-
Subramania Pillai
நடிகர் திலகத்திற்கு ஏன் இந்த நிலைமை?
1) தமிழனாய் பிறந்தது
2) கடவுள் நம்பிக்கை வைத்தது
3) திராவிடக்கும்பலில் மலையாளி யாகவோ, தெலுங்குகாரனாகவோ, கன்னடக்காரனாகவோ பிறக்காமல் தமிழனாக பிறந்தது பெறும் தவறு.
4) MGR விட நிறைய ரசிகர்கள் வைத்தது. இன்றும் 45 ஆண்டுகள் முடிந்தும் பெங்களூர் நடராஜா தியேட்டரில் வசந்தமாளிகைக்கு கூடிய கூட்டம் Link --- https://m.youtube.com/watch?v=yac3fJ9_iRI...
4) பொய், பித்தலாட்டம், அரசியல் சூட்சி அறியாதது. கடைசிவரை காமராசர் தொண்டனாக. இருந்தது.
5) கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் அவர்களைப் பகடைகாய்களாக ஆக்காமல் இருந்தது .
6) காமராசர் தொண்டனாக இருந்ததால் பல கோடி தேவர்கள்சமுகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஆகமுடியாமல் ஆனது.
7)தன் சொந்தகாசு பலருக்கு கொடுத்து விளம்பரம் தேடாதது. 1ரூபாய் கொடுத்து 1000 விளம்பரம் தேடியவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
8)இந்தியா & சீனா போர் சமயத்தில் தன் மனைவியின் நகை முழுவதும் கழற்றி கொடுத்தது தவறு. அடுத்தவன் காசு வாங்கி விளம்பரம் செய்யாதது அவர் தவறு.
9) அவர் கடவுள் நம்பிக்கை உள்ளதால் DMK. அவரைப் புறந்தள்ளி மலையாளி யைக் கொண்டாடியது.
10) அந்த மலையாளி ADMK. அவருக்கு நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.
11) இப்படி ஒரு மணிமண்டபம் சிவாஜி புகழுக்கு புகழ் சேர்க்குமா!
12) தன்மான தமிழன் சிவாஜி என்றுமே!
ஒரே ஒரு வருத்தம் தன்மான தமிழனின் புதல்வர்கள் தன்மானம் இல்லாமல் இருப்பது!
அதிக வாக்காளர் கொண்ட. சமூகத்தில் பிறந்தும் அதை பயன்படுத்தத் தெரியாத அப்பாவி!
https://external.fybz1-1.fna.fbcdn.n...BUJYJzMmiFawXx
'vasantha maligai' in natraj theater at bangalore celebrations part 1
The grear actor nadigar thilagam sivaji ganesan's vasantha…
youtube.com
Like
-
Edwin Prabhakaran Eddie
சிவாஜி அவர்களை சீண்டுவதற்கு எவனுக்கும் துணிவு இருந்ததில்லை ....சர்வாதிகாரம் பெற்ற எம்ஜியாரோ...இல்லை வேறு தயாரிப்பாளர்களோ, எவரா இருந்தாலும் .நம் திலகத்திற்கு அடிபணிந்த காலம் அது .......அரசியலில் வென்றார்கள் மக்களை ஏமாற்றி ...சீ அதுவும் ஒரு பிழைப்பா ?.................இப்பவும் சொல்கிறேன் சிவாஜி ரசிகனாக வீதியில் தலை நிமிர்ந்து நடப்பேன் கம்பீரமாக....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=5A81751A
-
-
புதிய கவர்னரிடமும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவோம் திருநாவுக்கரசர் பேட்டி
http://img.dailythanthi.com/Images/A...-of_SECVPF.gif
புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
-
-
-
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b2&oe=5A3FB286
Aathavan Ravi
பெரு மூச்சோடு ஒரு பதிவு.
வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ. உ. சி யாக,
பாரதியாராக நடித்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை நியாயமாக குடியரசுத் தலைவர் திறந்து வைத்து பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
... ஆனால் இங்கே எல்லா நல்ல விஷயங்களுக்கும்
கெஞ்சிக் கூத்தாட வேண்டியுள்ளது.
( நன்றி: எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார்
அவர்களுக்கு )
-
Nagarajan Velliangiri
அன்பு நெஞ்சங்களே ! வணக்கம்.
முதலில் டாக்டர்.அசோக் அவர்களுக்கு, உலகெங்கும் உள்ள, நடிகர்திலகத்தின் அன்பு ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவின் Radio Dehotties வானொலி நிலையத்தின் 'தமிழ் தர்பார்' நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி இன்று காலை 5.30 முதல் 6.30 வரை, ஒரு மணிநேரம் நடிகர்திலகம் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு ஒலிபரப்பு நடத்தி அசத்தி விட்டார் டாக்டர்.அசோக். அதற்குத்தான் இந்த நன்றி.
அந்த நிகழ்ச்சி, தமிழ் தர்பார் அல்ல. சிவாஜிதர்பார் (பெயர் உபயம் : ஜாஹிர் ஹுசேன் அவர்கள்) என்றுதான் சொல்ல வேண்டும். அவரது படங்களில் வந்த நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை, முழுமையாக ஒலிபரப்பி அசத்தி விட்டார்.இன்று அதிகாலை 4.30 மணிக்கே என்னைத் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அன்புடனும் அக்கரையுடனும் நினைவு படுத்தி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.
ஒலிபரப்பான பாடல்களை ஓரளவு வரிசையாக நினைவுபடுத்திச் சொல்ல முயல்கிறேன்.
1) கா கா கா (பராசக்தி)
2) நீ வருவாய் என்று காத்திருந்தேன்
(ராஜா)
3) பொன்மகள் வந்தாள்..(சொர்க்கம்)
4) இனியவளே என்று பாடி வந்தேன்..
(சிவகாமியின் செல்வன்)
5) ஏன் ஏன் ஏன்..ஒரு கிண்ணத்தை...
(வசந்தமாளிகை)
6) நீயும் நானும்..கண்ணா (கௌரவம்)
7) மதனமாளிகையில்..
(ராஜபார்ட் ரங்கதுரை)
8) போற்றிப் பாடடி பொண்ணே ...
(தேவர் மகன்)
9) எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்...
(பட்டாக்கத்தி பைரவன்)
10) பூங்காத்து திரும்புமா...
(முதல் மரியாதை..)
11) காதல் ராணி கட்டிக் கிடக்க..
(திரிசூலம்)
12) ஆடல் பாடலில் உலகமே
மயங்காதோ..
( வெற்றிக்கு ஒருவன்)
ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பாடல்களையும், அதுவும் முழுப்பாடல்களையும் ஒலிபரப்பியது மிகப் பெரிய விசயம்.காரணம் விளம்பரம் அதிகம் இல்லை..இரண்டு முறை மட்டும் சிறிய விளம்பரங்கள் இருந்தன...அவ்வளவுதான்.
நடிகர்திலகம், சிம்மக்குரலோன், செவாலியே, சிவாஜி, உலகமகா நடிகன்.......இவையெல்லாம் அவர் ஐயனைப்பற்றி அடிக்கடி கூறிய வார்த்தைகள்.மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சி முழுக்கப் பேசினார்.
(நீண்ட நாட்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலேயே குடியிருப்பதால் இடையிடையில் சில ஆங்கில வார்த்தைகள் வருவதை அவரால் தவிர்க்க இயலவில்லை போலும்....)
ஒவ்வொரு பாடலின் இடையிலும் ஐயனைப் பற்றிய சுவாரசியமான செய்திகளைச் சொல்லிச் சொல்லி நிகழ்ச்சியை இனிமையாக நடத்தினார்..
தயாரிப்பாளர் பாலாஜி ஐயனை வைத்துத் தயாரித்த படங்கள் அத்தனையிலும் ராஜா ராதா என்றே நாயகன் நாயகி பெயர்கள் இருந்தது....
TMS பாடுகிறாரா, இல்லை சிவாஜி பாடுகிறாரா என்றே தெரியாத வண்ணம் பாடலுக்கு ஐயன் வாயசைத்து நடித்தது....
இரண்டாவது ரிலீஸில், ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் ஓடியதை அறிந்து ஆச்சரியப்பட்டு அதனால் இன்ஸ்பையர் ஆகி இப்படி ஒரு நிகழ்ச்சி தயாரிக்க எண்ணம் கொண்டது...
ஐயனின் குரலும் கமலின் சிறுவயது மகள் ஸ்ருதியின் குரலும் இணந்து மனதை மயக்கியது....
MSV,மாமா போன்ற மிகப் பெரிய வல்லுனர்கள் ஐயனுக்கு நிறையப்படங்களில் இசையமைத்தது....
இளையராஜாவின் இசையில் அருமையான பல பாடல்கள் அமைந்தது....
பாரதிராஜா ஐயனுக்குச் செய்த முதல்மரியாதை...
ஐயன் மீன் சாப்பிடுவது...உனக்கு வயிறு வலிக்கக் கூடாதுன்னு ஒன்னே ஒன்னு...சாப்புடுதேன்..என்று சொல்லிச் சொல்லிச் சாப்பிட்டது...
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் அன்று நிகழ்ச்சி ஒலிபரப்பாவதும், ஐயனுக்குச் சென்னையில் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுவதும் பெருமகிழ்ச்சி...
இது முதல் முயற்சி என்பதாலும் நேரமின்மையாலும் இன்று பாடல்களுடன் மட்டும் ஒலிபரப்புவதாகவும் அவர் படத்தில் இடம் பெற்ற அருமையான வசனங்களை இனி வரும் நிகழ்ச்சிகளில் தொடரப் போவதாகவும்....
வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களைப் பற்றியும்...
ஐயனின் படங்களில் சிறந்த தத்துவ மற்றும் சோகப் பாடல்கள் நிறைய இருப்பினும், இன்று அவரது பிறந்த நாள் என்பதால் ஜாலியான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புவதாகவும்...
ஐயனின் ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் வாங்கச் சிரமப்பட்டதும் பின்னர் சைக்கிள் கொண்டு போய் சைக்கிள் டோக்கனுடன் எளிதாக டிக்கட் வாங்கியதும்....
இப்படி ஏராளமான விசயங்களை மிகச்சிறிய நேரத்தில் பகிர்ந்து கொண்டார்.
மிக மிக நன்றி அசோக்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், டாக்டர் அசோக் அவர்களை நான் தொடர்பு கொண்டு, ஐயனின் அனைத்து அன்பு உள்ளங்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.
அன்பு நண்பர்களே! இதை நான் டைப் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் டாக்டர்.அசோக் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு (Recorded broadcast) லிங்கை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். இன்று நேரலையில் கேட்டு மகிழ முடியாத நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியைக் கேட்டு ரசிக்கலாம் என்று. எனக்கு லிங்க் கிடைத்தவுடன் அதை அனைவரும் அறியும் வண்ணம் குழுவில் பகிர்கிறேன் நண்பர்களே!.
அன்புள்ளம் கொண்ட அருமை நண்பர் அசோக் அவர்களுக்கு மீண்டும் நன்றி.
-
Arumugam Balakrishnan
"பராசக்தி" பார்த்தேன் பேச கற்றுக் கொண்டேன்!
"பாசமலர்" பார்த்தேன் குடும்த்தை நேசிக்க கற்றுக் கொண்டேன்!!
"கை கொடுத்த தெய்வம"் பார்த்தேன் நட்பை அறிந்தேன்!!!
"வசந்த மாளிகை" பார்த்தேன் "குடி"யை மறந்தேன்
"படிக்காத மேதை" பார்த்தேன் நன்றியை கற்றேன்...
"கெளரவம்"பார்த்தேன் விடா முயற்சியை கற்றேன்
அய்யனே இப்படி உம்மால் நான் கற்ற நல்லவை ஏராளம்!!
அதனால் தான் நீர் என்றும் என்னுள் இருக்கின்றாய்!!!!
நின் புகழ் வாழ்க!!!
-
Jahir Hussain
palani india
அக்டோபர்,1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஸ்டுடியோ அதிபர், ஏவி.எம்.குமரன்; தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும், தனக்கும், சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை, 'வாரமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்:
என் தந்தையின் நெருங்கிய நண்பர், பி.ஏ.பெருமாள் முதலியார். என்.எஸ்.சி., எனப்படும் நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு போன்ற பெரிய ஏரியாக்களின், வெற்றிகரமான திரைப்பட வினியோகஸ்தர்.
ஒருமுறை, 'பராசக்தி என்று ஒரு நாடகம் பார்த்தேன்; நல்ல கதை. அதை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பெருமாள்.
'பெரிய வினியோகஸ்தரான நீங்க, ஒரு கதைய தேர்ந்தெடுத்து, இது படமாக வந்தால் நன்றாக இருக்கும்ன்னு நினைக்கும்போது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்வதோடு, தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஏற்பாடு செய்து தர்றேன்...' என்று உறுதியளித்தார், என் தந்தை.
ஏவி.எம்., நிறுவனமும், பி.ஏ.பெருமாளின் நேஷனல் பிக்சர்சும் இணைந்து ,கூட்டுத் தயாரிப்பில் உருவானது தான், பராசக்தி திரைப்படம்.
இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சு; வசனகர்த்தா மு.கருணாநிதி, இசையமைப்பாளர், ஆர்.சுதர்சனம், ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் மற்றும் அரங்க அமைப்பு பாலு போன்றோர், இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமாகி, நல்ல முறையில் நடைபெற்று வந்தது.
இப்படம் கூட்டுத் தயாரிப்பு என்பதால், குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அதைப் போட்டுப் பார்த்து, நிறை, குறைகளைக் கண்டு, அதற்கேற்ப, மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர்வது, என் தந்தையின் பழக்கம். எடுத்தது வரை, படத்தை போட்டுப் பார்த்ததில், சிவாஜி கணேசனின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை, என் தந்தைக்கு!
பெருமாள் மற்றும் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரை அழைத்து, 'என்னப்பா இது... இந்த பையன் எலும்பும் தோலுமாக இருக்கிறார்; இவரைப் போட்டு படம் எடுத்தால் சரியா வருமா... வியாபாரம் செய்ய முடியுமா... பேசாமல், எடுத்தவரை, 'கேன்சல்' செய்துட்டு, அண்ணாதுரை கதை வசனத்தில், வேலைக்காரி படத்தில் நடித்திருக்கும், கே.ஆர்.ராமசாமிய நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்; அவருக்கு பேரும், புகழும் வேற இருக்கு...' என்றார்.
ஏவி.எம்.,மே இப்படி சொல்கிறாரே, எப்படி மறுத்து பேசுவது என்று, மூவரும் தயங்கினர்.
ஆனாலும், இயக்குனர் பஞ்சு, 'இந்தப் பையன், கருணாநிதி வசனத்தை, ரொம்ப அருமையா பேசியிருக்கார். இப்ப நீங்க பார்க்கிற கணேசனை வச்சு சொல்லாதீங்க. இவரு, 'டிராமா'விலிருந்து சினிமாவுக்கு வந்திருக்காரு. நாடகத்தில நடிச்சிட்டிருந்தபோது, வசதியா சாப்பிட்டிருக்க மாட்டார். அது தான் மெலிஞ்சு இருக்கார்.
ஏவி.எம்., ஸ்டுடியோவிலேயே ஒரு அறையை ஒதுக்கி கொடுங்க. மூணு மாசம் அங்கேயே தங்கி, வேளா வேளைக்கு சத்தான உணவா சாப்பிட்டு, நிம்மதியா உடம்பை கவனிச்சிக்கட்டும். அதன் பின், படப்பிடிப்பை வைச்சுக்கலாம். அதுக்குபிறகும் உங்களுக்கு திருப்தியில்லன்னா, என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்றார்.
என் தந்தைக்கும் அது சரி என்று படவே, ஏவி.எம்., வளாகத்தில் கணேசனுக்கு அறை ஒதுக்கி தந்தார். அத்துடன், அந்த மூன்று மாதங்களும், உடம்பை தேத்துவதைத் தவிர, வேற வேலையை செய்ய கூடாது என்று கூறிவிட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பின், கணேசன் நடித்த அந்த காட்சிகளை, மறுபடியும் எடுத்துக் காட்டினர். 'பையன் பூசின மாதிரி இருக்கார்; பிரமாதமாக பேசி நடித்திருக்கிறார்...' என்று என் தந்தை சொல்ல, மொத்த படக் குழுவினரும் சந்தோஷப்பட்டு, விரைந்து படப்பிடிப்பை முடித்தனர்.
கிருஷ்ணன் - பஞ்சுவின் பிடிவாதம், பி.ஏ.பெருமாளின் ஒத்துழைப்பு, கருணாநிதியின் சம்மதம் இவற்றுடன் ஏற்கப்பட்ட நாடக நடிகர், கணேசன், பராசக்தி படத்தின் மூலம், திரை உலகின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி, சிவாஜி கணேசன் என்று மறுபிறவி எடுத்து, சரித்திரம் படைத்தார்.
கடந்த, 1951ல், பிரபல இயக்குனர், அகிராகுரோஸாவா இயக்கிய, ரோஷோமேன், உலக அளவில் எல்லாராலும் புகழப்பட்ட வெற்றிப் படம். 'அப்படத்தின் பாணியில், நான் ஒரு கதை எழுதியிருக்கேன்; நீங்க விரும்பினால், இதை, உங்கள் பேனரில் படமாக்கலாம்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பிரபல வீணை வித்வானும், இயக்குனருமான,
எஸ்.பாலச்சந்தர். ஏற்கனவே, அப்படத்தை ஜப்பானில் பார்த்திருந்தார், என் தந்தை. பாலச்சந்தர் சொன்ன கதையும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்தார்.
படம் கால் பாகம் முடிந்த நிலையில், எடுத்தவரை போட்டுப் பார்த்ததில், என் தந்தைக்கு திருப்தி இல்லை. 'நீங்க என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, த்ரில், இந்த காட்சிகளில் இல்லயே... விஸ்வநாதனின் நடிப்பும், கதைக்கேற்றபடி சோபிக்கவில்லயே...' என்றார்.
இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர், 'கோல்கட்டா, விஸ்வநாதன் சிறந்த நடிகர்; கோல்கட்டாவில் நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது...' என்றார்.
'வங்கத்தில் அவர் புகழ் பெற்றவராக இருக்கலாம்; தமிழகத்தில் பேர் எடுக்கும் அளவுக்கு அவர் நடிப்பு இல்லயே... கணேசனைப் போட்டு, இந்தப் படத்தை எடுங்கள்; படம், நன்றாக, விறுவிறுப்பாக அமையும்...' என்றார், என் தந்தை.
எந்த, கணேசனின் தோற்றம் சரியில்லை என்று மாற்றச் சொன்னாரோ, அதே, கணேசனைப் போட்டு படம் எடுத்தால், படம் நன்றாக அமையும் என்று, கணேசனுக்கு பரிந்து பேசினார், தந்தை.
ஜாவர் சீதாராமன் சொன்ன சில மாறுதல்களை செய்து, கணேசனை நடிக்க வைத்து, படம் முடிக்கப்பட்டது. ஆரம்பித்த போது, 'ஒரு நாள்' என்று இருந்த பெயர், பின் மாற்றப்பட்டு, அந்த நாள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அக்காலத்தில், பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது மிகவும் அரிது. ஆனால், இப்படம், பாடல்களே இல்லாமல் உருவானது. ஒளிப்பதிவு அமைப்பிலும், கேமரா நகர்விலும் புதிய பாதையை அமைத்ததை பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.
கதாநாயகனாக நடிக்கத் துவங்கியிருந்த கணேசன், இப்படத்தில் வில்லனாக நடித்து, நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டி, பேரும், புகழும் பெற்றார். ரிலீசான நேரத்தை விட, இந்தப் படம், அடுத்தடுத்து வெளியான நேரங்களில், பெரிய வெற்றியை அடைந்தது.
சிவாஜியின், 125வது படம், உயர்ந்த மனிதன்! தன், 125வது படம், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தன் ஆசையை, என் தந்தையிடம் தெரிவித்திருந்தார், சிவாஜி கணேசன். அந்தப் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன், உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள் எல்லாரையும் அழைத்து, 'சிவாஜிக்கு ஏற்ப நல்ல கதை வேண்டும்...' என்றார், என் தந்தை.
அப்போது, வங்க மொழியில் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடும், உத்தர் புருஷ் என்ற திரைப்படத்தைப் பற்றி அறிந்து, அப்படத்தை சென்னைக்கு வரவழைத்து பார்த்தோம்; கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப, சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கதையைக் கேட்டதும், உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார், சிவாஜி.
கதையில், சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் சிறு வயது நண்பர்கள்; பெரும் செல்வந்தர், சிவாஜி. அவர் வீட்டு கார் டிரைவர், மேஜர்.
மலை பகுதி சாலையின் வழியாக வரும் போது, 'நாம் சின்ன வயசில் பள்ளிக்கு செல்லும் போது, நடந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்து விட்டன...' என்று சொல்லி, மனம் விட்டு சிரிப்பார், சிவாஜி. 'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...' என்று, சொன்னார்கள், கிருஷ்ணன் - பஞ்சு. அக்கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். 'என்ன மாதிரி பாட்டு அமைய வேண்டும் என்று ஒரு, 'க்ளூ' கொடுங்கள்...' என்று கேட்டார்,
எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்போது சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற படம் ஓடியது. அப்படத்தில், மலை அடிவாரத்தில், கதாநாயகன் ரெக்ஸ் ஹாரியன், கையில் ஒரு ஸ்டிக்கை வைத்து, அதைச் சுழற்றி, பேசியபடியே வருவார், சிரிப்பார், பாடுவார், ஓடுவார்; பார்க்க நன்றாக இருக்கும். அக்காட்சி என் நினைவுக்கு வந்தது. எம்.எஸ்.வி.,யிடம் விவரமாக சொன்னேன். 'வாலியை வரச் சொல்லுங்கள்; உட்கார்ந்து பேசி, 'கம்போஸ்' செய்துடுவோம்...' என்றார்.
ஏவி.எம்., நிறுவனம் தயாரிக்கும் படங்களில், இசை அமைப்பாளரோடு உட்கார்ந்து விவாதிப்பது, டியூன் போட வைப்பது, டியூனை, 'அப்ரூவ்' செய்வது, ஓ.கே., செய்வது இவை எல்லாம் என்னுடைய பொறுப்புகள்.
கவிஞர் வாலி வந்ததும், கதையில் பாடல் வரும் இடத்தைச் சொன்னோம். 'அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார் சிவாஜி. இடையிடையே, அந்த நிகழ்ச்சிகளை வசனமாகவும் பேசுகிறார். அந்த வசனங்களையும், நீங்கள் தான் எழுத வேண்டும். இப்படி ஒரு பாடல் வேண்டும்...' என்று சொன்னேன்.
நாங்கள் சொன்ன முதல் வாக்கியத்தையே முதல் அடியாக வைத்து, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே... என்று பாடல் வரிகளை சொல்ல, அதை பாடிக் காண்பித்தார்
எம்.எஸ்.வி., 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.
மறுநாள் ரெக்கார்டிங்; இப்போது இருப்பது போல, மல்டி டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் கிடையாது; சிங்கிள் டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் தான். ஒரே சமயத்தில் பாடலையும், அதன் நடுவே வரும் வசனங்களையும் பேசி, ரெக்கார்டிங் செய்ய வேண்டும். ஒரு மைக்கில், டி.எம்.எஸ்., பாட, மற்றொரு மைக்கில், சிவாஜியும், மேஜரும் ஜோடியாக நின்று வசனம் பேச, ரெக்கார்டிங் தியேட்டரில், இசை கலைஞர்கள், இசைக் கருவிகளை வாசிக்க, சிறப்பாக நடந்தது, ரெக்கார்டிங்.
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் வெற்றி அடைந்து பேரும், புகழும் பெற்றுத் தந்தது.
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் படத்தை, அவரது முதல் படமான, பராசக்தி படத்தை இயக்கிய, கிருஷ்ணன் - பஞ்சு தான் இயக்கினர்.
கடந்த, 1968ல் தான், பின்னணி பாடகிக்கு விருதை அறிவித்தது, மத்திய அரசு. விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே, 1968ல், உயர்ந்த மனிதன் படத்தில், 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' என்ற, பாடலுக்காக, முதல் தேசிய விருது பெற்றார், பி.சுசீலா.
'ஏவி.எம்., ஒரு செல்லுலாய்டு சரித்திரம்' என்ற பெயரில், தன் தந்தையின் திரைப்பட அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
ஏவி.எம்.குமரன்.
சிவாஜி கணேசனுக்கு, ஏவி.எம்., ஸ்டுடியோவில், ஏ.சி.,யுடன் கூடிய, பிரத்யேக, 'மேக் - அப்' அறை உண்டு........ (Thanks to Rathinavelu sir)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...92&oe=5A7A9336
-
Jiaa Mohamed Sulthan
·
#நடிகர்திலகத்தின்
#நன்றி_மறவாமை!
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலேயே அவரது உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
(அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை அவரது பிறந்தநாளான இன்று பதிவிடுவதில் பெருமையடைகிறேன்!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5d&oe=5A884393
-
-
-
Abdul Razack
சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி, இந்த படத்தை தயாரித்தவர், வடஆற்காடு மாவட்டம் வேலூர் தோட்டபாளையத்தில் வசித்த P.A. பெருமாள் என்பவர், அவருக்கு சொந்தமாக நேஷ்னல் தியேட்டர் வேலூரில் இருந்தது... அதன் பெயரிலேதான்...
நேஷ்னல் தியேட்டர்ஸின் பராசக்தி..
இயக்குனர்கள்: கிருஷ்ணன்-பஞ்சு
கதை-வசனம்- மு.கருணாநிதி ...
... இவர் தியேட்டரிலேயே வெள்ளிவிழா கொண்டாடியது...
சில வருடங்கள் கழித்து………
PA பெருமாள் தொழில் அபிவிருத்திக்காக சிவாஜியிடம் தனது திரையரங்க பத்திரங்களை வைத்து சில லகரங்களை கடனாக பெற்றார்.
பல வருடங்கள் கழித்து
சிவாஜியின் மறைவிற்கு பிறகு
தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக திரும்ப செலுத்தாமல் இருந்த சில லகரம் கடன் பல ஆண்டுகள் ஆனதால் சில கோடியானது.
PA பெருமாளின் பிள்ளைகள் தங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாது என்பதை உணர்ந்து சிவாஜியின் மகன் பிரபுவிடம் வந்து தங்கள் இயலாமையை சொல்லி சிவாஜியின் குடும்பத்திற்கு அவர்களது திரையரங்கை மாற்றி பத்திரபதிவு செய்துதருவதாக கூறினர்.
பிரபு அவர்களை அவர்களது வீட்டில் உணவருந்த சொல்லிவிட்டு, சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி வெளியே சென்றுவிட்டார்.
இரண்டு மணிநேரம் கழித்து ஒரு பெட்டியுடன் வந்த பிரபு, சாரி அமொண்ட் பெரிசு அதான் லேட்டாயிடுச்சி என்றவராய் தனது கையிலிருந்த பெட்டியை PA பெருமாள் அவர்களின் பிள்ளைகள் கையில் கொடுத்து
"அண்ணே அன்று அப்பா (PA பெருமாள்) இல்லை என்றால் இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இல்ல.
எங்களுக்கு வாழ்வுகொடுத்த தெய்வம் அவர். நீங்க போய் அந்த இடத்தை விற்க்கலாமா"? என்று கேட்டு திரையரங்க பத்திரத்தையும் , பணத்தையும் கையில் கொடுத்து அவர்களை வழியனுப்பினார்.
தங்கள் வாழ்வில் விளக்கேறியவரின்
வீட்டில் விளக்கேற்றியவர் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசு. இந்த பதிவின் நோக்கம் நேற்று திரு .ஜாஹிர் உசேன் அவர்கள் ரத்னவேலு சாரின் பதிவில் AVM குமரன் தினமலர் வாரமலர் இதழில் எழுதிய பதிவை பார்த்தேன் அண்ணன் பிரபு செய்த இந்த காரியமே போதும் யார் சிறந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள! இந்த அன்னை இல்லம் எல்லா செல்வமும் பெற்று இன்றும் வளமுடன் நடைபோட காரணம் நன்றி என்னும் செஞ்சோற்று கடன் தான்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e4&oe=5A886F57
-
-
-
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ec&oe=5A8468A2
Sundar Rajan
கோவை மாநகரில் உள்ள
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நமது நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தலைவரின் படம் திரையிடப்படவில்லை என்ற மனவருத்தத்தை களைய... வந்து விட்டார் நமது கலை தெய்வம் சிம்ம சொப்பனமாக,
ஆம், ஒரு படம் அல்ல, ஒரு வாரம், ஏழு படம் அல்ல ஏழு காவியம்.
ஆம் அன்பு இதயங்களே, வரும் 6.10.2017 வெள்ளி முதல் கோவை ராயல் திரையரங்கில் வெற்றி முரசு கொட்ட வருகிறார் நமது நடிகர்திலகம். வரவேற்க தயாராகுங்கள் அன்புள்ளங்களே....
நடிகர்திலகம் வாரம் வசூல் புரட்சி செய்யட்டும்,
திரளட்டும் சிங்கத்தமிழனின் அன்பு கூட்டம், கோவை ராயல் திரையரங்கில்.
-
-
சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம்,
சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன்,
சிவாஜி நடிப்புலகின் கலைக்கலஞ்சியம் ,
தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை.
"அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை". அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.
பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.
கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள்.
(எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).
http://oi65.tinypic.com/2eyzuwn.jpg
-
ஒருவருக்காக வாதாடுவது வேறு
ஒருவருக்கென தீர்மானிக்கப்பட்டதை தட்டிப் பறிக்க
வாதாடுவது என்பது வேறு
-
-
Sivaji Ganesan Birthday function at Music Academy
https://www.youtube.com/watch?v=x0McoJpf_zQ
-
-
From Vikatan,
சிவாஜி கணேசனின் பெருமையை களங்கப்படுத்துகிறார்கள்! - மனம் திறக்கிறார் எம்.ஜி.ஆர்
` ‘இயற்கையான நடிப்புக்கு எதிர் காலத்தில் வரவேற்பு இருக்கும்; மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது’ என்று தென் இந்தியச் சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் பேசினீர்கள் அல்லவா?
திரு. சிவாஜி கணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?’’
``இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது, உடனடியாக அவர்கள் திரு. சிவாஜி கணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படியானால், இவர்கள் திரு. கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறார்களா? இப்படிப் பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெருமையை இவர்கள் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள்.’
http://img.vikatan.com/av/2017/10/mq...ages/165p2.jpg
உங்களுக்கும் திரு. சிவாஜி கணேசனுக்கும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவாவது நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்தால் என்ன?’’
`` (சிரித்துக் கொண்டே) எங்கள் இருவரையும் போட்டுப் படம் எடுத்தால் அந்தப் படம் ஒழுங்காக வெளிவரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? நானும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவன். சிவாஜியும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவர். கேமராவை எந்தப் பக்கமாக வைத்தால் யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று இரண்டு பேருக்குமே தெரியும். அவருக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேமரா வைக்கப்பட்டால் நான் தான் ஒத்துழைப்பேனா? அல்லது எனக்கு முக்கியத்துவம் வரும்போது அவர்தான் ஒத்துழைப்பாரா? படம்தான் ஒழுங்காக வெளி வருமா?
அப்படியே படம் முடிந்து வெளிவந்தாலும், ஒரு காட்சியில் என்னைப் பார்த்துவிட்டு என் ரசிகர்கள் கை தட்டுவார்கள். அடுத்து காட்சியில் அவர் ரசிகர்கள் அவரைப் பார்த்துக் கை தட்டுவார்கள். கை தட்டல், கை கலப்பாக மாறித் தியேட்டரே ரத்த வெள்ளமாகி விடுமே!’’
-
From Vikatan,
“அரசியல்வாதிகள் மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” - வேதனைப்படும் சிவாஜி
தேசிய திரைப்பட விருதுகளைப்பெற டெல்லி வந்த மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் திரைப்பட விழா இயக்குநரகம் கனிஷ்கா ஓட்டலில்தான் ரூம் போடப்பட்டிருந்தது. சிவாஜிக்கு மட்டும் அசோகாவில்! அசோகாவின் 542-ம் எண்ணுள்ள ‘நாகா’வில் தங்கியிருந்தார் நடிகர் திலகம்.
விருது வழங்கும் விழாவுக்கு முன்தினம், மாலை ஐந்து மணிக்கு ஐந்தாவது ஃப்ளோரிலுள்ள அந்த ‘சூட்’டின் அழைப்பு மணியை அழுத்தினோம். இரண்டு நிமிடங்களில் கதவு திறக்க... லுங்கி, ஷர்ட் சகிதமாக வெளிப்பட்டார். சிவாஜியின் மகன் ராம்குமார். பின்னால் திருமதி கமலா சிவாஜி.
“அப்பாவுக்கு உடல்நிலை சற்றுச் சரியில்லை. இன்று மாலைதான் நாங்கள் டெல்லி வருவதாக இருந்தோம். சென்னையில் நிறைய விசிட்டர்கள். அவர்கள் ஆனந்தம் பொங்க வாழ்த்தும்போது, அப்பா ரொம்ப எமோஷனலாகி விடுகிறார். அதனால்தான் அங்கிருந்து சீக்கிரமாகவே கிளம்பி டெல்லி வந்துவிட்டோம். நீங்களும் கூட இப்போது அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். நாளைக் காலை பத்து மணிக்கு வர முடியுமா?” என்று ராம்குமார் கேட்க - “விகடன் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டுப் போகலாமா?” என்று நாம் பதிலுக்குக் கேட்க - “சற்று வெயிட் செய்யுங்கள்” என்று நம்மிடம் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றார் ராம்குமார். மூன்று நிமிடங்கள் கழித்துக் கதவைத் திறந்த அவர், ‘`ஓகே... வாழ்த்துத் தெரிவியுங்கள். ரிலாக்ஸ்டான டிரஸ்ஸில் இருப்பதால் போட்டோ வேண்டாம்” என்றார்.
கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைந்தோம். நடையில் லேசான தளர்ச்சி இருந்தாலும் சிம்மக்குரலோனின் கம்பீரமும் கண்களும் சேர்ந்து வெளிப்படுத்தும் அந்தப் பரந்த சிரிப்பு குறையவில்லை. “நன்றி தம்பி!” என்று சொல்லி பொக்கேயை வாங்கிக்கொண்டு உடனே நமக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் சிவாஜி.
மறுநாள் விருது வழங்கும் தினம். காலை பத்து மணிக்குச் சிவாஜியின் அறை முன் இருந்தோம். ராம்குமாரும் பிரபுவும் வெளிப்பட்டனர். “இன்னொரு சூட்டில் டி.வி-க்குப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. சற்று வெயிட் பண்ணுங்களேன்” என்றார் ராம்குமார். லாபியில் நாம் உட்கார, கையில் மொபைல் போனுடன் நம்முடன் ஜோடி சேர்ந்தார் பிரபு.
http://img.vikatan.com/av/2017/10/mq...ages/168p2.jpg
“அப்பா நடித்த படங்களிலிருந்து அருமையான ஸீன்கள் அடங்கிய இருபத்தைந்து நிமிட விடியோ கேசட் தயாரிச்சு வெச்சிருக்கேன். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னில் ‘மஞ்சள் அரைத்தாயா?’ வசனத்திலிருந்து அப்பாவின் முக்கியப் படங்களின் கிளிப்பிங்குகள் அதில் இருக்கு. ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சு அந்த கேசட்டைப் போட்டுக் காட்டணும். எங்க வீட்டிலுள்ள எல்லோருக்குமே அப்பா விருது வாங்குவதை நேரடியாகப் பார்க்க ஆசைதான். ஆனா, பசங்களுக்கு ஸ்கூல். வீட்டைப் பார்த்துக்கவும் யாராவது இருக்கணும் என்பதால் மத்தவங்க டெல்லிக்கு வரலை” என்று சொன்னார் பிரபு.
“இப்பவும் சிவாஜி சாருக்கு அரசியல் ஆர்வம் இருக்கா?” - பிரபுவிடம் கேட்டோம்.
“என்னைக்கு அப்பா அரசியலிலிருந்து விலகினாரோ, அன்னையிலிருந்து அவருடன் அரசியல் பேசறதை நாங்க விட்டுட்டோம். அப்பா மாதிரி நேர்மையானவர்களுக்கு இன்றைய அரசியல் சரிபட்டு வராது!” என்றார்.
அதற்குள் ராம்குமார் வந்து “அப்பா ரெடி” என்று சொல்ல, நாம் உள்ளே நுழைந்தோம்.
பனியன் அணியாமல் வெளீரென்ற கதர் சட்டை - வேட்டியுடன் பளீரென்று சோபாவில் அமர்ந்திருந்தார் சிவாஜி. நெற்றி முழுக்க விபூதிப்பட்டை. ‘`வாங்க தம்பி! நேத்து நீங்க அக்கறையா பொக்கே கொடுத்ததால்தான் இன்னிக்கு உங்களைக் கூப்பிட்டேன்” என்று தனக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டியாகத் தலையை உயர்த்தி வெடிச்சிரிப்பு சிரித்து நம் தோளில் தட்டினார். சற்றுத் தள்ளி உட்காரப்போன நம்மை ‘`சரிதான்! இங்க, பக்கத்துல வந்து உட்கார மாட்டீங்களா?” என்று பக்கத்தில் கை காட்ட, ‘நன்றி’ சொல்லிவிட்டு உட்கார்ந்தோம்.
``நிறைய பேட்டி கொடுத்தாச்சு. ஆனா, நிறைய பேர் ஒரே மாதிரி கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ‘உங்களுக்கு ஏன் இவ்வளவு லேட்டாக விருது கொடுத்திருக்கிறார்கள்’ என்று இவர்களுக்குப் பதில் சொல்லியே எனக்குப் பொறுமை போயிடுச்சு. லேட்டாகக் கொடுத்தால் அதுக்கு நான் என்னப்பா செய்ய முடியும்? ஒருத்தராவது விருது கொடுத்தவங்களை இந்தக் கேள்வி கேட்டுப் பதில் வாங்கிப் போடமாட்டீங்களா?” என்றவர், “நீங்களும் அதே கேள்வியைத்தானே கேட்கப் போறீங்க?” என்றார்.
“நீங்கள் நடிக்காத ரோல் இல்லை. அதிலும் குறிப்பாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற தேசப்பற்றுக்கு உதாரணமான நிஜ கேரக்டர்களை ஏற்று உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறீர்கள். அதனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய பொருத்தமானவர் நீங்கள்தான். சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டு காலத்தில் இந்தியாவோட வளர்ச்சி எப்படி இருக்கு என்று நினைக்கிறீர்கள்?”
நீளமாக இப்படி ஒரு கேள்வி கேட்டதும் உள்ளங்கையால் முகவாயைத் தாங்கிக்கொண்டு கண்களை அகட்டி நம்மைப் பார்த்துவிட்டு சிவாஜி சொன்னார்...
http://img.vikatan.com/av/2017/10/mq...ages/168p3.jpg
“இன்னிக்கு காமராஜ் பிறந்த நாள். அதுதான் எனக்கு முதல்ல நினைவுக்கு வருகிறது. பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள்ல அவரோட ஆளான எனக்கு டெல்லியில் வெச்சு, ‘அவார்டு’ கொடுக்கப் போறாங்க. அதுக்காக முதல்ல நான் ரொம்பவும் சந்தோஷப்படறேன்!” - சொல்லும்போதே சிவாஜியின் கண்கள் பனித்தன.
‘`ம்... சுதந்திரம் வாங்கி ஐம்பது வருஷம் ஆயிடுச்சில்லே. என்னத்தை நாம பெரிசா சாதிச்சுட்டோம்? நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப நான் ஒரு அரசியல்வாதி மாதிரி பேசலை. இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்தியப் பிரஜை என்ற முறையில் சொல்கிறேன்... ஐம்பது வருஷம் ஓடிடுச்சுங்கிறதுக்கே வெறுமனே விழா கொண்டாடிட்டா போதுமா?” - உணர்ச்சிவசப்பட்டு உயர்ந்த சிவாஜியின் குரல் சட்டென்று தடைப்பட்டு நிற்கிறது.
“ஒவ்வொரு நாளும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போது “நேத்து நீ பெரிசா என்ன காரியம் செய்தாய் என்று கேட்டுக்கொண்டே தேதியைக் கிழி” என்று பெரியார் சொல்வார். அப்படி நினைச்சுப் பார்க்கறவங்க இப்ப யார் இருக்கா..?” - சிரிக்கிறார் சிவாஜி.
அசோகா ஓட்டல் பேரர், இரண்டு ஃப்ளாஸ்க்குகளை ஒரு தட்டில் சிவாஜியின் முன் உள்ள டீபாயில் வைக்கிறார். “பாய், அவுர் ஏக் கிளாஸ் லாவோ!” என்று சிவாஜி இந்தியில் சொல்ல, கிளாஸ் கொண்டு வருகிறார் பேரர். ஒரு ஃப்ளாஸ்க்கிலிருந்து கொதிக்கும் வெந்நீரை கிளாஸில் ஊற்றி, கிளாஸை நாப்கின் பேப்பரால் பிடித்துக்கொண்டு ஊதி ஊதி மெதுவாகக் குடிக்கிறார்.
``இந்தியா போதுமான அளவு முன்னேறவில்லைனு எப்படி சார் சொல்றீங்க?” என்று கேட்டதும், அவர் முகத்தில் கோபம் துளிர்விடுகிறது.
“பின்னே..? மொதல்ல ஜப்பானைப் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோம். இப்ப சைனாக்காரன் ஜப்பானை முந்தப் பார்க்கறான். உடனே சைனா பத்திப் பேசறோம். ஆனால், நாம் அந்த அளவுக்கு முன்னேறலையே. நம்மிடம் என்ன குறை இருக்கு? நம்மிடம் உள்ள ஆற்றலை ஒழுங்காக ‘சானலைஸ்’ செய்யலையே ராஜா. உங்கொப்புரானே சொல்றேன்... நாம் ஒழுங்காக இருந்தால் எல்லா நாட்டையும் மிஞ்சிடுவோம்!”
எழுந்துபோய் ஜன்னலருகே நிற்கிறார். சமீபத்தில் சன் டிவி-யில் சௌகார் ஜானகி, சிவாஜியைப் பற்றிக் கூறியதை அவரிடம் சொல்ல, பழைய நினைவுகள் கண்முன் தெரிவது போன்ற பாவனையில் நம்மிடம், “யார், ஜானகியா? ஜானகி ஒரு நல்ல பார்ட்னர்...” - உதட்டில் மெலிதான சிரிப்பு ஓடுகிறது.ஜன்னலருகே நின்றிருந்தவர் சோபாவில் வந்து உட்கார்ந்துகொண்டு, கைகளைப் பின்னால் நீட்டியவாறு பேசுகிறார்.
“எனக்கு நல்லா தெரியுது. நான் முதியவனாகிவிட்டேன். நாளுக்கு நாள் வயசாகிக்கிட்டே போகுது. இதுவரை என்ன செஞ்சோம்னு ஒரு பக்கம் இருக்கட்டும்... வருங்காலச் சந்ததியினருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பிலேயே என் நாட்களைக் கழிச்சுக்கிட்டிருக்கேன்...” - இதைச் சொல்லும்போது சிவாஜியின் கண்கள் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தை நோக்குகின்றன.
எதிரேயிருக்கும் ஃப்ளாஸ்க்கைத் திறந்து ஒரு கிளாஸில் டிகாஷனை ஊற்றிப் பாலைக் கலக்குகிறார். “என்னாலே காபியில்லாமல் இருக்க முடியாது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு எட்டு காபி குடிச்சுடுவேன். இப்போ மிஞ்சிப் போனா ரெண்டுதான். இத்தனை கட்டுப்பாட்டுக்குக் காரணம் என் மனைவி கமலாதான்...” - சொல்லிக் கொண்டே ஆனந்தமாக காபியைச் சுவைத்துக் குடிக்கிறார்.
http://img.vikatan.com/av/2017/10/mq...ages/168p4.jpg
“நான் தஞ்சாவூர்க்காரன். தஞ்சாவூர் காபியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே. இதெல்லாம் என்ன காபி... சென்னை வந்தா போகிற ரோட்ல நம்ம வீட்டுக்கு வாங்க அருமையான தஞ்சாவூர் காபி தர்றேன்.’’
திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டதுபோல் ‘`ஒருநாள் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து சேர்றேன். அது நல்ல இரவு நேரம் விமானநிலையத்தில் விமானம் இறங்கும் போது மேலிருந்து பார்த்தால் வெளிச்சமே இல்லாமல் விமானநிலையம் அழுது வடியுது. என்னோட பிளேனில் இருந்த வெள்ளைக்காரங்க நம்ம ஊரைப் பத்தி மட்டமாகப் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் இன்னமும் இருநூறு வருடங்கள் பின்தங்கித்தான் இருக்கோம். ஏன் இப்படி? இதான் நம் தலையெழுத்தா தம்பி?” - பேச்சின் உஷ்ணத்தில் மூச்சிறைக்கிறது. கண்களை ஒருகணம் மூடிக்கொண்டு யோசிக்கிறார்.
“நான் சாகறதுக்குள்ளே இந்தியா நல்ல நிலையை அடையணும் வெளிநாட்டுக்காரங்க நம்ம நாட்டைப் பார்த்துட்டு, ‘அடடே! இந்தியாவா? எப்படி மளமளன்னு மாறிப்போச்சு’ அப்படினு கேட்கணும். அதுக்கு அந்த ஆண்டவன்தான் அரசியல்வாதிங்க மனதில் புகுந்து இந்தியாவைத் காப்பாத்தணும்!” - சொல்லிவிட்டு முணுமுணுத்த குரலில்.
“ஆண்டவன் அரசியல்வாதி மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” என்றவர், மீண்டும் உரக்க ‘`ஆனா, அப்படியெல்லாம் பார்த்தா காரியம் நடக்குமா? நான் ஒரு சாதாரண நடிகன். அதிகமாகப் பேசினா இவன் வசனம் பேசறான்னு சொல்லிடுவாங்க. ஆனா, என் மனசுக்குள்ளே என்ன இருக்குனு நான் சொல்லித்தானே ஆகணும்.”
முதன்முதலில் நாம் கேட்ட கேள்விக்கே திரும்ப வந்துவிடுகிறார். “சுதந்திரம் பத்திக் கேட்டீங்க இல்லே...?இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தப்போ ஏதோ ஒரு நாடகத்தில் நான் நடிச்சுக்கிட்டிருந்தேன். ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’னு பாரதியின் பாடலைப் பாடினதுகூட நல்லா நினைப்பிருக்கு. ஆனா, இப்போல்லாம் சுதந்திரப் போராட்டம் பத்தி தேசத்தோட மகிமையைச் சொல்ற படங்கள் வர்றதில்லை பார்த்தீங்களா? ப்ச்! சுதந்திரம் அடைந்த புதிதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பத்தின சப்ஜெக்ட் ‘கரெண்ட்’டா இருந்ததால் ஜனங்க பார்த்து ரசிச்சாங்க. அப்படிப்பட்ட படமெல்லாம் இப்போது எடுத்தா ஓடாது. இப்போல்லாம் ‘லைட்’டாதான் படம் எடுக்கறாங்க. ரெண்டு டான்ஸ், ரெண்டு ஃபைட் இப்படி... அந்தக் காலத்து டைப்ல வசனம்.. பேசறது இப்போ எடுபடறதில்லே. பழைய மாதிரி வசனம் பேசினால் ‘என்னடா இவன் நமக்கு Preach செய்யறானே’னு மக்கள் கேட்கறாங்க. இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லோருமே ‘லைட்’ ஆகத்தான் இருக்காங்க. ஆனா, அதில் ஒண்ணும் தப்பில்லே. அதுக்குத் தகுந்தாப்பல நம்மை மாத்திக்க வேண்டியதுதான்!’’ திரும்ப - கன்னத்தில் கை வைத்துக் கொள்கிறார்.
‘`கரெக்ட்தான். ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு இந்தத் தலைமுறைக்குத் தகுந்த மாதிரி பிரமாதமா ஈடு கொடுத்திருக்கீங்க!” - மனதார நாம் சொல்லவும்..
“நான் எங்க படத்துல நடிச்சேன்? ஏதோ இரண்டு நாளைக்குக் கூப்பிட்டாங்க... போனேன். படம் ஓடுதா இல்லையானுகூட பார்க்கலை. ஏன்னா நான் பிஸினஸ்மேன் கிடையாது!” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுக் கை கூப்பிய சிவாஜி, ‘மெட்ராஸ் வந்தா கண்டிப்பா நீங்க நம்ம வீட்டுக்கு வந்து தஞ்சாவூர் காபி குடிச்சே தீரணும்...” என்று அன்புக் கட்டளையுடன் நம் தோளின் மீது தட்டி வழியனுப்புகிறார், நடிப்புக்கே இலக்கணம் வகுத்த அந்த மேதை!
-
From Vikatan, Jayalalitha Interview.
முன்பு என் தாயார், சிவாஜி அவர்களோடு நடிக்கும்போது, சிறுமியாக இருந்த நான் படப்பிடிப்பிற்குக் கூடப் போவேன். செட்டில் ‘ஏய்! பாப்பா!’ என்று என் கன்னத்தில் கிள்ளி விளையாடுவார் சிவாஜி. அன்று வளராத ஒரு பாப்பாவாகத்தான் இருந்தேன். இன்றும் என்னை வளர்ந்த ஒரு பாப்பாவாகவே நினைக்கிறார் சிவாஜி.
‘கலாட்டா கல்யாணத்’தில் நான், அவரோடு முதன்முதலில் கதாநாயகியாக நடிக்கும்போது எனக்கு என்னவோ, ரொம்பப் பழகிய ஒருவரோடு நடிப்பது போலத்தான் இருந்தது. ஆனால் அவரோ, முதல்நாள் முதல் காட்சிகளில் நடிக்கும்போது இரண்டு மூன்று முறை சீரியஸாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஏனோ முடியவில்லை. பிறகு தன்னையும் மீறிச் சிரித்து விட்டார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் “நானும் உன்னோடு இந்தக் காதல் காட்சியில் உணர்ச்சியோடு நடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு குழந்தையோடு காதல் காட்சியில் நடிப்பது போலத்தான் இருக்கிறது!” என்றார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
தான் நடிக்கும்போது, கூட நடிக்கும் மற்ற நடிகர்களுக்குத் தானே நடித்து, தானே உணர்ச்சிகளை முகத்தில் காட்டி, சொல்லிக் கொடுப்பார். நடிப்பில் பல நல்ல யோசனைகளைச் சொல்வார்.
ஒருநாள் ‘எங்க ஊர் ராஜா’ படப்பிடிப்பு முடிந்ததும், குரலை மட்டும் பதிவு செய்தார்கள். அதில் அவர் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார் அல்லவா? தந்தை - மகன் இரண்டு பேர் குரலும் தேவைப்பட்டது. தனித்தனியாக எடுப்பார்கள் என்று நினைத்தேன். முதலில் மகனாகச் சாதாரணமாகப் பேசினார். ஒலிப்பதிவு இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரே நொடிதான்! தன் குரலை மாற்றிக்கொண்டு, அதில் நடுக்கத்தைத் கொடுத்து, இருமலையும் சேர்த்து, அழுத்தம் திருத்தமாகத் தந்தையாகவும் பேசினார்.
ஒரே சமயத்தில் மகனாகவும் தந்தையாகவும் மாறிப் பேசியதைக்கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். நடிப்பு அவர் உடலிலேயே ஊறிப்போயிருக்குமோ என்றுகூட வியந்தேன். செட்டில் குறிப்பிட்ட நேரத்தில் ‘டாண்’ என்று ரெடியாக நிற்பார். தாமதமாக வருவது, என்ற பேச்சே இவரிடம் கிடையாது. நடிக்கும்போது தன் தொழிலைத் தவிர வேறு எதையும் இழுத்துப்போட்டுக்கொள்ள மாட்டார்.
-
-
-
-
-
-
-
-
நடிகர் திலகத்தின் 190 வது திரைக்காவியம்
நாம் பிறந்த மண் வெளியான நாள் இன்று
நாம் பிறந்த மண் 7 ஒக்டோபர் 1977
https://i.ytimg.com/vi/_mbZRHD5RFo/maxresdefault.jpg
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...a1&oe=5A437111
-
தங்கள் வம்சாவழியை குறிப்பிட்டு எழுதுகிறார்கள் பாவம்
பிறவிக்குணம் மாறாது
-
ஒரு பொய்யை பத்துவிதமாக பத்துத்தரம்
சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள்
-
ரோஷம் வந்து? தூக்கி எறிந்ததை
ரோஷம் கெட்டு தாங்கிப்பிடிக்கிறார்கள்
-
ஒன்றை பறிகொடுத்தவனுக்கு துக்கம் கவலை இருக்கத்தான் செய்யும்
களவு எடத்தவனுக்கு துக்கம் ஏது? கவலை ஏது?
-
Vee Yaar
இளைய தலைமுறையை ஈர்க்கும் நடிகர் திலகத்தின் மணி மண்டபம்.
கடந்த சில நாட்களில் தினமும் பகல் வேளையில் திரளான கல்லூரி மாணவர்களும் மாணவியரும் நடிகர் திலகத்தின் மணி மண்டபத்திற்கு வருகை புரிகின்றனர். அவருடைய சிலை, அவருடைய நிழற்படம் ஆகியவற்றோடு நின்று சுய நிழற்படம் எடுத்துக்கொள்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அரசாங்கம் நடிகர் திலகத்தை நடத்திய விதம் மனதைப் புண்படுத்தினாலும் அடுத்த தலைமுறையினர் அவர் மேல் காட்டும் அன்பு அந்த ரணத்தை ஆற வைக்கும்... வலிமை கொண்டுள்ளது. சோகத்திலும் ஒரு சுகம் உண்டு என்பது போல் இந்த மணிமண்டபத்தில் நமக்கு சில நன்மைகளும் செய்துள்ளார்கள். சிலையருகில் நின்று நிழற்படும் எடுக்கும் அளவிற்கு இட வசதி இருப்பது நமக்கு ஆறுதலாயுள்ளது. சற்றே தள்ளி நின்று எடுத்தாலும் தலைவரின் முழுசிலையும் அதனருகில் நம் முழு உருவமும் இடம் பெறும் வகையில் நல்ல தொலைவு கிடைக்கிறது.
தற்பொழுது அந்த மணிமண்டப வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தமே சிவாஜி மணிமண்டப நிறுத்தம் என்று மக்கள் டிக்கெட் கேட்கும் அளவிற்கு பிரபல்யமாகி விட்டது.
மாணிக்கத்தை குப்பையில் வைத்தாலும் ஒளி வீசும். உங்களால் எங்கள் தலைவரின் புகழை இம்மியளவு கூட குறைக்க் முடியாது. பெருந்தலைவர் காமராஜர், பாதையில் பயணித்த மக்கள் தலைவர் மற்றும் அவருடைய தொண்டர்களின் நேர்மை என்ற வலிமையான ஆயுதம் எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் துவம்சமாக்கும் பலம் கொண்டது.
See more
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...f4&oe=5A47BC31