http://i66.tinypic.com/wkjx1f.jpg
http://i63.tinypic.com/2diewph.jpg
Printable View
புரட்சித் தலைவரின் சாதனை திரைக்காவியம் உரிமை குரல் படத்தில் வரும் காவிய பாடல்
விழியே கதை எழுது
உருவான உண்மை வரலாறு உங்கள் பார்வைக்கு நண்பர்களே
அனுபவம் புதுமை:82.
*****************
திரைப்படத் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமென எழுபதுகளைச் சொல்லலாம்.திரைப்படமும் அரசியலும் ஐம்பதுகளிலேயே கை கோர்க்கக் காரணம் திராவிட இயக்கங்கள்.அது அறுபதுகளில் முன்னேற்றமடைந்து நாட்டையே ஆளுகின்ற நிலைக்குக் கொண்டுபோனது.அது வீரியமாக எழுபதுகளில் இன்னொரு வடிவம் எடுத்தது.ஆண்டுகொண்டிருக்கும் கட்சி இரண்டாக உடைய அதன் தாக்கம் திரைத் துறையிலும் எதிரொலித்தது.
மிகப் பெரிய ஆளுமையான மக்கள் திலகத்துடன் ஸ்ரீதர் கூட்டணி வைக்க அவரது நண்பர்களுக்கு இது சிக்கலை உண்டுபண்ணியது.வழக்கமாக அவரது படங்களுக்கு மெல்லிசை மன்னர் தான் இசையமைப்பார்.அவருக்கு அரசியல் அடிச்சுவடியைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை.ஆர்மோனியத்தை எடுத்து உட்கார்ந்துவிட்டால் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என ராகம் பாட ஆரம்பித்துவிடுவார்.அவரது இன்னொரு தோழரான கவியரசின் நிலை அப்படியல்ல.அவர் எந்த நேரத்தில் என்ன வம்பைக் கொண்டு வருவார் என அவருக்கே தெரியாது.அப்படி ஒரு வம்பில் எம்.ஜி.ஆரோடு முட்டிக்கொண்டு அவர் நின்றிருந்த காலமது. ஸ்ரீதருக்கோ அவர் இல்லாமல் வண்டி ஓடாது.
ஸ்ரீதர் ஒரு விஷயத்தில் தெளிவானவர்.சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழும் குணத்தைக் கொண்டவர்.நமக்கெதற்கு வம்பு நேராக எம்.ஜி.ஆரிடமே கேட்டு விடுவோம் என அவர் முன் போய் நின்றார்.கேட்பதற்கு முன்பாக தெளிவான சிந்தனையோடு போய் நின்றார்.யாரை பாட்டெழுத வைக்கலாம் என கேட்காமல் கவிஞரை எழுதச் சொல்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே என்ற கொக்கி ஒன்றைப் போட்டார்.ஓகே சொன்னால் ஸ்ரீதர் திட்டம் பலிக்கும்.ராங்காகப் போனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் இப்படிக் கேட்டார்.ஸ்ரீதர் நினைத்தது ஒர்க் அவுட் ஆனது.
தாராளமாக எழுதட்டுமே எனக்கென்ன ஆட்சேபனை என எடுத்தவுடன் பதில் வரும் என ஸ்ரீதரே எதிர்பார்க்கவில்லை.எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு மூவர் கூட்டணி வழக்கம் போல் இணைந்து பாட்டெழுதத் தொடங்கியது.கவிஞர் முறைத்துக்கொள்வாரே தவிர பாட்டெல்லாம் எழுதித் தரமாட்டேன் என முரண்டு பிடிக்கமாட்டார்.இது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.ஸ்ரீதருக்கு பெரிய தலைவலி ஒன்று தீர்ந்தது.
இந்த மூவர் கூட்டணி இரண்டு பாடல்களைப் போட்டு முடித்தது.ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பாடலுக்கு ஸ்ரீதர் சிச்சுவேஷன் சொன்னார்.படபடவென வரிகள் வந்து விழ மெல்லிசை மன்னர் குஷியாக ஈஸ்வரியைக் கூப்பிட்டு பாட வைத்தால் ஹிட்டாகும் எனச் சொல்லி அதை ஓகேயாக்கினார்.அடுத்த பாடல் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான விழியே கதையெழுது பாடல்.சிச்சுவேஷன் ஒரு தெளிவான இடத்தில் இல்லை.ஓடி ஓடி காதலித்த பெண்ணை இன்னொருவன் ஓட்டிக்கொண்டு போகப்போகிறான்.மனம் நொந்து மணற்பரப்பில் விழி நிறைய கண்ணீரோடு அமர்ந்திருக்கும் நாயகனைத் தேடி நாயகி வர ஏற்க மறுத்து விரட்டி விடுகிறான் நாயகன்.போக்கிடமில்லாத அவளோ சாவை நோக்கி நகர விரைந்து வந்து கட்டிக்கொள்கிறான்.ஸ்ரீதர் என்ன தான் சொல்ல வருகிறார் என்பதை இனி பாடல் தான் சொல்ல வேண்டும்.கவிஞருக்கு இது மிகப் பெரிய சவால்.ஆடியன்ஸூக்கு ஒரு பாஸிட்டிவான பதிலைத் தர வேண்டும் என ஸ்ரீதர் கேட்க கவிஞரின் பல்லவி அதற்கு விடை தந்தது.
விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே.இந்த ஜோடி இணையப் போகிறது என்பதை அவர் இரண்டு வரிகளில் சொன்னார்.மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காவே நான் வாழ்கிறேன் என்ற வரிகளில் கவிஞர் வாழ்ந்தார்.
அருமையான இசைக் கோர்வையைத் தந்து எம்.எஸ்.வி.அசத்த ஜேசுதாஸ் இசையரசி ஜோடி அதை விட அசத்தியது.ஜேசுதாஸை ரெகமண்ட் செய்தது மக்கள் திலகம் தான்.பாடல் பதிவாகி அவரது பார்வைக்குப் போவதற்காக தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீதர்.பாடல்கள் அருமையாக வந்திருப்பதாக அங்கிருந்து தகவல் வர நிம்மதியானார் ஸ்ரீதர்.ரெண்டு பாடல்கள் ஓகே .அடுத்தடுத்த பாடல்களுக்கு கவிஞர் இல்லையே.எங்கே தான் பிரச்சனை வந்தது?.
அடுத்த சில தினங்களில் உரிமைக்குரல் படமாகிக்கொண்டிருக்கும்போதே சொந்த வேலையாக மக்கள் திலகம் மொரீஷியஸ் போனார். வழக்கம் போல் ஸ்ரீதர் ஒரு காலைப் பத்திரிகையை மேய்ந்துகொண்டிருக்கும்போது ஒரு கட்டுரையைப் பார்த்து அப்படியே ஷாக்கானார்.அது கவிஞர் எழுதிய கட்டுரை.அதில் எம்.ஜி.ஆரை அவர் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார்.அப்போதே அந்தக் கட்டுரை தமிழகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் கொதித்துப்போய் இருந்தனர்.
நாளைக்கே எம்.ஜி.ஆர் பயணத்தில் இருந்து திரும்பி வந்து உனக்கு நான் வேண்டுமா அவர் வேண்டுமா எனக் கேட்டால் என்ன செய்வது?. ஸ்ரீதருக்கு தர்ம சங்கடமான நிலை.பழைய ஆயுதத்தையே எடுத்தார்.நேராக அவருக்கே ஃபோன் போட்டார்.அவருக்கு அப்போது இந்தக் கட்டுரைச் செய்தி தெரிந்திருக்கவில்லை.விபரங்களை எடுத்துச் சொன்ன ஸ்ரீதர் அவரது பதிலுக்காக காத்திருந்தார்.
ஸ்ரீதர் இப்போதும் சொல்கிறேன் அவர் பாட்டெழுதுவதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.ஆனால் என நிறுத்தினார்.என்ன இவர் இடைவெளி விடுகிறாரே என பயந்த ஸ்ரீதர் சொல்லுங்க என்றார்.எனக்கும் கண்ணதாசனுக்கும் சுமூக உறவு இல்லை என்பதால் கண்ணதாசன் பாடல்களை என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று நீங்கள் சந்தேகப்பட்டு அது காரணமாக வேறு ஒருவரை பாட்டெழுதச் சொன்னீர்கள் என்றால் அது உங்கள் முடிவு.உங்கள் விருப்பம் போல் செய்யலாம் நான் தலையிடமாட்டேன் என்றார்.ஸ்ரீதருக்கு உண்மையிலேயே தலை சுற்றியது.இவரிடம் பந்தைக் கொடுத்தால் திருப்பி என்னிடமே தட்டி விடுகிறாரே.உண்மையாகவே ஆழ்ந்த குழப்பத்திற்குப் போனார் ஸ்ரீதர்.எம்.ஜி.ஆர் தெளிவாகவே இருந்தார்.காரணம் கவிஞரைப் பற்றி அவருக்குத் தெரியும்.
இந்த இடத்தில் கவிஞரைப் பற்றி நாம் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும்.கவிஞர் குழந்தை மனநிலை கொண்டவர்.கண்ணை மூடிக்கொண்டு எதையாவது பேசி விடுவார்.நண்பர்கள் என்னைய்யா இப்படிப் பேசீட்டே என்றால் அப்படியா என அவர்களையே திருப்பிக் கேட்பார்.வடிவேலு பாணியில் கொஞ்சம் ஓவராப் போயிட்டமோ என உள்ளூர நினைத்திருக்கலாம்.அடுத்த நாள் திட்டியவரைப் பார்த்தால் வாங்க என புன்னகையோடு அழைத்து கட்டிக்கொள்வார்.நாம் தான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.இவரது குணம் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் அத்துபடி.அதனால் கவிஞர் என்ன சொன்னாலும் எப்படி எழுதினாலும் கண்டுகொள்ளவேமாட்டார்கள்.அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி ஒரு பதிலைச் சொன்னார்.ஸ்ரீதருக்கு இந்த அரசியல் எங்கே தெரியப்போகிறது.?.
அவர் பயந்தது எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் கவிஞர் பாட்டுக்களை புறக்கணித்தால் என்ன செய்வது என்பது தான்.பல்வேறு பகுதிகளில் இருந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்களை வரவழைத்தார்.கவிஞரின் பாடல்களை போட்டுக் காட்டினார்.உருவாகியுள்ள சிக்கல்களைச் சொன்னார்.எம்.ஜி.ஆர்.சொன்ன பதில்களையும் சொன்னார்.உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.காரணம் பணம் கொடுத்து படத்தை வாங்கப்போவது அவர்கள் தானே.எல்லாவற்றையும் கேட்ட அவர்கள் ரெண்டு பாட்டும் பிரமாதமா இருக்கு.ஆனா இந்தப் பாடல்கள் இந்தப் படத்திற்கு வேண்டாம்.நீங்க வேறு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்களேன் நம்ம படத்துக்கு வேறு யாரையாவது எழுதச் சொல்லுங்க என்றார்கள்.இதென்னடா புது ரூட்டா இருக்கு என ஸ்ரீதர் மேலும் குழப்பமானார்.
ஒரு வகையில் பார்த்தால் அவர்கள் சொல்வதும் சரி தான்.ரசிகர்களின் பல்ஸ் அறிந்தவர்கள் விநியோகஸ்தர்கள்.எம்.ஜி.ஆரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள கண்ணதாசன் பாடல்களை ரசிகர்கள் ஏற்காது போனால்?. படம் அதனால் பாதிப்படைந்தால் ?. சித்ராலயா தோணி மூழ்க வேண்டியது தானா?. பண நெருக்கடியை சமாளிக்க படம் எடுக்கப் புறப்பட்ட ஸ்ரீதருக்கு ஏதாவது ஒரு நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறதே.மீண்டும் பழைய அஸ்திரத்தை எடுத்தார்.இந்த முறை கவிஞரிடம் போய் நின்றார்.
இருவருக்கும் ஆழ்ந்த நட்பு உண்டு.பிரச்சனைகளை அவரிடம் கொண்டு போய் கொட்டினார்.டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் விருப்பத்தைச் சொன்னார்.இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் அவர்கள் சொன்னபடியே செய்து கொள்ளுங்கள் உங்களது பிரச்சனை எனக்குப் புரிகிறது.வேறு கவிஞரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்றார்.கனத்த இதயத்தோடு வாலியை நோக்கி ஓடினார் ஸ்ரீதர்.
மொரீஷியஸிலிருந்து திரும்பியதும் எம்.ஜி.ஆரிடம் விபரத்தை எல்லாம் சொன்னார்.நிமிர்ந்து ஒரு பார்வை.அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.பாடல்களை கண்ணதாசன் எழுதுவதில் எந்தவித ஆட்சேபனை இல்லையென்று நான் சொன்ன பிறகும் நீங்கள் வாலியை பாடல் எழுதச் சொன்னது உங்க இஷ்டம்.உங்க முடிவில் நான் தலையிடமாட்டேன் என்று சொன்னது உண்மை தான்.ஆனா அந்த ரெண்டு பாட்டும் அருமையானவை.அவற்றை நீங்கள் அப்படியே உபயோகித்துக்கொண்டால் பிரமாதமாக ஹிட்டாகும் என்றார்.இந்த பதிலை அவரிடம் இருந்து ஸ்ரீதர் எதிர்பார்க்கவே இல்லை.விநியோகஸ்தர்கள் கண்ணதாசன் பாடல்கள் வேண்டாமென்று சொல்ல இவரோ ஹிட்டாகும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறாரே.இனியும் குழம்பிக்கொண்டிருக்கக் கூடாது.எம்.ஜி.ஆர் சொன்னதையே கேட்போம் என முடிவுக்கு வந்தவராக அந்த இரண்டு பாடல்களையும் அப்படியே படத்தில் வைத்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எம்.ஜி.ஆர்.பெருந்தன்மை என்றாலும் என்ன தான் அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் அந்தப் பாடல் காட்சிகளை மக்கள் பார்க்கும்போது கவிஞரை எதிரியாகப் பார்க்கமாட்டார்கள் என்பதே.இந்த உண்மை எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.இந்த ரசிகனின் பல்ஸை எம்.ஜி.ஆர்.தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்.இதை நினைத்துத் தான் ஸ்ரீதர் ஆச்சரியம் அடைந்தார். அவர் சொன்னது போலவே இந்தப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதிலும் விழியே கதையெழுது பட்டையைக் கிளப்பிய பாடல்.இந்தப் பாடல் ஒரு பேத்தோஸ் சாங்.அப்படியே அந்த மணற்பரப்பு முழுவதும் இந்த காதல் ஜோடியை உலவ விட்டு விதவிதமான ஆங்கிள்களில் படமெடுத்து அசத்த வேண்டும் என்ற ஸ்ரீதரின் ஆசையில் மண் விழுந்தது.பல்லவி ஓகே சரணங்களுக்கு செட்டைப் போட்டு ட்ரீம் சாங் ஆக்கிவிடலாம் என இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார் எம்.ஜி.ஆர்.
அண்ணே இது சோகப் பாட்டு.ட்ரீம் சாங் எப்படி ஒத்து வரும்.?. அதெல்லாம் எடுக்கிற மாதிரி எடுத்தா வரும்.இவரிடம் முரண்டு பிடித்தால் முதலுக்கே மோசமாகும்.ஏற்கனவே நான் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை ஸ்ரீதரால் மீற முடியவில்லை.எம்.ஜி.ஆர்.நினைத்தது போலவே அந்தக் காட்சிகள் பாடலுக்கு ஒரு ரிச்னஸ் கொடுத்தது.ரசிகர்களின் பல்ஸ் அறிந்தவர் அவர்.தலைவரை வெறும் வேட்டியில் எத்தனை மணி நேரம் பார்ப்பது?. விதவிதமான வண்ணங்கள்.விரும்பிய மேக்கப் என அவரைப் பார்க்க ஆவலோடு இருந்த ரசிகனை அவர் ஏமாற்ற விரும்பவில்லை.மக்களின் ஆரவாரமான வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைத்தது.எம்.ஜி.ஆர்.புண்ணியத்தில் இந்தப் பாடல் தப்பித்தது.அதெல்லாம் பிறகு தான் நடந்தது.ஆனால் விநியோகஸ்தர்கள் முரண்டு பிடித்தார்கள்.என்ன நடந்தது.காணலாம் நாளை.அதற்கு முன்பாக கவிஞரது வரிகளைக் கொஞ்சம் கவனிக்கலாம்.
கோபியும் ராதாவும் கலக்கத்தில் நிற்கிறார்கள். மோதலும் காதலும் ஊடலும் கூடலும் கொண்டு சுற்றித் திரிந்த இந்த ஜோடி இப்போதும் கலங்கிப் போய் நிற்கிறது.விடிந்தால் எவனுக்கோ தாலி கட்டி வாழ்க்கை எப்படியோ முடியப் போகிறது.ஆறுதலுக்காக வந்து நின்றால் காதலன் விரட்டுகிறான்.முடிவை நாமே தேடிக்கொள்வோம் என விரைந்த ராதாவை விரட்டி அணைக்க பாடல் பிறக்கிறது.கதையெழுத வேண்டிய விழிகளே தயவு செய்து அந்தக் கதையை கண்ணீரில் எழுதிவிடாதீர்கள்.நாங்கள் இணைய முடிவெடுத்துவிட்டோம்.இதோ இந்த இயற்கையே சாட்சி.கவிஞரின் தீர்க்கமான வரிகளில் என்றென்றும் வாழ்கிறது இந்தப் பாடல்.விவரித்தால் இன்னும் நீண்டு விடும்.பாடலைப் பிரிய மனமில்லாமல்......
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி
வளரும்...... Thanks Friends.............
தஞ்சாவூர் மாநகரின் பெரிய திரையரங்கம் "ராஜா கலையரங்கில்" எப்போதும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி "ஒளிவிளக்கு" காவியம் வரவிருப்பதாக சுவரொட்டிகள் ஓட்ட பட்டிருப்பதாக நண்பர்கள் தகவல்.........
26.01.1971 இந்நாளில்
மக்கள்திலகத்தின் மகத்தான தொழில் பக்தி திரைப்படமான.
உழைப்புக்கு முன்னுரிமை தந்த காவியமான பெண்மைக்கு இலக்கணம் தந்த சித்திரமாக தென்னகமெங்கும் திரையிடப்பட்டு ஆண்டின் முதல் 100 நாள் ஒடிய வெற்றிக்காவியமாக முரசுக்கொட்டிய படைப்பு. இயற்கையுலக நாயகன் தமிழ்ப்படயுலகிற்கு அர்ப்பணித்த காலசுவடு . கோபால் என்ற கதாபாத்திரத்தில் கொள்கை கோட்பாட்டுடன் நடந்து நல்ல எண்ணங்களால் உயர்ந்து ஏழை மாணவராக இருந்து முதல் மதிப்பெண் பெற்று தமிழ் மரபுகளை மதித்து பெரியோர்களின் வழியில் நடந்து கண்ணியத்துடன் தன் தந்தைக்கு ஏற்ப்பட்ட களங்கத்தை துடைத்து தான் கொண்ட சத்திய சபதத்தை நிறைவேற்றி குமரிக்கோட்டத்தின் நாயகிக்கு நற்பன்பினை விதைத்து, திருத்தி, நல்லதொரு காவியமாக திரைக்கு தந்து ஆம்! வெள்ளித்திரைக்கு அர்பணித்தவர் மக்கள்திலகமே! திரையுலகவேந்தர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது காவியம். கதாநாயகனாக வலம் வந்த 90 வது காவியம். .தலைவரின் 17 வது வண்ணக்காவியம். தலைவருடன் ஜெயலலிதா திரையில் பவனி வந்த 21 வது திரைப்படம். கே.சி. பிலிம்ஸ் தலைவரை வைத்து தயாரித்த முதல் படம். 1966 ம் ஆண்டு பூஜை போட்டு 1971.ம் ஆண்டு வெளிவந்து புதிய வெற்றியை படைத்து சென்னை குளோப் பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் திரையரங்கில் 100.நாட்கள் ஒடி 26 திரையரங்கில் 50 நாட்களை கடந்து வெற்றி கண்ட. திரைப்படம் தான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின். குமரிக்கோட்டம் ஆகும். பாடல்கள் சண்டைக்காட்சிகள் நல்லதொரு சிறந்த படிப்பினையை கொள்கையை சிந்தனையை ஒழுக்கத்தை கருத்தினை தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வாயிலாக திரையில் பாடம் சொல்லி தந்த தத்துவப்பிறவி குணக்குன்றின் கருத்துப்படலம் தான் குமரிக்கோட்டம். வெள்ளித்திரையில் 48 வது ஆண்டின் நிறைவு விழாவை கொண்டாடும் காவியம். குடியரசு தினத்தன்று குதுகலமாக 49 வது ஆண்டினை தொடர்கிறது.... என்றும் வள்ளலை போற்றி புகழ் பாடும் .... உரிமைக்குரல் ராஜு..... Thanks Friends.............
புரட்சி தலைவர், மக்கள் திலகம் அவர்தம் வழியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பயன் பெறும் நோக்கத்தில் இந்த பதிவு.........
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் "பணமே இல்லாமல் இருதய சிகிச்சை" என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.
ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு இலட்சங்களுக்கிடையே செலவு ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,
ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட், கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக எல்லா இருதய நோய்களையும் குணப்படுத்தி வருகிறது.
80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சோதனை செய்து உள்ளனர், மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது
தன்னலமற்ற அதே சேவை தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது
இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட 3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு, இலவச அறுவை சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படும்
இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள், அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .
310 படுக்கைகள் வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய போகிறார்கள் .
இந்த மருத்துவமனையின் சேவை தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம், நீங்களும் இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்
முகவரி :
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட சாலை, ராஜ்கோட் - 360005.
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com
குறிப்பு :
தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு
என கேட்டுக்கொள்கிறோம்..... நன்றி.....
என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்னாதி மன்னன் மக்கள் திலகம் அவர்களின் 5 ருபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் வெளியாகும் செய்திகள் நம் தோழர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.........
நமது அம்மா -17/01/19
http://i68.tinypic.com/2ppypu1.jpg