23/12/1964 ல் வெளிவந்த ராமதாசு (தெலுங்கு)
23/12/2019 இன்று 55 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...35&oe=5E6802A6
Printable View
23/12/1964 ல் வெளிவந்த ராமதாசு (தெலுங்கு)
23/12/2019 இன்று 55 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...35&oe=5E6802A6
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...49&oe=5E6D60BEhttps://scontent.fyzd1-2.fna.fbcdn.n...c0&oe=5E747D19
நன்றி Vcg Thiruppathy H O S
"சிவாஜி அரசியல்" .....
தெரியாமல் பேசக்கூடாது !.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e1&oe=5E6B1972
நன்றி தினமலர் 22/12/2019
சிவா அய்யா,
மக்கள் திலகம் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது அமெரிக்காவுக்கு போய் சிவாஜி பார்த்தார். அவ்வளவுதான். பேச்சுவார்த்தை நடத்த வாங்கள் என்று சிவாஜியை மக்கள் திலகம் அழைக்கவில்லை. பேச்சு நடத்தக் கூடிய நிலையிலும் அப்ப மக்கள் திலகம் இ்ல்லை. உடம்பு ரொம்ப முடியாமல் இருந்தார். இது நடந்தது 1984-ம் வருசம்.
அதுக்கு அப்புறம் மதுரையில் நடந்த எம்.ஜிஆர் மன்ற மாநாட்டு விழாவில்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா கையால் தங்க செங்கோலை மக்கள் திலகம் பெற்றுக் கொண்டார். இது நடந்தது 1986-ல். அந்த விழாவை நேரில் பார்த்தேன்.
எனவே, 1986-ல் ஜெயலலிதா அம்மாவிடம் இருந்து செங்கோல் வாங்கிய மக்கள் திலகம் எப்படி அவரை ஓரம் கட்ட 1984-லிலேயே சிவவாஜியை அழைத்து பேசி இருக்க முடியும்.
எம்ஜிஆருக்கு சிவாஜி வாக்குறுதி கொடுத்தாராம். என்ன வாக்குறுதி.
அதை சிவாஜி கணேசன் கடைசிவரையில் வெளியில் சொல்லவில்லையாம். அதையும் இதுலேயே எழுதி இருக்கிறார்கள். அது உண்மை. எம்ஜிஆருக்கு வாக்குறுதி கொடுத்ததாக சிவாஜி எப்பவும் சொன்னது இல்லை. அப்படி வாக்குறுதி கொடுத்தால்தானே வெளியில் சொல்லுவார்.
அப்பிடி சிவாஜியே வெளியே சொல்லாதபோது இதை எழுதியவருக்கு அந்த வாக்குறுதி பற்றி எப்பிடி தெரிஞ்சது.
பத்திரிகையில் என்னென்னமோ பொய் எழுதுகிறார்கள்.
எம்.ஜிஆர் சொல்லி தமுமு கட்சியை சிவாஜி ஆரம்பிக்கவில்லை. அவருக்கு வாக்குறுதி கொடுத்ததற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரை சுற்றி இருந்த சுயநலக்காரர்கள் கட்சி ஆரம்பிக்க தூண்டிவிட்டார்கள். இதை சிவாஜி கணேசனே சுயசரிதையில் சொல்லி இருக்கிறார்.
இதுபற்றி ஏற்கெனவே இதே பாகத்தில் சிவாஜியின் சுயசரித்திரம் புத்தகத்தில் இருந்து ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறேன்.
நன்றி.
25/12/1976 ல் வெளிவந்த ரோஜாவின் ராஜா
25/12/2019 இன்று 43 வருடங்கள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...56&oe=5EA5ED35https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...08&oe=5EA807D9https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...95&oe=5E6C9897
இன்று (26-12-19)
நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்,
12 pm - விஜய் சூப்பர்- தேவர் மகன்
1:00 pm - கே டிவி- பார்த்தால் பசி தீரும்
4 pm - ஜெயா மூவி- கௌரவம்...
7 pm - புதுயுகம் - நீதிபதி
11 pm - ஜெயா டிவி- வியட்நாம் வீடு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3c&oe=5E6840DD
நடிப்பும் ஒரு தொண்டு தான்..
-நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பேட்டி..
கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகத்தின் ரகசியங்களை எல்லாம் இயற்கை புலப்படுத்துகிறது என்பார் பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ.
அதைப் போல் நம் கற்பனைக்கும் புலப்படாத கலையின் ரகசியங்களை எல்லாம் நடிகர் திலகத்தின் நடிப்பு வெளிப்படுத்துகிறது, என்று சொல்லலாம். அந்த கலை புதல்வரின் பிறந்தநாளை ஒட்டி ,பேட்டி காணச் சென்றோம் .
"பொம்மையில் நான் சொல்லாததா? "
என்று சிலிர்க்க வைத்தார். இருந்தாலும் தேனில் நனைந்த திருவாசகங்களாய் சில சொன்னார் .
அந்த வாசகங்கள் ...
நடிகர்திலகம் பேசுகிறார்:
ஒவ்வொருத்தரும் என்னென்னமோ சாதிச்சு இருக்காங்க. நான் என்ன சாதிச்சிட்டேன்? ஏதோ நடிச்சேன்...
ஜெமினி ,எஸ் எஸ் ஆர் இவங்கெல்லாம் நடிக்கிறப்ப நானும் நடிச்சேன்.இப்ப சில பேர் ரிட்டயர்ட் ஆகிட்டாங்க.சில பேர் இல்லை .நான் இன்னும் இருக்கேன் . அதுதானே உண்மை!
அரசியல் எத்தனையோ பேர் என்னை புரட்டி புரட்டி எடுத்தாங்க.என் சொந்த செலவிலேயே என்னை தோற்கடிச்சாங்க. சிவாஜிகணேசனை தோற்கடிச்சுட்டோம்னு
அவங்களுக்குள்ளேயே
சந்தோஷப் பட்டாங்க .அப்படி பல பயில்வான்கள் அரசியல்ல இருக்காங்க . சிலர் பதவியில் இருக்காங்க .சிலர் பதவி இல்லாமலும் இருக்காங்க.
எம்எல்ஏ வாகவும் இருக்காங்க.
எம்.பி. யாகவும் இருக்காங்க..ஆனா, யாருமே என் முன்னால வந்ததில்லை. 'எப்படி இருக்கேன்னு? ' கேட்டிடுவேன்னு பயம் போல இருக்கு ....
இருந்தாலும்,
நான் எல்லோரையும் தாண்டி முன்னாலே
போயிக்கிட்டுத்தான் இருக்கேன்.
அய்யா பெரியார் ,ராஜாஜி ,அண்ணா, காமராஜர் எல்லோருடைய வாழ்த்தையும் பெற்றிருக்கிறேன் ...
காஞ்சி முனிவர் அவர்களின் வாழ்த்தையும் பெருமையாக பெற்றுள்ளேன.கோயில்களில் எல்லாம் உன்னோட யானைகளைத்தான் பார்க்கிறேன்.இதனாலே ,உங்க அம்மாவும் அப்பாவும் நல்லபடியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்னு அவர் வாழ்த்தினார் ,இதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கு...
பெரியவங்க பல விஷயங்களையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் மக்களிடத்தில் சொல்ல நாமும் பயன்பட்டிருக்கோம்.
அவர்களெல்லாம் பாட்டு ,நானோ பாடகன் .
தமிழ் மூலமா நாமும் பயனடைந்தோம். நாடும் பயனடைந்தது .நாம பேசியதை அடுத்த தலைமுறையும் பேசியது. நாம் மட்டுமே சாதித்தோம் என்று சொல்லமுடியாது .ஒன்றுக்குள் ஒன்றாக எல்லோரும்தான்.
தமிழ் தொண்டு என்பது கலைத் தொண்டு, அரசியல் தொண்டு எல்லாமே சேர்ந்தது தான் .
ஐயா காமராஜர் பல விஷயங்களைச் சொன்னார்.அதையெல்லாம் கலை மூலமாக சொன்னோம்.அவர் வர முடியாத இடங்களுக்கெல்லாம் சென்று சொன்னோம் .நாமே ஒரு 'மவுத் பீஸாக' இருந்து சொன்னோம். அதனால நாடு பயனடைந்ததா இல்லையா ...
அந்தக் காலத்திலேயே மன்னர்கள் மக்களிடத்தில் கருத்துக்களை சொல்ல கலைஞர்களைத்தானே வச்சிருந்தாங்க .. ஏன்? இன்னைக்கும் அப்படித்தானே...! எதுக்காக ,ஒவ்வொரு கலைஞனையும் என் கட்சிக்கு வா ,என் கட்சிக்கு வான்னு இழுக்கறாங்க .. அதுக்காகத்தானே...
சில புத்திசாலிங்க அதிலிருந்து தப்பிச்சுடறாங்க ... என்னை மாதிரியானவங்க மாட்டிக்கிடறாங்க.
அரசியல்ல எப்படி இருந்தாலும் ,பொதுவாக கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கிறாங்க! அது ஒரு தொண்டுதானே... டிவி ,வீடியோ... இதெல்லாம் இப்ப தானே வந்து இருக்கு. அப்ப எல்லாம் ஏதும் மீடியா?
கலைஞர்கள் தானே ...! நாள் முழுக்க உழைப்பவனுக்கு ஒரு நாளு மணி நேரம் பொழுதுபோக்கு இல்லைன்னா என்ன செய்வான் ...?
ஒரு விஞ்ஞானி கூட ஓயாமல் உழைத்து ஒரு கண்டுபிடிப்பை வெளியிடறான்னா அது மக்கள் நன்மைக்காக தானே.. கண்டுபிடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மக்களுக்கு பொழுதுபோக்கு இல்லைன்னா என்ன செய்வாங்க?
நாலு நாளைக்கு சினிமா ,டிராமா எதுவுமே இல்லைன்னு நிறுத்திப் பாருங்கள்.. எல்லோரும் பைத்தியம் பிடித்ததை போல் ஆகி விடுவாங்க ..
அன்னை தெரசா, இந்த நாட்டில் 40 வருஷத்துக்கு மேல உழைச்சாங்க... சமீபத்தில் இறந்து போனாங்க. அதே நேரத்தில் டயானாவும் இறந்தாங்க. ரெண்டு பேரும் மரணமும் ஒரே நேரத்தில் நடந்ததால் ,கிளாமரான டயானா அதிகமாகப் பேசப்பட ... அந்த அளவுக்கு தெரசா அம்மை பேசப்படவில்லை. காரணம் இளமை ...!
இன்னைக்கும் நானும் இளமையானவனும் நடிச்சா நம்மை யார் பார்ப்பார்கள்? இளமையானவனைத்தான் பார்ப்பார்கள் ...!
நமக்குத் தெரிந்ததை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு ..
சரியில்லைன்னா சரியில்லை தான் ...!
நன்றி Senthilvel Sivarai (sivaji group)
.................................................. .....
பின்னூட்டம்
கள்ளக்கபடமில்ல வார்த்தைகள். இவரை வைத்து வாழ்ந்தவர்கள் இன்னும் நன்றியில்லாமல் வளமுடன் வாழ்ந்துகொண்டுதான் தான் இருக்கிறார்கள். சிவாஜிகணேசனை இருந்தும் கெடுதத்தவன் செத்தும் கெடுதத்தவன் எல்லாம் உண்மையான சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை எந்த கடன்காரனும் கட்சி காரனும் செய்யவில்லலை
27/12/1952 ல் வெளிவந்த பணம்
27/12/2019 இன்று 67 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...8a&oe=5E9F71AC
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...8f&oe=5E9E584B
நன்றி Vcg Thiruppathi H O S
27/12/1957 ல் வெளிவந்த பாக்கியவதி
27/12/2019 இன்று 62 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b6&oe=5EA912AF
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...00&oe=5EA09583
நன்றி Vcg Thiruppathi H O S