http://i63.tinypic.com/2vx0r5x.jpg
Printable View
http://i65.tinypic.com/2dhedti.jpg
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் 10 வது நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த மதுரையில் இருந்து பக்தர்கள் மினி பேருந்தில் புறப்பட்ட போது
சூப்பர் ஹீரோ வார இதழ்
http://i68.tinypic.com/o6ctis.jpg
தின இதழ் -05/06/18
http://i67.tinypic.com/2924r3b.jpg
புதிய தலைமுறை வார இதழ் -7/6/18
http://i66.tinypic.com/a3mw6v.jpg
http://i63.tinypic.com/dfzsxv.jpg
http://i65.tinypic.com/jgjtjm.jpg
நம்ப கிட்டவும் பழைய ரிக்கார்டுகள் விபரங்கள் எல்லா்ம் இருக்கின்றது. அதெல்லாம் தேவயில்லை என்று போடாமல் இருந்தோம். ஆனால், போட வேண்டிய சூழ்நிலயை ஏற்படுத்தி விட்டார்கள்.
நண்பர் லோகநாதன் அவர்களே,
பழைய பொக்கிசங்களை வெளியிடுவதற்கு நன்றி நண்பா.
எகிறிக் கொட்டு.
உண்மைதான் நண்பா.
சிவாஜி கணேசன் நடிச்ச ராஜா டிஜிட்டல் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரைக்கும் 8 நாள் 2 காட்சியாக ஓட்டினார்கள். படத்துக்கு சரியான கூட்டம் இல்லை. ஒரு காட்சி கூட ஞாயித்துக்கிழமை மாலை காட்சி கூட (மே 27ம் தேதி ஞாயிறு மாலைக்காட்சி) ஹவுஸ் புல் ஆகாததால் படத்த தூக்க முடிவு செஞ்சிருக்கார்கள். சிவாஜி கணேசன் ரசிகர்கள் கெஞ்சிக் கேட்டதால் தியட்டர் நிர்வாகத்தினர்கள் ராஜா படத்தை சின்ன தியேட்டரான பேபி ஆல்பட்டுக்கு மாற்றி விட்டார்கள். மாலை ஒரு காட்சி மட்டுமே ஆக்கிவிட்டார்கள். சின்ன தியெட்டரில் போட்டும் அப்படியும் படத்துக்கு கூட்டம் சேரவில்லை. அதுவும் போன 4-ம் தேதி திங்கட்கிழமை மாலைக் காட்சிக்கு மொத்தமே 12 பேர்தான் வந்திருக்கின்றார்கள். தியட்டர் நிர்வாகத்தினர்கள் இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று திங்கட்கிழமை 4-ம் தேதியோடு படத்தை தூக்கிவிட்டார்கள். இப்போது ஆல்பட் தியேட்டரில் ராஜா படம் ஓடவில்லை. சென்னையில் வேறு எங்கும் ஓடவில்லை.
தகவல் உதவி - சென்னை நண்பர் சுப்பிரமணியன், எம்ஜிஆர் பொது நல சங்கம்)
மாற்று திரியினர் நம்பள சீன்டுகின்றார்கள். நாம்ப டிஜிட்டல்லில் வந்த ராஜா படம் சென்னையில் தோல்வி என்று சொன்னால் அவர்கள் திரியில் இன்னொருத்தர் (ஸ்ப்சோத்திரிராம் என்பவர்) வந்து திருச்சியில் மக்கள் திலகம் படங்கள் மறு வெளியீட்டில் கேவலமாக ஓடினதாக சொல்கின்றார்.
நான் திருச்சியில் உள்ள நமது நண்பருடன் போனில் பேசினேன். சிவாஜி கணேசன் நடிச்ச மறுவெளியீ்ட்டு படங்கள் திருச்சியில் முக்காடு போட்டது இருக்கட்டும்.
முதல் வெளியீட்டில் தமிழ் நாட்டில் வெளியான சிவாஜி கணேசன் நடிச்ச ஹிட்லர் உமாநாத் என்ற படம் திருச்சியில் ரிலீசே ஆகவி்ல்லை. இன்று வரை வெளியாகவில்லை. பெட்டி வாங்கக் கூட ஆளில்லை என்றார். இத ஸ்ப்சோத்திரிராம் என்பவர் தன் தாயின் மீது ஆணையிட்டு மறுக்க முடியுமா?
இதவிட சிவாஜி கணேசன் படங்களுக்கு கேவலம் உண்டா?
தகவ்ல் உதவி - ஆட்டோ சரவணன், தென்னூர், மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள்குழு
1000 பதிவுகள் கண்டு அற்புதமாக பயணிக்கும் திரு.சுகாராம் அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள். தொடர்ந்து பல புதிய செய்திகள் பதிவிட்டு
உற்சாகம் தருவீர்கள் என்று நம்புகிறேன் .
http://i65.tinypic.com/fc4geg.jpg
ஆர். லோகநாதன்.
திரு லோகநாதன் அவர்கள் வாழ்த்துக்கு நன்றி... மற்றபடி நாம் யாரையும் ஏளனம், கிண்டல் செய்யவில்லை, அவசியமுமில்லை, எமக்கு இணையாகவோ எவரையும் கருதவில்லை. ஏற்கனவே நம் திரியில் தகுந்த பதில் கொடுத்த விடயத்தை திரும்பவும் பதிவு தந்துள்ள தோழர் விஷயம் அறிந்திருந்தாலும் அதை உணராத படிக்கு சொல்லி உள்ளார். திரையுலகில் தம் படம் வரும்போது அந்த படைப்பை எப்போது எந்த நாளில் வெளியிடலாம் என்பது அது ஒரு ஆளுமை (Elegance) 👍 இருந்தால் மட்டுமே சாத்தியம். அந்த ஆளுமை மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இருந்த உண்மை விபரம் அனைவரும் அறிந்த செய்தி... உண்மை...
தினத்தந்தி -6/6/18
http://i65.tinypic.com/1znwv0w.jpg
தினகரன் -7/6/18
http://i67.tinypic.com/2urpedh.jpg
பொருத்தமான ஞாயமான பதில். புரட்சித் தலைவர் திரை உலகத்தில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பதும் மற்ற நடிகர்கள் எல்லாரையும் விட அவர்தான் அதிக சம்பளம் வாங்கினார் என்பதும் அவர்களுக்கும் தெரியும்.
தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார் என்ற கேள்விக்கு 1971-ம் வருசம் வந்த பேசும்படம் கேள்வி பதில் பகுதியிலே எம்.ஜி.ஆர். என்று பதில் சொல்லி இருந்தார்கள்.
1973-ம் வருசம் பொம்மை கேள்வி பதில் பகுதியில் சினிமாவில் நடிக்க சிவாஜி கணேசன் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா? எம்ஜிஆர் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா என்ற கேள்விக்கு எம்ஜிஆர்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று பதில் சொல்லி இருந்தார்கள். இதெல்லாம் பல முறை நம்ப திரியிலே ஆதாரத்தோடு அந்த பத்திரிக்கைகளில் வந்ததை அப்படியே போட்டாகிவிட்டது.
திரியில் போடுவதற்கு முன்னாலயே அந்தக் காலத்திலேயே அந்தப் புத்தகத்தில் வெளியான பதிலை படிச்சவர்கள் அங்கேயும் இருக்கின்றார்கள்.
நாம்ப ஏதாவது நம்பளை அறியாமல் தப்பாக சொல்லிவிட்டால் துள்ளிக்குதிச்சு வருவார்கள்.
ஆனால், அவர்கள் காத்தவராயன்,100 நாள், அன்னயின் ஆணை 100 நாள், என்று பொய்யாக பதிவு போடுவார்கள். அத நாம் சுட்டிக் காட்டினால் அந்தப் பதிவ மட்டும் படிக்காத மாதிரி இருந்து கொள்வார்கள்.
புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நம்பள விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும் அத ஒப்புக் கொள்ள அவர்களின் ஈக்கோ தடுக்கின்றது. மக்களுக்கு உண்மை தெரியும்.
யாரோடயும் ஒப்பிட முடியாத இடத்துக்கு பிள்ளைகள் படிக்கும் பாட புத்தகத்தில் எல்லாம் வரும் அளவுக்கு வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ளும் அளவுக்கு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் புரட்சித் தலலவர் போய்விட்டார். நமக்கு அது போதும்.
எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...
நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.
எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.
எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை
அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.
அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார்.
அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .
Courtesy - net
எம்ஜிஆர் நினைவு நாள் கவிதை
பொன்மனச்செம்மலே!
என்
பொழுத்து புலரக்
கூவிய சேவலே!
உனக்கென்று
நான் எழுதிய
முதல் வரியில்தான்
உலகுக்கு
என் -
முகவரி
தெரிய வந்தது!
என் கவிதா விலாசம்..
உன்னால்தான் -
விலாசமுள்ள
கவிதையாயிற்று!
இந்த நாட்டுக்குச்
சோறிடு முன்னரே
என் -
பாட்டுக்குச்
சோறிட்டவன் நீ!
என்னை
வறுமைக் கடல்மீட்டு..
வாழ்க்கைக் கரை சேர்த்த
படகோட்டியே!
கருக்கிருட்டில்
என்
கண்களில் தென்பட்ட
கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை
நீ பாடிய பிறகுதான்
நாடு பாடியது...
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது!
இல்லையென்று
இரப்போர்க்கு
இல்லையென்று
சொல்லாதவன்...
இன்று -
இல்லையென்று போனான்...
இனி நான் -
யாரைப்பாடுவேன்...?
புரட்சித் தலைவனே!
நீ
இருந்தபோது -
உன் அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...
இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து -
நாடு அழுதது!
வைகை யாறும்
பொன்னி யாறும்
வற்றிப்போகலாம்;
நீ
வற்றாத
வரலாறல்லவா!
கலைத்தாயின்
தலைமகனே!
கோட்டையில்
கொலுவிருந்தால் மட்டும்
நீ
'சி.எம்' அல்ல...
கோடம்பாக்கத்திலும்
கர்ஜித்துக்கொண்டிருந்த
சீயம் தான்!
இன்று
படத்தை நிரப்பப்
பலர் இருக்கிறார்கள்;
உன் இடத்தை நிரப்பத்தான்
எவருமே இல்லை!
நான்
மனிதர்களில் -
நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால்,
நடிகர்களில்
நான் பார்த்த
முதல் மனிதன் நீதான்!
அதனால்தான்...
நீ
நோயுற்ற போது -
தங்களது
வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில்
வரவு வைத்துவிட்டு -
எத்துணையோ பேர்
தங்கள் கணக்கை
முடித்துக்கொண்டு
தீக்குளித்தார்கள்!
என்
இதய தெய்வமே!
உன்
இறப்பில்
நான்
இரண்டாவது முறையாக
என்
தாயை இழந்தேன்!
இனி -
நான் யாரைப் பாடுவேன்...!
எம்.ஜி.ஆர் இறந்த போது கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது.
எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.
இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.
115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!
வினாக்களுக்கான விடைகள்!
கண்டறியப்பட வேண்டும்!
எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?
இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?
கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?
இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.
Courtesy - net
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.
(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).
மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.
1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.”
தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என்ற அனைத்து வகையிலும் ‘கரம்’ என்ற மூன்றெழுத்தில் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற எம்.ஜி. ஆர். என்ற ‘பொன்மனச்செம்மல்’ அவர்களின் மக்களின் மனத்தில் நிறைந்த தன்மையை இக்கட்டுரையின் வழி இயம்புவதில் பெருமையடைகிறேன்.
mgrமூன்றெழுத்து வலிமைமிகு, பெருமைமிகு, தருமம் மிகுந்த தன்னுடையச் சிவந்த கரங்களால் தனிப்பெரும் பெருமை பெற்ற கலைமாமணி, பாரதரத்னா அவர்களின் நினைவுகளும் கட்டுரை வடிவில் தருவதில் பெருமை செய்யும் ‘வல்லமை’ இதழுக்கும் வணக்கங்கள்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று திரைப்படப் பாடலின் வரிகளிள் தவழ்ந்துவருவது இனிமையாகும் என்று நினைத்து வியந்து நின்றதும் உண்டு. “மூச்சு” என்ற மூன்றெழுத்து வழி ஈழம் – பொன், பெருமை மனிதர், தங்கமனிதர் என்ற பெருமையும் எம்.ஜி. ஆர். என்ற பெயரின் முதல் எழுத்து சுருக்கத்தில் வியந்து நிற்கும் அளவுக்கு நடிப்பிலும், கொடையிலும் , அன்பு, பண்பு, பாசம், உபச்சாரம் என்ற அனைத்து அளவிலும் தனிப்பட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த, மாபெரும் சபைகளின் வழி நடந்து ‘ புகழ் மாலைகள் ‘ ஏற்றுக்கொண்டு நம்மிடையே வாழ்ந்தவர்.
ஈழம் என்பது சிங்கதேசம் என்பது மட்டுமல்ல. ஈழம் – பொன் , பொன் தீவில் பிறந்த மனிதர் ‘பொன்மனச்செம்மல் ‘என்பதில் சாலவும் பொருத்தமானவர். தவப்புதலவன் பிறந்த நாளின் எண்ணான ‘ ஏழு ‘ என்பதும் ஏற்றமிகு வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைந்தது .
1917 பிறந்த நாள் , சுறவம்(சனவரி) 17, 1917 இல் பிறந்த தவப்புதல்வர் ஈழம், கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்து ஈழத்திற்கும் பெருமை படைத்தவர். மலையாளத்தில் வாழ்ந்தாலும் தமிழின் வழியான மலையமும் சேர்ந்தே சிறப்பாகியது.
1927 தொடங்கிய பயணத்தில் தன்னுடைய 20 வயதில் (1937) திரையுலகில் பிரவேசித்து, நாடகங்களில் நடித்து,
1947 முதல் கதாநாயகனாக பரிமளிக்கும் திறமை பெற்றவர். நடிப்புத் திறமையில் திறமையையும், பாடல்கள் வழியே பாமரனும் பாடும் எளிமையான நடிப்பின் ஊடாக அனைவர் மனத்திலும் பிரவேசித்தவர்.
1967 திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உயர்ந்தார்.
1977 தி.மு.க. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் பிரவேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று ‘முதல் அமைச்சர் ‘ என்ற முதல்வர் பதவி வகித்தார்.
1987 பத்து ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ‘ பொன்மனச்செம்மல்’ தனது எழுபதாவது வயதில் இந்த அரசியல் உலகம், திரையுலகம், தமிழ்நாடு என்ற அனைத்திலும் பெருமை பெற்று மனத்தில் நிறைந்த மக்கள்திலகம்’ என்ற மாபெரும் புகழுடன் உடல்நலக் குறைவினால் மறைந்தார். ஏழ்பிறப்பு என்ற நிலையில் ‘ தேவர்’ என்ற நிலைக்குப் பிறகு மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இந்த நிலையில் மக்கள் என்ற இரண்டாவது நிலையின் வழி பிறக்கும் அனைவருக்கும் கிட்டாத பிறப்பாகப் பிறந்து, பிறந்த பயனையும், வாழ்கின்ற பயனையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பெரும்பேறு அனைவருக்கும் கிட்டுவதில்லை.. அப்படி கிடைத்த பாக்கியம் பெற்ற மனிதர்கள் ‘பெருமைமிகு சிலரின்’வரிசையில் ‘கலைச்சுடர் ‘என்று தமிழ் நாட்டிலும், நிருத்தியச் சக்கரவர்த்தி என்று ஈழம் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வாழும் பொழுதிலே ‘நிறைவான பெருமை’ அடைந்தவர்.
திரைப்படச் சேவை :
இதயக்கனி – அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் – கலைஞர். மு. கருணாநிதி
நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்ரமணியம்)
மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் – விழுப்புரம், முத்தமிழ்க் கலைமன்றம்
கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலைமன்றம்
கலைமன்னர் – நீதிபதி ராஜமன்னர்
கலைமன்னன் – சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
இவ்வாறு திரையுலகின் பிரவேசத்தில் நடிப்பின் திறமையின் மக்கள் கொடுத்த புகழ் பட்டங்கள் . திரையுலகின் பணிகளில் அவரின் நடிப்பு மட்டும் அன்றி, திரைபடத் துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்து பெருந்தன்மையுடன் கருணையும், எளிமையும் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.
பொதுமக்களின் சேவையில் அரசியலில் முழு மூச்சாகக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் ஆர்வமும் , அரவணைத்துச் செல்லும் தன்மையும் செம்மலின் குணங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் சாப்பிடும் முன்பு உடன் வந்த வாகன ஓட்டுனர் முதற்கொண்டு ‘உணவு’ விசயத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒருமுறை அவர் ஒரு நடிப்புத் தளத்திற்காக வெளியூர் சென்றபோது ‘பயணவிடுதியின் பணிச்சிறுவன்’ கேட்ட கேள்விக்கு அவசரமாகப் பதில் அளிக்கமுடியாமல் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நடிப்புப்பணி முடிந்து திரும்பிவரும் நேரத்தில் அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்து அவனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். எந்தவொரு மனிதரையும் ஒரே மாதிரியாகக் கவனித்து மதிப்பு கொடுக்கும் தன்மையில் அவர் ஒரு ‘தனிப்பிறவி . அதனால் தான் பொதுமக்களின் சேவையில் அவர் பெற்ற பட்டங்கள் வரிசையில் மக்கள் திலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
பொதுமக்களின் சேவையின் வழி கிடைத்த பட்டங்கள் :
கொடுத்துச் சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் – கர்நாடகா, பெங்களூரு
நிருத்தியச் சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் – தமிழ்வாணன்
வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித் தலைவர் – கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் – இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் – ம.பொ. சிவஞானம்.
அண்ணா அவர்களின் பவள விழாவின் சிறப்பு என்ற வகையில் ‘அண்ணாவின் வளைவினை ‘ நிறுவினார். அரசியல் வாழ்வில் இவர் செய்த நற்பணிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு, ஏழை, எளியவர் மற்றும் பணிபுரியும் பெண்கள் என்று அனைத்து வழிகளிலும் பெண்களைச் சிறப்பிக்க கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகஎம்.ஜி. ஆர். அவர்களின் புகழ் பன்மடங்காக இன்றும் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.
திட்டங்களின் செயல்பாடுகள் :
* சத்துணவுத் திட்டம்.
* விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
* தாலிக்கு தங்கம் வழங்குதல்
* மகளிருக்குச் சேவை நிலையங்கள்
* பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
* தாய்சேய் நல இல்லங்கள்
* இலவசச் சீருடை
* இலவசக் காலணி
* இலவசப் பற்பொடி
* இலவசப்பாடநூல்
* வறட்சிக் காலத்தில் லாரி மூலம் குடிநீர்
மேலும் அவரின் முக்கியப் பணிகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதில் முன்னின்று முயற்சி செய்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 1, 1981-இல் 972.7 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு , 1921ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் ஏற்பட்ட தீர்மானம் அவர் பிறந்த தஞ்சையில் அறுபது (60) வருடங்களுக்குப் பிறகு முதலமைச்சராக இருத்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய அம்சம்”தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம்”… முதற்கொண்டு அனைத்துவகை பாடப் பிரிவுகளும், ஓவியம், கட்டிடக்கலை, சிற்பக்கலையும் ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள் பாடப்பிரிவும் பயிற்றுவிக்கப் படுவதுடன் கைவினைப்பொருட்கள், கடலியல், தொல்லியல் …மட்டுமல்லாமல் மற்ற ‘மொழி ‘ கற்றலும் உள்ளது.
பழ. நெடுமாறன் அவர்களின் கருத்துப்படி ஈழமக்களின் போராட்டத்தின் போது ஏழுகோடிக்கும் தொகை உதவி செய்தும் வந்தார் என்பது அறியமுடிகிறது. அவர் ஈழத்தில் பிறந்து தமிழ் மக்களிடையே வாழ்ந்தாலும் ஈழவிடுதலைக் காரணமாகவும், தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தனிஈழம் கிடைக்கும் முடிவில் அவர்களுக்குஉதவி செய்தார். விடுதலைப் போராட்ட விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களின் பண்பும், கடமையும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்தார் என்று ‘ ஆன்டனி பாலசி்ங்கம் ‘ கூறுகிறார் தன்னுடைய கட்டுரையில்.
அரசியலில் செம்மலின் எளிமை :
* முன்னணித் தமிழ் தேசியவாதி
* திராவிடக் கழகத்தின் ‘முன்னேற்றக் கழக உறுப்பினர் ‘
* திராவிட இயக்கத்தில் பொருளாளர்
* அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறுதல்
* 1971-ல் ‘பாரத் ‘ திரைப்பட விருது
* 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம்.
* அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் உருவாக்கியப் பெருமை (17/10/1972)
* 1977- முதல் அமைச்சர் பதவி ( திண்டுக்கல் )
அரசியல் அல்லாத எளிமை வழியில்:
* திரைப்படப் புகழ்
* வசீகரத் தோற்றம்
* சமூகத் தொண்டர்கள்
* ஏழைகள் தோழன்
* கொடையாளி
* வீரன் – நடிப்பின் வீரமும் மிளிரும் மன்னர்
அரசு விருதுகள் :
* பாரத் விருது (இந்திய அரசு)
* அண்ணா விருது (தமிழக அரசு)
* பாரத ரத்னா விருது (இந்திய அரசு)
* பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு, விருதை ஏற்க மறுப்பு )
* சிறப்பு முனைவர் பட்டம் (அமெரிக்கா, அரிசேனா பல்கலைக்கழகம் )
நினைவுகள் :
தாமரை மலர் போன்ற வடிவம் கொண்ட நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்றெழுத்து நாயகனின் புகழ், மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர்… நினைவுகள் ‘ இதயக்கனி ‘ யாகி ‘ நாடோடி மன்னன் ‘ தயாரித்து படம் வெற்றி பெற்றால் ” நான் மன்னன் ” என்று கூறிய பெருமை உடையவர். மந்திரிகுமாரி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப் படங்கள் வழியில் வரலாற்று மனிதராகவும் வாழ்ந்து மறைந்த ‘ வரலாற்று நாயகன் ‘ என்று பகர்வதே சாலப் பொருந்தும். அவரின் உருவில் கோவில் கட்டி வழிபாடு செய்யும் பக்தி கொண்ட தமிழகமக்கள் போற்றும் ‘நாயகன் ‘ என்று பெயர் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.
1977 அரசியல் பிரவேசத்திற்குப் பிறகும் அவர் திரைப்படம் தயாரித்து , நடிப்பிலும் சிலகாலம் இருந்தார்.
1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தார்.
1984-ல் அவரின் உடல்நலம் குறைவு காரணமாக அவரின் இறுதி நாட்கள் படுக்கையில் சிலகாலம் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருந்த அவர் தங்கமனிதர், கலியுகக் கடவுள், என்றெல்லாம் மக்களால் புகழப் பட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளிலும், அன்றும், இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
‘இதயத்தெய்வம் ‘ , ஒளிவிளக்கு நம்மிடையே மனிதருள் மாணிக்கமாக வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. ஏழு என்ற எண்ணிற்கு பெருமை சேர்த்த மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற MGR .
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” —இப்படிப்பட்ட பெருமையில் வாழ்ந்த
அரசியல், திரைஉலகம், பொதுநலச் சேவை, மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்ற வகையில் தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நிறைந்த மாபெரும் வள்ளல், தங்கம், பொன்மனச்செம்மல் என்ற பெயருடன் தன்னுடைய வசீகரத் தோற்றத்துடனே திசம்பர் திங்கள் 24ஆம் நாள் 1987 ஆம் வருடம் தனது இறுதி யாத்திரையாகிய ‘ தூக்கம் போலும் சாக்காடு ‘ என்ற நிலையை அடைந்தார். மூன்றெழுத்து நாயகன் , நற்சொல், நற்செயல் என்று அனைத்து வகையில் வாழ்வு வாழ்ந்தவர் ‘பிறப்பு ‘என்ற நான்கெழுத்தும் ‘ இறப்பு’ என்ற நான்கு எழுத்தும் பிரிவு என்ற மூன்று எழுத்தின் வழியே மறைவு என்றபடி உண்மையாகியது.
COURTESY
சுமதி ரவிச்சந்திரன், ராமாபுரம்
என்னுரை:
“பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
“வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!
காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!
mgrசிறியோர் நலன் சில வரிகள்:
“திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..
“திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!
‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,
தூங்காதே தம்பி தூங்காதே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!”
என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!
இளமை இனிமை என்றும் என்றென்றும்:
“ஹலோ! ஹலோ!! சுகமா..
ஆமா! நீங்க நலமா..”
என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…
“மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ “
என்று காதலியின் நடையை வருணித்து…
“தொட்டால் பூ மலரும்..
தொடாமல் நான் மலர்ந்தேன்”
என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!
நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
“தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?
“உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
நீ வாழலாம்!”
என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!
“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!
1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
“அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!
மக்கள் பணி:
திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!
காலஞ்சென்ற காவியத்தலைவன்!
காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!
“பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!
மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!
COURTESY
திருமதி.மீனாட்சி நாகப்பன்
புதுக்கோட்டை
எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!
கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.
சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, கையொப்பமிடுவதை கண் டிருக்கிறோம்.
ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பவழ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த போது, வழக்கம் போல் பள்ளி நிர்வாகத்தினர், பார்வையாளர் பதிவேட்டை எம்.ஜி. ஆரிடம் கொடுத்தனர். அப்போது, மேடையில் சக அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, அரங்கநாயகம் ஆகியோர் வாழ் த்துரை வழங்கி கொண்டிருந்தனர்.
அவர்களுடைய பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டே, பார்வை யாளர் புத்தகத்தையும் புரட்டி பார்த்து, ஏற்கனவே இதற்கு முன் பள்ளி க்கு வருகை தந்த வேறு தலைவர்கள் எழுதிய குறிப்புகளை படித்துவிட்டு, பிறகு, எம்.ஜி.ஆர்., தன் சட்டை சைடு பாக்கெட்டில், எப்போதும் வைத்திருக்கும் பேனாவை எடுத்து, எழுத ஆரம்பித் தார்.
கொஞ்சம் எழுதுவதும், மேடையில் மற்ற பேச்சாளர்களின் பேச் சை கேட்பதும் என, இர ண்டு பணிகளையும் ஒ ரே நேரத்தில் செய்து கொண்டிருந்தார். இடையிடையே அரு கில் இருந்தவர்களிடம் ஏதோ பேசி, ஜோக் அடி த்து சிரித்து, ஜாலி மூடி ல் இருந்தார்.
விழா இறுதியில் அவர் பேச வேண்டிய நேரம் வந்த போது, சரி யான நேரத்தில் எழுதி முடித் து, கையொப்பமிட்டு, நிர்வாகியிடம் கொடுத் தார். நிர்வாகத்தை பா ராட்டியும், அதே நேரத்தில் மாணவர் களுக்கு அறிவுரை வழங் கியும் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின், நேராக காருக்கு செல்லாமல், மேடையை விட்டு கீழே இறங்கியவர், பாதுகாப்பு வளையத்தை மீறி, பார் வையாளர் பகுதிக்கு சென்று விட்டார்.
அங்கு நின்று கொண்டிருந்த என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சிறுவ ர்களிடம் தோளைத் தட்டியபடி, கேஷûவலாக பேசி, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே மேடை யில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஜி.ஆரை அருகில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வை யாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரை அருகில் நெருங்கி பார்க்க ஆசைப் பட்டாலும், பாதுகாப்பு காரணமாக போலீசார் நெருங்க விடுவதில் லை.
இதை எம்.ஜி.ஆர்., அறியாமலா இருப்பார்! அதனால்தான், விழா முடிந்ததும், அவர்களை நோக்கி சென்று, அருகில் நின்று, மாணவர் களை தொட்டு பேசியதை யாரும் ஜென்மத்தில் மறக்க மாட் டார்கள். இது தான், மற்ற தலைவர்களிடமில்லாத எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு.
Courtesy net
இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்! #mgr101
இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.
டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு ‘விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்’ தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி.
இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் 50 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிட்டார். முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும் உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் விரிவடைந்தது.