-
தேவகியின் அணுகுமுறையால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது , அதனால் அவரை விரோதியாக பாவிக்கிறார் மல்லிகா
ஒரு நாள் தன் வகுப்பு அறைக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக எண்ணுகிறார் மல்லிகா
கண்ணன் தான் ராத்திரியில் பாடம் படிக்கச் வந்ததை கண்டுபிடிக்கும் தேவகி அவருக்கு ஆசாரியராக இருந்தது பாடம் சொல்லி தருகிறார்
அந்த காட்சியில் நடிகர் திலகம் முதல் முதலில் பள்ளிகூடத்துக்கு பாடம் படிக்க செல்லும் மாணவனை போலே செல்லுவதும் ,
பத்மினி யிடம் கையை கட்டி பாடம் படிப்பதும் , அ முதல் அக்கு வரை சொல்லுவதும் என்று கலக்கி இருப்பார்
எந்த நடிகர் ஒரு கதாநாயகி காலில் விழுவார் எங்கள் நடிகர் திலகத்தை தவிர , இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காமல் கதை நாயகனாகவே வாழ்ந்து இருக்கார் , இந்த காட்சியை பார்த்த பொழுது , இப்படி ஒரு நடிகரா என்று ஆச்சர்யம் அடைந்தேன்
http://www.youtube.com/watch?v=I7PXprEyCKw
-
அடுத்த காட்சியில் பாலாஜி தன் குரு மேஜர் யை சந்திக்க வருகிறார் வந்த இடத்தில தன் கல்யாண செய்தியை சொல்லுகிறார்
அப்போது தான் தெரியவருகிறது பத்மினியும் பாலாஜியும் காதலர்கள் என்று , மஜோர்யின் கண்கள் போனதால் கல்யாணம் தள்ளி போய் விட்டது
அந்த கல்யாண செய்தியை மேஜர் சிவாஜியிடம் ஒரு கதை போல் சொல்லுவதும் சிவாஜி அதை ஒரு குழந்தை போலே தலையை ஆட்டி கேட்பதும் என்று நல்ல உயிரோட்டமான காட்சி
அதை தொடர்ந்து வரும் பாடலில் தான் எப்படி தன் குருவுக்கு கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என்று அழகாக , நாகரிகமாக விவரிக்கிறார் நடிகர் திலகம்
http://www.youtube.com/watch?v=vLXz0ocDAVw
இந்நிலையில் கல்வி உயரதிகாரிக்கு தேவகியை பற்றி தவறாக கடிதம் வந்து விடுகிறது , விஷயம் தேவகியின் நடத்தை பற்றி எழுதியதோ மல்லிகாவும் அவர் கணவர் (M N நம்பியார்)
கல்வி உயரதிகாரியோ தேவகியின் வருங்கால மாமனார் இதனால் தேவகியின் திருமணத்துக்கு சிக்கல் வருகிறது . தேவகி கண்ணன் தன் வீட்டுக்கு படிக்க மட்டுமே வருவதாக உண்மையை எவ்வளவு எடுத்து சொல்லியும் ஊர் நம்ப மறுகிறது
தேவகியின் ஆணைக்கு இணங்க கண்ணன் கன்னியை திருமணம் செய்து வைக்கிறார் . கண்ணனை தேவகி திருமணத்துக்கு வர்புறதும் காட்சி தான் குரு தட்சணை படத்தின் pre கிளைமாக்ஸ் .
http://www.youtube.com/watch?v=QttcBN87SwI
-
ஒரு படிக்காத பாமரன் , மற்றும் அவரை காதலிக்கும் பெண் தங்கள் நடத்தையை அதுவும் தான் குருவாக மதிக்கும் ஒரு நபர் உடன் தன்னை இணைத்து பேசிய நபர்களை பழி வாங்க நினைப்பார் , அதில் சிவாஜியின் நடிப்பில் அனல், அதே மாதிரி ஜெயலலிதாவும் அதை ஆதரிப்பது விந்தை ஒரு மாறுபட்ட characterisation ,
(இது மட்டுமா ஜெயலலிதா படம் முழுவதும் sleeveless blouse அணிந்து , கையில் tatoo குத்தி கொண்டு தோற்றத்தில் கிராமத்து பெண்ணாக தோன்றுகிறார்
பொதுவாக ஒரு பெண்ணை தகப்பன் வெளியே போக சொன்னால் அந்த பெண் மன்னிப்பு கோரி வீட்டில் இருப்பார் , இதில் தன் தந்தையை எடுத்து எரிந்து பேசி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்
கதையே சிவாஜிக்கும் ,பத்மினிக்கும் இடையில் இருக்கும் ஆன் பெண் பேதம் இல்லாத குரு சிஷ்யன் உறவு தான் இதில் கண்ணனின் வாழ்க்கையில் (சிவாஜி) காதல் என்பது துளி கூட கிடையாது , இந்த மாதிரி ஒரு கதையில் ஜெயலலிதா தன் பாத்திரத்துக்கு உட்பட்டு நன்றாக நடித்து இருக்கிறார் )
முதலில் தேவகியின் வீட்டுக்கு செல்லும் கண்ணனும் கண்ணியம் கோபத்தில் அனைவரையும் பழி வாங்க போவதாக சொல்லுகிறார்கள் , தேவகி மற்றும் அவர் தந்தையின் பேச்சை கேட்டு கன்னியை திருமணம் செய்து கொளுகிறார் கண்ணன்
இந்த கண்ணனுக்கு காதல் இரண்டாம் பட்சம் தான் குரு பக்தி தான் முதலில்
தனக்கு ஒரு வாழ்கையை ஏற்படுத்தி கொடுத்த குருவுக்கு , தன்னை எழுத படிக்க வைத்த குருவின் வாழ்கையை சீர் படுத்த எண்ணி முதல் முறையாக ஒரு கடிதம் எழுதுகிறார் கண்ணன் , யாருக்கு மாப்பிளையின் தந்தைக்கு
அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் , தன் மரண வாக்குமூலமாக தேவகின் நல்ல உள்ளதை பற்றி எழுதி , அதில் தான் தேவகியின் மேல் வைத்து இருக்கும் குரு பக்தியை வெளி படுத்தி , தேவகியை தன் மகனுக்கு (பாலாஜி) திருமணம் செய்து வைக்க கோருகிறார்
சாக போகும் கண்ணனை காப்பற்றி தன்னுடன் அழைத்து வருகிறார் பாலாஜி
முடிவில் பத்மினி பாலாஜியின் கல்யாணத்துடன்
சுபம்
http://www.youtube.com/watch?v=U79tJRr_xkg
இந்த படத்தில் நடித்த , என்னக்கு பிடித்த மற்றும் ஒரு கதாப்பாத்திரம் பாலாஜி
அந்த காலத்தில் என் இந்தகாலத்திலும் தன் கல்யாணம் செய்து கொள்ளபோகும் பெண் ஒரு ஆன் உடன் சககமாக பேசி கொண்டு இருப்பதை யாரும் சாதரணமாக எடுத்து கொள்ள மாட்டார்கள் , பாலாஜி தான் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் மேல் இப்படி பட்ட character assassination செய்ய பட்டும் கூட துளி கூட அன்பு மாறாமல் இருபது , சந்தேக படாமல் இருபது
hats off டு story writer and டைரக்டர்
பாலயாவை இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் உபயோக படுத்தி கொண்டு இருக்கலாம்
பத்மினி : சிவாஜியின் ultimate pair என்று சொல்லபடும் நடிகைகளில் ஒருவர் ,
இந்த படத்தில் சிவாஜியுடன் ஜோடி கிடையாது என்றாலும் சிவாஜி - பத்மினி combination காட்சிகள் ஏராளம் .ஒரு டீச்சர் எப்படி கணியதுடன் இருக்க வேண்டும் , எப்படி கண்ணை உறுத்தாமல் உடை அணிய வேண்டும் , எப்படி பேச வேண்டும் , மனிதர்களை அணுகும் முறை
இந்த ஏக பட்ட எப்படிகள் க்கு இப்படி தான் என்று தன் பாத்திரத்தின் முலம் விடை அளிக்கிறார் பத்மினி
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் under rated படத்தில் இதுவும் ஒரு படம்
-
Neyveliyar pallandu vaazhga
-
Wish you many more Happy returns of the day Neyveli Vasudevan Sir
Seeking your guidance & blessings
Awaiting your 4000th post and many more
-
முரளி சாரின் தமிழை படிக்க
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் - கோபால் சாரின் கலாய்ப்பு இல்லாத பதிவை படிக்கலாம் - ராகவேந்திர சாரின் ஆவணகள் போடும் வேகத்தை
பார்க்கலாம் - கார்த்திக் சாரின் சபாஷ்யை வாங்கிகொள்ளலாம் - சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் - கிருபா சாரிடம்
இருந்து அன்புடன் சில திட்டுக்களை வாங்கலாம்
Ravi sir,
Hope your dreams come true soon
-
Many Many Happy Returns of the Day Vasu.
-
ராகுல் ராம்..வெகு சின்ன வயதில் பார்த்த படம் குரு தட்சணை..மதுரை தேவி தியேட்டரில்.. அதன் பிறகு பார்த்ததில்லை.. ஒன்றே ஒன்று உலகம் ஒன்று பாடலும் பசுபதி எஸ்டீச்சர் என பையன் பதிலிறுப்பதாக வருவதும் மட்டும் நினைவில்..
*
அழகாக எழுதியிருக்கிறீர்கள்..ம்ம் படக் காட்சிகளை சற்று நேரம் கழித்துப் பார்ப்பேன்..
*
தொடர்ந்து எழுதுங்கள்...
-
//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் :) அப்புறம் அது குறும்பு :) (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)
எல்லாரும் நல்லா எழுதிக் கலக்கறச்சே நான் எந்தப் படத்தை எழுதறது?!
நெய்வேலி வாசுதேவனார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:)
-
வாசு சார் - வினோத் சாரின் அழகிய வாழ்த்து பதிவு மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்த தூண்டுகிறது - ஆனால் வாழ்த்த வயது இல்லை அதனால் வணங்குகிறேன் ----
Ravi
:):smokesmile: