http://i58.tinypic.com/8wip9k.jpg
Printable View
RARE PAPER ADVT
http://i59.tinypic.com/33otrfs.jpg
இனிய நண்பர் திரு சத்யா அவர்கள் கை வண்ணத்தில் மக்கள் திலகம் படங்கள் கண்ணை பறிக்கிறது . அத்தனை படங்களும் அபாரம் . தொடர்ந்து அசத்துங்கள் . .
‘முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்?’
தலைவர் நடித்த பணம் படைத்தவன் திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்... எனக்கு மட்டும் என்ன? நம் எல்லாருக்கும்தான். ‘கண்போன போக்கிலே கால் போகலாமா?.....’ அருமையான பாடல். தலைவர் இந்த பாடலில் வெள்ளை கோட், பிளாக் பேண்ட்டில் மிக அழகாக இருப்பார். வழக்கமாக தலைவரின் கொள்கை பாடல்கள் உற்சாகமாக ஆடி, குதிப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடல் ஆழ்ந்த கருத்துக்களும் கொள்கைகளும் இருந்தாலும் மிகவும் அமைதியான பாடல். இந்த பாடலுக்கு ஏற்க வகையில் தலைவரும் அமைதியாகவும் ஆழமாகவும் நடித்திருப்பார். வயலின், அகார்டியன் வாத்தியங்களை அவர் இசைப்பது, அந்த வாத்தியங்களில் தேர்ந்த அனுபவம் பெற்ற ஒரு இசைக் கலைஞர் இசைப்பது போல இருக்கும்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று இந்த பாடலில் வரும், தான் பாடி நடித்த வரிகளுக்கு தானே இலக்கணமாகிப் போனவர் நம் தலைவர் மட்டுமே. இந்த பாடலும், குறிப்பாக இந்த பாடலில் வரும்...
‘பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்’
என்ற வரிகளும் இன்று காலை என் மனதில் ஓடியது. அதற்கு காரணம், காலையில் இன்று படித்த ஒரு செய்தி. அந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு திருமணம் நின்று போன வருத்தம் தரும் செய்தி அது. அதற்கு காரணம், இன்றைய புது நாகரிகம். அலிகாரில் ஆடம்பரமான ஒரு திருமண மண்டபத்தில் உற்றாரும் சுற்றமும் புடைசூழ அமர்க்களமாக திருமண விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது ஒரு மண்டபம். திருமண விழா என்றாலே இப்போது மது விருந்தும் ஆட்டமும் என்றுதான் எழுதப்படாத விதியாகி விட்டதே.
அந்த வகையில், ஒரு கூட்டம் மகிழ்ச்சியை கொண்டாட ஆடியிருக்கிறது. சரி தொலையட்டும், ஆடிவிட்டு போகட்டும். அந்த ஆட்டம் வரம்பு மீறாமல், கண்ணியம் குறையாமல் இருந்தால் பரவாயில்லை. நமது கலாசாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைவதுதான் கொடுமை. ஆணும் பெண்ணும் கண்ணியமின்றி ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண், திருமணத்துக்கு தயாராக இருந்த மணமகனுக்கு முத்தம் கொடுத்ததோடு, அவரை கையோடு இழுத்து ஆட்டத்துக்கு கூட்டி வந்திருக்கிறார். அந்த பெண்ணும் மணமகனும் விரசமாக ஆடியுள்ளனர். இதைப் பார்த்த பெண் வீட்டார் தட்டிக் கேட்டதால் வாக்குவாதம் முற்றி திருமண வீடே போர்க்களமானது. இருதரப்பும் அடிதடியில் இறங்கியுள்ளனர்.
இந்த அவலங்களை பார்த்த மணப் பெண்ணும் அந்த மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார். கல்யாணம் வரையில் வந்து கடைசி நேரத்தில் நின்றுவிட்டால் பின்னர், தனக்கு கல்யாணம் நடக்குமா? என்றெல்லாம் யோசிக்காமல், பயப்படாமல் கண்ணியமின்றி மற்றொரு பெண்ணோடு ஆட்டம்போட்ட மாப்பிள்ளையை நிராகரித்த அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும். கடைசியில் அந்த திருமணம் நின்று போய்விட்டது.
பணம் படைத்தவன் திரைப்படத்தில் நாகரிகம் என்ற பெயரில் மேல்நாட்டு கலாசாரத்தில் சிக்கியிருக்கும் சவுகார் ஜானகி, கடைசியில் வேண்டாத சகவாசத்தால் கொலை செய்யப்படுவார். அப்போது,.... கண்போன போக்கிலே பாடலில் வரும்....
‘ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..’
என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்கும். நாகரிகம் என்ற போர்வையில் நமது கலாசாரத்தையும் அதுபோதிக்கும் உண்மைகளையும் உணராமல் போவோர்க்கு அந்த உண்மைகள் உதவுவதே இல்லை.
அதே பாடலில் தலைவர் பாடிக் கொண்டிருக்கும்போதே புடவை கட்டி, தமிழ் கலாசார தோற்றத்துடன் காட்சியளிக்கும் கே.ஆர்.விஜயா அந்த அரங்கிற்கு வர வெட்கப்பட்டு, சுவருக்கு பின்னால் மறைவில் நின்று கொண்டே பாடலை ரசிப்பதுபோல காட்டுவார்கள். கதைப்படி, கே.ஆர்.விஜயா ஒரு கிராமத்துப் பெண். அதனால், அப்படி காட்டியிருப்பார்கள்.
அதற்காக, பெண்கள் எல்லாரும் மூலையில் நின்று கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. (இங்கே நினைவு வருவதால் ஒரு விஷயத்தை கூறுகிறேன். கிடைக்கும் எந்த தகவல்களையும் பதிவிடுவோம். பகிர்ந்து கொள்வோம். பின்னால், எதற்காவது உதவும்) சிறு வயதில் சில வீடுகளில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு படத்தை பார்த்திருக்கிறேன்.
தியாகராஜ சுவாமிகள் என்று போற்றப்படக் கூடிய இசைமேதை. ராமபக்தியில் ஊறித் திளைத்தவர். அவரது பக்தியை மெச்சி ராமரே அவருக்கு சீதா, லட்சுமணர், அனுமாரோடு காட்சி அளித்ததாக பவுராணிகர்கள் கூறுவார்கள். அந்தக் காட்சியை விளக்கும் படம் அது. அந்த படத்தில் தியாகராஜ சுவாமிகள் அமர்ந்திருக்க, அவரது துணைவியார் ஒரு அறையில் இருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தபடியே, ராமரை வணங்குவது போல இருக்கும். அந்த அளவுக்கு பெண்கள் அடுக்களையை விட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பெட்டியாக இருந்த காலம் என்பதை அந்தப் படம் உணர்த்தும். இந்த தியாகராஜ சுவாமிகள் தமிழகத்திலே பிறந்து வளர்ந்தவர். அவரது சமாதி தஞ்சை அருகில் காவிரி ஆற்றில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகிய ஆறுகள் பிரிந்து ஐந்து ஆறுகள் இருப்பதால் திரு+ஐயாறு = திருவையாறு என்று வழங்கப்படும் இடத்தில் உள்ளது. தமிழகத்திலே பிறந்து வளர்ந்தவர் தியாகராஜர் என்றாலும் அவரது தாய்மொழி தெலுங்கு. அதனால், தனது தாய் மொழியான தெலுங்கிலேயே கீர்த்தனைகள் என்று அழைக்கப்படும் கர்நாடக இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். இதில் தவறில்லை. தமிழகத்திலே பிறந்து வளர்ந்து தமிழை அறிந்திருந்தாலும் தனது தாய்மொழி மீது அவருக்குள்ள மொழிப்பற்றை பாராட்ட வேண்டும். அதே நேரம், நம்நாடு படத்தில் ‘விழிபோல எண்ணி நம் மொழி காக்க வேண்டும், தவறான பேர்க்கு நல் வழிகாட்ட வேண்டும்..’ என்று தலைவர் பாடுவாரே? அதேபோல, தியாகராஜ சுவாமிகளுக்கு இருந்ததைப் போல, நாம் எங்கிருந்தாலும் நமக்கும் அந்த மொழிப்பற்று, தமிழ்ப்பற்று இருக்க வேண்டும்.
சரி. விஷயத்துக்கு வருகிறேன். அந்த காலத்தை போல பெண்கள் அடுக்களையில் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் சமானம். ஆனால், நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றுவதில் பெண்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.. ’ என்று நீதிக்கு தலைவணங்கு படத்தில் தலைவர் பாடும் வரிகளுக்கேற்ப, குழந்தைகளை வளர்த்து நல்ல குடிமகனாக உருவாக்குவது பெண்கள்தான்.
ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே. மேற்படி நிகழ்ச்சியில், மணமகனுக்கு முத்தம் கொடுத்து, அவரது கையைப் பிடித்து இழுத்து வந்து ஆட்டம்போட்டு திருமணம் நின்று போனதற்கு காரணமாக இருந்த அந்த புண்ணியவதி.... அந்த மணமகனுக்கு அண்ணியாம்(!?) என்னத்தைச் சொல்ல? நடந்த களேபரத்தில், ஆட்டம் போட்ட மணமகனுக்கும் இரண்டு அடி விழுந்தது என்பது ஆறுதல்.
‘முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்?
முன்னோர்கள் சொன்னார்கள், அது நாகரிகம்’
அந்த நாகரிகத்தை பின்பற்றுவோம்; நமது சந்ததிகளை பின்பற்றத் தூண்டுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது திரி 12 நாட்களில் 124 பக்கங்களையும் 12,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கண்டிருக்கிறது. பங்களிப்பு செய்தோருக்கும் பார்வையிட்டோருக்கும் நன்றிகள். திரியை தொடங்கி வைத்தவன் என்பதைத் தவிர, எனக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. ஏனென்றால் நான் வெறும் 6 அல்லது 7 பதிவுகள் மட்டுமே போட்டிருக்கிறேன்.திரு. எஸ்.வி.சார், திரு.லோகநாதன், திரு.சைலேஷ் பாசு, திரு.யுகேஷ்பாபு, திரு.ரவிச்சந்திரன், திரு.கலியபெருமாள், திரு.ரூப்குமார், திரு.ஜெய்சங்கர், திரு.வி.பி.சத்யா, திரு.கோவிந்தராஜ், உள்ளிட்டோரின் பங்களிப்புகளுக்கு கிடைத்த வெற்றி. பணிகள் காரணமாக திரு.செல்வகுமார் சார், திரு.ராமமூர்த்தி ஆகியோர் உடனடியாக பங்கேற்க முடியவில்லை.அவர்களும் வரும்போது திரியின் வேகம் இன்னும் கூடும்.
குறிப்பாக, சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு இந்த வெற்றி வேகத்தில் கணிசமான பங்கு உண்டு. திரி 124 பக்கங்கள் என்றால், அதில் 80க்கும் மேற்பட்ட பக்கங்கள் இவரது கைவண்ணமாகவே இருக்கும். நாம் எல்லாரும் அவருக்குத்தான் நன்றியும் வாழ்த்துக்களும் சொல்ல வேண்டும். நன்றிகள் திரு.முத்தையன். இவ்வளவு திறமையை கையில் வைத்துக் கொண்டு, எனக்கு திருப்தியில்லை, திரியில் இருந்து வெளியேறுகிறேன் என்று சொன்னீர்களே? நியாயமா? அப்படி நீங்கள் வெளியேறியிருந்தால் தலைவரின் அட்டகாசமான ஸ்டில்களையும் முகபாவங்களையும் பார்க்க முடியாமல் போயிருக்குமே? தொடர்ந்து அசத்துங்கள் சார்.
திரு.ஐதராபாத் ரவி சார் அவர்கள், ‘ஏன் என்ற கேள்வி..’ பாடலை வித்தியாசமான கோணத்திலும் சமூக சிந்தனையோடும் அலசியிருந்தார். நாங்கள் பார்க்காத கோணத்தில் அந்தப் பாடலை ரசிக்க முடிந்தது. தொடர்ந்து பதிவிட்டு எங்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள் சார். அனைவருக்கும் நன்றி. வெற்றிப் பயணம் தொடரட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி. சார்,
இந்தப் பட்டியலில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் இடம் பெற்றிருக்க வேண்டியவர். தலைவர் அவரை மேலவை உறுப்பினராக்க விரும்பினார். ஆனால், நிர்மலா ஏற்கனவே ஐ.பி. கொடுத்தவர் என்பதால் சட்டச் சிக்கல்கள் காரணமாக அவரால் எம்.எல்.சி.ஆக முடியவில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
குடும்பத்தலைவன் http://i60.tinypic.com/sp7jps.jpg
குலேபகவலி http://i58.tinypic.com/23m1xk6.jpg
குலேபகாவலி http://i57.tinypic.com/s3q8vt.jpg
குமரிகோட்டம் http://i61.tinypic.com/2iqfhbc.jpg
குமரிக்கோட்டம் http://i58.tinypic.com/2ur1oq0.jpg
மாடப்புறா http://i58.tinypic.com/156r0k4.jpg