https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...b1&oe=582C8473
Printable View
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நான் ஆணையிட்டால் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/2wciekg.jpg
எம்ஜிஆரிடம் ஆரம்ப காலம் தொட்டே எனக்கு நெருங்கிய நட்பு உண்டு,அப்போது யானக்கவுனியில் குடியிருந்தார், காரில் வெளியூர் சென்றால் என்னை அழைத்து கொண்டு போவார்,அப்போது பிளைமவுத் கார் வைத்திருந்தார்
காரில் பின் சீட்டில் நான் படுத்திருப்பேன், அவர் முன் சீட்டில் தலையணை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்
ஒரு சமயம் இப்படித்தான், ஒரு ஊரிலிருந்து சென்னைக்கு நாங்கள் புறப்படுகிறபோது அங்கிருப்பவர்கள் எம்ஜிஆரிடம்
'ராத்திரி நேரமா இருக்கு கொள்ளைக்காரங்க ஜாஸ்தி நடமாடுறாங்க அதனால இப்போ போக வேண்டாம் அண்ணே' என்று சொன்னார்கள்
'பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று இவர் சொல்லி விட்டார்
சொன்னது போலவே ஏதோ ஒரு பகுதியில் கொள்ளைக்கார்கள் காரை மடக்கியிருக்க, எம்ஜிஆர் அவர்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்
அந்த நேரத்தில் நான் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தேன் பிறகு திடீரென்று விழிப்பு வந்து பார்த்தால், காரில் யாரும் இல்லை கார் கதவுகள் திறந்திருக்கிறது.
வெகு தூரத்தில் டார்ச் லைட் வெளிச்சம் மட்டும் தெரிந்தது எனக்கு ஒரே பயம் காரின் கதவுகளை மூடிக்கொண்டேன்
சிறிது நேரத்தில் எம்ஜிஆர் வந்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
ஏங்க அவுங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு பாத்தீங்களா என்று கேட்டதற்கு 'நானும் சொன்ன மாதிரியே சமாளிச்சுட்டேன்ல என்று கூறினார்எம்ஜிஆர்
அந்த வகையில் அவர் மிகவும் தைரியமானவர் இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் அவர் வாழ்க்கையில்
______சொன்னவர்
பழம்பெறும் நடிகர்
கே.ஏ.தங்கவேலு
மெல்லிசை மன்னரின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று .
மெல்லிசை மன்னரின் மதுர கீதங்கள் என்றென்றும் நம் நினைவில் பசுமையாக நிலைத்து இருக்கும் காவிய பாடல்களை என்றுமே மறக்க முடியாது
AUGUST - 2016
MAKKAL THILAGAM MGR IN RIKSHAKARAN - EYE FEAST TO THE MILLIONS OF MGR FANS ALL OVER THE WORLD.
http://i66.tinypic.com/71kbo5.jpg
தினச்செய்தி -14/07/2016
http://i63.tinypic.com/w18ck5.jpg
தமிழ் இந்து -14/07/2016
http://i64.tinypic.com/2isebrk.jpg
TIMES OF INDIA -14/07/2016
http://i67.tinypic.com/2h3qygz.jpg
மாலைமலர் -14/07/2016
http://i66.tinypic.com/eaph1j.jpg
கடந்த ஞாயிறு (10/07/2016) அன்று சென்னை, பெரியார் திடலில் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு. லோகநாதன் அவர்களின் இல்லத்திருமணம் இனிதே நடைபெற்றது. எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
மணமக்களை ஆசிர்வதித்தது போன்ற பேனர் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு சார்பாக அமைக்கப்பட்டிருந்தது - நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/2n9kmj7.jpg
தினகரன் -14/07/2016
http://i66.tinypic.com/2v0l7ip.jpg
திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா பற்றிய ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பு, மக்கள் தொண்டு, கொடை தன்மை, பண்புகள், சிறப்புகள், அரசியல் திறமை, அரசாட்சி நலன்கள் , போன்ற பல்வேறு
விஷயங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 100 நாட்கள் தொடர்ந்து பிரசுரம் செய்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் இதயங்களை கவர்ந்த தமிழ் இந்து தினசரிக்கு பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன . முக்கியமாக, புரட்சி தலைவர் அ .தி. மு.க. கட்சி ஆரம்பித்து 1973 ல் முதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து , திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மணிமண்டபம் அமைப்பது என்பது சிறப்பான முடிவு.
இது பற்றிய செய்தி தமிழ் இந்து நாளேடு -மதுரை பதிப்பில் வெளிவந்ததாகவும்
அதனை நமது திரியில் பதிவிட விருப்பம் தெரிவித்து, திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் அனுப்பியுள்ள தகவலுக்கு மிகவும் நன்றி.
மேற்படி, திரு. மலரவன் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு, இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பாக நல்வாழ்த்துக்கள்
http://i63.tinypic.com/2hrikpk.jpg
DIGITAL -RIKSHAKARAN
http://i65.tinypic.com/igxeyt.png
http://i66.tinypic.com/21nfvrk.jpg
அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை, வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திண்டுக்கல்லில் நடத்த உத்தேசித்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் " .ரிக்ஷக்காரன் " டிரைலர், அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதால், தள்ளி வைக்கப்படுகிறது.
மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.
அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.
அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.
நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.
புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.