 26ஆம் தேதி மணி மண்டபம் அமைக்க சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இதனையடுத்து, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மணி மண்டபம் அமைக்க பூமிபூஜையும் நடைபெற்றது. அதன் பிறகு மணி மண்படம் விவகாரம் அமுங்கிப்போனது.
இதனை வலியுறுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சமூக நல பேரவைத் தலைவர் சந்திரசேகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும், நடிகர் சங்கம் சார்பில், மணி மண்டபம் கட்டவில்லை. இடத்தையும், அரசிடமிருந்து, பெறவில்லை. தற்போது கூட, அந்த இடம், பொதுப்பணித்துறை வசமே உள்ளது. எனவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே முன்வந்து மணி மண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.