http://i65.tinypic.com/xng8bm.jpg
Printable View
31.1.2016 அன்று ராமாவரம் மக்கள் திலகம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடைப்பெற உள்ள மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்த போது எடுத்த நிழற் படம் .
http://i66.tinypic.com/mt1kk6.jpg
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
http://s28.postimg.org/9ldaoc3dp/IMG...129_WA0014.jpg
Courtesy - facebook
School where MGR studied celebrates his birth anniversary
https://youtu.be/Xamr1HFU-68
The school in which MGR studied from 1922 to 1925 was once forgotten. After the leader's association with it became widely known, it started getting funds along with considerable attention. The school now has facilities such as smart classrooms.
On Sunday, people from far and wide and senior politicos from Kumbakonam garlanded the MGR statue erected at the school.
The primary school gets a steady stream of visitors round the year. On Kannum Pongal day, the school had over 5,000 visitors. According to the chairperson of the municipality Ratna Sekar, the school has a total of 82 children. She said it was given a makeover a year ago at a cost of Rs 60 lakhs. After the renovation, the 99th birth anniversary of MGR was celebrated in a grand manner by senior members of the Kumbakonam Municipality. Children from the school also participated, along with their parents, in the celebrations.
Kumbakonam is already known for greats such as mathematician Srinivasa Ramanujam. The school where MGR studied is just 10 buildings away from the House of Ramananujam Mathematics Centre. The chairperson said the school was set up over 100 years ago.
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான யானையடி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். படித்தார். இந்த பள்ளியில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியின் தரம், சுற்றுப்புறச்சூழல், பள்ளி அமைந்துள்ள இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னை க்விஸ்ட் சர்ட்டிபிகேசன் நிறுவனம் சார்பில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 என்ற தரச்சான்று வழங்க இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அதன்படி குடியரசுதினமான நேற்று இப்பள்ளியில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் க்விஸ்ட் சர்ட்டிபிகேசன் நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை நகரசபை தலைவி ரத்னாசேகர் மற்றும் சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் தண்டபாணி ஆகியோரிடம் வழங்கினார்.
இவ்விழாவில் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், “இந்த பள்ளியில் கடந்த 1 வருடத்தில் 8 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேடுகள், மாணவர்களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கத்திறன், மாணவர்களின் பழக்க வழக்கங்கள், பள்ளி கட்டிடங்களின் தரம், சுகாதாரம், சிறப்பு முதலுதவி பயிற்சி போன்ற பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .
Congratulations!
Thiru. Muthaiyan Sir, for Crossing abnormal 10,000 Postings.
Thiru. Ravichandran Sir for crossing valuale 5,000 postings
Thiru. Vinod Sir for crossing untouchable 13,000 postings.
Happy Birthday to our beloved brother Thiru. Sailesh.
புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி அவர்களின் ஆசியுடன் -
http://i65.tinypic.com/16atd03.jpg
இன்று பிறந்த நாள் காணும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மக்கள் திலகத்தின் மாறாத உண்மை விசுவாசியுமாகிய எங்கள் பாசத்துக்கும், நேசத்துக்கும், பண்புக்கும், அன்புக்கும் உரிய ஆருயிர் அண்ணன் திரு. முனியப்பா அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
அதே போன்று, இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களை, நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
கோவை ராயல்
திரை அரங்கில்
நாளை முதல் (31.01.2016)
மக்கள் திலகத்தின்
நடிப்பில்
சத்தியா மூவிஸ் தயாரிப்பில்
உருவான
காவல்காரன்
இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
13000 பதிவுகளை பதிந்து நமது திரியின் முதன்மை பதிவாளராக திகழும் அன்பு நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
A beautiful and joyous occasion when #MGR is seen chating with P.R. Bantulu (producer- directer, working with MGR in five films from Ayirathil oruvan) during a domestic function. The act of casually spreading the sandal (Santhanam) paste in his hands, even while talking to Bandulu is very natural. Photo: Kumar Rajendran.
Facebook : Ithayakkani S Vijayan
http://i64.tinypic.com/24mdxer.jpg
wish u happy birthday sailesh sir
புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா தேசிய விழாவாக கொண்டாட வேண்டும்!
================================================
உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் அரசியல், கலை, வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, வரலாற்று நாயகனாக 99வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடி இன்றும் என்றும் இதயங்களின் மனங்களில் வாழ்ந்து வருபவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன். அடுத்த ஆண்டு எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா.
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
காலங்கள் மாறினாலும் அழியாத புகழை என்றென்றும் பெற்றிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இன்றும் மக்கள் மனதில் இறவா புகழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இருபத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் இன்றும் உலகத்தமிழர் நெஞ்சங்களில் கோயில் கொண்டு நினைவிலும் நின்றிருக்கும் அவர் நினைவை மக்கள் போற்றுகிறார்கள் என்றால் அவர் தான் உண்மையான ஒரே மக்கள் தலைவர்.
பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக் கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.
குறிப்பாக எம்ஜிஆர், அசைக்க முடியாத முதல்வராக, யாராலும் தேர்தலில் தோல்வியடைய வைக்க முடியாத அரசியல் தலைவராக கோலோச்சிய தமிழகத்தில் இன்று அவரது 99வதுபிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் -இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் -அவரது பாடலைப் போலவே மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று மக்கள் திலகமாக மக்கள் தலைவராக இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.
ஆயிரம் பேர் தோன்றலாம் மறையலாம் மக்கள் மனதில் மறையாமல் நின்ற மாபெரும் தலைவன் மக்கள் தலைவன் மட்டுமே என்பதை எவராலும் எக்காலத்திலும் மாற்ற முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். எனவே தான் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால் தான் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.
உலகமெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவரது 99வது பிறந்த நாள் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது,
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற வெந்நிற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் தலைவர் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை.
உலகில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைகிறார்கள். அவர்கள் வாழும்போது, அவர்களை சமுதாயம் புகழ்வது, இயற்கையான ஒன்றாகும். ஆனால், அவர்கள் மறைந்தபிறகும், அவர்களை மறக்காமல், போற்றி புகழ்ந்து, நினைவில் வைத்து வணங்கும்போதுதான், அவர்களின் உண்மையான புகழ் நிலைத்து நிற்கும்.
அடுத்து வரும் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதரித்த திருநாள் நூற்றாண்டு விழாவாக அமையப்போகிறது. அவரது அவதரித்த திருநாளை நூற்றாண்டு விழாவாக தேசியத்திருவிழாவாகவும், உலக விழாவாகவும் கொண்டாக வேண்டுமென்பது இந்த உண்மையான பக்தனின் உற்சாகம் நிறைந்த சந்தோஷ ஆவல்!
பூமிநாதன் ஆண்டவர் (மும்பை
இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).
வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!
அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல் தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன்தான். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் அவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.
எம்ஜிஆர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து அடிக்கடி சொல்வது, ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’!
அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய இடம் எம்ஜிஆருக்கு உண்டு. வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!
தனிப்பட்ட மாச்சரியங்கள், அரசியல் மாறுபாடுகளால் அவர் பற்றி பதிவு செய்யப்பட்ட விமர்சனங்களை நான் இப்போதும் பொருட்படுத்துவதில்லை.
பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.
தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.
1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.
இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…
நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது மக்கள் திலகத்தின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!
முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.
பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.
அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.
வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி ‘மெட்ராஸ் தினங்கள்’ எனும் தலைப்பில் தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!
–வினோ
1967ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மாலை 5 மணிக்கு நடந்த துப்பாக்கி சூடு. ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆரின் வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதா, எதிர்பாராத நேரத்தில் தன்னை மறந்து துப்பாக்கியை எடுத்தார். எம்ஜிஆரை சுட்டார். சீறிய தோட்டா, எம்ஜிஆரின் கழுத்தில் பாய்ந்தது.
மொத்த திரையுலகமும் இந்த சம்பவத்தை அறிந்ததும் அதிர்ந்தது. அனைவரது மனதிலும் எழுந்த கேள்வி-முடியுமா?அப்படியே நடித்தாலும் அவரால் சொந்தக் குரலில் பேச முடியுமா?
இதற்கான விடை ஒருவரிடமும் இல்லை. சொல்லப்போனால் யாருக்கும் நம்பிக்கையும் இல்லை. எம்ஜிஆர் எழுந்திருக்க மாட்டார் என்றே நினைத்தார்கள். எண்ணியதை வாய்விட்டு சொல்ல அஞ்சினார்கள். ஆனால் கற்பனைக்கு எட்டாதவர் எம்ஜிஆர் என்பதை ஒருவரும் உணரவில்லை.
எல்;லாம் நல்லபடியாக சென்ற தருணத்தில் இந்த துப்பாக்கி சூடு. எம்ஜிஆர் பிழைத்து விட்டார். ஆனால்- கழுத்தில் பாய்ந்த குண்டால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது.
எந்த திiயுலகில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைக்க அரும்பாடு பட்டாரோ- அதே சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது.
50 வயதில்-மீண்டும் ஆரம்ப நிலைக்கு வந்து நின்றார். மனிதர் பின் வாங்கவேயில்லை. பழைய நிலையை அல்ல–அதற்கும் மேம்பட்ட இடத்தை பிடிக்க தனக்குள் சபதம் செய்தார். அதற்கான வேலைகளில் இறங்கினார்.
பாதிக்கப்பட்ட குரல் மட்டும் இடைஞ்சலாக இருந்தது. ரசிகர்கள் ஏற்பார்களா?அறிந்த கொள்ள உடல்நலம் தேறியதும் காவல்காரன் படத்தில் நடித்தார்.
சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் ஹ_ட்டிங். முன்பே முடிந்து விட்டது. பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி. நடித்து முடித்தார்.
ஒரேயொரு இடத்தில் மட்டும்- புதிதாக டப்பிங் பேசினார். ரிஸ்க் வேண்டாம். டப்பிங் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என நண்பர்கள் கருத்து தெரிவித்தார்கள்.மறுத்து விட்டார். ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. குண்டடிபட்ட குரலுடன் தன்னை அவர்கள் ஏற்றால்,தொடர்ந்து நடிக்கிறேன். இல்லாவிட்டால் திரையுலகிலிருந்த விடைபெறுகிறேன் என்று தீர்மானமாக சொன்னார்.
1967 செப்டம்பர் 7 அன்று வெளியான காவல்காரன் மகத்தான வெற்றியை அடைந்தது.பிசிறு தட்டிய எம்ஜிஆரின் குரலை- முகம் சுளிக்காமல் ரசிகர்கள் ஏற்றார்கள். தொடர்ந்து வந்த அரசகட்டளையும் சக்சஸ் ஆனது. மட்டுமல்ல. அடுத்ததாக ரிலீசான தேவரின் விவசாயியும் வசூலில் பட்டையை கிளப்பியது.
மறுவருடம் 1968ல் எட்டு படங்களில் நடித்தார்.ரகசிய போலீஸ் 115. தேர்த் திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன்என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு , காதல் வாகனம்.
எல்லாமே வெற்றிப்படங்கள் தான் என்றாலும் குடியிருந்தகோயில் ப்ளாக் பஸ்டர் இவை அனைத்திலும் ஜெயலலிதாதான் அவருக்கு ஜோடி. அத்துடன் ஒளி விளக்கு அவருக்கு நூறாவது படமும் கூட.
1936ம் வருடம் சதி லீலாவதி படத்தில் அறிமுகமானார். இப்படத்துக்கு கதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். அதே வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் ஒளிவிளக்கு அவரது நூறாவது படத்தை தயாரித்தது! எம்ஜிஆர் நெகிழ்ந்து விட்டார்.
இக்கட்டான சமயங்களில் எல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் இப்படி ரசிகர்கள் தோள் கொடுக்கிறார்களே. கை கொடுத்து தன்னை உயர்த்துகிறார்களே.. அவர்களுக்கு என்ன கைமாறு செய்வது? ஆறஅமர யோசித்தார்.அதுவரை அவர்கள் பார்க்காத ரசிக்காத பொழுது போக்கு படம் ஒன்றில் நடிப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்தார்.
களத்தில் இறங்கினார். இதன் வழியாக தன் எதிரிகளை பழி தீர்க்கவும் முடிவு செய்தார். குறிப்பாக சரோஜா தேவியை. கன்னடத்து பைங்கிளியான சரோஜா தேவியைத்தான்.
துண்டுத் துண்டு கேரக்டர்களில் நடித்து வந்த சரோஜா தேவியை-1958ம் ஆண்டு நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது சாட்சாத் எம்ஜிஆர் தான். அதன் பிறகு 1967 வரை எம்ஜிஆர் நடித்த 99 சதவிகித படங்களில் இவரே நாயகி. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியை உலகமே பாராட்டியது.
யார் கண் பட்டதோ? எம்ஜிஆர் குண்டு பாய்ந்து படுக்கையில் இருந்த போது-தன்னையும் அறியாமல் தனக்கு நெருக்கமானவர்களிடம் சரோஜா தேவி-இனி அவர் தேறமாட்டார். வயது வேறு அதிகரித்து விட்டது. தப்பித்தவறி பிழைத்தாலும் முன்பு போல் அவரால் பேச முடியாது. இப்படிப்பட்டவரின் படத்தில் நடித்தால் எனக்குத்தான் கெட்டப்பெயர் என்று சொன்னார். அதாவது அப்படி சொன்னதாக ஒருசெய்தி எம்ஜிஆரை எட்டியது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.
ஆனால் 1967ல் சரோஜா தேவிக்கு திருமணமானது உண்மை. அதன் பிறகு எம்ஜிஆர் படங்களில் இவர் நடிக்கவேயில்லை என்பது நிதர்சனம்.அத்துடன் அரச கட்டளையில் சரோஜா தேவியின் போர்ஷன் பெருமளவு வெட்டப்பட்டது. க்ளைமாக்ஸில் இவர் இல்லை.
வரலாறு தான் எவ்வளவு சுவாரஸ்யமானது. நாடோடி மன்னன் படத்தில் பானுமதி திடீரென்று காணாமல் போவார். சரோஜா தேவி சட்டென்று தோன்றுவார்.அதே சம்பவங்கள் இம்மி பிசகாமல் அரச கட்டளையில் அரங்கேறின.
இதன் பிறகு தான் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் ஜெயலலிதா நீங்காத இடத்தை பிடித்தார்.
குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய தருணத்திலும்- அதிலிருந்து மீண்டு நடிக்க வந்த நேரத்திலும்- தனக்கு உறுதுணையாக நின்ற ஜெயலிதாவை இறுதி வரை அவர் மறக்கவேயில்லை. மட்டுமல்ல. ரசிகர்களுக்கு பெரும் விருந்து கொடுக்கப் போகும் படத்தில் இவரது அத்தனை திறமைகளும் வெளிப்படும் வகையில் இரு கதாபாத்திரங்களை உருவாக்கினார். அதில் ஒன்று வில்லி வேடம்!இப்படி தயாரானது தான் அடிமைப்பெண்!
1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ{ம்,இயக்குனர் கே.சங்கரும் அசாத்தியமான காரியத்தை தங்களுக்கு கிடைத்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டு அப்படியொரு பிரம்மாண்டமான அடிமைப்பெண் படத்தை தமிழில் எடுத்தது வியப்புக்குரிய விஷயம்.
இதற்கு முன் ராஜா வேடம் ஏற்று எம்ஜிஆர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்- இதில் தான் முதன் முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். கட்டுமஸ்தான அவரது புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் அப்பட்டமாக தெரியும். அதன் வழியாக ஐம்பத்திரண்டு வயதிலும், தன் உடல் வலு குன்றவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அடிமைப்பெண்ணில் அதிக டுவிஸ்டுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. ஜெயப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பார்கள். பாலைவன ஒட்டக சண்டையும், க்ளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்ஜிஆர் நேருக்கு நேர் மோதும் காட்சியும் மெய்சலிர்க்க வைக்கும்.
எம்ஜிஆர் சிங்கத்துடன் போடும் சண்டை மிகவும்பிரசித்தம். சிங்கத்துடன் சண்டை போடும் காட்சிக்காக, எம்ஜிஆர் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கசில் இருந்து நன்றாக வளர்ந்த, ராஜா என்ற ஆண் சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன் சத்யா ஸ்டூயோவில் தனி இடத்தில் வைத்து பிரத்யேக பயிற்சியாளர் வைத்து, ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்.
அடிமைப்பெண் படத்தில் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற பாடலை ஜெயலலிதா பாடினார். ஆனால் டி.எம்.சௌந்தரராஜனையும் இதே பாடலை பாட வைத்து முதலில் ரிக்கார்டிங் செய்து விட்டனர்.கதைப்படி எம்ஜிஆர் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இந்தப் பாட்டிற்கு வாயசைத்து நடித்தால் சரி வராது அதனால் ஜெயலலிதாவை பாட வைத்து பாட்டை பதிவு செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். எனவே முதன் முதலாக ஜெயலலிதாவை பாட வைத்தவர் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு இன்னொரு அம்மா பாட்டைக் கொடுத் தார்கள் அது தான் தாய் இல்லாமல் நானில்லை என்ற கம்பீரமான பாட்டாக எம்ஜிஆருக்கு அமைந்த பாடல்.
இப்படி பார்த்துப் பார்த்துப் செதுக்கப்பட்ட படம்- எப்படி வசூலில் பின்தங்கும்?அந்த காலத்தில் 1969ல் ரூபாய் இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்கிறார்கள். இது உண்மையெனில் இன்றைய மதிப்பில் அந்தத் தொகை ரூ.350 கோடி என்று கருதலாம்!
இவை அனைத்தையும் விட-நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும் எம்ஜிஆரும் கடைசியாக நடித்த படம். பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனுக்கும் எம்ஜிஆருக்கும் முதன் முதலில் சம்பளப் பிரச்னை ஏற்பட்ட படம்.
1961ல் இத்தாலியில் வெளியான ஆயஉளைநை நெடடய வநசசய னநi உiஉடழிi என்கிற யுவடயள ழn வாந டயனெ ழக வாந உலஉடழிள படத்தின் இந்தியன் வெர்ஷன். இயக்குநர் கே.சங்கர்-எம்ஜிஆர்-கே.வி.மகாதேவன் ஆகியோர் கைகோர்த்த முதல் படம் -போன்ற சிறப்புகளும் இப்படத்துக்கு உண்டு.
இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு மாஸ் ஹீரோ. தன் 52வது வயதில் பதினாறடி தாவி உச்சத்துக்கு சென்றிருந்தும்- சிறுக சிறுக தன்னை செதுக்கியடி எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு ரசிகர்களை மட்டுமே நம்பி ஒரு ஹீரோ நகர்ந்தார் என்பது புரியும். எம்ஜிஆர் என்றால் சும்மாயில்லை.
-தொகுப்பு விஜி
1977 ஆம் ஆண்டு...
புரட்சி தலைவரின் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கால் பதிக்கிறது....
எம்ஜியார் முதல்வர்..கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்..
எம் .எல். ஏக்கள்.பதவி ஏற்கிறார்கள்..
அன்றைய வட ஆற்காடு மாவட்ட செங்கம் தனி தொகுதியின் எம்.எல் ஏ வாக தேர்ந்தெடுக்கபட்டவர் சாமிகண்ணு.. டெய்லர் வேலை செய்து வந்தவர்..
பதவி ஏற்க்க வந்தஅவர் பதவி ஏற்பு உறுதிமொழியை படிக்க தெரியாமல் தடுமாறுகிறார்...
உடனே கருணாநிதி , எம் ஜிஆர் அவர்களை பார்த்து எழுத படிக்க தெரியாத டைலர்கள் எல்லாம் உங்கள் எம் எல்.ஏ என்பதுபோல் ஏளனமாக சிரிக்கிறார் ....
பதிலுக்கு கருணாநிதியை பார்த்து எம்ஜி.ஆர் அவர்கள் ஒரு சிரிப்பு சிரிக்கிறார்....
அந்த சிரிப்பிற்கான அர்த்தம் : என்னால்தான் ஒரு சாதாரன தொண்டனையும் எழுத படிக்க தெரியாத தையல் தொழிலாளியையும் எம். எல்.ஏ. ஆக்கி அழகு பார்க்கமுடியும் என்பது...
அந்த வரலாறுதான் அன்றிலிருந்து இன்றும் அதிமுகவில் தொடருகிறது....!!
Thamilanda Thamilanda
இன்று ( 29.01.2016 ) காலை 06.10 மணி...
பால் வாங்க கடைக்கு சென்றேன்...
வரும் வழியில் ஒரு மளிகை கடையினை கடந்து வரும் போது ...
காதில் விழுந்த வார்த்தைகள் என்னை அங்கேயே நிற்க வைத்து விட்டதோடல்லாமல் இன்று முழுவதும் என் காதில் மறு ஒலிபரப்பாகிகொண்டே உள்ளது....
அந்த வார்த்தைகள்....
60 - 65 வயது மதிக்கத்தக்க பெண் : இதுக்குதாண்டா ... அந்த புண்ணியவான் இருக்கணுங்கறது.... அரிசி விலைய கேட்டா... உன் சௌரியத்துக்கு சொல்ற...
கடைக்காரர் : எந்த புண்ணியவான் இருந்தாலும் இது தான் நிலைமை...
60 - 65 வயது மதிக்கத்தக்க பெண் : அட போடா.... அந்த மனுஷன் இருந்திருந்தா... இப்படிலாம் நடக்குமா....?
- என்று சொல்லியவாறே கிளம்பி விட்டார் கடையை விட்டு ...
என்னை நெருங்கி வரும் அந்த பெண்ணிடம் நான் கேட்டேன்...
அம்மா... யாருமா...? அந்த புண்ணியவான்....?
பேர் சொல்லவில்லை ...
என்னை சட்டையும் செய்ய வில்லை...
தன் கையினை ஒரு முறை நீட்டி மடக்கி விட்டு போய் கொண்டே இருந்தார்....
அவர் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது...
அது...
M g r ....
Courtesy net
http://s29.postimg.org/6n4pg0xrb/WP_20160131_006.jpg
Courtesy - Saidai S Murthy
வாழ்நாள் சாதனை படைத்தவரின் 99வது பிறந்தநாள்!
எம்.ஜி.ஆர் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர்.எம்.ஜி.ஆரின் போராட்டம் நீண்டது.
மருதூர் கோபாலமேனன்-சத்யபாமா தம்பதியருக்கு 17-1-1917ஆம் ஆண்டு பிறந்தார் எம்.ஜி.ஆர். இவருக்கு சக்கரபாணி, பாலகிருஷ்ணன் என்ற இரு அண்ணன்களும், கமலாட்சி, சுபத்ரா என்ற இரு தமக்கைகளும் இருந்தனர்.
நீதிபதியான மருதூர் கோபாலமேனன் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு இலங்கைக்கு சென்ற போது தான் எம்ஜிஆர் பிறந்தார்.
உடல்நலபாதிப்பால் மீண்டும் கேரளாவிற்கு வந்த கோபாலமேனன் மற்றும் பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகியோர் இறந்த போhனார்கள்.
அதன்பிறகு தாய் சத்யபாமா, சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கும்பகோணத்தில் குடியேறினார்.
எம்ஜிஆரின் வாழ்க்கையே மேடு பள்ளங்களால் நிறைந்ததுதான். சிறு வயதில் ஒரு வேளை உணவுக்காக சிரமப்பட்டார். வளர்ந்த பிறகு பட வாய்ப்புக்காக அலைந்தார். நாடக கம்பெனியில் சேர்ந்து சின்னச் சின்ன வேடங்களையும் மனமுவந்து ஏற்றார். எம்ஜிஆருக்கு ஆசானாக விளங்கியவர் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார்.
எம்ஜிஆரின் சகாப்தமும் ஆர்ப்பாட்டமாக ஆரம்பமானது. தன்னந்தனியாக எம்ஜிஆர் இதை எதிர்கொண்டார்.
கதாநாயகனாக எம்ஜி.ஆரின் முதல் படம் ராஜகுமாரி. அதில் ஒரு சண்டைக் காட்சியில் தன்னோடு மோதி நடிக்க சின்னப்பா தேவரை எம்ஜிஆர் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளர் சோமு, அதெல்லாம் வேண்டாம். நம்ம கம்பெனியிலேயே மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்ட்ரா அவன். வேறு பிரபலமானவரைப் போடலாம் என்றார்.
சின்னப்பா இருக்கிறாரே! என்ன வனப்பான உடல்! எவ்வளவு திறமையாகச் சண்டை போடக் கூடியவர்! சின்னப்பாவின் திறமை உங்களுக்குத் தெரியாது. எனக்கத் தெரியும். அவரையே நடிக்க வைப்போம். இல்லாவிட்டால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என்று தனக்கு நிச்சயமில்லாத நிலையிலும் தேவரை எம்ஜிஆர் ஆதரித்தார்.
அன்று முதல் நெருக்கமானார்கள் எம்ஜிஆரும், தேவரும். அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தான் சின்னப்ப தேவர் 16 படங்கள்.
தாய்க்குப்பின்தாரம் என்ற படத்தை தேவர் முதன்முதலாக எம்ஜிஆரை வைத்துத் தயாரித்தார். இந்த படம் தான் தேவருக்கு அதிகமாக வசூலைத் குவித்த படம் மட்டுமல்ல மீண்டும் எந்த இடத்தில் திரையிட்டாலும் வசூலை தந்த படம். தேவர் தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தாக குறிப்பிடுவது முருகன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரைத்தான். எம்ஜிஆருக்கு இந்த ஆண்டு 99 வயது என்றால் தேவருக்கு 101 வயது இரண்டு வயது மூத்தவர் ஆவார்.
ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பெரும்பாடுபட்டார்.கதாநாயகனான பின் எம்ஜி.ராமசந்தர் என்றே ஆரம்ப கால வெற்றிப் படங்களில் அவர் பெயர் டைட்டிலில் வரும்.
மருத நாட்டு இளவரசி ,மந்திரி குமாரி, மர்மயோகி வெற்றிகளுக்குப்பின் கூட அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்தது.
இவ்வளவு சொல்லக் காரணம் அல்லது பழைய வரலாற்றை ரீவைண்ட் செய்யக் காரணம், எம்ஜிஆரின் தனித்தன்மையை உணர்த்தத்தான்.
மலைக்கள்ளன், குலேபகாவலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன் மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னன் படத்தை அவரே இயக்கினார்.
இந்த நேரத்தில் தான் அவரது கால் எலும்பு முறிந்தது.எம்ஜிஆர் கால் உடைந்தது. சரிதான் அவர் சேப்டர் குளோஸ் என்றார்கள்.
நாடோடி மன்னன் மகத்தான வெற்றிக்கு பிறகு திருஷ்டி போல் நடந்த சம்பவம் இது, அப்பொது திரைப்படங்களில் நடித்து வந்த நேரம் போக மற்ற பொழுதுகளில் நாடகங்களிலும் நடித்து வந்தார்.
அப்ப்படித்தான் சீர்காழியில் இன்பக் கனவு நாடகம் நடந்த போது-ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். பரமனான நடிகரான இவர், சற்றே சரிந்து எம்ஜிஆரின் கால் மீது விழுந்தார். விளைவு அந்த இடத்திலேயே அவரது கால் எலும்பு முறிந்தது.
அப்போதும் இனி எம்ஜிஆர் அவ்வளவு தான் என்றார்கள். மனிதர் அசரவேயில்லை. சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறியவர் செய்தியாளர்களை அழைத்து அவர்கள் முன்னால் மீண்டும் அதே குண்டுமணியை தூக்கிக் காட்டினார்.அதாவது பழைய வலுவுடன் தான் இருப்பதாக அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார்.
இதற்கு பிறகு தேவருடன் இணைந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தார். தனக்கான இடத்தை திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார்.
மன்னாதி மன்னன், திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள் என விஸ்வரூபம் எடுத்தார்.
படகோட்டி, எங்கவீட்டுப் பிள்ளை, அன்பே வா மட்டுமல்ல அவர் நடித்த அந்தக்கால சரித்திரப்படங்களும் தொடர்ந்து வந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோயில், அடிமைப்பணெ;, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன் என பட்டியல் நீளும்.
எம்ஜிஆருக்கு நடிக்கத் தெரியாது என சிவாஜி ரசிகர்களில் சிலர் அவதூறு பரப்பினார்கள்.மனதில் கொள்ள வேண்டிய விஷயம். சிவாஜி மாதிரி எம்ஜிஆருக்கு நடிக்க வேண்டிய அவசியவே ஏற்படவில்லை என்பது தான்.
எம்ஜிஆர் முட்பாதையில் நடந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.பிறப்பால் மலையாளியாக இருந்த எம்ஜிஆர்-தமிழனாக மாறிக் கொண்டிருந்தார்!
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் தான் முன்னர் டி.எம்.எஸ் பாடல்களில்அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ- அதே மாதிரி தான் எஸ்.பி.பி.-ஜேசுதாஸ் பாடல்களிலும் ஜொலித்தார். கடைசிவரை பாடல் காட்சிகளில் அவர் சோடை போனதேயில்லை.
ஸ்டண்ட் மற்றும் டான்ஸ் காட்சிகளில் அவரிடம் இருந்தசுறுசுறுப்பும், வேகத்தன்மையும் அலாதியானது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்ஜிஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறி விடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் தொடங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.
எம்.ஜிஆர் கடைசி வரை கதாநாயகனாவே நடித்தார். வயதானவராக மாறு வேஷம் தான் போட்டிருக்கிறார், முதியவராக நடித்ததே இல்லை. எல்லாப்படங்களிலும் அவர் இளம் வாலிபர் தான்.
அதே போல பெண்ணுக்கு வலை வீசும் ஷோக்குப் பேர்வழியாக நடித்ததேயில்லை. தமிழக மக்களுக்கு ஒரு புனிதர்.வசீகரம் என்பதற்கு அடையாளம் எம்ஜிஆர்.
ஷ_ட்டிங் சமயத்தில் ஏதாவது நடிகர் வர தாமதமானால் ஷ_ட்டிங் தடைபடாமல் இருக்க மற்ற ஆர்ட்டிஸ்டுகளை வைத்தும், தான் நடிக்கும் காட்சிகளையும் எம்ஜிஆர் எடுக்கச்சொல்லி விடுவார். நேரத்தை வீணாக்கமாட்டார்.
எம்ஜிஆர் 1936ஆம் ஆண்டு நடித்த முதல் படம் சதிலீலாவதி. கடைசி படம் 1977 ஆம் ஆண்டு மதுரையை மீட்ட சுந்திரபாண்டியன்.
எம்ஜிஆர் நடித்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 136. கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை மட்டுமே 115. ஒட்டு மொத்தமாக 86 படங்கள் நூறு நாட்கள், 12 படங்கள் 175 நாட்கள், இரண்டு படங்கள் 300 நாட்களுக்கும் மேலாக ஒடியவை.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.
இரட்டை வேடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை 17.
அதிக படங்களில் உடன் நடித்த கதாநாயகி ஜெயலலிதா 28 படங்கள்.
அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 17 படங்கள்.
அதிக படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 49 படங்கள்.
கடந்த 25 வருடங்களாக 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எம்.ஜி.ஆர் நினைவகத்திற்கு வருகை தந்துள்ளனர்.இங்கு 15 லட்சம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள் போன்றோர் எம்ஜிஆர் நினைவகத்திற்கு வந்து எம்ஜிஆரின் நினைவை போற்றும் பொருட்களை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
எம்ஜிஆர் பயன்படுத்திய டிஎம்எக்ஸ் 4777 என்ற பதிவு எண் கொண்டது வெளிர் பச்சை நிறத்தில் உள்ள அம்பாசிடர் கார்.
முதல்வரான பின் அளித்த காரை மறுத்துவிட்டு தான் சொந்தமாக வாங்கிய அம்பாசிடர் காரிலேயே பெட்ரோல் மற்றும் பராமரிப்பு செலவை சொந்தச் செலவிலேயே செய்து கொண்டார். காரில் பயணம் செய்யும் போது பின்பக்கத்தில் இடது புறத்தில் அமர்ந்து செல்வார், பைல்களை பார்க்கவும், பேப்பர் படிக்கவும் காருக்குள் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
அடிமைப்பெண் படத்தில் சிங்கத்துடன் எம்ஜிஆர் போடும் சண்டை, திருப்திகரமாக படமாக்கப்பட்ட பின், சென்னை மிருக காட்சி சாலைக்கு அச்சிங்கத்தை நன்கொடையாக அளித்தார். சில ஆண்டுகளில் சிங்கம் மரணம் அடைந்தது. 1975ல் சிங்கத்தின் உடலை வாங்கிதன் சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து அதன் உடலை பாடம் செய்தார். ராமாவரம் தோட்டத்தில் வீட்டில் அது வைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் நினைவகம் அமைக்கப்பட்ட பிறகுகொண்டு வரப்பட்டு முதல் மாடியில் பெரிய கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் தன் சொந்த செலவில் தயாரித்து வழங்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை, சென்னை தியாகராய நகரில் வாணி மகால் எதிரே வைக்ப்பட்டுள்ளது. அச்சிலை திறப்பு விழா ஜனவரி 14ந் தேதி 1969ல் நடைப்பெற்றது. அண்ணாதுரை கலந்து கொண்ட கடைசி பொது நிகழச்சி அது.
எம்ஜிஆரின் முதல்மனைவி பார்கவி என்கிற தங்கமணி, இரண்டாவது மனைவி சதானந்தவதி ஆகியோர் இறந்த பிறகு மூன்றாவதாக வி.என்.ஜானகியை திருமணம் செய்து கொண்டார்.
கத்தோலிக்க மதகுரு போப், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் எம்ஜிஆரை சந்தித்த புகைப்படம் எம்ஜிஆர் நினைவகத்தில் உள்ளது.
பல பரிசுப்பொருட்கள், கோப்பைகள், வாள்கள் என்று குவிந்திருந்தாலும் எம்ஜிஆர் அமரராகி 25 ஆண்டுகளுக்கு பிறகும் ஆயிரக்கணக்கானோர் இன்றும் மறவாமல் எம்ஜிஆர் நினைவகத்துக்கு தினமும் வந்து, அவரது சாதனைகளைப் பார்த்து, மகிழ்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்துவது, லட்சக்கணக்கான மக்களின்இதயங்களில் அவருக்கு பிரத்யேக இடம் இருப்பதை பறை சாற்றுகிறது. வேறு யாருக்கும் கிடைக்காத கவுரவம் இது!
எம்ஜிஆருக்கு வாழ்வின் பின் பகுதி மிகவும் விசேஷமானது. தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை, அதுவும் அசைக்க முடியாத அளவுக்கு ஒர் இடத்தை திரைத்துறையில் எம்ஜிஆர் உருவாக்கிக் கொண்டது தான்.
நிச்சயம் இது சாதாரண விஷயமில்லை. எந்தவொரு நடிகருக்குமே இது சவாலான காரியம். இன்று வரை பல ஹீரோக்கள் இப்படிப்பட்ட சவாலைத்தான் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அதனால்தான் எம்ஜிஆர் காலம் கடந்தும் ரோல் மாடலாக திகழ்கிறார். வசூல்சக்கரவர்த்தி என்ற அடைமொழிக்காக மட்டுமல்ல. நெருப்பாற்றில் நிந்தி தனக்கென ஒர் அடையாளத்தை நிலை நிறுத்தியதற்காகவும் தான்.
-தொகுப்பு விஜி
எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.
கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷூட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
வெள்ளிக்கிழமை விரதம் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்., 'உன் நடிப்பு அபாரம்...' என்று ஜெயசித்ராவை பாராட்டினார். அதன் விளைவு, நவரத்தினம் படத்தில், ஒன்பது கதாநாயகிகளில் ஒருவராக ஜெயசித்ராவும், எம்.ஜி.ஆருடன் நடிக்க ஒப்பந்தமானார்.
'எப்போது பெரிய கதாநாயகனாவோம்...' என, ஏங்கி தவித்த சிவகுமாருக்கு, முதல், 'கமர்ஷியல்' கதாநாயகன் வாய்ப்பு, வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் கிடைத்தது. 'அந்த அமுல் பேபியா நடிக்கிறாரு?' என்று தேவரைத் தடுத்தவர்களே அதிகம். அதற்கு முன், தேவரின், தெய்வம் படத்தில், கிளைமாக்ஸ் சீனில் வந்து போயிருந்தார் சிவகுமார்.
சிவகுமார் ஜெயசித்ரா ஜோடிக்கு, தனி வரவேற்பு இருந்த காலம் அது. நம்பிக்கையோடு நடிக்கப் போனார் சிவகுமார். வாகினியில் பூஜை முடிந்ததும், 'க்ளைமாக்ஸ்' காட்சியை எடுத்தார், தேவரது மாப்பிள்ளை தியாகராஜன்.
'ஆக்ரோஷமாக டயலாக் பேசினால் போதும்; நீங்க, சண்டையெல்லாம் போட வேண்டாம்...' என்று, சிவகுமாருக்கு காட்சி விளக்கப்பட்டது. ஆரூர்தாசின் வசனத்தை, எழுத்து குறையாமல் அழகாக பேசி நடித்தார் சிவக்குமார்; தேவருக்கு, மகிழ்ச்சி.
வெலிங்டன் தியேட்டரில், முதல் நாளே படம் பார்க்க சென்றார் சிவகுமார். 'ரசிகர்கள், தன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர்; மேனேஜர் வந்து மீட்பார்...' என்று ஆனந்த கற்பனையில் லயித்தார். ஆனால், படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், சிவகுமாரிடம், 'பாம்பு தான் சார் டாப்... காசு அதுக்குதான்...' என்றனர்.
'அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது' என்பதில், தேவருக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு!
ஒவ்வொரு முறையும் படத்துக்கான பூஜை தேதியை முடிவு செய்ததும், அதை மூவருக்கு தெரியப்படுத்துவார். முதலாமவர், முருகக் கடவுள்; அடுத்து, வாகினி அதிபர் நாகி ரெட்டி, மூன்றாமவர், அவரது ஆஸ்தான கதாநாயகன் எம்.ஜி.ஆர்.,
அமாவாசையில் தான், படத்துக்கு பூஜை போடுவார். அத்துடன், பூஜைக்கு முன், சில புனித பயணங்களையும் மேற்கொள்வார். பழநி சென்று தண்டாயுதபாணி கடவுளுக்கு அபிஷேகம் செய்து, அவரது திருப்பாதங்களில், புதிய படத்தின் கதை பைலை வைத்து, 'சாமி... இந்தப் படமும் ஜனங்களுக்குப் புடிச்சு, நல்லா ஓடணும்; அதன் மூலம் உன்னுடைய திருப்பணிகளையும் செய்யணும்...' என, உள்ளம் உருக வேண்டுவார்.
அடுத்து, மருதமலை முருகன் பாதத்தில் பட வசனத்தை வைத்து, பிரார்த்தனை செய்வார். பட பூஜை அன்று வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்துவார். ஆரூர்தாஸ் வசனம் எழுதிய படமென்றால், அவரையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது, தன் கைவிரல் மோதிரம் மட்டுமல்லாமல், கதாசிரியரின் மோதிரத்தையும் கழற்றி, அர்ச்சகரிடம் கொடுப்பார்.
பின், பழநி ஆண்டவரின் தோள்களின் சந்தனக் குழம்பில் குளித்து முடித்து திரும்பி வரும் மோதிரங்களை அணிந்து கொள்வர். கற்பூர தீபம் ஒளிரும் போது, வழக்கம்போல் கதை, வசனம், கந்தன் காலடியில் இருக்கும்.
அதன் பின்பே அந்த பைல் வாகினி ஸ்டுடியோவின் ஆறாவது மாடியில் இருக்கும், இயக்குனர் திருமுகத்தின் கைகளுக்கு செல்லும்.
பட பூஜையின் போது, தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருதாசல மூர்த்தியின் பெரிய படம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
மடித்துக் கட்டிய வேட்டி, நெற்றியில் பட்டைத் திருநீறு, வாய் மணக்கும் தாம்பூலச்சாறு, வெற்றிலைச் சீவல் நிறைந்த உதடுகளுடன், பூஜைக்கு வருவோரை, 'வாங்க முருகா... வாங்க முருகா...' என்று வரவேற்றாலும், அவரது கண்கள், வாசலையே பார்க்கும், எம்.ஜி.ஆர்., வருகிறாரா என்று!
எம்.ஜி.ஆர்., வந்த பின்னரே, அவரது சுவாசம் சீர்பெறும். படத்தின் கதாநாயகி புதியவர் என்றால், அறிமுகப் படலமும் இருக்கும்.
அதன்பின், இரு பெரிய மாலைகளை எம்.ஜி.,ஆருக்கும், நாகிரெட்டிக்கும் அணிவிப்பார். நாகிரெட்டி, கேமராவை, 'ஸ்விட்ச்' ஆன் செய்வார். 'ஷாட் ரெடி... சீன் பைவ். டேக் ஒன்...' உதவியாளர் கிளாப் அடித்ததும், எம்.ஜி.ஆர்., 'வெற்றி... வெற்றி...' என்று அம்மாவையோ அல்லது காதலியையோ நோக்கி வேகமாக ஓடி வருவார். காதலி என்றால், 'வெற்றி... எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு...' என்று வசனம் பேசுவார்.
தேவர் தயாரித்து, எம்.ஜி.ஆர்., நடித்த அத்தனை படங்களின் ஆரம்பமும், இப்படியே நடந்தது; யாருக்கும் சலிக்கவே இல்லை.
வசனக் காட்சிகள் முடிந்த கையோடு, டூயட் சீன் படமாகும்.
பூஜை நாளன்றே சங்கர் கணேஷ், கே.ஆர்.விஜயா போன்ற ஆஸ்தான கலைஞர்களுக்கு, தன் கையாலேயே முன்பணம் தந்தால் மட்டுமே, தேவருக்கு மனசு நிம்மதி அடையும்.
வாகினி ஸ்டுடியோவில், வேட்டைக்காரன் பட ஷூட்டிங்; பதற்றமும், பரபரப்புமாக காணப்பட்டார் தேவர். காரணம், எம்.ஜி..ஆரைக் காண வில்லை. கதாநாயகி சாவித்திரிக்கு, 'தான் படப்பிடிப்பில் இருக்கிறோமா, போர்க்களத்தில் சிக்கிக் கொண்டோமா..' என்ற சந்தேகமே வந்து விட்டது.
தேவர் பிலிம்சில் சாவித்திரிக்கு இதுதான் முதல் படம். ஜெமினி கணேசன் சிபாரிசு செய்ததால், ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த தெலுங்கு பட கால்ஷீட்டை ரத்து செய்து, இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் சாவித்திரி. அப்போது, அவர் லட்சம் ரூபாய் சம்பளக்காரர். தேவர், 75 ஆயிரம் பேசி, சாவித்திரியை இரு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்; ஒரே தவணையில் ஒன்றரை லட்சம் ரூபாய்!
தன் அறையை விட்டு வெளியே வந்த சாவித்திரி, அங்கே நின்றிருந்த ஆரூர்தாசிடம், மெல்லிய குரலில், 'எப்படி சமாளிக்கிறீங்க... சுத்தி விலங்குகளை வெச்சிக்கிட்டு இப்படி காட்டுக்கத்தல் கத்தறாரே... சத்தம், போட்டாத்தான் வேலை நடக்கும்ன்னு நினைக்கிறாரா?' என்று கேட்டார்.
பதில் பேசவில்லை ஆரூர்தாஸ். அதற்குள் புரொடக் ஷன் பையன் அடிவாங்கும் கதறல் கேட்டது.
'யார் வீட்டுக் காசுலடா எல்லார்க்கும் டீ கொடுக்குறே... எவன் அப்பன் வீட்டுச் சொத்து...' என்று புரொடக் ஷன் பையனை அடிக்க, அவன் அழுதபடியே, 'அண்ணே... நான் ஒரு தப்பும் செய்யல...' என்றான்.
அப்போது அங்கே வந்தார், எம்.ஜி.ஆர்., அவரை கவனியாதது போன்று, மீண்டும் சிறுவனின் முதுகை பதம் பார்த்தார் தேவர். உடனே, எம்.ஜி.ஆர்., 'அண்ணே... அவனை விடுங்க. தப்பு எம்மேல தான். சிலோன்ல இருந்து என் ரசிகர்கள் தோட்டத்துக்கே வந்துட்டாங்க. அவங்கள கவனிச்சு, சாப்பிடச் சொல்லிட்டு வரேன்; அதான் லேட் ஆயிடுச்சு...' என்று, பவ்யமாகக் கூறினார்.
'அட முருகா... நீங்க எப்ப வேணும்ன்னாலும் வாங்க... இந்த புரொடக் ஷன் பையன் தொல்லை தாங்கல. நாலு பேருக்கு டீ கொடுத்திட்டு, 40 பேருக்கு கணக்கு காட்டுறான்...' என்று சமாளித்தார் தேவர்.
செட்டில் எம்.ஜி.ஆர்., இருந்தால், கொஞ்சம் அடக்கியே வாசிப்பார் தேவர். எம்.ஜி.ஆர்., தாமதமாக வந்தால், அசோகனுக்கு திட்டு விழும். அது, தனக்கு வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை என்பதை எம்.ஜி.ஆரும் புரிந்து கொள்வார்; ஆனாலும், கோபிக்க மாட்டார். தேவருக்கும்,
எம்.ஜி.ஆருக்கும் இடையே தம்பதியின் ஊடல் போல், செல்ல கோபதாபங்கள் வந்து போகும். ஆனால், இருவருமே, மற்றவர்கள் எதிரில் விட்டுக் கொடுக்காமல், கண்ணியமாக பேசிக் கொள்வர்.
காலை, 9:00 மணிக்கு கால்ஷீட் என்றால், 8:30 மணிக்கே, லைட்டிங் கால்ஷீட் ஒன்று, தேவர் பட ஷூட்டிங்கில் உண்டு. அதாவது, ஒளிப்பதிவாளர் வர்மா, நடிகர் நடிகையர் நடிக்க வரும் முன், படப்பிடிப்புக்கு ஏற்றவாறு, தன் கேமரா ஆங்கிள்களை திட்டமிடுவார். எக்காரணத்தை கொண்டும், 9:00 மணிக்கு, முதல் ஷாட் எடுப்பது, தள்ளிப் போகவே கூடாது. தேவர் அங்கே இல்லையென்றால், அவர் அலுவலகத்திற்கே தகவல் போய்ச் சேர வேண்டும். 'முதல் ஷாட் ஓகே' என்று!
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்
TO DAY MAKKAL THILAGAM MGR'S 99TH BIRTH DAY CELEBRATED AT BANGALORE BY MANITHA NEYA MAKKAL THILAGAM MGR MANDRAM . FORMER AIADMK MLA THIRU MUNIYAPPA WAS CHIEF GUEST.
http://i68.tinypic.com/16bg6di.jpg