http://www.mayyam.com/talk/showthrea...-Acting/page13
Printable View
NT is best in comedy oriented films such as sabaash meena, Galatta kalyanam, bale pandiya etc, where he foregoes his hero role and be like a full time comedienne .. ooty varai uravu is not one such film where he is a hero in a light hearted story....remembered reading somewhere that sivaji loves doing full fledged comedy role but did not get ample opportunities to do that..........
50 பைசா கொடுத்தால் 5000 ரூபாய்க்கு விளம்பர படுத்திய நடிகர்களின் மத்தியில் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்...உண்மை விளங்கும்..!.
தானமும் தர்மமும் நம் மனதை பொறுத்த விஷயமே தவிர விளம்பர படுத்தும் விஷயம் அல்ல என்பது விளங்கும் !
எந்த லாபமும் பார்க்காமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடிகர் திலகம் அவர்கள் திரு VK ராமசாமி அவர்களுக்கு செய்த உதவி..!
காலத்தால் செய்த உதவி...ஞாலத்தால் மிக பெரிது ! - Courtesy Senthil, facebook
Attachment 3118
கோவை ராயலில் இன்று முதல் நீதி திரையிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும் முதல் நாளான இன்றே நீதி மிக மிக சிறப்பான ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் எந்தப் படமும் பெறாத முதல் நாள் வசூலை பெற்றிருக்கிறது. சற்று முன் வந்த தகவல் - முதல் நாள் நிகர வசூல் Rs 13,126.50 p. Nett Collection என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தம் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பைசா 50 முதல் 1 ரூபாய் வரை Gross collection-லிருந்து [மொத்த வசூலிலிருந்து] குறைத்து வரும் தொகைதான் இந்த Nett Collection.
இரண்டு வார வசூலை ஒரே வாரத்தில் வந்ததாக அள்ளி விடப்படும் தகவல் போன்றவை அல்ல இது.அக்மார்க் உண்மை தகவல் இது. கோவையிலிருந்து பகிர்ந்துக் கொண்ட நண்பருக்கு நன்றி!
அன்புடன்
அள்ளிவிட்ட கதை லாஜிக் இதுதான்.
கடந்தவாரத்திற்கு முந்தைய வாரம் அவன் தான் மனிதன் திரைப்படம் ருபாய் 68,360.50 வசூல் செய்த செய்தி வந்ததல்லவா.
பார்த்தார்கள்...உடனே ஒரு யோசனை தோன்றியிருக்கும்....68,000 reverse செய்திருப்பார்கள் அதாவது ருபாய் 86,000 .
இதை அப்படியே போட்டால் சாமான்யனும் புரிந்துகொள்வான் உடனே ஒரு 1,000 ரூபாயை விழா கால சிறப்பு தள்ளுபடி செய்து ருபாய் 85,000 என்று வெளிவந்திருக்கும்.
இவ்வளவுதான் மேட்டர் !
இந்த reverse technology தான் காலம் காலமாய் நடக்கும் ஒன்றாயிற்றே !
நேற்று நடந்தது....
இன்று நடக்கிறது....
நாளையும் நடக்கும் .....
எனக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்படி சென்ற வாரம் திரையிடப்பட்ட திரைப்படம் Rs.71,360.50 ACTUAL வசூல்
அன்புள்ள ரவி கிரன் ,
தலைவர் ஸ்ரீதரிடம் " எனக்கு கூட அழுமுஞ்சி " என்ற பெயர் உள்ளது என்று சொன்னதை போல ஸ்ரீதர் பேட்டி கொடுத்துள்ளார் என்பது மிகுந்த நகைச்சுவை மட்டும் அல்ல , பொய் கலந்த கற்பனை - அப்படி அவர் கூற வாய்ப்பே இல்லை - நீங்கள் குறிப்பிட்டதை போல அவர் ஏற்கனவே பல படங்களில் " நகைச்சுவை" என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று நிரூப்பித்துள்ளார் - வெறும் பாடல்களில் மட்டும் சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லவில்லை - உண்மையிலேயே எடுத்துக்காட்டாக விளங்கினார் - " எங்கள் மாமா " என்ற ஒரு படம் போதும் - எப்படிப்பட்ட சோதனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் தீர்க்கமுடியும் என்று திட்டவட்டமாக சொல்வதற்க்கு - இந்த ஆவணம் சொல்லவதை கேளுங்கள் ஸ்ரீதர் குடுக்காத ஒரு பேட்டி எவள்ளவு பொய் கலந்த கற்பனை என்று
அன்புடன் ரவி
1974 PESUM PADAM
http://i57.tinypic.com/qwzqma.jpg
எங்கோ படித்த ஞாபகம் - (பழைய)சங்கர் mgr யாரை வைத்து ஒரு படம் எடுக்கும் வேளையில் சில மாறுதல்களை விரும்பினார் - அவரின் தயக்கத்தை புரிந்து கொண்ட mgr முதுகில் தட்டி கொடுத்து ," சங்கர் நீங்கள் எந்த முகாமிலிருந்து வருகிறீர்கள் என்று புரிகின்றது - இந்த ராமச்சந்தரனால் என்ன முடியுமோ, எதை பண்ண முடியுமோ அதை கேளுங்கள் - "
அவருடைய ரசிகர்களும் சாதாரணமான நடிப்பு . நெருக்கமான காதல் காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையில் தான் mgr நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
எது தன்னால் முடியாததோ அதை அவரும் , அவரின் ரசிகர்களும் ஒரு பிளஸ் பாயிண்ட் ஆகத்தான் கருதினார்கள் /கருதிகிறார்கள் - தனது திறமையால் அந்த இயலாமைகளை தன்னையே வீழ்த்த mgr அனுமதிக்கவில்லை - அவரது திரியிலும் அவரது இயலாமைகளை யாரும் விவாதிபதில்லை - அதனால் ஒரு ஒற்றுமை தானாகவே எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகின்றது.
நாம் , எல்லா திறமைகள் நம் தலைவருக்கு இருந்தும் அவரின் சில தவறுகளை (அதுவும் அவரால் மட்டுமே உருவான தவறுகள் அல்ல அவை) அதிகமாக எடுத்து சொல்கின்றோம் , எழுதுகின்றோம் - இதனால் அவர் செய்த பல தியாகங்கள் சபைக்கு வாராமலே போய் விடுகின்றது ( ஒரு உதாரணம் - ரவிகிரனின் பதிவு - சிவாஜியின் உதவிகள்) - சில படங்கள் காலத்தின் கட்டாயத்தால் தோல்விகளை தழுவியிருக்கலாம் ஆனால் அவர் நடிப்பில் , ஏற்கும் எந்த பாத்திரங்களிலும் தோல்வியை சந்தித்ததே இல்லை என்பது என்னுடைய , ஏன் நம் எல்லோருடைய சத்திய வாக்கு .
------------தன் நிஜ வாழ்கையில் மற்றவர்களை போல நடிக்க தெரியவில்லை , அதிகமாக விளம்பரங்கள் தேடவில்லை , அரசியல் குள்ள நரியாக வில்லை - இந்த விஷயங்களில் அவர் ஒரு நடிக்க தெரியாத நடிகர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்
அன்புடன் ரவி
மிக மிக சரியான கருத்து. நான் ஆமோதிக்கிறேன், திரு ரவி.
அன்புள்ள tfml
அருமையான ஆவணங்கள் - நீங்கள் சேமித்து வைத்திருப்பதை பார்த்தால் nt யின் மீது எவ்வளவு மதிப்பையும் , மரியாதைக்கும் வைத்துருகிண்டீர்கள் என்று தெரிகின்றது - மலைப்பாகவும் , ஆச்சிரியமாகவும் இருக்கின்றது - தொடருங்கள் - நன்றி
அன்புடன்
ரவி
Thank you MURALI.GOD CREATED ME TO BECOME A NADIGAR THILAGAM FAN AND TO PROBAGATE HIS FAME(HE IS DESERVED).I HAVE THAT OPPORTUNITY.HENCE MY INITIAL AND MY BIRTH DATE IS FORTUNATE TO ME THOUGH THAT DAY IS SAD TO US.VERY PLEASURE TO KNOW THE COLLECTON OF OUR NEETHI.
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான்,பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை .
சில நாட்களுக்கு முன் சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .
நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -இந்த படம் மிகவும் மற்றவர்களால் அலசிய படம் தான் - இருந்தாலும் என் கண்ணோட்டத்தில் புதிய முறையில் எழுத முயற்சிக்கிறேன் - தவறுகள் இருப்பின் , திருத்திக்கொள்ளவும் தயாராக உள்ளேன்
என் நடையுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் - என்னால் என் மாதிரிதான் எழுத முடியும் . ------ கோபால் உடைய "கெளரவம்" இன்னும் முடியாத இந்த சமயத்தில் இந்த பதிவை ஒரு short gap ஆக எடுத்துகொள்ளவும் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம்
அன்புடன் ரவி
:):smokesmile:
இந்த படத்தை நான்கு பகுதிகளாக அலசலாம் என்று நினைக்கிறேன் -
முதல் பகுதி : இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
இரண்டாவது பகுதி : சில ஆவணங்கள் / மனதிற்கு பிடித்த பாடல்கள்
முன்றாவது பகுதி : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? -ஒரு சின்ன அலசல்
நான்காவது பகுதி : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்
அன்புடன் ரவி
பகுதி 1 a
1954 - ஒரு மறக்கமுடியாத வருடம் - முதல் முறையாக nt யின் 10 படங்கள் வெளிவந்தன- 10த்தும் வெற்றி வாகை சூடின என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
மனோகரா - 10வது படம் - வசூலிலும் , வசனத்திலும் திரை உலகையே புரட்டி போட்ட படம் - இப்பொழுது வாசுவின் கை வண்ணத்தில் மீண்டும் உற்சாகமாக பவனி வருகின்றது .
இல்லற ஜோதி - அருமையான படம் - சிவாஜியின் 11 வது படம் . இதுவும் ஒரு வெற்றி படம் - இதில் வரும் அனார்கலி ஓரங்க நாடகம் . இன்றும் மிகவும் புகழ்ந்து பேசப்படும் ஒன்று . பாடல்கள் யாவும் தேனில் ஊறிய பளா சுளைகள்
12வது படம் - பிரமிக்கவைத்த "அந்த நாள்" - இந்த படம் பற்றி சொல்ல , எழுதவே ஒரு மாதம் தேவைப்படும் - முதல் முறையாக பாடலே இல்லாமல் வந்த படம் - வில்லனாக வந்து தலைவர் விளையாடிருப்பார் - படம் மிகுந்த வெற்றியை அடைந்தது.
13ஆக வந்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நகைச்சுவையில் இன்றும் பெரிதாக பேசப்படும் படம் - வெகு சுலபமாக 100 நாட்களை கடந்து ஓடியது .
14வதும் , 15வதும் மனோகராவின் தெலுங்கு , ஹிந்தி மொழியாக்கம் - வெற்றியை பற்றி குறிப்பிடவே வேண்டாம் - தலைவர் மட்டும் ஹிந்தி பட உலகத்திற்கோ அல்லது தெலுகு பட உலகத்திற்கோ சென்று இருந்தால் , அவருக்கு இன்றும் ராஜமரியாதை இருந்திருக்கும் - அங்கு மரியாதையை செய்யும் நல்ல உள்ளங்கள் பல உள்ளன .
16வது படமாக துளி விஷம் - இந்த படத்தை பற்றி வாசு மிகவும் அழகாக எழுதிஉள்ளார் - வில்லன் வேடம் - மாறி மாறி வில்லானாக , ஹீரோ வாக , வெற்றிகளை தந்தவண்ணம் , தரமான படங்களின் எண்ணிக்கையும் குறைக்காமல் , சிவாஜி ஒருவரால்தான் கோலோச்சமுடிந்தது .
17வது படம் -கூண்டுக்கிளி - இரண்டு திலகங்களும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை கொண்டது . இந்த படத்திலும் , நடிப்பு தான் முக்கியம் என்று , தன் இமேஜ் யை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் வில்லனாக நடித்த படம்.
18வதாக வருவது - தூக்கு தூக்கி - திருவாங்கூர் சகோதரிகளோடு விழுப்புர வேந்தன் வெற்றி வாகை சூடிய படம் - முதல் முதலாக , tms தான் சிவாஜி , சிவாஜி தான் tms என்று உலகத்திற்கு நிரூபித்த படம்.
19வதாக வருவதுதான் நான் இன்று எடுத்துக்கொண்ட "எதிர்பாராதது" - புதுமையான கருத்துக்கள் , பெண் குலத்தை பெருமை படுத்தின படம் - கணவனே எல்லாம் என்று சத்தம் போட்டு கூறிய படம் ; ஒரு பெண்ணினால் காதலிக்கவும் தெரியும் , அதே சமயத்தில் அதை தூசியாக கருதவும் தெரியும் என்று நிரூபித்த படம் - kbக்கு மூன்று முடிச்சை வித்திட்ட படம் ; காதலித்தவன் உயிருடன் திரும்பி வந்து தன் காதலை மீண்டும் கேட்க்கும் பொழுது , மனதை கல்லாகி கொண்டு , உணர்சிகளுக்கு விடை கொடுக்கும் ஒரு பரிதாபமான பெண்ணின் உயிரோட்டமான கதை - எதிர்பாராத முடிவு ஆனால் எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றி !!
தொடரும்
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி - 1B - இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
1. Certificate of Merits - In 2nd National Film Awards in 1954
2. நல்ல கதை அண்ட் வசனம் என்பதற்காக ஸ்ரீதருக்கு பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்தன
3. Randor Guy முதல் முறையாக , உண்மையை உண்மையாக எடுத்துசொல்லி புகழ்ந்த படம் .
4. A. M. Rajah & Jikki - நல்ல பாடகர்கள் என்ற பெயரை மீண்டும் நிருபித்த படம்
5. படம் கண்ட இமாலய வெற்றியின் மூலம் , ஸ்ரீதர் , சிவாஜியின் உற்ற நண்பராக மாறினார்
6. வசூலில் முதல் 25 நாட்களுக்குள் மொத்த முதலீட்டையும் தயாளிப்பாருக்கு பெற்று கொடுத்தது
7. பெண்களின் தியாகத்தையும் , பெருமையும் இந்த படம் சொன்னது போல வேறு எதுவுமே அமையவில்லை
8.சிவாஜி - பத்மினி ஜோடிக்காகவே இந்த படம் மறு பதிவீடுகலிலும் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது
9. இந்த படம் பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது : மலையாளத்திலும் நித்திய கன்னிகா(director K.S. ேதுமாதவன்) , தெலுங்கில் -Ilavelpu, director D. Yoganand) , ஹிந்தியில் sharada (director L.V. Prasad) - எல்லா மொழியிலும் படம் நல்ல வெற்றியை கண்டது .
10. நடிப்பில் தன்னை மறந்து , பத்மினி , ஒரு கட்டத்தில் சிவாஜியை உண்மையாகவே அறைந்து விடுகிறார் - அதன் பலன் சிவாஜிக்கு , மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் , பத்மினிக்கு கொடுக்க வேண்டியதாக போய்விட்டது - இப்படி பட்ட உண்மையாக உழைத்தவர்கள் இருந்ததால் தான் இன்று இந்த தமிழகம் 100 வது திரையுலக ஆண்டை வெற்றி கரமாக கொண்டாட முடிகின்றது .
தொடுரும்
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி 2 a - சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி 2 b - சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
அன்புடன் ரவி
:):smokesmile:
அன்புடன் ரவி
:):smokesmile:
என்ன ஒரு பாடல் ! இளமையான நடிகர் திலகம்! அழகு பதுமையாய் நாட்டிய பேரொளி ! தென்றலாய் ஜிக்கியம்மா குரல் ! " கற்கண்டு பாகு , கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே " ஜிக்கியம்மா உன் மொழியாலே !
சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ ! சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே சிற்பி செதுக்காத* பொற்சிலையே அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே
http://youtu.be/2Heo4rXoUHM
http://youtu.be/69Gk4znsWHQ
http://youtu.be/ioWLx2jyCD4
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
பகுதி 3 : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? -ஒரு சின்ன அலசல்
1. அருமையான கதை - எதிர்பாராத முடிவுகள்
2. சிறந்த நடிப்பு , சரியான ஜோடி
3. மனதில் நிற்கும் வசனங்கள் , பாடல்கள்
4. பெண்ணின் பெருமையை இதற்க்கு மேலாக சொல்ல முடியாது
5. படத்தில் யாருமே தியாகம் செய்ய தயங்குவதில்லை - அதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள் .
6. பாத்திரமாகவே எல்லோரும் மாறிவிடுவது இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்
இந்த படம் பல பாடங்களை நமக்கு எடுத்து சொல்கின்றது :
1. காதலை , காதலியை அப்பாவிடம் சரியான சமயத்தில் சொல்லாதது - எந்த விபரீதத்தை உண்டாக்கும் - இந்த படம் ஒரு நல்ல உதாரணம்
2. காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது உடல் சம்பந்தப்பட்டதா ? இந்த கேள்விக்கு இந்த படம் ஒரு நல்ல பதிலை கொடுக்கும்
3. தவறு செய்த தந்தையின் மன நிலை , மகனுக்கு எந்த அளவுக்கு உதவி செய்ய தூண்டுகிறது - இந்த படம் ஒரு நல்ல உதாரணம்
4. காதலி - தனக்கே தாயாகும் போது , அதை எப்படி பெருந்தன்மையாக எடுத்துகொள்ளவேண்டும் என்பதை நன்றாகவே எடுத்து சொல்லி உள்ளனர்
தொடரும்
பகுதி 4 a - படத்தின் கதை ( சுருக்கமாக)
கதை : சுந்தர் ஒரு அழகான வாலிபன் - அழகுடன் அறிவும் சேர்ந்து இருந்ததால் அவனுக்கு சுமதி என்ற கலியுக ரம்பை அறிமுகமானாள் - அவன் இருக்கும் விட்டின் கீழ் வீட்டில் அவள் தன் தந்தையுடன் தன் காதலையும் கவனமாக வளர்த்து கொண்டு வந்தாள் .
இருவர் மனமும் ஒன்று பட , வானத்தில் இருவரும் சிறகடித்து பறந்தனர் - எங்குமே தடை இல்லை - வில்லனும் இல்லை - இருவரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் மேல் உயிரையே வைத்து இருந்தனர் -
மேல் படிப்பு சுந்தருக்கு வில்லனாக வந்தது - ஆமாம் பறந்து சென்ற விமானம் சுந்தரின் பார்வையை மட்டும் தானா பறித்தது - அவன் கற்பனைகள் , காதல் எண்ணங்கள் , இளமையின் வேகம் , துடிப்பு , அழகின் ஆர்பாட்டங்கள் எல்லாவற்றையும் தான் !
ஒரு நொடியில் அவனின் இன்ப கனவுகள் தரை மட்டமாகி விட்டன - உயிர் தப்பியும் தெரிவிக்க முடியாத நிலை - பேப்பரில் வந்த செய்தியில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று புரிந்துகொண்டு , தந்தை வாழ்க்கையை வெறுக்கிறார் . சுமதியோ , தன அண்ணன் பட்ட கடனை தீர்க்க சுந்தரின் தந்தையை மனம் செய்ய , மனமின்றி ஒத்துகொள்கிறாள் -சுமதிக்கு தன் வயோதிக கணவன் தான் சுந்தரின் தந்தை என்று தெரியாது
வயோதிக தந்தை தன முதல் இரவில் சுமதியிடம் இருந்த படத்தையும் , கடிதத்தையும் பார்த்து அவள் காதலன் தன் மகனே என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார் - ஒரு பைத்தியம் மாதிரி திரிகையில் கண்கள் இழந்த சுந்தரை ஒரு கோயிலில் பிச்சைகாரனாக சந்திக்கிறார் - அவனுடன் சுமதியை சேர்த்து வைக்க துடிக்கிறார் -
சுந்தரும் சுமதியை சந்திக்கிறான் - சுந்தர் அதே பழைய காதல் நினைவில் - சுமதியோ ஒரு கண்ணியமான மனைவி என்ற நினைவில் - இருவர் சந்திப்பும் வேறு வேறு எண்ண ஓட்டத்தில் - சுந்தரை பலமாக் அறைகிறாள் சுமதி -
சுந்தர் தன் தவறை உணர்கிறான் - தன் தந்தைதான் சுமதியின் கணவன் என்று உணர்கிறான் - அவன் இழந்த கண்கள் - சுமதியின் அண்ணன் மூலம் மீண்டும் அவனுக்கு கிடைக்கின்றது -
இப்பொழுது அவன் புதிய பார்வையில் - காமம் இல்லை , கட்டுபாடுகளை மீறும் எண்ணம் இல்லை , காதலியை தாயாக பார்க்கும் உயர்ந்த மனத்தை பெற்று விடுகிறான் - மீண்டும் படிக்க விமானம் அவனை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கின்றது - சுமதி பெண்ணின் பெருமைக்கே முன்னோடியாக வாழுகிறாள் - சுபம்
தொடரும்
பகுதி 4B : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்
Sivaji Ganesan
Padmini
S. Varalakshmi
Chittor V. Nagaiah
K. V. Sahasranamam
Friend Ramasamy
K. S. Angamuthu
சிவாஜி :
அழகும் இளமையும் சரியான விகிதத்தில் - அட்டகாசம் செய்கிறார் - பல அறைகள் பத்மினியிடம் பரிசாக கிடைத்தும் தன் நடிப்பில் எல்லோரையும் பலமாகவே வீழ்த்தி விடுகிறார் - கண் இழந்தபின் அவர் நாகையாவிடம் தவிக்கும் தவிப்பு கண்களில் நீரை வற்றி விட செய்யும் - அவரிடம் ஏற் படும் பரிதாபம் , நம் கண்களுக்கு மற்ற எல்லோரும் பத்மினி உட்பட பைத்தியகாரர்கள் போலத்தான் தோன்றும் - எதிர்பார்த்த நடிப்பு ஆனால் எதிர்பாராத முடிவு
பத்மினி :
நன்றாகவே அறைகிறார் - துள்ளும் இளமை - கொட்டிகிடக்கும் அழகு - சிவாஜியுடன் நடிக்கும்போது மற்றவர்களுக்கு நியாமாக ஏற்படும் கர்வம் , பொறாமை இவைகளை தாங்கிய நடிப்பு , முகம் .
நாகையா :
அப்பாக்கே உரித்தான வேடம் - மிகவும் சுலபமாக செய்கிறார் - சில இடங்களில் நெஞ்சை தொடுகிறார் .
வரலக்ஷ்மி , சஹஸ்ரநாமம் போன்றவர்களும் உள்ளனர் - மட்டற்ற படி அவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை
தொடரும்
BLAST FROM THE PAST
Ethirpaaraathathu 1955
RANDOR GUY
Sivaji Ganesan in Ethirpaaraathathu
TOPICS
arts, culture and entertainment
Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami Sivaji Ganesan and Padmini
were a popular pair in Tamil cinema during the 1950s and even later.
One of the Sivaji Ganesan-Padmini hits,Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplaysEthirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be.
Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.
Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki).
The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit.
Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.
Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.
இத்துடன் என் பதிவுகள் இந்த படத்தை பொருத்தவரையில் முடிவடைகின்றன - அமைதியாக எல்லா பதிவுகளையும் படித்ததற்காக எல்லோருக்கும் என் நன்றியை கூற கடமை பட்டுள்ளேன் - தவறுகள் இருந்தால் , கண்டிப்பாக திருத்திகொள்கிறேன் .
அன்புடன் ரவி
:):smokesmile:
அன்பு நண்பர் ரவி,
மிக்க நன்றி. தங்கள் மீள் வருகைக்கும் "எதிர்பாராதது" பதிவுகளுக்கும். நீங்களே குறிப்பிட்டது போல் யார் நடையையும் சாராமல் unique ஸ்டைலில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். பொதுவாக early 1950- களின் படங்களைப் பற்றி அதிகம் யாரும் எழுதுவதில்லை. முக்கிய காரணம் என்னவென்றால் இங்கே பெரும்பாலானோர் 1960-களில் பிறந்தவர்கள் என்பதால் late 50s மற்றும் 60s படங்களைத்தான் எடுத்துக் கொள்வோம். ஆகவே ஒரு 1954 படம் discuss செய்யப்படுவது மகிழ்ச்சியே. தொடருங்கள் உங்கள் பணியை.
அன்புடன்
tfml,
Long time no see in this part of the hub!
Lovely photos of NT and I am seeing them for the first time. The half sleeves with the matching trousers on the body of the slim NT in historic locations such as in front of Maratha King Sivaji statue, Gateway of India and Marine Drive looks excellent. Same way Sanjay Dutt would be more than happy to see this photo of his along with the legend and his parents!
Thank You Mam!
Regards
நீதிக்கு என்றுமே நீதி கிடைக்கும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ராஜாவிற்கு இன்றும் நல்ல வரவேற்பு என்று கேள்வி. நேற்றைய தேதியை நினைத்துப் பார்த்தோமென்றால் பிப்ரவரி 14. சரியாக 16 வருடங்களுக்கு முன்பாக இதே தினத்தில்தான் [1998 பிப் 14] கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் காரணமாகவே ஒவ்வொரு வருடம் அந்த பிப் 14 வரும்போது கோவை நகரெங்கும் ஒரு பதற்றமும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளும் காணப்படும். மக்கள் கொண்டு செல்லும் ஒவ்வொரு பொருளும் பலத்த சோதனைக்குள்ளாகும். அப்படிப்பட்ட ஒரு கெடுபிடி நாளில் கூட நீதிக்கு நீதி செய்ய பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டு வந்தது நாம் எப்போதும் சொல்வது போல் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை சுட்டிக் காட்டுகிறது. கோவையிலிருந்து நமக்கு தகவலளித்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால் இந்த கடுமையான சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு ரசிகர்கள் ஏராளமான மாலைகளை பானருக்கு அணிவித்து விட்டார்கள் என்றார். நாளை ஞாயிறு மாலை மேலும் களை கட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
அன்புடன்
ரவி சார்
நாம் தான் எந்த விஷயத்திற்கும் ஆவணம் பதிவிடுகிறோம். Not to prove...but to spoon feed the new generation that they should ask for proofs henceforth atleast for any tall claims made in any thread !
இது ஒரு knowledge transfer அவ்வளவே !
நம் ஆவணங்களை பார்த்தால் மற்றவர்கள் வாயால் மட்டுமே வடை சுடுகிறார்கள், பந்தல் போடுகிறார்கள் என்பது நன்கு விளங்கும் !
There cannot be any natural proofs for lies & false tall claims, obviously !
வணக்கம் ரவிகிரண்சூரியா சார்
உங்கள் அசத்தலான எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்
தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
எனது தொலைபேசி இலக்கம் ராகவேந்திரா சாரிடம் கொடுத்துள்ளேன்
தாங்கள் விரும்பும்பட்சத்தில் தங்கள் தொலைபேசி இலக்கத்தை
எனக்கு தெரியப்படுத்துங்கள்
நன்றி
திரு. ரவி அவர்களே தங்களுடைய எதிர்பாராதது பதிவு மிக அருமை. இந்த படம் நான் பார்த்ததே இல்லை. ஆனால் தங்கள் பதிவுக்கு பிறகு dvd வாங்கி பார்த்து விட முடிவு செய்து விட்டேன். மிக அருமையாக தொகுத்துள்ளிர்கள்.
Thanks to ravi for edhirparathathu presentation
தினத்தந்தியில் இன்று பிரமாண்டத்தின் உச்சம் நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "தங்கச்சுரங்கம் " திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளது.
தங்கச்சுரங்கம் - இது பிரம்மாண்டத்தின் உச்சம் !
Attachment 3131
இந்த பாடலை கேளுங்கள் - நகைச்சுவைக்கே சிகரம் வைத்தால்போல ! எத்தனை உணர்ச்சிகள் , எவ்வளவு முக பாவங்கள் - சிலர் நடிக்கும் சமயத்தில் , அவர்கள் சிரிக்கும் போது , நமக்கு அழுகை வரும் - அவர்கள் அழும்போது ( முகத்தை கைகளால் மூடிகொள்வார்கள் என்பது வேறு விஷயம்) நமக்கு சிரிப்புதான் வரும் - உணர்சிகளை தேட வேண்டியிருக்கும் - அவர்கள் நடிக்கும் எல்லா படங்களும் நகைச்சுவைதான் - எதிரிகள் சூழும்போது தனியாக நின்று கொண்டு சிரிப்பது , அவர்கள் துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கும் என்று ஹீரோவுக்கு மட்டுமே தெரியும் - எத்தனை வில்லன்கள் வந்தாலும் , அவர்களை இன்முகத்துடன் அடித்து விரட்டி, நேரம் இருந்தால் அவர்களை திருத்தி , அவர்களை காந்திய வாதிகளாக மாற்றி , அவர்களையும் சிரிக்க வைத்து அழு முஞ்சி என்ற பட்டதை வாங்காமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருந்திருகிறார்கள் /இன்னும் இருக்கிறார்கள் -
நம் தலைவருக்கு அப்படி நடிக்க வராது - எந்த பாத்திரத்திற்கு எது தேவையோ அதை அழகாக கொடுப்பதில் கர்ணன் - யதார்த்தம் என்றால் என்ன என்பதிற்க்கு அந்த அந்த குறுப்பிட படங்களை பார்த்தால் புரியும் - ஸ்ரீதர் அப்படி ஒரு பேட்டி கொடுத்திருந்தால் நகைச்சுவை உணர்ச்சியை அவர் முழுவதும் இழந்த பின்பாக இருந்திருக்கலாம் அல்லது அவரது கற்பனை பேட்டியை மற்றவர்கள் திருடியிருக்கலாம் ----
http://youtu.be/b3ku7VgUi30
:???::smokesmile::mrgreen::-D:smile2:
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .
2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .
3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .
4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .
5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .
6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .
எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!
NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!
அன்புடன் ரவி
:):smokesmile:
அவர்களுக்கு யதார்த்தம் என்றால் என்னவென்று தெரிந்துமிருக்கலாம். அல்லது தெரியாமலுமிருக்கலாம். இயற்கை என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு தெரியவரும் சேதி. அந்த பிரமாண்டத்தை விளக்க... மன்னிக்கவும் என்னால் முடியாது. அந்த காரியத்தை செய்ய கருத்து மழை பொழியும் எங்கள் அண்ணனை அழைக்கிறேன். அவர்தான் எதுவெதற்கோ பதில் தர விழைந்திருக்கிறாரே!!!
ரவி சார், உங்களுடைய பதிவு எதிர்பாராதது, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அற்புதமானது. ஆஹா போடவைத்தது. வாழ்த்துகள்
கோவை ராயலில் நீதி இன்று ஞாயிறு மாலைக் காட்சி கோலாகலங்கள்!
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...55468786_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...93668684_n.jpg
கோவை நண்பர் செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்