நயன்தாராவை திருமணம் செய்யவில்லை - dir
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிவருபவர் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் காதலித்துவருவதாகவும், கடந்த வாரம் கேரளாவில் திருமணமே முடிந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் “நானும் ரவுடிதான்” படம் உருவாகிவருகிறது. படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் மொரீஷியஸ் தீவுக்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், நயன்தாரா, இவருக்கு கார் பரிசளித்தகாகவும் பல செய்திகள் கோலிவுட் வட்டாரத்தை வட்டமிட்டுவருகின்றன.
தற்பொழுது ட்விட்டரில் விக்னேஷ் சிவன் “ என் திருமணம் பற்றியான எந்த தகவலும் உண்மையில்லை. இந்தமாதிரியான தவறான வதந்திகள் என் வேலையை கெடுப்பதற்கான நாசவேலை. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட வகையில் இடையூறாகவும் இருக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.