-
கோவையில் இன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிலைட் திரை அரங்கில் என் கடமை திரையிடப்பட்டது. ரசிகர்கள் பெருந்திரளாக வந்து படத்தை கண்டு களித்தனர். அத்தோடு வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், கேக் மற்றும் இனிப்பு வழங்கினர்.
(தகவல் திரு சிவா, கோவை)
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------http://i50.tinypic.com/mawhfc.jpg
-
http://i45.tinypic.com/e9g3uo.jpg
இன்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.
தந்திடிவியில் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பத்திரிக்கையாளர் முராரி, முன்னாள் தமிழக அமைச்சர் திருநாவுக்கரசர், திரைப்பட நடிகர் & இயக்குநர் கே. பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு சுவையான தகவல்கள் பரிமாறப்பட்டன. அவற்றில் மிகவும் மனதைத் தொட்ட ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாக்கியராஜ் அவர்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி.
ரிக்.ஷாக்காரன் கதாநாயகி மஞ்சுளா அவர்கள் அமெரிக்காவில் இருந்தார். மக்கள் திலகம் மிகவும் மோசமான அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மக்கள் திலகம் அமெரிக்கா கொண்டுவரப்பட்ட செய்தி அறிந்து அவரைப்பார்க்க விரைந்து வந்தார் மஞ்சுளா. மருத்துவமனையில் அமர்ந்திருந்த எம்.ஜிஆரிடம் தன்னை ஞாபகப்படுத்திக் கொள்ள அவருடன் நடித்ததையும் அவரோடு பழகிய பல்வேறு நினைவுகளையும் கூறி அவரது கவனத்தைத் திருப்ப முயற்சிக்கையில் அவை எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாராம் தலைவர். ஆனால் புறப்படுகிறேன் என்று சொன்னவுடன் தன் தலையணையின் அடியிலிருந்து பணத்தை அள்ளிக் கொடுத்தார் என்று குறிப்பிட்டு, சுயநினைவற்ற நினையில் கூட அவரது வள்ளல் தன்மை மட்டும் அவரது மனத்தை விட்டு நீங்கவில்லை. தன்னை மறந்த நிலையிலும் தர்மத்தை அவர் மறக்கவில்லை எனக்குறிப்பிட்டது மிகவும் மனதைத் தொட்டது.http://i49.tinypic.com/2qbg5dd.jpg
-
-
-
-
-
Chakravarthy Thirumagal Story
மருத நகரத்து இளவரசிக்கு மணாளன் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு போட்டி. அதில் வெற்றி பெற்றால் அவளது கரம் பற்றலாம். உதயசூரியன் போட்டியில் வெற்றி பெறுகிறான். உதயசூரியன் மீது ஆசை கொண்டிருந்த துர்கா (இளவரசியின் தோழி) இளவரசிக்கு மயக்க மருந்தைக் கொடுத்து விட்டு உதயசூரியன் இருந்த முதலிரவு அறைக்குள் நுழைகிறாள். அவள்தான் இளவரசி என்று நினைக்கிறான் உதயசூரியன்.
இதற்கிடையில் உண்மையான இளவரசியான கலாமாலினியை அடைய விரும்பிய படைத் தளபதி பைரவன் மயங்கிக் கிடந்த இளவரசியைத் தூக்கிச் சென்றுவிடுகிறான். கடைசியாக உதயசூரியனுக்கு உண்மை தெரியவருகிறது. பெரிதும் முயன்று தேடி கலாமாலினியைக கண்டுபிடித்து விடுகிறான். இறுதிகட்ட சண்டையில் பைரவனைக் கொன்று கலாமாலினியைக் கரம் பிடிக்கிறான் உதயசூரியன். துர்கா பாம்பு கடித்து இறந்து போகிறாள்.
இதில் உதயசூரியனாக நமது தலைவர் எம்.ஜி.ஆர், கலாமாலினியாக அஞ்சலிதேவி, துர்காவாக எஸ்.வரலட்சுமி, படைத் தளபதியாக பி.எஸ்.வீரப்பா. படத்தினை இயக்கியவர் ப.நீலகண்டன்.
இப்படம் 1957ல் வெளியானது, அதே நேரத்தில் தி.மு.க. அறிஞர் அண்ணாவின் தலைமையில் முதன் முதலாக பொது தேர்தலில் போட்டியிட்டது. கட்சியின் சின்னம் உதயசூரியன் நமது தலைவரின் பெயரும் இந்த படத்தில் உதயசூரியன்.
From an old book on MGR.
In 18.1.1957, Chakravarthy Thirumagal was released this is the 56th Anniversary year.
-
-
போட்டி பாட்டு கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் நமது தலைவர்
https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc
-