அண்மையில் தவமாய் தவமிருந்து படம் பார்த்தேன். அதில் அப்பா வேடத்தில் வரும் ராஜ்கிரண் பாத்திர அமைப்பு நன்றாக இருந்தது.
இது போன்ற பாத்திரங்களில் நம் NT அவர்கள் வியட்நாம் வீடு, கெளரவம் படங்களில் நடித்திருந்தாலும் அது நகர வாழ்க்கையை ஒட்டி அமைத்திருந்தது, எனினும் எங்க ஊர் ராஜா படம் மனதுக்கு நிறைவளித்தது.
நம் தலைவர் ஒரு அட்சய பாத்திரம்.
ஆனால் அவரிடம் இது போன்ற யதார்த்தமான கதைகள் கூறாமல் அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு போன்ற கதையை எடுத்து வீணடித்து விட்டனர்.
குறிப்பாக 1975-1976 ஆண்டு காலகட்டத்தில் இது போன்ற கதைகள் அமையவில்லை என்பது என் ஆதங்கம்.