http://www.thehindu.com/multimedia/d...g_2062849g.jpg
Printable View
dear KCS. Happy birthday wishes in line with esvee sir and wish you many more returns and writtens of the day!
KCS, Many More Happy Returns of the Day.
http://sim06.in.com/65dc65cfd680c8b2...33cc0391_m.jpg
டியர் சந்திரசேகர்
தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Dear Chandrasekar Sir
Many more Happy Returns of the Day
Heartiest Birthday Wishes
C. Ramachandran.
Dear KCS sir,
Many More Happy Returns of the day !
RKS
Dear KCS,
Wish you a Happy Birthday & Many More to Return.
இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களே,
தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
To K.Chandra Sekhar - Best wishes and many more happy returns of the day. With the krubhai of Emberumans Sri Namperumal, Sri Parthasarathy Swamy and Sri Narasimha Swamy , pray for a good and healthy life.
Dear kcs sir,
many many happy returns of the day,god bless you
அன்பு நண்பர் kcs சார்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
சந்திரசேகர் சார்,
ஆகஸ்ட் 26. சில வருடங்களுக்கு முன்பு நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன், இந்த தேதி நடிகர் திலகத்தின் வாழ்வோடு மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்த நாள்.
பிற்காலத்தில் பிரிக்கவே முடியாமல் நடிகர் திலகத்துடன் சேர்ந்தே இருந்தவர் முதன் முதலாக இணைந்த நாள் ஆகஸ்ட் 26.
பிற்காலத்தில் சேரவே முடியாதவர் நடிகர் திலகத்துடன் முதலும் கடைசியுமாக சேர்ந்த நாளும் அதே வருடம் ஆகஸ்ட் 26 தான்.
தாய்குலங்களை மங்கையர் திலகம் என்று நடிகர் திலகம் போற்றியதும் இந்த ஆகஸ்ட் 26 அன்றுதான்
நமது தாய் நாட்டிற்காக எத்தனையோ பொருட்களையும் செல்வதையும் அள்ளி தந்த தேசிய திலகமான நடிகர் திலகம் தாயே உனக்காக என்ற ராணுவ வீரனாக முழக்கமிட்டதும் இதே ஆகஸ்ட் 26 அன்றுதான்.
ராஜாமணி அம்மையார் ஈன்றெடுத்த தவப்புதல்வன் கலைத்தாயின் தவப்புதல்வனாக திரையில் தோன்றியதும் இதே ஆகஸ்ட் 26 அன்றுதான்.
இப்படி நடிகர் திலகத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஆகஸ்ட் 26 அன்று ஜனித்த தாங்கள் நடிகர் திலகத்தின் வாழ்விலே ஒரு முக்கியமான காலகட்டத்திலே அவரோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஆண்டவன் கட்டளையாகவே கருத வேண்டும்.
உங்கள் சிறப்பான பிறந்த நாளுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். இது போன்ற மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
இன்று என்னை வாழ்த்திய, ஊக்கப்படுத்திய, பெருமைப்படுத்திய அன்பிற்கினிய நண்பர்கள் திரு.வினோத் (esvee ), திரு. சிவாஜி செந்தில், திரு.கோபால், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராகவேந்திரன், திரு.ராமச்சந்திரன்(திருச்சி), திரு.ரவிகிரன் சூர்யா (சுப்பு), திரு.ராதாக்ருஷ்ணன், திரு.கல்நாயக், திரு.ஹரிஷ், திரு.G .கிருஷ்ணா, திரு.N .V .ராகவன், திரு.முரளி சீனிவாஸ் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குறேன்.
வாழ்க்கை என்பது இறக்கும்வரையல்ல
மற்றவர் மனதில் வாழும்வரை - என்ற மகாத்மா காந்தியடிகளின் வாக்கின்படி,
இறந்தும், மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பதோடு, எங்கேயோ பிறந்து, வளர்ந்த நம் அனைவரையும், ஒரு குடும்பப் பாசத்தோடு இணையவைத்த நடிகர்திலகத்தை இந்நாளில் நினைவு கூர்ந்து, என்னுடைய இப்பிறப்பை, மென்மேலும் நடிகர்திலகம் புகழ் பரப்பக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட உறுதியேற்று, மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பக்திப் பெருக்கில் ...எந்தன் ஊண் உருக !
அந்த பரவசத்தில் உள்ளே ...உயிர் உருக !!
http://i501.photobucket.com/albums/e...ps32abb544.jpg
சக்தி எல்லாம் திரண்டு .......சிவம் பெருக !
எந்தன் சந்ததியே ...உந்தனுக்கு அடிபணிய !!
இறைவா !!!
Dear Shri. Chandrasekhar,
Wish you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
Theme Music reminds the name of the movie!
The Hollywood films have tantelizing and unique theme music frequently played throughout the movie, by which the name of the movie comes to our mind spontaneously. In Tamil such an attempt was made with NT's ace movie 'Raaja' in its title and it became famous and was included alongside the movie songs. I tried to download but could not. Can someone lend a helping hand for the pleasure of NT fans to hear!?
The Good, The Bad and the Ugly : Clint Eastwood/Music by Ennio Morricone
https://www.youtube.com/watch?v=AFa1-kciCb4
James Bond OO7 (DrNo) : Sean Connery and his successors/ Music by John Barrry
https://www.youtube.com/watch?v=ye8KvYKn9-0
Come September (Rock Hudson)/Music by Hans Zimmer/Bobby
https://www.youtube.com/watch?v=RhJaVvyanZk
Dear KCS,
Happy Birthday. May God bless you with long, happy and prosperous life.
Regards
Re-capping Murali's Iru Malargal Review here.
Iru Malargal - A Black and White poem on celluloid, I would say. Even after 40 years, it attracts you, absorbs you and makes it a compulsive view and I finished it in one go.
It talks about a man caught in between his lady love and his devoted wife and the upheavals in his life due to that forms the basis of this film.
NT and Padmini are studying(!) in the same class and they always have a fight on their hands. But NT is very much in love with Padmini and when they perform in a Dance - Drama competition at Madurai and later move on to Kodaikanal, he expresses the same. Padmini asks him to climb up a peak so that she will consider his love. NT suffers from Agoraphobia (fear of heights) and he feels giddy while climbing up and almost swoons down when Padmini realises the problem and she accepts his love.
Back home, NT has a cousin residing at his house (Murai Penn) played by KRV who takes care of the the entire household works as her parents are no more and NT's mother had also passed away. She is so fond of NT that she would do anything for him. She has a desire to marry him and NT's father (Nagaiah) being her uncle also wants the marriage to take place. But KRV accidentally comes to know of the love between NT - Padmini and changes her mind. Nagaiah asks NT to marry her but he refuses revealing that he is in love with another girl. His father becomes furious and starts looking for another bride groom to marry KRV.
Meanwhile Padmini leaves for her Brother's place. He is the only relative of her and she goes there to obtain his permission. She informs NT that she would be sending a letter on a particular date (Oct 10th). NT waits for her letter. The day comes and letter arrives. Alas! Padmini informs that she is getting married to another person as she could not go against the wishes of her brother. That literally shatters NT who becomes bed ridden.
But what actually happened was Padmini's brother, an Army Major gets killed in a road accident along with his wife and his three children have nobody left to look after other than their aunt Padmini. She decides to renounce her love and take care of the children. So she tells a lie so that NT doesn't come after her.
NT unaware of all these things is very upst and dejected. KRV takes care of him all the time which leads to the unpleasent incident of the bridegroom who comes to see her, accusing her of having a relationship with NT. That makes Nagaiah go wild and when NT realises how much his father and his cousin had suffered because of him decides to marry KRV. Interval
The second half opens and we are told 6 years have passed by. NT is now a big successful businessman settled in Kodai and has a daughter (Roja Ramani) studying in a prestigious school there. Nagesh who was earlier the professor of the College wher NT - Padmini studied is the Principal of the College and Asokan is the Correspondent. Padmini who had put her nephews and niece in a boarding school has now joined in this school as a teacher with the recommendation of Nagesh and she is the class teacher for Roja Ramani. KRV makes her accept to take Private tuition for her daughter and she comes home or taking classes.
Eventually the meet between the old love flames happens and that starts an emotional upheaval in NT and Padmini's lives. The Family life of NT - KRV also takes a beating and the child being a witness to a emotion charged meet between her father and teacher is also physcologically affected. Added to that the correspondent who has an eye on Padmini spells trouble for her by getting her dismissed from service because she has not played ball to him.
Seeing things going out of hand, NT and Padmini decide to meet up and this is overheard by KRV who also decides to leave NT's life as she feels that Padmini should take her rightful place. In a place in the hill where once they expressed their love the old lovers meet up and Padmini asks NT whether he is ready to renounce everything including his wife and daughter and come with her. What NT replies paves the ending of the story. Of course no prizes for guessing. It is within the conventional cultural parmeters but your heart feels for the lead characters.
As for as Sundar character of Iru Malargal is concerned, NT had given out a solid but subdued performance. He portrays two different faces of the character. In the first half he is all agile and brings out a person madly in love with the girl of his liking. Second half shows him as a matured family man and a successful entrepreneur and later when he is torn between the two women, the turmoil he undergoes and how he expresses them!
The slim looking youngster starting of with the majestic Madhavi Pon Mayilal steals your heart. The gait, the pose and the silmisham he indulges in during the song all make you start liking the person. The way he climbs up the hill and his confession of the fear (again he proves he is beyond any hero as for as the image factor is concerned. Remember this was in 1967 when image mattered a lot)
The scene where he meets Padmini in the night at Kodai when he expresses his desire to be with her always, you should see his body language. Again Mannikka Vendukiren brings out the best in him. Cut to Madras, he is the son who is little hesitant to stand before his father and speak. He is a person who is loved by his cousin but she is afraid of him. When his father asks him something he replies and it is not audible to his father. "Enna Sonna-e" , NT " naan enna sonnen " endru varthaiyai mendru muzunguvathakattum, when KRV takes care of everything " Shanthi, en melathan unakku evvallu akkarai" atharkku udane KRV " Athu ungalukku theriyutha Athhan" -nu kettavudan dharmasangadamana oru mugabhavam kattuvar, class!
After refusing to marry KRV, later NT would ask her " en mela unakku viruppama"? She would reply" Enakku viruppam than" . Not expecting an answer like this, he would fumble for words, would not face her and try to say something. Seeing his embarrassment, KRV would say " Neega ennoduiya Mama pillai engiradhanale naan ungalai kaadhalikkanum, kalyanam pannikkanum-nu kattayam illaye". On hearing this his face would change and the happiness would return. Again a class act.
Waiting for the letter on the D-day, NT room-kkum balcony-kkumaga nadappar. Postman varuvathai ethirparthu alaipayum ullathai avar velipaduthum vitham abaram. Letter kaiyil kidaithathum mugathil sirippum santhosamum thandavamada avasara avasaramai letter-i kizhithu padikka arambippar. Dialogue-a illammal andha face konjam konjamaga maaruvathai avar velipaduthuvai paarka vendume,wow! Since what is written is not registering in,he will ask KRV " Indha letter! letter! konjam padi". She would start reading loud and now his reaction , Great!
In the second half presiding over the school function, he would ask KRV to speak and when she delivers a neat speech, the astonishment and wonder that you can see on his face would be so natural. The Maharaja song would bring out the child in him. Once he meets Padmini his body language would undergo a complete change. Especially the scene where he goes to Padmini's house along with Roja Ramani where he would literally hurt her with his outpour is a treat to watch. His face would suddenly undergo a change when he realises his daughter had been watching him and how well he hides it and try to look calm.
Same sort of scene when again he confronts Padmini in the hills and this time Asokan interferes. Incensed by the teasing reamark made by Asokan, he loses his cool and slaps him. Again you can watch a range of expressions criss crossing his face.
Finally thinking that he is talking to KRV, he opens out his heart in his bedroom only to realise that he had been talking to Padmini instead and when she leaves informing him to meet her next day, he finds to his dismay that indeed KRV also had listened to their dialogue and again caught in between, the face again speaks.
To make it short, NT is at his best. Padmini carries out her role well but KRV as the all loving cousin initially and dedicated wife later surprises you with her performance without resorting to her customary melodramatic presentation which later came to be associated with her. Nagesh and Manorama provide the comic relief with Asokan making a brief appearance doing well (After Karnan, Asokan did only 3 films with NT. Kandhan Karunai, Iru Malargal and Uyarnndha Manidhan).
ACT (responsible for the story also), his second film with NT had done a good job. Surprisingly he steers clear of customary cliches. When NT agrees to marry KRV, the scene ends with a nadaswara melam and that's it. Same way when Roja Ramani is introduced, at the end of the scene, NT tells her "Thatha-kku Good night sollittu po", Roja Ramani wishes good night to the photo of grand father hanging on the wall with a garland. Same way in the scene before climax, KRV having asked Padmini to wait in the bedroom goes in to fetch the letter. Meanwhile NT comes in and he opens up thinking he is speaking to KRV. When Padmini runs away, NT finds the old letter written by Padmini and a cup of coffee on the table thus by indicating that KRV had overheard all the conversation. Good work ACT ! When talking about him, I always admire his courage to face competition. Knowing well that this is going to be released along with Ooty Varai Uravu, a rollicking entertainer, he went ahead and released and was rewarded with a 100 days run. (Of course ACT again repeated later this act twice when he again released Engirundho Vandhal [though a Balajee film] along with Sorgam and then released Bharatha Vilas just one week ahead of Raja Raja Chozhan and remember he met with success every time). Another scene where he again stuck to what the story demanded was the scene where NT slaps Asokan. Though anybody would have loved to include a fight there, he clearly avoided. (I remember when I watched it as an elementary school kid during it's first release, I was a bit dissapointed that there was no fight in this scene).
Last but not the least the combo of MSV - Vaalee. Amazing stuff. I am not a well versed in music to go into the nuances of the songs but they are all ever green hits. Again the art of Ventriquilosim had been used in 1967 itself in the song Maharaja oru Maharani song before it was used on a larger scale in Avargal 10 years later. Another interesting info about this song is Shoba Neelakantan who later became Shoba Chandrasekar (Yes, mother of Vijay) had sung for Roja Ramani. Ella paadalkalum then kinnathil thoithu eduthavai.
Madhavi Pon Mayilal
Mannikka Vendukiren
Velli Mani Osaiyile
Maharaja oru Maharani
Kaduval thandha Iru Malargal
Annamitta Kaigalukku (See the writing of Saradha about this song in Vaalee's thread)
It was a pleasure watching this movie and writing about it here.
Thanks to Murali&Joe in earlier postings.
நடிகர் திலகம் பற்றி மோகன் லால்
(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக் குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.
சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.
சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.
சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார்) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.
இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .
வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை .ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .
மோகன்லால்
அன்பு kcs சார்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1959
கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது
1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.
ஊர் - திருவனந்தபுரம்
2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்
சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.
3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.
4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.
[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].
5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.
6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143
(முன்னைய பதிவொன்றிலிருந்து)
நன்றி முரளி
http://i157.photobucket.com/albums/t...psf0aab467.jpg
http://i157.photobucket.com/albums/t...ps7c03fe42.jpg
http://i157.photobucket.com/albums/t...ps3308bb85.jpg
Dear KC Chandrasekaran Sir,
Wish you many more happy returns
100 Days Films List
Film Name /
Place Name(s)
(1952-1960)
Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai
(1961-1970)
Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli
(1971-1980)
Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai
(1981-1990)
Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai
(1991-1999)
Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa
கோபால்,
இரு மலர்கள் பற்றிய என்னுடைய பதிவை [2007] மீள் பதிவு செய்ததற்கு நன்றி. இரு மலர்கள் பற்றி யார் எப்போது பேசினாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது இங்கே அனைவருக்கும் தெரியும். சென்ற வருடம் [2013 அக்டோபரில்] அதே இரு மலர்கள் பற்றிய என் மீள் பதிவு. அது முதல் பதிவை விட அதிகம் பிடிக்கும். காரணம் அதில் மூழ்கி எழுதியிருப்பேன். அது இதோ.
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part I
ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.
25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.
மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.
அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].
நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.
இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.
(தொடரும்)
அன்புடன்
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part II
முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்
அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.
அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.
மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.
ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.
இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.
அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும்வரை
தவம் இருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!
மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.
அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோவில் சேர்ந்த ஒரு மலரும்
என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.
இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.
கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக
என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.
அதே போன்று இரண்டாவது சரணத்தில் .
தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.
ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.
அன்புடன்
PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்
இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967
எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.
பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.
PS 2: என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.
வாரிசு என்பது விசிட்டிங் கார்ட், உழைப்புதான் ஐடி கார்ட்: விக்ரம் பிரபு பேட்டி!
Vikram Prabhu believes in his hard work
அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் பெரிய இடத்து வாரிசு, விக்ரம் பிரபு, கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும் எந்த கிரீடத்தையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாமல் எளிமையாக இருக்கிறார். வாசலில் வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள், படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும் தயாரிப்பு நிர்வாகி, சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் அம்மா... இத்தனைக்கும் நடுவில் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுகிறார் விக்ரம் பிரபு.
* யாரை பார்த்து இம்ப்ரஸாகி நடிக்க வந்தீர்கள் அப்பாவா? தாத்தாவா?
நடிக்கிற ஆசையே முதலில் இல்லை. அப்படி நான் ஆசைப்பட்டிருந்தால் பத்து வருஷத்துக்கு முன்பே நடிக்க வந்திருக்கணும். அண்ணன் துஷ்யந்தனோடு வந்திருக்க வேண்டும். ஆர்வம் முதல்ல படிப்புல இருந்திச்சு. படிச்சு முடிச்ச பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிச்சப்போ சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு படம் இயக்கலாமுன்னு தோணிச்சு. அப்பாகிட்ட சொன்னேன் "பிடிச்சதை செய். ஆனா முழுசா கத்துகிட்டு செய்" என்றார். அமெரிக்கா போய் டைரக்ஷன் கோர்ஸ் படிச்சேன். திரும்பி வந்து விஷ்ணுவர்த்தன் சார்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன்.
அப்புறம் திடீர்னு நடிக்கணும்னு ஆசை வந்தது. அப்பாகிட்ட சொன்னேன். "நான் யார்கிட்டேயும் சிபாரிசு பண்ண மாட்டேன், நீயே சான்ஸ் தேடிக்கோன்னு சொல்லிட்டார். நானே ஒரு போட்டோ ஷூட் பண்ணி எங்க பி.ஆர்.ஓ டைமண்ட் பாபு சார்கிட்ட கொடுத்தேன். அப்பதான் பிரபு சாலமான் சார் கும்கி படத்துக்கு புதுசா ஒரு ஆள் தேடிக்கிட்டிருந்திருக்கார். அவர்கிட்ட போட்டோ போய் சேர்ந்ததும் வீட்ல என்னை வந்து பார்த்தார். "கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க. ஆனா இது யானையோட கதை ரிஸ்க் இருக்கு"ன்னு சொன்னார். "நடிக்கணும்னு வந்துட்டா புலிகூட வேணாலும் நடிக்க ரெடியா இருக்கணு"ம்னு சொன்னார் அப்பா. இப்படித்தான் கும்கி வாய்ப்பு வந்தது.
* வாரிசுங்ற அடையாளம்தான் சினிமாவுக்கு கொண்டு வந்ததுன்னு சொல்லலாமா?
கண்டிப்பாக, முதல் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு சிவாஜியோட பேரன், பிரபு மகன் என்கிற அடையாளம் ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த படத்துக்கு நான் பட்ட கஷ்டங்கள் உழைப்புதான் அடுத்த படங்களை வாங்கிக் கொடுத்துச்சு. இப்ப வரைக்கும் கொண்டு போய்கிட்டிருக்கு. விக்ரம் பிரபு கேரக்டருக்காக கடுமையாக உழைப்பார்னு சொல்றாங்க பாருங்க அதுதான் என்னோட ஐடி கார்ட். அதை எப்போதும் கையில வச்சிக்குவேன்.
* கும்கி படத்துல யானை பாகனா நடிச்சிட்டு அடுத்த படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாயிட்டீங்களே-?
இப்பவும் நான் என்னை ஆக்ஷன் ஹீரோன்னு நினைத்துக் கொள்வதில்லை. அந்த கதை என்ன கேட்டுச்சோ அதைச் செய்தேன். அரிமா நம்பியும் அப்படித்தான். ஒரு சராசரி இளைஞனோட கோபத்தைத்தான் ரெண்டு படத்துலேயும் காட்டினேன். சினிமாவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தியிருப்பேன் அவ்ளோதான்.
* உங்க நடிப்பு பற்றி அப்பா என்ன சொல்றார்-?
நடிப்பை பாராட்டுவார். கும்கி பட ஷூட்டிங்கப்போ அவரோ அம்மாவோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரலை. நான் படுற கஷ்டத்தை கேள்விப்பட்டு அதை நேர்ல பார்க் அவுங்க விரும்பல படத்தை பார்த்துட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னோட டான்ஸ்ல தான் கொஞ்சம் அவுங்களுக்கு குறை இருந்தது. இப்போ சிகரம் தொடுவில் என்னோட டான்ஸ் பாத்துட்டு அதுலேயும் திருப்தி அடைஞ்சிட்டாங்க.
* வெள்ளைக்கார துரையில் காமெடி பண்றீங்க போல..?
நடிப்பு காட்டியாச்சு, ஆக்ஷன் பண்ணியாச்சு அடுத்து காமெடிதானே. சிகரம்தொடுவில் ஒரு போர்ஷன்ல காமெடி பண்ணியிருக்கேன். வெள்ளைக்கார துரையில் முழுநீள காமெடி. கதையில் காமெடி நிறைய இருந்தாலதான் அந்த படத்தையே ஒத்துக்கிட்டேன். ஒரு வித்தியாசமான விக்ரமை அந்தப் படத்துல பார்க்கலாம். காமெடியிலேயும் ஜெயிச்சாத்தான் என்னை முழு நடிகனாக வீட்டுல ஒத்துக்குவாங்க. மக்களும் ஒத்துக்குவாங்க.
* ஏ.எல்.விஜய் படம் பற்றி...?
இப்பதான் படம் ஆரம்பிச்சிருக்காங்க... கதை உள்ளிட்ட மற்ற விஷயங்களை இயக்குனர்தான் சொல்லணும். இதுவரை நடித்த படங்கள்லேருந்து வித்தியாசமான ஜானர்ல பண்ணற படம். என்னோட லுக்கும் வித்தியாசமாக இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் அதை மட்டும் சொல்லிக்கிறேன்.
* பார்ன் இன் சில்வர்பூன் நீங்க. லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணாம ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கீறங்க?
அன்னை இல்லத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு இல்லையா... அதை தொடர வேண்டாமா? தாத்தாவோட உழைப்பை நினைச்சு பார்த்தா நானெல்லாம் அதுல கால் தூசுக்குகூட வரமாட்டேன்.
விடைபெற்று திரும்பினார் விக்ரம் பிரபு. நடையில் அப்படியே நடிகர் திலகத்தின் சாயல்.
Courtesy: Dinamalar
கம்பீரத்தின் ஒட்டுமொத்த உருவமாய் கணேசர்
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். கணேசனின் கணேச வணக்கம்.
https://www.youtube.com/watch?v=IWZB-XkYXFU
Enjoy the song from NT's super hit movie Pazhani
http://youtu.be/i7wZg2jW2ag
Fantasic Duet from the Movie Annai Illam. Enjoy the chemistry between NT and Devika
http://youtu.be/UdHkw4ZQo2E
Enjoy the super song from NT's Savale Samali
http://youtu.be/FSdL74sUCNE
Dedicating this song to Mr Murali Sir for his wonderful article on Iru Malargal
http://youtu.be/3iNa9AA81zI
One more for Mr Murali
http://youtu.be/RpgUkozdBpI
Unforgettable Melody from NT's Pesum Deivam.
http://youtu.be/KBeJx7lzzY0
நடிப்புலகின் நிரந்தர மூலவர் நடிகர்திலகத்தின் திரிவழி புகழார்வலர்கள் அனைவருக்கும் முழுமுதற்கடவுள் கணேசரின் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
https://www.youtube.com/watch?v=chZOctKQJQ0