திருப்பதி போனா திருப்பம்!
http://i62.tinypic.com/209jb6t.jpg
http://i58.tinypic.com/28cd3zp.jpg
http://i60.tinypic.com/n2idkm.jpg
சினிக்கூத்து 24th August 2014
Printable View
திருப்பதி போனா திருப்பம்!
http://i62.tinypic.com/209jb6t.jpg
http://i58.tinypic.com/28cd3zp.jpg
http://i60.tinypic.com/n2idkm.jpg
சினிக்கூத்து 24th August 2014
http://i58.tinypic.com/289k9om.jpg
6000வது மைல்கல் கடந்த ராகவேந்திர சார் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.
மக்கள் திலகத்தின் ''மன்னாதி மன்னன் '' - 55வது ஆண்டு துவக்கம்
கவியரசரின் கை வண்ணத்தில் மெல்லிசை மன்னர்களின் இனிய பாடல்களுடன் மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பில் வந்த தீபாவளிபடம் .மக்கள் திலகத்தின் பாரத நாட்டியம் இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும் . மாபெரும் வெற்றி படம் .உன்னத காவியம் .மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் .
எப்படி புரியும் ? திரைப்படம் என்பது வியாபாரம் .யார் வேண்டுமானாலும் லாபத்தை தரும் வியாபாரத்தில் இறங்கி
வெற்றி காணலாம் . எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மூலம் வெற்றிகளை குவித்தார்கள். வளமோடு வாழ்ந்தார்கள் .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழின் மீது உங்கள் தயாரிப்பாளர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் ,புத்தக பதிப்பாளர்கள் நம்பிக்கை வைத்தார்கள் . வெற்றிகள் கண்டார்கள் . இதுதானே வரலாறு .நல்ல மனது படைத்த உங்கள் ரசிகர்கள்
பலர் இன்னமும் எம்ஜிஆர் மீது பாசம் வைத்து உள்ளது அறிந்து அன்புடன் அவர்களை நாங்கள் அழைக்கிறோம் .
எங்களுக்கு ஜாதி - மொழி - இன வெறி கிடையாது . மனித நேயம் ஒன்றே எங்களுக்கு தெரியும் .
பொய்யான ரசிகர்களாக நீங்கள் சிலர் இருப்பதால்தான் இன்னமும் உங்கள் குணத்தை மாற்றாமல் நொந்து , சாடிஸ்ட் ஜாம்பவனாக பரிதாபமாக காட்சி அளிக்கிறீர்கள் .
இனிமேலாவது ஜாதி - மொழி -பிரிவினைகளை உருவாக்காமல் ''மனிதனாக'' வாழ கற்று கொள்ளுங்கள் .
உங்கள் உயரத்திற்கு நீங்கள் வளைந்தால் [குணத்தில்] பார்க்க சகிக்காது. எனவே இனிமேலாவது நிமிர்ந்து நில்லுங்கள் [எண்ணத்தில் ]
அப்புறம் பாருங்கள் .நாங்கள் எல்லோரும் உங்களுக்கு தோள் கொடுப்போம் . மலைத்து போவீர்கள் .
நண்பரே இப்போதாவது புரிந்ததா ?
வாழ்த்துக்கள் அளித்த அன்பு நண்பர் சைலேஷ்பாசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
உனக்கு மட்டுமே தெரியும்!
சாரதா ஸ்டுடியோவில் “மகாகவி காளிதாஸ்” படப்பிடிப்பு பிரமாண்டமான செட்டில், பிரமக்க வைக்கிற அளவில் கைதேர்ந்த சிற்பியால் நிர்மாணிக்கப்பட காளிசிலை. அந்தச்சிலை முன்பு நடிகர் திலகம் சிவாஜி, பாடுவதாக காட்சி. சிலரின் கவனக்குறைஆல் காளிசிலையில் தீப்பிடித்து செட் எரிந்து சாம்பலாகிறது. அந்தத் தீ விபத்தில் டெக்னீஷியன்கள் ஐந்து பேர் எரிந்து இறந்து விட்டார்கள்.
இந்தச் சோகச் செய்தி, வேறொரு படப்பிடிப்பில் இருந்த வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விபத்தில் இறந்தவர்களைப் பார்க்க விரைகிறார் வள்ளல்.
உயிரிழந்த டெக்னீஷயன்களை, ஏ.வி.எம். சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு யார் யாரெல்லாமோ ஆறுதல் சொல்கிறார்கள். அதில் அவர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. ஆனால், பொன்மனச் செம்மலைப் பார்த்தவுடன் அவர்களுக்குப் பீறிட்டு வருகிறது அழுகை.
வள்ளல் “நானிருக்கிறேன்” என்று வார்த்தைகளால் சொல்லாமல் விழிகளால் சொல்லி, அவர்களின் விழிநீரைத் துடைக்கிறார். பாரம் குறைந்தவர்களாய் அவர்கள் பாடை சுமந்து செல்கிறார்கள். இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த பொழுது இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்க அந்தப் பட சம்பந்தப்பட்டவர்களில் இருந்து, அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் வரை, எல்லோரிடமும் நோட்டை நீட்டி பணம் வசூல் செய்கிறார்கள்.
அவரவர் தகுதிக்கேற்பவும், தாராள மனதிற்கு ஏற்பவும், ஐம்பது ரூபாயில் இருந்து ஆயிரம், ஐயாயிரம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்து எழுதியிருக்கிற அதகி பட்சத் தொகையில் ஐம்பது மடங்கு கூட்டி எழுதுவாரா! நூறு மடங்கு கூட்டி எழுதுவாரா? என்கிற எதிர்பார்ப்பில் நோட்டை நீட்டியவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வள்ளல் எதுவுமே எழுதாமல் விட்டு விடுகிறார்.
வந்தவர்களுக்கெல்லாம் வியப்பு, எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிற வள்ளலா இப்படிச்செய்து விட்டார். வறியவர்கள் வாசல் தேடி வராத நாட்களில் , அவர்கள் வீட்டு வாசல் தேடிப் போய்க் கொடுக்கிற வள்ளல், கேட்டும், கொடுக்கவில்லையே என்று, தமக்குள் மட்டும் கேட்டுக்கொள்கிறார்கள்.
மறுநாள் ராமாவரம் தோட்டத்து மாடியில் இருந்த மக்கள் திலகம், “அவர்கள் வந்து விட்டார்களா?” என்று உதவியாளரைக் கேட்கிறார். வந்துவிட்டதாகச் சொல்கிறார் உதவியாளர். பசித்தவர்களுக்கு படியளக்கிற வள்ளல், படியிறங்கி வருகிறார். இறுதிச் சடங்கு முடிந்து தோட்டத்துக்கு வந்த வள்ளல், விடிவதற்குள் இறந்தவர்களின் வீட்டு விலாசம் தேடி, காலையில் சந்திக்க உதவியாளரிடம் உத்தரவிட்டது, எவருக்கும் தெரியாது.
ஐந்து குடும்பங்களிருந்து வந்த அனைவருக்கும், அமுது படைத்து அமர வைக்கிறார். யார் யாருக்கு என்ன வேண்டும்? படித்திருந்தால் வேலை, படிக்காதிருந்தால் தொழில் என்ற அடிப்படையில் அவர்களைத் தீர விசாரிக்கிறார். அதன்படி வாழ்க்கையில் நிரந்தர வருமானம் கிடைக்க சிலருக்கு வேலையும்,சிலருக்குத் தொழில் துவங்க கருவிகளும் கொடுக்க ஏற்பாடு செய்தோடு, ஒவ்வொரு குடுபத்திற்கும், ஐயாயிரம் ரூபாயும் கொடுக்கிறார். நேற்று வரை வள்ளல் மீது வருத்தத்துடன் இருந்த அவர்கள் சோகம் மறந்து சுகம் பெறுகிறார்கள். வேதனை தீர்ந்து விளக்கேற்றி வைத்த வள்ளலை வாயார, நெஞ்சார வாழ்த்திக் கொண்டே அவர்கள் விடை பெறுகிறார்கள். அந்த இறுதி ஊர்வலத்திலேயே கொடுக்காமல், ஏன் இவ்வளவு சிரம்ம் எடுத்துச் செய்ய வேண்டும் என்று உதவியாளர் யோசிக்கிறார்.
மற்றவர்கள் யோசிப்பதைக் கூட யூகம் செய்து கொள்ளும் வள்ளல், உதவியாளரிடம்-
“நேற்று நடந்த தீ விபத்தில் வீடு மட்டும் இழந்திருந்தால், வீடு கட்டப்பணம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் வீட்டுத் தலைவனையே எதிர்காலத்துக்குப் பயன் அளிக்காது. அவர்களுக்கு ஓரளவுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்தால்தான், அவர்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும். அதனால், அவர்களின் தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதற்காகத் தான் நேற்று பணமாகக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் வள்ளல், வள்ளலே! பசிக்கிறவனுக்கு மீன் கொடுப்பது எப்போது, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எப்போது என்று, உனக்கு மட்டுமே தெரியும்!
“vallal varalaru ''
நுட்பமான நடிப்பு
அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.
வில்லன்களைவிடக் குறைந்த பணபலம் கொண்டவர் என்றாலும் மக்களின் அன்பும், விதவைத் தாயின் ஆசீர்வாதமும் தனது பலம் என்று துணிச்சலாகச் செயல்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் அவருக்கு அமைந்தன. அந்தத் துணிச்சலுடன் பதற்றம் எதுவுமில்லாமல் வில்லன்களிடம் நம்பிக்கைப் புன்னகையுடன் அவர் பேசும் வசனங்கள் அவரது அரசியல் செல்வாக்குக்கே அடித்தளமாக அமைந்தன. அந்தக் காட்சிகளில் அவர் தனது எல்லையைத் தாண்டி ஆர்ப்பாட்டமாகப் பேசமாட்டார். “நாகப்பா..நல்லா கேட்டுக்க! உன் அக்கிரமங்கள நா ஒரு நாளும் பொறுத்துக்க மாட்டேன்” என்பதுதான் வில்லன்களுக்கான அவரது அதிகபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் அவர் வீணாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். வீர வசனங்களை அவரது கைதான் பேசும். சண்டைக் காட்சிகளில் வேகமும் கோபமும் அற்புதமாக வெளிப்பட்டுவிடும்.
Article from the hindu
பிம்பமும் நிஜ வாழ்வும்
அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
Article from the hindu
முதலில் நம் தலைவருக்கு என் பணிவான வணக்கங்கள். மற்றும் மூத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நமஸ்காரம்
நண்பர்களுக்கு வணக்கம்,
வினோத் சார், எனக்கு திரியில் தங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நினைவு வந்தது, மன்னாதி மன்னன் படத்தின் 55வது ஆண்டு துவக்கம் என்பது. எப்படித்தான் நினைவில் வைத்திருக்கிறீர்களோ? நினைவுபடுத்தியதற்கு நன்றியும், தங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுக்களும். படத்தைப் பற்றிய தங்களது சுருக்கமான கருத்துக்கள் நன்று.
எப்படிப் புரியும்? என்று புரியாதவர்களுக்காக தங்களின் விளக்கம் அபாரம். ரிக்க்ஷாக்காரன் படத்தில் தவறு செய்யும் சக தொழிலாளியை விரட்டுபவரிடம் ‘தவறு செய்பவர்களை துரத்தாதே; திருத்து’ என்று தலைவர் கூறிய கருத்தை அடியொற்றி நடக்கிறீர்கள்.
சினிக்கூத்து பத்திரிகையில் வெளியான திரு.சைலேஷ் பாசு அவர்கள் பதிப்பித்த ‘தன்னம்பிக்கை வேறு, திமிரு வேறு’ பதிப்பு அருமை.
செல்வகுமார் சார், நீரும் நெருப்பும் படத்தின் வட்ட வடிவிலான பாட்டு புத்தகம் பொக்கிஷம்..
ராமமூர்த்தி சார், நீரும் நெருப்பும் திரைப்படம் வேலூரில் 2 தியேட்டரில் வெளியானதை தெரிவிக்கும் தங்கள் பதிப்பித்துள்ள நோட்டீசும் அப்படியே.
குறிப்பாக, திரு. யுகேஷ்பாபு அவர்கள் நீரும் நெருப்பும் திரைப்படம் குறித்து செய்துள்ள விமர்சனம் பிரமாதம். இதைத்தான் எதிர்பார்க்கிறேன். திறனாய்வு என்பதெல்லாம் நம்மைப் போன்ற எளியவர்களை பயமுறுத்தும் மெத்தப் படித்தவர்களின் வார்த்தைகள். தலைவரின் நடிப்பையும் ஸ்டைலையும் காட்சி அமைப்பையும் பார்த்து ரசித்து கைதட்டி, விசிலடித்தோமே எந்த காரணத்துக்காக அப்படி செய்தோம் என்பதை கூறினால் அதுதான் திறனாய்வு. தொடருங்கள்.
மன்னாதி மன்னன் திரைப்படத்தின் 55வது ஆண்டையொட்டி அந்தப்படத்தை அலச வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை விட நேற்று சன் லைப் தொலைக்காட்சியில் பார்த்த பறக்கும் பாவை (தலைவர் என்ன ஸ்மார்ட்) படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஆசை பெரிதாக உள்ளது. விரைவில் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
மன்னாதி மன்னன் படதினத்தையொட்டி, அந்தப் படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ? பாடல் பற்றி நான் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட கருத்துக்களை அடுத்த பதிவில் மீள்பதிவு செய்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.
‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:
‘ஆடாத மனமும் உண்டோ?’
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
http://i1273.photobucket.com/albums/...ps303fb987.jpg
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது.
அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...
அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி .வணக்கம்...........கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மன்னாதி மன்னன் - படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை மிக அழகாக அலசி நீண்ட பதிவை தங்களுக்கே உரிய
பாணியில் விவரித்து இருப்பது மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது .
நாளை மக்கள் திலகத்தின் இதய வீணை - உங்கள் இதயத்திலிருந்து புறப்படும் வீணையின் நாதத்தை கேட்க
[படிக்க] காத்திருக்கிறோம் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சில காட்சிகளில் நடித்து நின்று போன "அண்ணா நீ என் தெய்வம் " திரு. பாக்யராஜ் அவர்களால்' "அவசர போலீஸ் 100 " திரைப்படமாக உருவெடுத்து வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
முதல் வெளியீடு : 17/10/1990.
இத்திரைபடத்தை நான் அலங்கார் திரைஅரங்கில் முதல் நாள் மாலை காட்சியும், 2 வது வாரம் மகாராணியில் மாலை காட்சியும் கண்டு களித்தேன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சில காட்சிகள்/சில பாடல்களில் மட்டுமே தோன்றினாலும் அந்த காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதல் வெளியீட்டில் "அவசர போலீஸ் 100" வசூல் விபரம்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களின் பதிவுகள் மிக பிரமாதம். பளிச் . நன்றி. தொடரட்டும்.
நண்பர் திரு. தர்மராஜன் வெங்கட்ரமணி அவர்களின் வரவு
நல்வரவு ஆகுக . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
நல்லாசியுடன் தங்களின் மேலான விவரங்களுடன் கூடிய
செய்திகள் /புகைப்படங்கள் /அரிய பல தகவல்கள் அடங்கிய
பதிவுகள் சிறப்புடன் அமைய என் சார்பாகவும், அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்.
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுடைய பதிவுகள் அற்புதம். புரட்சி தலைவரின் வள்ளல் தன்மை, நடிப்பு திறன்
ஆகியன பற்றிய செய்தி தொகுப்புகள் அருமை.
இன்று அவசர போலீஸ் 100 பற்றிய செய்திகள் பதிவிட்டுள்ளேன்.
விரைவில் நீரும் நெருப்பும், மன்னாதி மன்னன் , இதய வீணை , காதல் வாகனம் பற்றிய செய்திகள் /புகைப்படங்கள்
ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன்
பற்றிய விமர்சனம் பாராட்டத்தக்கது . மெச்சுகிறேன் உங்கள் ரசிப்பு தன்மையை. மிகவும் வித்தியாசமாக அலசி ஆராய்ந்து கருத்துகளை வெளியிடும் பாங்கினை வரவேற்கிறேன் . உண்மையிலேயே அசத்துகிறீர்.
நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் நீரும் நெருப்பும் பாட்டு புத்தகம், மற்றும் அண்ணா தி. மு.க என்ற பேரியக்கத்தின் வரலாறு பற்றிய பதிவுகள் , அரிய புகைப்படங்கள் பதிவுகள் அருமை.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் நீரும் நெருப்பும் பட
விமர்சனம் மற்றும் இதர பதிவுகள் நன்று.
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் மனதுக்கு
இதம்.
நண்பர் திரு. ராகவேந்திரா அவர்களே , தங்களின் ஆண்டவன் கட்டளைக்கு இணங்க , ஆறாயிரம் பதிவுகள்
முடித்து தொடரும் தங்களுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன்.
சன்லைப் தொலைகாட்சியில் புரட்சி தலைவரின் படங்கள்
--------------------------------------------------------------------------------------------
15/10/2014- இரவு 7 மணி - தொழிலாளி
16/10/2014- காலை 11 மணி - குடியிருந்த கோயில்
18/10/2014- இரவு 7 மணி - பறக்கும் பாவை.
வசந்த் தொலைக்காட்சி
-------------------------------------
19/10/2014 பிற்பகல் 2 மணி - தாய்க்கு பின் தாரம்.
ஜெயா தொலைக்காட்சி.
-------------------------------------
17/10/2014 பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்.