Thanks a lot Mr. Swamy for valuable photos of "SivanthaMan" and "Theivamahan"...
Cheers,
Sathish
Printable View
கேட்டதும் கொடுப்பவரே பம்மலார் ஐயா
எங்கள் திரியின் நாயகரே பம்மலார் ஐயா
இந்த எளியோன் வேண்டுகோள் விடுத்ததும், சாதனைச் சித்திரங்களான 'சிவந்த மண்', 'தெய்வ மகன்' மற்றும் கேட்பதற்கு முன்னேயே அளித்த 'சவாலே சமாளி' திரைக்காவியங்களின் சாதனைப் பொன்னேடுகளை அழகுறப் பதித்து பெரும் சேவையாற்றிருக்கும் தங்களுக்கு......
மிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி நன்றி, நன்றி, நன்றி, நன்றி.... X 1,00,000
இவை வெறும் செய்தித்தாள் விளம்பரங்கள் அல்ல, நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் கைகளில் நீங்கள் அளித்திருக்கும் 'ஏ.கே.47' ஆயுதங்கள்.
இனி சாதனைகளை மறைக்க நினைப்போர் முன் ஆயுதங்கள் பேசும்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரிக்கு வந்திருப்பதால், இங்கு பதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பான பதிவுகள் மனதைக்கவர்வதாக அமைந்துள்ளன. பதிவேற்றிய பலருக்கும் நன்றிகள்.
டியர் ராகவேந்தர்,
தங்களின் பாடல் வரிசைப் பதிவுகள் மிக்கச்சிறப்பாக அமைந்துள்ளன. அவற்றில் பல, அடிக்கடி காணக்கிடைக்காத அபூர்வப்பாடல்கள். அவற்றோடு நாம் அடிக்கடி கண்டுகளித்த பல பாடல்களையும், பலதரப்பட்ட தலைப்புகளோடு பதித்திருப்பதற்கு மிக்க் நன்றி.
ஸ்ரீ வள்ளி, மற்றும் எல்லாம் உனக்காக திரைப்பட பொன்விழா ஆண்டை நினைவு கூர்ந்தமைக்கும், அதனை சிற்ப்பிக்கும் வண்ணம் அபூர்வ விளம்பரங்களை வெளியிட்டு சிறப்பித்தமைக்கும் மேலும் மேலும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பம்மலார் - தமிழகத்தின் முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்கள் எல்லாவற்றிலிருந்தும் அறிய விளம்பரங்களைத் திரட்டி அளித்து வருகிறீர்கள் .
நடிகர் திலகத்தின் (கிட்டத்தட்ட) 50 ஆண்டு திரையுலகச் சாதனைகளை ஆதாரங்களுடன் எல்லோரும் அறியும்படி செய்யும் இந்த பெரும் பணிக்குப் பின்னாலிருக்கும் உங்களது உழைப்பு , பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது. தொடரட்டும் இந்தப் பணி.
டியர் பம்மலார்,
சாதனைச்சித்திரமான சவாலே சமாளி படத்தின் நாற்பத்தோராவது உதயதினத்தை நினைவு கூர்ந்தமைக்கும், அதைச்சிறப்பிக்கும் வண்ணம் தந்துள்ள விளம்பரத் தொகுப்ப்புக்களும் மிக மிக அருமை. என்னுடைய கணினியில் இதற்கு முன்னர் இருந்த 100வது நாள் விளம்பரம் தெளிவில்லாமல், திரையரங்குகளின் பெயர்களை அடையாளம் காண முடியாமல் இருந்தது. இப்போது நீங்கள் தந்துள்ள விளம்பரம் மிகத்தெளிவாக உள்ளது. மிகுந்த நன்றி.
அத்துடன் இதுவரை காணக்கிடைக்காத தெய்வ மகன், சிவந்த மண் படங்களின் விளம்பரங்களின் தொகுப்பும் அட்டகாசம். கண்கொள்ளாக்காட்சி என்றால் அது மிகையல்ல. வெளியிட்ட தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். (வெளியிடும்படி கேட்டுக்கொண்ட சகோதரர் கார்த்திக்கிற்கும் நன்றி).
சாதனைத்தொகுப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன், தொடர வேண்டும் என்று விரும்புகிறேன், தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.
சிவந்தமண்" மற்றும் "தெய்வமகன்" முதல் நாள் விளம்பரம் மற்றும் 100vadhu நாள் விளம்பரம் மிக அருமை.
நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன
நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில் நம்மவரும் பார்வதி திரைஅரங்கில் நம்நாடு திரைப்படமும் வெளியானது இரண்டு நாட்கள் இடைவெளியில் தினசரி இரண்டு ரசிகர்களுக்கும் குடுமிபிடி சண்டைதான் சிவந்தமண் சுமார் 12 வாரங்கள் ஓடியதாக நினவு நம்நாடு 100 தினங்கள் ஓடியதாக நினவு
அதேபோல் தெய்வமகன் நெல்லை லக்ஷ்மியில் வெளியானது சுமார் ஆறு வாரங்கள் ஓடியதாக நினவு. நெல்லை லக்ஷ்மியில் எப்போதும் MGR திரைப்படம் தான் திரையிடுவார்கள் எல்லா ஊர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தெய்வமகன் நெல்லையில் மட்டும் குறைந்த தினங்கள் ஓடின
அதேபோல் "ஞானஒளி" திரைப்படமும் நெல்லை லக்ஷ்மியில் வெளியாகி 5 வாரங்கள் மட்டுமே ஓடியதாக நினவு
இதை பற்றி தகவல்கள் ஏதும் உண்டா
endrum anbudan
Gk
டியர் முரளி,
நடிகர்திலகத்தின் 150-வது திரைக்காவியமான 'சவாலே சமாளி' வண்ணப்படம் வெளியானபோது நடந்த சுவையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி. திருச்சியில் நடந்த 150-வது படவிழா படச்சுருளை நானும் பார்த்திருக்கிறேன். படத்தின் மறு வெளியீடுகளின்போதும் அந்த விழாவின் ரீல் சேர்த்துக் காண்பிக்கப்பட்டதாக நினைவு.
அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 01 அன்று சென்னையில் முதன்முதலாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டபோது, அந்த விசேஷ படத்தொகுப்புக்கு வர்ணனை செய்திருந்த மேஜர் சுந்தர்ராஜன்தான் திருச்சி விழாத்தொகுப்புக்கும் வர்ணனை (காமென்ட்ரி) செய்திருந்தார். திருச்சி விழாவில் நடிகர்திலகத்தைப்பாராட்டி கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியிருந்த சிறப்புப்பேச்சு எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. அதுபோல நடிகர்திலகத்தின் அருகில் அமர்ந்து நம்பியார் அவருக்கு இனிப்பு ஊட்டிவிடும் காட்சியும்.
அவ்விழாவின் முன்னதாக நடந்த பிரம்மாண்ட ஊர்வலத்தை நடிகர்திலகம் திருச்சி ஜூபிடர் தியேட்டர் அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து பார்வையிட்டாராம். ஊர்வலம் முடிந்ததும் ஊர்வலம் நடந்த பாதை முழுவதும் பூக்களால் சாலையிட்டதுபோல இருந்ததாம். என் தந்தை இந்த விழாவில் கலந்துகொண்டு அந்த அனுபவங்களை நிறையச் சொல்லியிருக்கிறார்.
1970-ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெருநகரத்தில் விழா கொண்டாடுவது என்று தலைமை மன்றம் முடிவு செய்திருந்தபடி, 150 வது படவிழா திருச்சியிலும், அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழா கோவையிலும் நடைபெற்றது. (கோவையில் நடந்த விழா, இன்னொரு படத்துடன் காண்பிக்கப்பட்டது). கோவையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் சஞ்சீவ்குமார் கலந்துகொண்டார். அவ்விழாவில் பெருந்தலைவர் காமராஜ் மேடையில் அமர்ந்திருக்க, நடிகர்திலகம் ஏற்புரையாற்றும்போது, பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசுவதும், அதற்குப்பெருந்தலைவர் சிரித்துக்கொண்டே தலைய்சைப்பதும் ரசிகர்கள்/ தொண்டர்கள் மத்தியில் பலத்த கைதட்டலை அள்ளியது.
இதன் தொடர்ச்சியாக, 175-வது படமான 'அவன்தான் மனிதன்' வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவதென்று தீர்மானித்து ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, எமர்ஜென்ஸியில் இந்தியா முழுவதும் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், இந்நிலையில் விழா கொண்டாட வேண்டாமென்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 1975-ல் நடக்கவிருந்த அவ்விழா கைவிடப்பட்டது. அதுமட்டும் குறிப்பிட்டபடி நடந்திருந்தால், இப்போது உங்களிடமிருந்து அவ்விழா பற்றிய மிகச்சிறந்த ஒரு நினைவுப்பதிவை நாங்கள் பெற்று ரசித்திருப்போம்.
நீங்கள் சொன்னதுபோல 1970 தீபாவளி வெளீடுகள் இரண்டும் இவ்வாண்டு துவக்கத்தில் வெற்றிவிழாக்களைக் கண்டபோதிலும், இருதுருவம் எதிர்பார்த்தபடி போகாததாலும், தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்ததாலும் நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்வு அவ்வளவுதான் என்று முடிவு செய்து ஏகடியம் பேசியோரின் வெற்றுச்'சவால்'களை நடிகர்திலகம் 'சமாளி'த்து வெற்றிகண்டது இப்படத்தில்தான்.
மதுரை ஸ்ரீதேவி தியேட்டருக்கு நிகழ்ந்த அதே நிலையை சேலம் ஜெயா அரங்கமும் சந்தித்தது என்று நினைக்கிறேன். அங்கும் குலமா குணமா 100வது நாளன்றுதான் சவாலே சமாளி ரிலீஸானது. அதுபற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.
டியர் பம்மலார் சார்,
சிவந்தமண் மற்றும் தெய்வமகன் 100வது நாள் விளம்பரங்கள் super,
தொடரட்டும் தங்கள் பணி.
அன்புச் சகோதரி சாரதா,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் திலகத்திற்கே.
நம் ஊனோடும் உயிரோடு்ம் இரண்டரக் கலந்து விட்ட நடிகர் திலகத்தின புகழ் பாடுவதேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்று தாயுமானவர் இன்றிருந்தால் பாடியிருப்பாரோ என்கின்ற அளவிற்கு நம் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டவர் நடிகர் திலகம். சவாலே சமாளி படத்தைப் பற்றிய பல நினைவுகள் வலம் வருகின்றன. சென்னை சாந்தியில் நம் சகோதர மன்றத்தினர் தற்போது செதுக்கியிருக்கும் படப் பட்டியலின் மேலே மிகப் பெரிய பட்டியிட்டு அதில் 150 படங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு வண்ணம், அதில் ஒவ்வொன்றிலும் ஒரு படத்தின் பெயர், இன்னும் பசுமையாக நினைவுள்ளது. அப்போது சுவர் உயரமே இல்லை. தரையிலிருந்து சுமார் 3 அடி உயரம் சுவர், பின் அதன் மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு கம்பியினாலான தடுப்பு. அந்த தடுப்பிற்கு மேல் தான் அப்பட்டியல் வைக்கப் பட்டிருந்தது. முதல் நாள் மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் அதற்கும் முன்னரே பார்க்க வேண்டுமே. நண்பனின் சகோதரி உதவியோடு பெண்களின் கியூ வரிசையில் நின்று பின் அங்கு நமக்கு நிற்க அனுமதியில்லை என்றனர். பின் அவரே சவாலை சமாளித்து எங்கள் இருவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கித் தந்தார். ஆஹா முதல் நாள் முதல் காட்சி .. கேட்க வேண்டுமா.. அட்டகாசமான ஆரவாரம். குறிப்பாக ஆனைக்கொரு காலம் வந்தா பாடல் அது வரை இசைத் தட்டில் வெளிவரவில்லை. படத்தில் தான் முதன் முதலில் கேட்கிறோம். அந்த வரிகள் அனைத்து ரசிகர்களையும் ஒரு சேர எங்கோ அழைத்து சென்று விட்டன. போதாக்குறைக்கு அப்போது தேர்தல் முடிவுகள் வந்த நேரம். எல்லா எதிர்பார்ப்புகளையும் வீணாக்கி விட்டு ஸ்தாபன காங்கிரஸ் சீட்டு எண்ணிக்கையில் தேர்தலில் தோல்வியைத் தழுவியுற்ற நேரம். அந்த நேரங்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் படங்களும் மன்றங்களும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல் பட்டு கட்சியை வளர்த்து வந்தன. அப்போது வந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பேது. படம் போனதே தெரியவில்லை. பகல் காட்சி முடிந்து மாலைக் காட்சி ஆரம்பிக்கும் அந்த கணப் பொழுதில் சாப்பிடக் கூட நேரம் இல்லை. ஒரு தேநீர் அருந்தி வி்ட்டு மீண்டும் மாலைக் காட்சி... பகலை விட மாலையில் அதிகமான அளப்பரை.. ஒரு வழியாக இரவு 10.00 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்ற பின் அர்ச்சனை...
மறக்க முடியுமா..
அதன் நினைவாக
http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=12100
அன்புடன்