http://i49.tinypic.com/16jeg08.jpg
Printable View
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
கோவை நகரில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் தாழம்பூ திரைபடத்தின் போஸ்டர்கள் பதிவுகள் அருமை .
1965- வெளியான இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது .பின்னர் தொடர்ந்து மறு வெளியீடுகளில் 48 ஆண்டுகளாக தொடர்ந்து நகரம் -கிராமம் போன்றஇடங்களில் அவ்வப்போது ஓடி வருவது சாதனைதான் .
மக்கள் திலகத்தின் சுமாரான வெற்றி படங்கள் .1967-1972
அன்னமிட்ட கை
ஒருதாய் மக்கள்
தலைவன்
காதல் வாகனம்
தேர் திருவிழா
புதிய பூமி
கணவன்
அரசகட்டளை
தாய்க்கு தலைமகன்
தொடர்ந்து தமிழ் நாட்டில் பல ஆண்டுகள் எல்லா இடங்களிலும் வெளியாகி படங்கள் ஓடாத இடமே இல்லை என்ற பெயர் பெற்ற படங்கள் இவை .
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளை தொகுத்து கவிதையாக தொகுத்துள்ள திரு பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி .
அவரது கவிதை - இனைய தளத்திலிருந்து
மெல்லிசை மன்னரே!
நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் இல்லை
வாலிபன் சுற்றும் உலகம்!
என் போன்றவர்கள்
வாலிப வயதில் சுற்றி வந்தது
உங்கள் இசையைத்தானே?
குமரிப்பெண்ணுக்காகக்
காத்திருந்த கண்கள் அல்ல
எங்களுடையவை.
குமரிக் கோட்டத்தைப்
பார்த்தால் பசி தீரும்
என்றிருந்த இளைஞர்களிடையே,
உங்கள் இசையைக்
கேட்டால்தான் பசி தீரும் என்று
தவம் இருந்தவர்கள் நாங்கள்.
உங்கள் இசையிலேயே நாங்கள்
சொர்க்கம் கண்டதால்,
எங்களுக்குக்
காதலிக்க நேரமில்லை.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று இருந்து விட்டோம்.
அன்னையும் பிதாவும்
காட்டிய வழியிலேயே சென்றது
எங்கள் வாழ்க்கைப்படகு.
நம் நாட்டின் தவப்புதல்வரே!
நீங்கள் பிறந்த இடம் கேரளமாக இருந்தாலும்
நீங்கள்
எங்க ஊர் ராஜா
எங்க வீட்டுப் பிள்ளை.
மெல்லிசை
மன்னவன் வந்தானடி
என்று நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.
பாலும் பழமும் கொடுத்துப்
பிள்ளையை வளர்ப்பார் சிலர்.
ஆனால் உங்கள் தெய்வத்தாய்
உங்களைப்
பிள்ளையோ பிள்ளை
என்று கருதித்
தேனும் பாலும் கொடுத்து
வளர்த்திருப்பார்கள் போலும்!
அதனால்தான்,
நினைத்தாலே இனிக்கும்
சுகமான ராகங்களைக்
கர்ணன் போல்
வாரி வழங்கி வருகிறீர்கள் நீங்கள்!
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
மரம் ஒன்று உண்டு
விண்ணுலகில்.
அதன் பெயர் கற்பகம்.
ஆனால் நீங்களோ
நாங்கள் கேளாமலே
அள்ளித்தருகிறீர்கள்
உங்கள் இசை அன்பளிப்பை
நல்லிசையை
மெல்லிசையாய் வடித்து
நீங்கள் தரும் பாடல்களைச்
சிலர் வசந்த ராகம் என்பார்கள்.
வேறு சிலர்
அபூர்வ ராகங்கள்
என்பார்கள்.
எங்களுக்கோ,
உங்கள் இசை
எங்கள் நாடி நரம்புகளில்
ஓடும் நதி.
என்றும் வற்றாத
ஜீவ நதி.
எங்கள் இதயங்களில்
ஒளிவிளக்காய்ச்
சுடர் விடும்
ஆனந்த ஜோதி
அணையா விளக்கு.
நீங்கள் ஒரு
கலைக்கோயில்.
ஏனெனில் உங்கள் நெஞ்சம்
இசை குடியிருத்த கோயில்.
(என்றும் குடியிருக்கும் கோயில்)
ஆயிற்றே?
உங்கள் படைப்புகள் எல்லாம்
அந்த இசைக்கோயில்
பூஜைக்கு வந்த மலர்.
இசை மீது
நீங்கள் வைத்திருக்கும்
பாசம்தான்
அதன் ஆலய தீபம்.
அவன்தான் மனிதன்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரத்தில் ஒருவன்
உயர்ந்த மனிதன்
இவையெல்லாம்
நீங்கள் இசை அமைத்த படங்கள்.
இவற்றுக்குப் பெயர் வைத்தவர்கள்
உங்களை மனதில் கொண்டுதான்
வைத்திருப்பார்களோ?
நீயும் நானும்
என்று இணைந்திருக்கும்
நண்பர்கள் பலர் உண்டு
இவ்வுலகில்.
ஆனால்,
உனக்காக நான், எனக்காக நீ
என்று வாழ்ந்தவர்கள்
நீங்களும் கவியரசரும்.
மெல்லிசை மன்னர்கள் இருவரும்
கவியரசரும் இணைந்தால்
அது ஒரு
திரிசூலம்.
எங்களுக்கோ,
நீங்கள்
மூன்று தெய்வங்கள்.
லக்ஷ்மி கல்யாணம்
உங்கள் சீர்வரிசையில்தானே நடந்தது?
அனுபவி ராஜா அனுபவி என்று
கலாட்டா கல்யாணத்தக்கு
பச்சை விளக்கு காட்டியவரும்
நீங்கள்தான்!
இசைக்கடலில் பயணம் செய்யும்
பலருக்கு
நீங்கள் ஒரு
கலங்கரை விளக்கம்.
நல்லிசையை நாடித் திரியும்
இசை ரசிகர்களாம்
சாதகப் பறவைகளுக்கோ
நீங்கள் ஒரு
சரணாலயம்.
இது பாராட்டுரை அல்ல.
உங்கள் சாதனைகளுக்குத் தலை வணங்கி
நாங்கள் சமர்ப்பிக்கும்
பாத காணிக்கை.
இடுகையிட்டது Parthasarathy Rengaswami
Manoj- from net
1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது
About mgr fan - madhampatti sivakumar - net
மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …….எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர்.“ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”’ நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்” என்கிறார்.
“சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா ” என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக் ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.
எம்.ஜி.ஆர். படத்தில் கே.பாலசந்தர் "தெய்வத்தாய்"க்கு வசனம் எழுதினார்
நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்" என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். 1963_ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார். "பணத்தோட்டம்", ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்தார். கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.ராமையா கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது. "பரிசு" படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த். "தர்மம் தலைகாக்கும்", "நீதிக்குப்பின்பாசம்" ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார்.இரண்டும் வெற்றிப்படங்கள் இந்தப்படங்களை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராமண்ணாவின் "பெரிய இடத்துப் பெண்" பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி. மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்" படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர். வசனம், நடிப்பு, காட்சி ஜோடனை எல்லாமே சிறப்பாக இருந்தன. இதை டைரக்ட் செய்தவர் காசிலிங்கம். இப்படம் 26_10_1963_ல் வெளிவந்தது. சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான "கலை அரசி"யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். "பறக்கும் தட்டு" காட்சிகள் இடம் பெற்ற படம் இது. பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆனந்த ஜோதி"யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.
1964_ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு. இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.
ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசி கர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.
வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
http://www.thehindu.com/arts/cinema/...cle4153834.ece
http://i871.photobucket.com/albums/a...9984577090.gif
In focus in cinematographer Aloysius Vincent’s hands, cameras created magical moments that were both path breaking and breathtaking
Aloysius Vincent. The name spells experimentation. When zoom shots were not in vogue in India, he created one and that too without zoom lens, leaving even the technicians at Kodak’s London lab stunned. Apart from creating excellent visuals, the veteran cinematographer also directed around 70 movies in Malayalam and Tamil, starting with the path-breaking Bhargavanilayam (Malayalam).
It was while shooting a song sequence for T. Prakash Rao-directed Uthama Puthiran (Tamil) on Sivaji Ganesan and Padmini at Brindavan Gardens, Mysore, that Vincent experimented with the zoom shot, borrowing the lens from a French tourist.
“Padmini was standing on the first floor of the hotel and Sivaji Ganesan was at a waterfall in the garden below. To show them in the same frame I had placed the camera at a distance but in that long shot the images were not visible properly. Then I saw a French lady tourist taking snaps. I borrowed her camera, took out its lens and fitted it to the Paillard Bolex 16 mm camera that I had with me. The lens gave a zoom effect. I could now film the actors in one shot and, without cutting the shot, I also took the close-up of Padmini. Since I had taken this particular block of the song in 16 mm colour film, we sent it to the Kodak lab in London for processing and blew it to 35 mm. The technicians there were surprised at the result and asked me how I had taken the shot. We had no zoom lens in India then,” recalls the thespian.
Vincent brought a new technique to Malayalam cinema with his debut movie, Neela Kuyil. Till then the camera used to be focused on actors who were delivering the dialogue. But Vincent changed this by capturing the expressions of the other actors in the scene when the dialogue was being delivered. Instead of grey or sepia colours that were in vogue then, he asked for natural colours for the sets, though he was shooting with black and white film. The movie was not only a big hit, but it also brought about a change in the cinematic technique. Among the Malayalam films Vincent directed mention must be made of Thulabharam, which won actress Sharada the coveted national award, besides bagging the second best feature film award. Nakangal was another milestone film of his.
Vincent’s tryst with Telugu cinema came with P. Ramakrishna’s Brathukutheruvu thanks to Bhanumathi Ramakrishna. She observed his talent while he was working with Gemini Studios, and recommended him to her director-husband. After that Vincent cranked for many Telugu movies, including Lethamanasulu, Premnagar, Gharana Mogudu, and Jagadeka Veerudu-Athiloka Sundari. In Hindi, his repertoire include Raj Kapoor-starrer Nazrana, Rajesh Khanna-starrer Premnagar, Dil Ek Mandir, and Mahaan starring Amitabh Bachchan in a triple role. His sons Jayanan Vincent and Ajayan Vincent are popular cinematographers too. Here are the five films the veteran cinematographer picks up from among his 170 movies.
Nadhi (Malayalam)
Cast: Prem Nazir, Sharada, Madhu, Ambica
Besides being in charge of cinematography, I directed this film, based on a story by P.J. Antony. The entire movie was shot in boats. It is the story of three couples living in three house-boats. And it addresses a phobia called delirium tremens, a symptom caused by withdrawal from alcohol. We converted ordinary boats into house-boats and shot the film in the Alwaye river for 25 days. It was a challenge to shoot in the limited space available in those boats. You never feel even an iota of monotony while watching the movie. Also we had to do a set work for a day and we created the river set in a floor, with knee deep water, at the AVM Studios, Chennai, and placed a boat in it. Nadhi became a trendsetter.
Bhaktha Prahlada (Telugu)
Cast: S.V. Rangarao, Anjali Devi, Roja Ramani
It was an AVM Production directed by Chitrapu Narayana Murthy. There is a scene where Lord Narasimhaswamy appears from a splitting pillar and kills Hiranyakasipu.To get the split effect we marked each frame increasing the markings step by step which is called the ‘one-turn work.’ We shot the scene with a Mitchell camera.
This one-turn work gave the ‘pillar split effect.’ The scene appeared so very natural and it won all-round appreciation.
Enga Veettu Pillai (Tamil)
Cast: M.G. Ramachandran, B. Saroja Devi
Directed by Tapi Chanakya, the movie was made by Vijaya Productions.
We were set a deadline to complete the movie in 45 days so that it could be released for Pongal. Sets were erected in all the floors at Vauhini Studios. MGR played a dual role.
The two characters cross each other in a scene on the staircase. No dupe actor. No paper mask. I never used a paper mask for such dual role movies. Instead I used a lighting mask technique and shot the scene. The film was a big hit.
Adavi Ramudu (Telugu)
Cast: N.T. Ramarao, Jayaprada, Jayasudha
Director K. Raghavendra Rao shot this entertainer at Mudumalai and in Ooty. I must mention one particular scene that we shot in Mudumalai forest featuring Jayasudha and Jayaprada.The two are chased by Satyanarayana in a jeep while they travel in a chariot.
The horse ran so fast that the chariot’s wheel broke down. The camera followed the two actresses as they rolled down the slope. Fortunately, they were not hurt.
Now you know the reason why the shot was so realistic. It was a pleasure working with N.T. Ramarao.
He used to respect technicians and never interfered in their work. I have worked with three actors who became Chief Ministers – MGR, NTR and Jayalalitha.
Annamayya (Telugu)
Cast: Nagarjuna, Ramya Krishna, Maheswari
My journey with K. Raghavendra Rao started with the black and white movie Premalekhalu. Annamayya was special in a way.
The scene in which Lord Venkateswara makes his appearance has some significance. It was a group shot.
From the group, the Lord (played by Suman) suddenly appears. We used a circular trolley and, without showing the back of the Lord, I shot this scene by placing a huge mirror in front and by dimming the light.
Incidentally it was also my last film.
(as told to M.L. Narasimham)
(This fortnightly column features the five best works as shared by maestros from the industry)
THE HINDU HYDERABAD, December 1, 2012
thanks
Regards
எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.
கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.
ஏன் என்று சொல்கிறேன்.
courtesy - idhayam pethugiradhu
பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.
ஏன் ஏன் என்று கேட்டுக் ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.
நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.
ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.
அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?
அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!
COMING SOON AT KOVAI DELITE THEATRE
http://i46.tinypic.com/95zoug.jpg
Noted novelist mrs mekala chithravel about makkal thilagam
thanks madam
என் தலைவன்
இதய ஏட்டினில் அன்பென்னும் மையினால் எழுதப் பட்டது இந்த எழுத்து மடல்.
http://i47.tinypic.com/3509gqq.jpg
என் தலைவனின் சந்தனப் பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கும் பாசமலர் அர்ச்சனை.
புரட்சித் தலைவரின் புகழும் பெருமையும் காற்றில் அலையாது, தண்ணீரில் கரையாது, பூமிக்குள் ஓடாது, நெருப்பில் எரியாது, வானத்தில் மறையாது.
ஏனென்றால், அது பஞ்சபூதங்களையும் தனக்குள் அடக்கிய மாபெரும் சக்திக் கோளம்.
என் குழந்தைப் பருவம் அற்புதமானது.
மக்கள் திலகத்தின் படங்களை மட்டுமே திரையரங்குளில் மெய் மறந்து பார்த்து, வீரமும், விவேகமும் நிறைந்த அவரின் வசனங்களில் வாழ்க்கையைக் கற்று, கருத்தும், கண்ணியமும் இழைத்து அவர் பாடிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்து வளர்ந்தேன்.
அதனால்தான் அறிவுள்ளவளாக - மனதில் நல்லெண்ணமும் - செயலில் துணிச்சலும் தைரியமும் - குணத்தில் மாண்பும் - பண்பில் மனிதாபிமானமும் நிறைந்தவளாக எல்லோருக்கும் பிடித்தவளாக இத்ந விநாடி வரை என் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வலைப்வூவில் நான் எழுதுவது தலைவரின் படங்களை பற்றின விமர்சனமோ, விவரிப்போ கிடையாது, நான் பார்த்து என் கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்த பிரமிக்க வைத்த காட்சிகளின் சின்ன தொகுப்பு மட்டுமே. தலைவரின் நடிப்பு திறனை பற்றி தனி புத்தகம் எழுதுவதே எனது அடுத்த லட்சியம்.
வினோத் சார், தங்களது ஆய்வுக் கட்டுரை மிகவும் அற்புதம். பொதுவாக யாரும் சொல்லாத இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்களது திறமை பற்றி தாங்கள் எழுதியமைக்கு மிகவும் நன்றி. பலரும் பேசுவது எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை பற்றி மட்டும் தான். இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு திறமை காட்டிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களை பலரும் மறந்தே போனார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு அவர் அளித்த பின்னணி இசையை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவு அற்புதமானது. டைட்டில் இசை தொடங்கி கிளைமாக்ஸ் வரை அப்படி ஒரு இசையை வேறு எந்தப் படத்திலும் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. தேனருவியாய் இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிடும் நாடோடி மன்னன் படப் பாடல்களும் பின்னணி இசையும் எக்காலத்தும் நம் கருததை விட்டகலா தன்மை படைத்தது.குறிப்பாக டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது குரல் மற்ற இசையமைப்பளருக்குப் பாடுவதை விட எஸ்.எம்.எஸ் அவர்களது இசையில் பாடும் போது தனித்துவம் வாய்ந்ததாகவும் மிகவும் கம்பீரமாகவும் இருக்கும். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு பாடலின் ஆரம்ப இசையே ஆரவாரமாக இருக்கும். அதன் ஒலிப்பதிவு இன்றைய ஸ்டிரீயோ ரிக்கார்டிங் சாகசங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் ஆரவாரமான இசைப்பதிவு. மேலும் மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு மூன்று விதமாக இசையமைத்து பெரும் சாதனை செய்தவர் எஸ்.எம்.எஸ். அவர்கள். இது வேறு யாரும் இன்று வரை செய்யாதது. அவர் இசையமைத்த படங்களின் முழு பட்டியல் கிடைக்குமா?
கலையரசி பற்றிய தங்களது விமர்சனமும் அருமை. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம். பலரும் அறியாத ஒன்று. முதன் முதலில் ஸ்லோமோஷன் ஷாட் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல. இதன் சிறப்பு ஒரே காட்சியில் ஸ்லோமோஷன் மற்றும் சாதாரண வேகத்தில் ஷாட் எடுக்கப்பட்ட ஒரே படம் இன்று வரை இதுதான். விண்வெளியில் விகடகவி எம்.ஜி.ஆர் வேகமாக ஆடிக்கொண்டிருப்பார். காலணி இல்லாத பூமண்டலத்து எம்.ஜி.ஆர். ஸ்லோமோஷனில் தாவிச் செல்வார். இது எப்படி படம்பிடிக்கப்பட்டது என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. மேலும் அன்றைய காலகட்டத்திலேயே புவியீர்ப்பு விசை பற்றியும், விண்வெளியில் அதற்கென சிறப்பு காலணி அணியாமல் நடக்க இயலாத என்பதை பாமரருக்கும் அறிவித்த முதல் விஞ்ஞான கற்பனைபடமும் இது தான்.
வினோத் சார்,
தலைவரின் நடிப்பாற்றல் குறித்த தங்களது புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.
COURTESY - ROOP SIR - SRI MGR .COM
http://i47.tinypic.com/akgzyv.jpg
DEAR JAI SIR
S.M.SUBBIAH NAIDU MUSIC- FAMOUS SONGS.
Thirudaathe papa from Thirudadhe by T. M. Soundararajan
Ethanai kaalanthaan from Malaikkallan by T. M. Soundararajan
Thoongaathe thambi from Nadodi Mannan by T. M. Soundararajan
Singaara Velane Deva from Konjum Salangai by S. Janaki
Nee Engey En Ninaivugalangey from Mannippu by T. M. Soundararajan
Maalai mayangukindra neram pachai malaivaLarum aruvi yoram from Maragadham by Radha Jayalakshmi
Annaiyai pol oru deivamillai from Annaiyin Aanai by T. M. Soundararajan
Ethanai selvangal vandhaalume from Thaayin Madiyil by T. M. Soundararajan
Sabash Thambi Un kolgaiyai Potrukiren from Sabash Thambi by T. M. Soundararajan
Kannil Vanthu Minnal Pol from Nadodi Mannan by T. M. Soundararajan & Jikki
S.M.S MUSIC- MOVIES LIST
Manonmani (with G. Ramanathan) (1942)
Sri Murugan (with S. V. Venkatraman) (1946)
Valmiki (with S. V. Venkatraman) (1946)
Kanjan (1947)
Rajakumaari (1947)
Kuntalakesi (with G. Ramanathan) (1947)
Kannika (1947)
Abhimanyu (with C. R. Subburaman) (1948)
Mohini (with C. R. Subburaman) (1948)
Kanniyin Kaadhali (with C. R. Subburaman) (1949)
Velaikaari (with C. R. Subburaman) (1949)
Ezhai Padum Padu (1950)
Krishna Vijayam (with C. S. Jayaraman) (1950)
Dhikambara Saamiyaar (with G. Ramanathan) (1950)
Marma Yogi (with C. R. Subburaman) (1951)
Kanchana (1952)
Ponni (1953)
Malaikkallan (1954)
Vazhvile Oru Nal (with C. N. Pandurangan & T. G. Lingappa) (1956)
Nadodi Mannan (with N. S. Balakrishnan) (1958)
Annaiyin Aanai (1958)
Thirumanam (with T. G. Lingappa) (1958)
Mangalya Baghyam (with T. G. Lingappa & G. Ramanathan) (1958)
Maragatham (1959)
Athisaya Penn (1959)
Nalla Theerppu (1959)
Thirudadhe (1961)
Konjum Salangai (1962)
Kalyaaniyin Kanavan (1963)
Aayiram Kaalathu Payir (1963)
Thaayin Madiyil (1964)
Pandhayam (1965)
Aasai Mugam (1965)
Naam Moovar (1966)
Uyir Mel Aasai (1967)
Shabash Thambi (1967)
Raja Veettu Pillai (1967)
Sundara Moorthi Nayanaar (1967)
Mutthuchippi (1968)
Naalum Therindhavan (1968)
Panakkaara Pillai (1968)
Aindhu Latcham (1969)
Mannippu (1969)
Thalaivan (1970)
Sinegidhi (1970)
Vairaakkiyam (1970)
Thanga Gopuram (1971)
Therottam (1971)
Badhilukku Badhil (1972)
Jakkamma (1972)
Hotel Sorkkam (1975)
Kula Gowravam (1976)
Kaviraaja Kaalamegam (1978)
Pennai Vaazha Vidungal
Aalai Kandu Mayangathey
Ilangeswaran
Noted story writer and director mahendran says about mgr
"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.
நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''
மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரால் ஆதாயம் பெற்றவர்கள் ,முன்னுக்கு வந்தவர்கள் ,அரசியல் , சினிமா பிரபலம் ஆனவர்கள் ,பல்வேறு தனிப்பட்ட உதவிகள் பெற்றவர்கள் பட்டியல் நீளும் .
http://i46.tinypic.com/zu01gx.png
இன்று .. அவரின் புகழினை இருட்டடிப்பு செய்யம் விதத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் மக்கள் திலகம் பெயரை கூறவோ , அவரது படத்தினை ஸ்டாம்ப் அளவில் போட்டு அவமானம் செய்யும் நன்றி கெட்ட
உள்ளங்கள் ... முதுகெலும்பு இல்லாத மக்களாய் வரும் உங்கள் செயலுக்கு ....
கலையுலக காவலனின் சாதனைகள் அரசியல் களத்திலும் தொடர்ந்தது ஒரு தனிப் பெரும் வரலாறு. தமிழ் நாட்டின் அரசியல்
சரித்திரத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் எவரும் மறைத்திட முடியாது.
பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய பொற்கால ஆட்சியை தந்த பொன்மனச் செம்மலை என்றும்
நினைவில் கொள்பவர்கள் தான் நன்றியுள்ளவர்கள்.
http://i47.tinypic.com/2j2fh5d.jpg
அவரால் பயன் அடைந்தவர்கள் அவரை மறந்தால் அதை விட நன்றி கெட்ட செயல் எதுவும் இருக்க முடியாது.
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
ஒரு வார்த்தைக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல பொருள் உண்டு. அது போலவே எம்..ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
எம்.ஜி.ஆர். என்றால் மனிதாபிமானம்
எம்.ஜி.ஆர். என்றால் உற்சாக ஊற்று
எம்.ஜி.ஆர். என்றால் மாபெரும் சக்தி
எம்.ஜி.ஆர். என்றால் வள்ளல் தன்மை
எம்.ஜி. ஆர். என்றால் ஓர் எழுச்சி
எம்.ஜி.ஆர். என்றால் தன்னம்பிக்கை
எம்.ஜி.ஆர். என்றால் கண் கண்ட தெய்வம்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இன்றைய தலைமுறை தமிழ் திரை உலக ரசிகர்களும் பார்த்து, ரசித்து, மகிழும் படி தனது படங்களை நேர்த்தியாக, தனி கவனம் செலுத்தி
அளித்தது மிகவும் போற்றத்தக்கது. அவர் கதாநாயனாக நடித்த 115 படங்களில் சுமார் 90க்கும் அதிகமான திரைப்படங்கள்
தமிழகத்தில் பட்டி தொட்டிஎங்கும் இன்றும் மறு வெளியீடுகள் செய்யப்பட்டு சாதனை படைத்து வருவதே இதற்கு சாட்சி. இதில் கவனிக்கப்
பட வேண்டிய விஷயம் என்னவென்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மட்டுமே டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீட்டில்
திரையிடப்பட்டது.
http://i46.tinypic.com/34g95b5.jpg
பேராசிரியர் செல்வகுமார் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு -சென்னைஅனுப்பிய செய்தி . நன்றி செல்வகுமார் சார் .
கோவை நகரில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் ஓடுவது அவரது திரை பட புகழ் வெற்றியின் அடையாளம் காட்டுகிறது .
http://i50.tinypic.com/azf50l.jpg
1972ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு- இந்த வாரம் டிலைட் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது என்ற தகவலை வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .
About vaththiyar book
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.