http://www.youtube.com/watch?v=xQSCq...layer_embedded
Printable View
Quote:
ரூ.5 லட்சம் பெற்ற ஆயிரத்தில் ஒருத்தி!
"ஆயிரத்தில் ஒருவன்'' ரியாலிடி வினாடி வினா நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பிரபலமாகி வரும் இந்நிகழ்ச்சி, பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து விளக்கேற்றி உள்ளது. ஒளிபரப்பான 12 எபி சோடுகளிலும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த மணிமாலா என்னும் போட்டியாளர் கடைசி கனவுக் கேள்விக்குச் சரியான விடையைக் கூறி ரூ.5 லட்சம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் முழுமையும் அரவணைப்பும், ஆதரவும் தேவைப்படும் பெருமூளை பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயான மணிமாலாவிற்குக் கிடைத்த இந்தப் பரிசு, குழந்தையின் வாழ்வில் ஒளியேற்ற உதவுமென நெகிழ்ந்தார்.
ரூ.62 ஆயிரம் ஜெயித்த மாற்றுத் திறனாளியான மதுரையைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான பக்கிரிசாமி தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்தப் பரிசு உதவுமென மகிழ்ந்தார்.
இந்த வினாடி வினா நிகழ்ச்சியின் புனிதமான நோக்கத்தை தெரிந்து கொண்டு பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக `அபியும் நானும்' படத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வைத் திறனில்லாத பிரபாகரன் மற்றும் தமிழ்வேலன் ஆகியோரின் எதிர்காலத்திற்காக விளையாடி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஜெயித்துக் கொடுத்தார். இவ்விருவரும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தற்போது லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது..
நன்றி: தினதந்தி
Quote:
திரும்பிப் பார்க்கிறேன்
திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வெள்ளித் திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான்`திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி. பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் சுயசரிதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
மேடை நாடகங்களிலிருந்து , 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, கண்ணா நலமா, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா என பல முன் னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. இதுதவிர பல வெற்றிப்படங்களையும் தயாரித்தார்.
வரும் தலைமுறையினருக்கு இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் தாம் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வதோடு, அவர் இயக்கிய படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.
இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி
Quote:
சரிகமப சேலஞ்ச்-2012
இசை உலகில் `உங்கள் குரலுக்கான மாபெரும் தேடல்' என்ற அடைமொழியோடு தமிழகத்தின் மிகச் சிறந்த குரல் தேடலில் களம் இறங்கியுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் இசைப்போட்டி ஜீ டி.வி.யின் `சரிகமப.' இந்த இந்தி நிகழ்ச்சி சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ் போன்ற சிறந்த பாடகர்களை உருவாக்கியது. இப்போது தமிழில் மீண்டும் கால் பதிக்கிறது "சரிகமப'' நிகழ்ச்சி.
இதற்கான நான்கு கட்ட குரல் தேர்வு, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து முதல் கட்ட தேர்வில் சுமார் 300 பேர் தேர்வு பெற்று, இரண்டாம், மூன்றாம் சுற்றுக்களில் இதுவே வடிகட்டப்பட்டு நான்காவது சுற்றின் இறுதியில் 30 முத்தான பாடகர்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்த 30 போட்டியாளர்களும் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடுவர்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை காட்டி, அவர்களது குரல் தமிழகத்தின் சாய்ஸாக அமைய மாபெரும் சங்கீத மகாயுத்தம் நடத்தவுள்ளனர். பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி மற்றும் மோகன் வைத்யா நடுவர்கள்.
சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி
Quote:
பத்தே கேள்விகள்... பரிசோ 5 கிலோ தங்கம்!
http://www.dailythanthi.com/muthucha...0908/TV-07.jpg
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் `கோல்டு கேசினோ' போட்டி நிகழ்ச்சியில் பத்தே பத்து கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி 5 கிலோ தங்கத்தை அள்ளிச் செல்லலாம்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முதலில் 20 தங்க காசுகள் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் தன் கையில் இருக்கும் எத்தனை தங்க காசுகளை வேண்டுமானாலும் பந்தயம் வைக்கலாம். போட்டியாளர்கள வைக்கும தங்க காசின்அளவைப் பொறுத்து பேங்கரும் அதேஅளவு தங்க காசுகளை வைப்பார். இதில் ஜெயித்தால் பந்தயத்தில் வைக்கப்பட்ட அத்தனை காசுகளும் போட்டியாளருக்கு போய்ச் சேரும். தோற்றாலோ பந்தயம் வைத்த காசு மட்டும் பேங்கருக்கு சென்று விடும். இதைத்தொடர்ந்து போட்டியாளர் தன்னிடம் இருக்கும் மீதமுள்ள தங்க காசுகளுக்கு ஆட்டத்தை தொடரலாம்.
போட்டியாளர் 40 தங்க காசுகளை ஜெயித்ததும், முதலில் பேங்கரிடம் இருந்து பெற்ற 20 தங்கக் காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடடு ஆட்டத்தை தொடரலாம். மொத்த தங்கக்காசுகளையும் பந்தயம் வைத்து விளையாடி, 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்கிறவர்கள் 5 கிலோ தங்கத்தை தட்டிச்செல்லலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி
Quote:
உறவுகள்-850
http://www.dailythanthi.com/muthucha...0915/TV-02.jpg
சான் மீடியா நிறுவனம் தயாரித்து சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், தற்போது 850 வது எபிசோடை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, தொடரின் இயக்குனர் ஷிவா.கே. அவரிடம் தொடரின் வெற்றி ரகசியம் பற்றி கேட்டபோது...
"சித்ரா, ஸ்வேதாவையும் தன் குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறாள். அதற்காக ஸ்வேதாவை சந்தித்து, `நம் இருவருக்கும் கணவர் முகுந்தன். நாம் இனி தனி தனியாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாம் இனி ஒரே வீட்டில் வாழ்வோம்' என்கிறாள். அதற்கு ஸ்வேதா, `எங்க அப்பா அம்மா ஆசை ஆசையாய் கட்டிய வீடு முகுந்தனால் விற்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்தோம். இப்ப நான் பெற்றோருக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்காமல் வர முடியாது' என்கிறாள்.
சித்ரா தன் கணவன் மற்றும் மாமனார் மாமியாரிடம் ஸ்வேதாவின் எண்ணத்தை சொல்லி, `இந்த வீட்டை ஸ்வேதா பெயருக்கு எழுதி வைப்போம்' என்கிறாள். இதற்கு மாமனார் அழகேசன் மட்டும் சம்மதிக்கிறார். மற்றவர்கள் சம்மதிக்கவில்லை, மாமியாரோ இந்த வீட்டின் பங்குதாரர்கள் முகுந்தன், கிருஷ்ணன், ரஞ்சனி, கவுரி அனைவரும் சம்மதித்தால் மட்டுமே வீட்டை ஸ்வேதா பெயருக்கு மாற்ற முடியும் என்கிறாள். அழகேசன் அனைவரையும் சந்தித்து போராடி சம்மதம் வாங்குகிறார்.
வீடு ஸ்வேதா பெயருக்கு மாற்றி எழுதப்படுகிறது, அப்பொழுது ஸ்வேதா ஒன்றாக இருக்க சம்மதித்து குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு குடிபெயர்கிறாள், அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், "எங்க அப்பா அம்மா எப்படி வீடு இல்லாமல் வெளியே வந்தார்களோ, அதே மாதிரி உங்களையும் வெளியே அனுப்பவே இந்த வீட்டிற்கு வர சம்மதித்தேன்'' என்கிறாள். அதோடு நில்லாமல் முகுந்தன், சித்ரா, அழகேசன், விசாலம் அனைவரையும் வெளியே அனுப்புகிறாள்.அப்போது அழகேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது,
கிருஷ்ணனும் காயத்ரியும் ஜோதிடரால் 90 நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு பிரிந்து இருக்கும் போது, ஒரு நாள் தற்செயலாக அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு போடும் சம்பவத்தால் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. 90 நாட்களுக்கு சந்திக்கவே கூடாது என்ற நிலையில் சந்தித்ததால் கிருஷ்ணன் மீண்டும் ஜோதிடரை சந்திக்கிறான், அவரோ `பிரிந்து இருக்க வேண்டும் என்பது விதி. இப்போது திடீரென்று சந்திக்க வைத்ததும் அந்த விதி தான், இருந்தாலும் நீங்கள் இருவரும் சந்தித்ததனால் ஏற்படும் விளைவை ஏற்கத்தான் வேண்டும்' என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார், இருவருக்கும் என்ன ஆகுமோ என்று குடும்பமே பயப்படுகிறது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியோ அடிபட்டு ஆஸ்பிட்டலில் சேர்க் கப்படுகிறாள், டாக்டரோ `தாய், குழந்தை இருவரில் ஒருவரையே காப்பாற்ற முடியும்' என்கிறார்.
கிருஷ்ணன் பிழைத்தானா? காயத்ரிக்கு குழந்தை பிறந்ததா? மாரடைப்பு ஏற்பட்ட அழகேசன் நிலைமை என்ன? வீட்டை விட்டு வெளியே வந்த சித்ரா, முகுந்தன் இனி என்ன செய்யப் போகிறார்கள்? பரபரப்பாக தொடரும் தொடர் விளக்கும்'' என்கிறார், இயக்குனர். திரைக்கதை: எஸ்,குமரேசன். வசனம்: பாலசூர்யா. இசை: இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: கே.எஸ். ஷங்கர்,
தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, அப்சர், ராஜ்காந்த். அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், நீபா, ஜெயப்பிரகாசம், சிவகவிதா, சோனியா, பரத், ஜெயந்த். கே.எஸ். ஜெயலட்சுமி. ஜெ. லலிதா. வைரவராஜ், சுதா, ஆர்த்திகாஸ்ரீ. வத்சலா ராஜகோபாலன். பாஸ்கர் ராஜா. கிச்சா. எம்.எல்.ஏ தங்கராஜ்.
நன்றி: தினதந்தி
Quote:
சின்ன மருமகள்
ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `சின்ன மருமகள்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் பயணிக்கிறது.
தான் தொலைத்த தேவா அருகில் இருந்தும் அவனுடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் தவிக்கிறாள், ராதிகா. அவளுக்காக அவ்வப்போது கவலைப்படும் தேவா, தன் மனைவி கன்னிகா தான் என்று உறுதியாகக் கூறி ராதிகாவை புறக்கணிக்கிறான்.
இதற்கிடையில் சுய நினைவின்றி தம் மாப்பிள்ளையாக இருப்பவர் அபய் தேவா தான் என்று தெரிந்து கொண்ட கன்னிகாவும் அவளுடைய குடும்பத்தினரும் மஹாபண்டிதர் பதவி மற்றும் 600 கோடி ரூபாய் சொத்திற்காக தேவாவை ராதிகாவிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத் திட்டமிடுகின்றனர். அதை செயல்படுத்தும் விதத்தில் தேவா-கன்னிகா திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.
இந்நிலையில் இறந்து விட்டதாக நினைத்த கன்னிகாவின் உண்மைக் காதலன் அபய் போன் பண்ண, முதலில் நம்பாத கன்னிகா, பின்பு சின்னக்குழந்தை போல் அவனை நோக்கி ஓடுகிறாள். கன்னிகாவும், அபயும் சந்தித்தார்களா? கார்த்தியாயினி தேவியின் எண்ணம் நிறைவேறியதா? ராதிகாவின் எதிர்காலம் என்னாகும்? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
Quote:
மும்பையில் தேடிய கதாநாயகி!
மும்பை, தமிழுக்கும், தமிழ், மும்பைக்கும் ஆற்றிய கதாநாயகி பரிமாற்றம் உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்த ஒரு விஷயம்.
நமது வைஜயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, வித்யாபாலன், அசின் போன்றோரை மும்பைக்கும், மும்பை தனது நக்மா, சிம்ரன், ஜோதிகா, பூமிகா, நமிதா, சமீரா ரெட்டி, ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், போன்றோரை தமிழுக்கும் அனுப்ப...!
அந்த வகையில் மேலும் சில தமிழ் பேசும் அழகுப்பதுமைகளை ராஜ் டிவியின் `தமிழ் பேசும் கதாநாயகி'க்காக தேடி ஒரு பயணம்.
கொட்டும் மழையிலும் மும்பை அழகு பெண்கள் கதாநாயகி தேடலுக்கு வந்ததில் அவர்களின் ஆர்வம் தெரிந்தது.
தொகுப்பாளர்கள் பாலாஜி, பூஜா மற்றும் ஷில்பா நிகழ்ச்சியினை நடத்தினார்கள். கல்லூரி மாணவிகளுடன் பல நடனப்பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
`கழுகு' புகழ் கிருஷ்ணா, `காதலில் சொதப்புவது எப்படி' இயக்குனர் பாலாஜி மோகன், மும்பையின் பிரபல நடனமணிகள் நந்தினி அசோக், கவுரிராவ் மேதா ஆகியோர் நடுவராக இருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முதல் சுற்றில் முப்பது பேர் தேர்வானார்கள். அதுவே இரண்டாம் சுற்றில் 15 ஆக குறைந்தது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்டம் பாட்டம், நடிப்பு முகம் அத்தனையும் சுவாரஸ்ய காட்சிப் பதிவுகள்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ராஜ் டிவியில் இந்த கதாநாயகி தேர்வை ரசிக்கலாம்.
நன்றி: தினதந்தி
Quote:
இமயத்துடன்..!
பாட்டு என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருபவர் டி.எம்.சவுந்தர்ராஜன். கணீர்க்குரல், கம்பீரக் குரல், ஆண்மைக் குரல் என்று அவரது குரல் வளம் பற்றி பிரபல இசையமைப்பாளர்களே பாராட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரி, சிவாஜிக்கு அவர் மாதிரி என்று யாருக்கு பாடினாலும் நடித்தவர்களே பாடினார்களோ என்று பிரம்மையை ஏற்படுத்திய குரல் வளத்துக்கு சொந்தக்காரர். 7வயதில் பாட ஆரம்பித்தவர் இன்று 90 வயதிலும் பாடுகிறார்.
இந்த இசையரசர் பற்றி இப்போது ஒரு தொடர் உருவாகி வருகிறது. பாட்டுடைத் தலைவனின் இசையோடு இணைந்த வாழ்க்கைப் பதிவான இந்த தொடரை விஜயராஜ் இயக்குகிறார். இந்த தொடருக்காக கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டூடியோ, பட்சிராஜா ஸ்டூடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இவற்றுக்கெல்லாம் டி.எம்.சவுந்தர்ராஜனே நேரடியாக சென்று அந்த ஸ்டூடியோவில் தான் பாடிய அனுபவங்களை அவரே மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.
அந்த நாட்களில் பாட்டுப் பாட அவருக்கு மாத சம்பளம் 50 ரூபாய் என்ற தகவல் ஆச்சரியம் என்றால், பாட்டுப்பாடும் ஸ்டூடியாவுக்கு மூன்று மைல் தூரத்திலுள்ள தனது தங்குமிடத்தில் இருந்து நடந்தே வருவார் என்பது அடுத்த கட்ட ஆச்சரியம்.
இந்த காலகட்டத்தில் பி.ï.சின்னப்பா நடித்த `சுதர்சன்' படம் கோவையில் உள்ள ராயல் டாக்கீசில் ரிலீசாகி இருக்கிறது. அதில் பி.ï.சின்னப்பா பாடிய ஒரு பாடலை டி.எம்.எஸ் ரசித்து பாடுவதுண்டாம். ஒருமுறை ஸ்டூடியோ மாடியில் பி.ï.சின்னப்பா தனது நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். கீழே இருந்தபடி சின்னப்பா பாடிய சுதர்சன் படப்பாடலை உணர்ச்சி பொங்க பாடியிருக்கிறார், டி.எம்.எஸ்.
அப்போது சின்னப்பாவின் நண்பர் ஒருவர், `அண்ணே கீழே யாரோ ஒருத்தன் உங்க பாட்டை கன்னாபின்னான்னு பாடிக்கிட்டிருக்கான். நான் போய் சத்தம் போட்டு: பாட்டை நிறுத்திட்டு வரேன்' என்று சொல்ல, சின்னப்பாவோ, `அந்தப் பாட்டை நான் பாடினதை விடவும் அற்புதமா பாடறான்யா. வேணும்னா பாரு, பின்னாளில் பெரிய பாடகனா வரப்போறான். அதனால் அவன் பாடுறதை தடை பண்ணாதே' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அங்கிருந்த பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பின்னாளில் இந்த தகவலை டி.எம்.எஸ்.சிடம் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை மகிழ்ச்சியுடன் விவரித்த டி.எம்.எஸ்., `என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்' என்கிறார்.
இந்த தொடரில் டி.எம்.எஸ்.சை இன்றைய பிரபல இசையமைப்பாளர்கள் சந்தித்து அளவளாவுகிறார்
கள். டி.எம்.எஸ்.சின் `பாடல் பெற்ற' நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர், சிவகுமார் போன்றோர் சந்தித்து உரையாடுகிறார்கள். இந்த வயதிலும் பழைய சம்பவங்கள் எதையும் மறக்காமல் டி.எம்.எஸ். பேசுகிற அழகை அவர்கள் வியக்கிறார்கள். அவர்கள் மட்டுமா, நாமும்
தான்.முத்தாய்ப்பாக ஒரு காட்சி. டி.எம்.எஸ். முதன் முதலில் சினிமாவில் பாடியதை தன் தந்தையிடம் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார். ஆனந்தத்தில் குரல் தழுதழுத்துப் போன தந்தை, `நீ நல்லா வருவப்பா' என்றபடி உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார். இந்த காட்சிக்கு டி.எம்.எஸ்.சாயலில் உள்ள அவரது மகள் வயிற்று பேரன் சுந்தரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த காட்சியில் டி.எம்.எஸ்.சின் அப்பாவாக நடித்திருப்பவர் சினிமா பத்திரிகையாளரான மேஜர் தாசன்.
இசை வரலாறான டி.எம்.எஸ்.சின் இசையுடன் கூடிய இந்த வாழ்க்கைப் பதிவு, விரைவில் தனியார்சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
நன்றி: தினதந்தி
Quote:
மனம் கவர்ந்த வீடு
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்தவீடு தொடர், நேயர்களின் மனம் கவர்ந்த தொடராகி இருக்கிறது. 50 எபிசோடுகளை கடந்து தொடரும் இந்த தொடரை பி.நித்யானந்தம் இயக்குகிறார்.
புகுந்த வீட்டில் வாழப்போன தன் மகள் ராதா கடந்த ஆறு வருடங்களாக மாப்பிள்ளை விசுவுடன்மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பிக் கொண்டிருந்தார், அப்பா ராமநாதன். ஆனால் மருமகன் விசு தன் மகளை திருமணம் செய்த பின்னணியில் ஜோதிடம் இருப்பதும், `முதல் மனைவி தங்க மாட்டாள்; இரண்டாவது மனைவி தான் செட்டாவாள்' என்று ஜோதிடர் சொன்னதைக் கேட்டே தன் மகளை முதல் தாரமாக விசு திருமணம் செய்திருக்கிறான் என்பதை அறிந்ததும், நொறுங்கிப் போகிறார். வேதனையில் சம்பந்தி வீட்டுக்கு வருபவர், சம்பந்தி வீட்டாரிடமும், மாப்பிள்ளை விசுவிடமும் சண்டை போடுகிறார். தனது மருமகன் அனுஷா வலையில் விழுந்து கிடப்பதை குறிப்பிட்ட ராமநாதன், "என் மகளை ஏமாற்றி விட்டு நீ வாழ முடியாது'' என்று எச்சரிக்கிறார்.
விசு, ராதாவுடன் சேர்ந்து வாழ்வானா? அனுஷாவை திருமணம் செய்து கொள்வானா? கேள்விக்கு விடையாக தொடர்கிறது பரபரப்பான காட்சிகள்.
கதை: இந்திரா சவுந்தர்ராஜன். இசை: கிரண். ஒளிப்பதிவு: சுதாகரன். வசனம்: ஐ.அசோகன்.
நன்றி: தினதந்தி
Quote:
`லிட்டில் மாஸ்டர்ஸ்' சீசன்-4
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் லிட்டில் மாஸ்டர்ஸ், தென்னிந்தியாவின் மாபெரும் நடன நிகழ்ச்சியாகவும் அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகளில் மூன்று வெற்றிகரமான சீசன்களைக் கடந்து 2012-ல் பிரமாண்டமான முறையில் சீசன் நான்கை எட்டியிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சியும் இதுவே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும் வெள்ளித்
திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாப்-20 சுட்டி நடனப்புயல்கள் வரும் வாரம் அவர்களின் நடன ஆசிரியர்களுடன் நடனப் பள்ளி நண்பர்களுடன் அறிமுகமாகிறார்கள்.
நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிருத்விராஜ், ராகவ் ஆகியோருடன், இப்போது பிரபல நடனஇயக்குனர் ரகுராம், நடிகை மும்தாஜ் ஆகியோர் புதிய நடுவர்களாக இணைந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குட்டி நட்சத்திரங்களின் திறமை கண்டு வியந்தார்.
வெள்ளி, மற்றும் சனி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம்.
நன்றி: தினதந்தி
Quote:
பஜனை பாடலுக்கு பத்து லட்சம் வென்ற பள்ளி மாணவிகள்
http://www.dailythanthi.com/muthucha...20922/TV01.jpg
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு `பஜன் சாம்ராட்' என்கிற குழு பஜனைக்கான போட்டியினை அறிவித்திருந்தது. இதற்கான தகுதிச்சுற்று சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், கோவை, மற்றும் ஹூப்ளியில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பஜன் குழுக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 24 குழுக்கள் முதற்சுற்றுக்கும், அவற்றிலிருந்து 12 குழுக்கள் காலிறுதிக்கும் அவற்றிலிருந்து 8 குழுக்கள் அரையிறுதிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதிலிருந்து ஐந்து அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்று கடந்த சனிக்கிழமை சென்னை மீனாட்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் நவரசமும் கலந்து பரவசமாய் பக்திப் பாடல்களை பாடிய விஷ்வ வித்யாலய பஜனைக் குழுவினர் `பஜன் சாம்ராட்' பட்டத்தை வென்றதோடு, பத்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றுக் கொண்டனர். இந்த குழு முழுக்க முழுக்க பள்ளி மாணவிகளை மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றவர்கள் ஹூப்ளி பசவேஸ்வர பஜன் மண்டலி தர்வாத் அணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அடிப்படை இசைப்பயிற்சிகளோ, இசைப்பாரம்பரியமோ இல்லாத ஏழை விவசாயிகள். ஆனால் தங்களுக்கான இசைத்திறமையை வளர்த்துக் கொண்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து விட்டார்கள். இவர்கள் 4 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றார்கள். மூன்றாவது இடத்தை பெற்ற அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவோனந்தா வித்யாலயாவுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நான்காம் இடம் பெற்ற பாலக்காடு மேலார்கோட் சிஸ்டர்ஸ் அணிக்கு ரூ.2 லட்சமும், ஐந்தாமிடத்தில் வந்த போத்தனூர் சத்குரு கிருபா பஜன் மண்டலி அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பஜன்சாம்ராட் இயக்குனர் ஜெய் ஆதித்யா கவுரவிக்கப்பட்டார்.
இறுதிச் சுற்றின் நடுவர்களாக `பஜன் சாம்ராட்' அனுப் ஜலோட்டா, கர்நாடக இசைப்பாடகி சுதா ரகு நாதன் மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜ×ன பாகவதர் பங்கேற்றனர்.
ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியின் சி.இ.ஓ. சுரேஷ்குமார் இந்த போட்டி நிகழ்ச்சி பற்றி கூறும்போது, " நமது அரிய பஜன் பாடல்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த போட்டி நிகழ்ச்சி. இறைவனை நினைத்து குழுவாக பஜன் பாடல்கள் பாடும் பொழுதும் கேட்கும் பொழுதும் மன அழுத்தங்கள் குறைந்து தெளிவான எண்ணங்கள் தோன்றுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாலான நோய்களுக்கு மாற்று மருத்துவமாக பஜன் பாடல்கள் திகழ்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று'' என்றார்.
நன்றி: தினதந்தி
Quote:
மறக்கமுடியாத `மனதோடு மனோ!'
http://www.dailythanthi.com/muthucha...20922/TV03.jpg
ஜெயா டிவியில் புதன்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வந்த `மனதோடு மனோ' நிகழ்ச்சி, இசைக்கலைஞர்களின் இன்னொரு பக்கத்தை மனம் திறந்த மடலாக எடுத்துக் காட்டியது. அதுவரை தங்கள் வாழ்வின் மலர்ப்பக்கங்களை மட்டுமே பட்டியலிட்டு வந்தவர்கள் கூட, மனோவின் முகம் பார்த்த நேரத்தில் தாங்கள் கடந்து வந்த முட்பாதையையும் கண்ணீர் மல்க விவரித்த அதிசயமும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவுவிழாவை மனோ தனது கலை நண்பர்களுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியை இயக்கிய சண்முகம், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் டைரக்டர் சண்முகத்தின் மனைவியுமான பிரியா மகாலட்சுமி (முன்னாள் சின்னத்திரை நடிகை மற்றும் முன்னணி தொகுப்பாளர்) பாடகர்கள் டி.எல்.மகாராஜன், வேல்முருகன், நிகழ்ச்சிக்கு இசை வழங்கிய ஸ்ருதி லட்சுமண், மற்றும் இசைக்குழுவினர் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் அம்மா பாட்டு பாடி நெகிழ வைத்தார். `பத்து மாசம் என்னை சுமந்து பெற்றெடுத்த அம்மா...உன் பாசத்துக்கு முன்னாலே எல்லாமே சும்மா' என்று அவர் உருகிப் பாடியபோது கேட்டவர்களும் கண் கலங்கிப் போனார்கள்.
நிகழ்ச்சியில் பாடகர் டி.எல்.மகராஜன் பேசும் போது, பிரபல பாடகரான தன் தந்தை திருச்சி லோகநாதனின் அன்பை நினைவு கூர்ந்தார். பெற்றோருக்கு தன்னையும் சேர்த்து 13 பிள்ளைகள். சிறு வயதிலேயே பாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால், தன் தாயின் கடைசி 5 பிரசவங்களுக்கு தானே செலவு செய்யும் பாக்கியம் பெற்றேன் என்று நெகிழ்ந்தார்.
இப்படியொரு மகனை பிள்ளையாகப் பெற்றது என் வாழ்வின் பெரும்பேறு என்று நெகிழ்ந்த அப்பா, ஒவ்வொரு இசைமேடையிலும் மறவாமல் `பங்காளிகள்' படத்தில் தான் பாடிய `சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் என்ற பாடலை பாடுவாராம். பாடலினூடே வரும் `மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே... வாழ்வும் உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள் வரும்' என்ற வரிகளைப் பாடும்போது அப்பா என்னை மனதார பாராட்டுவது போலவே உணர்வேன் என்றார். சிறுவயதிலேயே குடும்பத்தை தாங்கினேன் என்பதால் அப்பாவுக்கு என் மீது அத்தனை பிரியம் என்று அவர் தழுதழுத்தபோது, கேட்டவர்களும் அந்த பாச சூறாவளியில் சிக்குண்டது நிஜம்.
வாழ்க்கையில் ஒரு மனிதன் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் மனிதநேயத்தை விட்டு விடாதவனாக இருக்க வேண்டும் என்பதற்கு கவிஞர் காமகோடியன் எழுதிய `அறிஞனாயிரு, கலைஞனாயிரு, ஆயிரம் கோடிக்கு அதிபனாயிரு, அரசனாயிரு, புருஷனாயிரு, மொத்தத்தில் மனிதனாயிரு' என்ற பாடலை அவர் மேற்கோள் காட்டி பாடியபோது அரங்கு அதிர கரகோஷம்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் வரை கலந்து கொண்டு விட்ட போதிலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொள்ள முடியாமல் போனது நிச்சயம் இசை ரசிகர்களுக்கான வருத்தமே. ஆனால் எஸ்.பி.பி. சொல்லி துபாயில் மூளை வளர்ச்சி குறைந்த ஒரு இளைஞனை நிகழ்ச்சியில் பாட வைத்ததை குறிப்பிட்ட டைரக்டர் சண்முகம், `இந்த நிகழ்ச்சி மீதான எஸ்.பி.பியின் அக்கறையாகவே அதை எடுத்துக் கொண்டோம்' என்றார்.
அதற்கென்ன, `மனதோடு மனோ' இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே எஸ்.பி.பி.யை பாடவைத்தால் போயிற்று!
நன்றி: தினதந்தி
Quote:
மானாட... மயிலாட...
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ரம்யமான ஒரு நகரம். சமீபத்தில் அங்கு இறுதிப்போட்டிக்காக சென்றிருந்த "மானாட... மயிலாட'' குழுவினர் கலைஞர் தொலைக்காட்சி நேயர்களுக்காக பிரபலமான பொழுதுபோக்கு மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்று கோலாலம்பூர் நகரத்தைப் படம் பிடித்து வந்துள்ளனர்.
அடுத்தடுத்து ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுகளில் நடனக்குழுவினர் ஆங்காங்கே நடனமாடும் காட்சிகளை, நேயர்கள் கண்டு களிக்கலாம்.
கோலாலம்பூர் நகரில், பார்க்க வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து, நடன இயக்குனர் கலா மாஸ்டர் மேற்பார்வையில் நடனக் குழுவினர் நடனமாடுவது, நேயர்களை நிச்சயமாக வசீகரிக்கும்.
நன்றி: தினதந்தி
Quote:
ஆயிரமாவது எபிசோடில் ஜீ தமிழின் டாப்-10!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் 10 நிகழ்ச்சி ஆயிரமாவது எபிசோடை தொடவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 11.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப்-10 ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து வரும் நிகழ்ச்சி. தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என 5 தலைப்புகளில் 50 செய்திகளை குறுகிய நேரத்தில் தருவது இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல்.
இதில் டாப்-10 தமிழகம் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல்களும், கோலிவுட்டில் நிகழும் ருசிகர சம்பவங்களும் இடம் பிடிக்கிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் நிகழும் ஒட்டுமொத்த நிகழ்வுகளை டாப்-10 இந்தியா விவரிக்கிறது. உலகெங்கும் நிகழும் வினோதங்கள், பார்வையாளர்களை ஆச்சரிய உலகிற்குஅழைத்து செல்லும் வித்தியாசமான நிகழ்வுகளை டாப்-10 உலகம் விவரிக்கிறது. ஹாலிவுட் திரையுலகம் குறித்த தகவல்களை டாப்-10 பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தருகிறார்கள். இதில் அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களின் தொகுப்பும் இடம் பிடிக்கிறது. விளையாட்டு உலகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை டாப்-10 விளையாட்டு நிகழ்ச்சி வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் ஆயிரமாவது எபிசோடை எட்டவுள்ளது.
நன்றி: தினமலர்
Quote:
ஸ்ரீகாந்த் வென்ற தங்கம்
ராஜ் டிவியின் `கோல்ட் காசினோ' அறிமுக நிகழ்ச்சி வினாயகர் சதுர்த்தி தினத்தில் நடந்தது. ஆண்களும் பெண்களும் தங்கம் என்றதும் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? எவ்வளவு பதட்டப்படுகிறார்கள்? இப்படி தங்கத்தை தக்க வைக்கும் ஆர்வம் கண்களில் தெரிய நிற்பதை நேயர்கள் பார்த்திருக்கலாம்.
தொடரும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் நிறைய கொண்டாட்டங்களோடு யார் யார் எவ்வளவு தங்கத்தை வென்று வீட்டிற்கு கொண்டு போகிறார்கள் என்பதையும் காணலாம்.
கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் வெறுங்கையோடு போகமாட்டார்கள் என்பது நிச்சயம்.
நிகழ்ச்சியின் இடை இடையே தங்கம் வாங்குவதில், சேமிப்பதில், கவனத்தில் கொள்ள வேண்டிய உதவி குறிப்புகளும் வழங்கப்படுகிறது.
அக்டோபர் 1 ஆம் தேதியில் `கோல்ட் காசினோ' நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. நடிகர் ஸ்ரீகாந்த் பங்கேற்கும் முதல் எபிசோடு என்ற பெருமையும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் எத்தனை கிராம் தங்கம் வென்றார் என்பதை மறுநாள் நிகழ்ச்சியில் காணலாம்.
நடிகை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
Quote:
துளசியின் குழந்தைக்கு தந்தை யார்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் துளசி தொடர், பரபரப்பான திருப்புமுனை காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.
துளசி-பிரசன்னா இருவருக்கும் திருமணம் ஆகிறது. முதலிரவிலேயே துளசி கர்ப்பமாக இருக்கும் தகவல் பிரசன்னாவுக்கு தெரிய வர, அவன் அதிர்ச்சியடைகிறான். குழந்தையின் தந்தை யார் என்றதேடலில் இறங்குகிறான்.
ஞாபகங்களை தொலைத்த துளசிக்கு அந்த கால கட்டத்தில் நேர்ந்த இந்த சோகம் பற்றி மருத்துவரிடமும் பகிர்ந்து கொள்கிறான். இதன் விளைவாக குழந்தை பற்றிய ரகசியம் பிரசன்னாவிற்கு தெரிய வந்ததா? மருத்துவரின் கண்காணிப்பில் துளசி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தாளா? துளசி-பிரசன்னா இருவரின் வாழ்க்கை இனி எப்படி இருக்கப் போகிறது?
ராஜ்பிரபுவின் திரைக்கதைக்கு ஜான்கென்னடி வசனம் எழுத, பாலாஜி யாதவ் இயக்குகிறார்.இசை: தீனா. தயாரிப்பு: மார்நேனி புரொடக்ஷன்ஸ்.
நன்றி: தினதந்தி
Quote:
கபடி... கபடி...
ஜெயா தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `கலக்கல் கபடி' கே.பி.எல்.
தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக நமது பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி இது. மக்களிடம் பேராதரவு பெற்ற இந்த நிகழ்ச்சி, தமிழகம் தழுவிய அளவில் ஒரு மாபெரும் போட்டியாகவும், ரியாலிட்டி ஷோவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீராங்கனைகளின் உணர்ச்சிமிகு குடும்ப பின்னணிகளையும், வறுமையை வென்று முன்னேறி வரும் அவர்களது தன்னம்பிக்கையும் வாரா வாரம் ஒளிபரப்பி வரும் இந்த நிகழ்ச்சியில், இன்று இரவு 9.30 மணிக்கு ஈரோடு அணியும், திருப்பூர் அணியும் மோதவிருக்கின்றன. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு கோவை அணியும், நீலகிரி அணியும் மோதுகின்றன. இவ்விரு அணி வீராங்கனைகளையும் நடிகை அஞ்சலி உற்சாகப்படுத்துகிற காட்சிகளும் இந்த எபிசோட்டில் இடம் பெற்றுள்ளது.
பெண் குழந்தை என்பதால் தந்தையால் புறக்கணிக்கப்பட்டு பல போராட்டங்களுக்கு இடையே சாதனை படைத்து வரும் சிந்தனைச்செல்வியின் வாழ்க்கை கதை இந்த வாரம் மனதை நெகிழ்த்துகிறது. கபடிக்காக திருமணத்தையே புறக்கணித்த நந்தினியின் லட்சியக் கதையும் இடம் பிடிக்கிறது.
நிகழ்ச்சி முடிவில் நகைச்சுவை நடிகர் சந்தானம் கபடி பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி: தினதந்தி
விரைவில் மகாபாரதம் தொடர்!
http://www.cinemaexpress.com/Images/...ahabharata.jpg
:clap:Quote:
சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது மகாபாரதம் தொடர். இதற்கான படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரை நாகா இயக்கி வருகிறார். வழக்கமாக புராணத் தொடர்கள் என்றால் வேற்று மொழியில் தயாரானதை வாங்கி டப் செய்து தான் வெளியிடுவார்கள். ஆனால் முதன் முதலாக தமிழ் மொழியிலேயே "மகாபாரதம்' தொடர் தயாராகிறது.
சின்னத்திரையில் மந்த்ரா..!
http://www.dailythanthi.com/muthucha...1006/TV-01.jpg
.Quote:
"சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வித்தியாசமானது, புதுமையானது என்ற பெயரை எடுத்த எடுப்பிலேயே பெற்றிருக்கும் நிகழ்ச்சி, ஆயிரத்தில் ஒருவன். நேயர்களின் தனித்திறனை புடம் போட்ட பொன்னாக வெளிக்கொணர்ந்து அதற்குப் பரிசும் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனித்துவம் தெரிகிறது. பொதுஅறிவில் அவர்கள் அற்புதமாகத் தேர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது'' என்கிறார், நடிகை மந்த்ரா.
25 எபிசோடைத் தாண்டி ஜி தமிழில் தொடரும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில், இப்போது பங்கேற்று நேயர்களுடன் உரையாடுபவர் நடிகை மந்த்ரா., ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த அதே மந்த்ரா தான். இப்போது 8 ஆண்டுகள் இடைவெளியில் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
"நிஜமாகவே நான் எதிர்பார்த்திராத அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கிறது. இதில் கவிதை பற்றியும் பேசலாம். சமையல் பற்றியும் பேசலாம். எது பற்றியும் பேசலாம். இந்த வாரம் மதுரை பற்றி பேசினோம். மதுரை என்றாலே மல்லி, மீனாட்சியம்மன் கோவில், ஆயிரங்கால் மண்டபம் நினைவுக்கு வரும். ஆனால் போட்டியாளர்களிடம் பேசும்போது மதுரை பற்றி அதற்கு மேலும் எத்தனையோ சிறப்புக்களை தகவல்களாக கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்தவிதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல்'' என்கிறார், மந்த்ரா.
டைரக்டர் நிவாசை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குப் போனவரை இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.
"நேயர்களின் பங்களிப்பில் சுவாரசியம் கொட்டிக் கிடக்குமே?''
மந்த்ராவைக் கேட்டால், "உண்மை. அவர்கள் திறமை பார்த்து நானே பிரமித்து விட்டேன். குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை பற்றி பேச்சு வந்தபோது, பாடல்களை அவர் எந்தெந்த சூழலில் எழுதினார் என்ற தகவல்களை அவர்கள் உற்சாகமாய் தந்தார்கள். இத்தனை விஷயம் கவியரசர் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. அவரின் ஆழ்ந்த புலமை எப்படி சூழ்நிலையோடு இணைந்திருந்தது என்பதில் வியப்பும் ஏற்பட்டது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல மேடை'' என்கிறார்.
"மீண்டும் பெரியதிரைக்கு எப்போது வருகிறீர்கள்?''
"ஏற்கனவே தெலுங்கில் `மங்கா' என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும். தவிரவும் தெலுங்கு ஜி டிவியில் `லக்கு கிக்கு' என்ற பரிசுப்போட்டி நிகழ்ச்சியையும் நடத்தி வந்ததால் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் தான் இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுடன் எனக்கு நேரடித்தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அபர்ணா பிள்ளை என்றும் என் நன்றிக்குரியவர்.''
ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
ஷக்தியின் வாழ்வில் வீசிய புயல்
Quote:
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர் 225 எபிசோடை தாண்டி பரபரப்பான காட்சிகளுடன் விரைகிறது.
இப்படி ஒரு மருமகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மருமகள் ஷக்தியை கொண்டாடிய மாமியார் அலமேலுவிடம் இப்போது அப்படியே தலைகீழ் மாற்றம். இப்போது ஷக்தி எது செய்தாலும் தப்பாகத் தெரிகிறது.
அதற்குக் காரணம், ரொம்ப சின்ன விஷயம். தன் தம்பியின் கல்விச் செலவுக்காக வங்கியில் பணம் எடுத்த ஷக்தியிடம் கணவன் அவசரத் தேவைக்கு பணம் கேட்கிறான். நியாயமான தேவை என்றாலும் தம்பிக்கு கொடுக்க வைத்திருக்கும் பணம் என்ற எண்ணத்தில் ஒருகணம் பணத்தை கணவனிடம் தர தயங்குகிறாள் ஷக்தி. அதை சட்டென உணர்ந்து கொள்ளும் கணவன், அவள் தன்னை அவமானப்படுத்தியதாக கருதி, `உன் பணம் வேண்டாம்' என்று வாங்க மறுக்கிறான். அதோடு ஷக்தியை முடிந்தவரை தவிர்க்கிறான்.
இதற்குப் பிறகு ஷக்தியின் சந்தோஷ வாழ்வில் புயல் வீசத் தொடங்குகிறது. அதுவரை அம்மாவாக இருந்த மாமியார் இப்போது எரிமலையாகப் பொங்குகிறாள். மருமகளின் சின்னச்சின்ன தவறையும் ஊதி பெரிதாக்குகிறாள். நேற்று வரைஅம்மாவாக தெரிந்த மாமியாரா இப்போது அப்படியே தலைகீழாக மாறிப்போயிருப்பது? இனி மாமியாரின்அன்பு கேள்விக்குறி தானா என்ற கவலையில் ஷக்தி உள்ளூற உடைந்து போகிறாள்.
ஷக்தியின் ஒரிஜினல் பெற்றோர் தட்சிணாமூர்த்தி-வள்ளியின் வாழ்க்கையில் இப்போது விரிசல். கணவன் சின்னவீடு வைத்திருப்பதை எந்த மனைவி ஏற்றுக் கொள்வாள்? அதனால் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவள் தனியாக வருகிறாள். அதோடு கணவனுக்கும் விவாகரத்து கேட்டு வக்கீல்நோட்டீஸ் அனுப்புகிறாள்.
ஆனால் தட்சிணாமூர்த்திக்கோ மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மனதில்லை. அதேநேரம் மனைவியிடம் இருக்கும் தன் பிள்ளைகளை தன்பக்கம் வரவழைக்க திட்டம் தீட்டுகிறார். அதன்படி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு வரும்போது எந்த கணவனும் மனைவி மேல் சுமத்த முடியாத ஒரு அப்பாண்டத்தை சுமத்தப் போக...அதனால் நிலைகுலைந்து போகிறாள் வள்ளி. அதற்குப் பிறகு அவள் எடுக்கும் முடிவு என்ன?
இதற்கிடையே வள்ளியின் பிள்ளைகள் திலீபன், நிலா இருவரும் கூட ஆளுக்கொரு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஜோசியர் சொன்னதன் பேரில் அத்தை மகள் சுசியுடன் அவசர கதியில் தனக்கு கட்டாய நிச்சயதார்த்தம் நடந்ததை அவன் விரும்பவில்லை. அதற்குப்பிறகு அவன் கதை வேறுமாதிரியாகி விடுகிறது. அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணொருத்தியுடனான சிநேகம் திருமணம் வரைபோக, நிச்சயதார்த்தம் நடந்த திருமணத்தின் கதி என்ன? விறுவிறுப்பை தக்கவைத்தபடி தொடர்கிறது தொடர்.
நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, எல்.ராஜா, ஸ்ரீலேகா, ஷ்ரவன், ரூபஸ்ரீ, கருணா, அகிலா, பாரதி, மகாலட்சுமி, சுரேகா.
திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: `சம்யுக்தா' ஆனந்த். ஒளிப்பதிவு சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
கிளைமாக்சுக்குப் பிறகும் தொடரும் கதை!
Quote:
சின்னத்திரையில் வெகுவிரைவில் தனது ஒளிபரப்பபை தொடங்கவிருக்கிறது, வேந்தர் டிவி. பொழுதுபோக்கு சேனலான இதில் புதுமைப் படைப்பாக வரவிருக்கும் ஒரு தொடர் தயாரிப்பில் உள்ளது.
எல்லா திரைப்படங்களுக்கும் ஒரு கிளைமாக்ஸ் இருக்கும். ஆழ்ந்து யோசித்தால் அந்த கிளைமாக்சுக்குப் பிறகும் ஒருகதை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பது புலப்படும். அதுபோன்ற திரைப்படங்களை அடையாளம் கண்டு அவற்றின் தொடர்ச்சியை சின்னத்திரையில் ஒரு தொடராக உருவாக்குவதே இந்த தொடராகும்.
இந்த தொடருக்கு `முடிவல்ல, ஆரம்பம்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தொடரை கீதாஞ்சலி, உதயகீதம், உயிரே உனக்காக போன்ற வெள்ளிவிழா படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்குகிறார். `மெட்டி ஒலி' போஸ் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொடருக்காக மீண்டும் சின்னத்திரையில் தோன்றுகிறார்.
இந்த தொடரில் எடுத்து கையாளப்படும் படங்கள் எவையெவை என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.
உறவுகள்
came to an END - this Friday - Oct 12, 2012
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R1dgFnjHz_E
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ox0-KwRNCGM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IFFHE5Mfpas
Quote:
கிச்சன் சூப்பர் ஸ்டார்
விஜய் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு "கிச்சன் சூப்பர் ஸ்டார்'' என்ற சமையல் போட்டி நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
இது ஒரு வித்தியாசமான சமையல் போட்டி நிகழ்ச்சியாகும். இதில் பங்கு பெறுபவர்கள் பிரபலங்கள். இவர்கள் விதவிதமான சுவையான உணவு வகைகளை செய்ய வருகின்றனர். பிரபல முகங்களான சிவா, இளவரசன், பிரியா, நேத்ரன், சபர்ணா, ஆர்த்தி, நிஷா, பிரீத்தா, ஜெ.லலிதா, அரவிந்த் சந்தியா, பூஜா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். மேலும் நடிகர் சுரேஷ் இந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியின் நடுவராகவும் இடம் பெறுகிறார்.
ஒவ்வொரு வாரமும் விதவிதமான உணவு வகைகளை செய்து போட்டியில் பங்கு பெறும் இவர்களின் சமையலை சுவைத்து மதிப்பெண் அளித்து தீர்ப்பு வழங்குகிறார்கள், பிரபல சமையல் நிபுணர்களான `செப்' வெங்கடேஷ் பட், `செப்' தாமு.
நன்றி: தினதந்தி
Quote:
இரு மலர்கள் -150
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `இரு மலர்கள்' தொடர், பரபரப்பான காட்சியமைப்பில் 150 எபிசோடை தாண்டி தொடர்கிறது.
தோழிகள் அமுதாவுக்கும் ரஞ்சனிக்கும் கல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட மோதல் அதன்பிறகும் தொடர்கிறது.
கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு தங்கள் நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பேற்கிறாள் ரஞ்சனி. அமுதாவோ தன் திறமைக்கேற்ப ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக அமர்கிறாள். ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் தங்கள் நிறுவனம் சற்றே பின்னடைவை சந்திக்க, அதற்குக் காரணம், தங்களுக்கு இணையாக வளர்ந்துள்ள நிறுவனம் என்பது ரஞ்சனிக்கு புரிய, அந்த நிறுவனத்தின் டீம் லீடர் தன் முன்னாள் தோழி அமுதா என்பதை அறியாமலே அவள் மீது ஏகப்பட்ட எரிச்சலை வளர்த்துக் கொண்டிருக்கிறாள், ரஞ்சனி.
இதற்கிடையே அமுதாவை அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவா விரும்புகிறான். இதே கால கட்டத்தில் ரஞ்சனி, சிவாவை சந்திக்கநேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள்ளும் காதல் பற்றிக் கொள்கிறது.
சிவாவை தன் வாழ்க்கைத் துணைவனாக்க ரஞ்சனி திட்டம் போட்டநேரத்தில், சிவாவுக்கும் அமுதாவுக்குமான நிச்சயதார்த்த செய்தி ரஞ்சனிக்கு கிடைக்கிறது.
அப்போது கூட இந்த அமுதா வேறு யாரோ என்ற நினைப்பில் நிச்சய தார்த்தத்துக்கு வருகிறாள் ரஞ்சனி. அப்போதுதான் `நேற்றைய தோழி இன்றைய எதிரி'அமுதா தான் தன் நேசத்துக்குரியவனை மணக்கப் போவது தெரிகிறது.
இப்போது எரிமலை வெடித்திருக்குமே...அதுதான் இல்லை. கோபம் இப்போது செல்லுபடியாகாது என்பதை புரிந்து கொண்டு அமுதாவிடம் நல்லவள் போல் நாடகமாடுகிறாள் ரஞ்சனி. அவள் நடிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளாத அமுதா, ரஞ்சனியின் அன்பை உண்மை என்று நம்பி விடுகிறாள். அமுதா அறியாமல் அவள் திருமணத்தை நிறுத்த வசந்த் என்பவன் மூலம் ரகசிய திட்டம் வகுக்கிறாள்.
இந்த வசந்த் ஏற்கனவே அமுதாவின் தங்கையை காதல் என்ற பெயரில் ஏமாற்றி கெடுத்து கர்ப்பமாக்கினவன். இது தெரிந்ததும் அமுதாவின் அம்மாவும் அமுதாவும் நடுரோட்டில் வைத்து அவனை அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறார்கள்.
உண்மையில் அமுதாவின் குடும்பத்தில் இப்படியான குழப்பத்தை எற்படுத்த ரஞ்சனி அனுப்பிய அம்பு தான் இந்த வசந்த். இப்போது இதே வசந்த் தான் இப்போது அமுதாவின் திருமணத்தை நிறுத்த ரஞ்சனியால் அனுப்பப் பட்டிருக்கிறான்.
ரஞ்சனி ஆசைப்பட்ட சிவாவை தன் பேத்தி ரோஜாவுக்கு
திருமணம் செய்து வைக்கச் சொல்லி ரஞ்சினியின்அப்பா ராஜரத்னத்தை வற்புறுத்துகிறாள், வேங்கடத்தாள். ஏற்கனவே ராஜரத்னம் செய்த ஒரு கொலையை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை மிரட்டி வரும் அவள், இப்போது சிவாவை தன் பேத்திக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். சொத்தில் பாதியை தன் பேத்தி ரோஜா பெயரில் எழுதி வைக்கவேண்டும். திருமணம் முடிந்ததும் ராஜரத்னம் குடும்பத்தோடு ஊரை விட்டே சென்று விட வேண்டும் என்று கண்டிஷன் போடு கிறாள்.
இந்த கண்டிஷன்களுக்கு வேறு வழியின்றி சம்மதிக்கிறார், ராஜரத்னம். தந்தையின் நிலை இப்படி இருக்க, இது எதையும் அறியாத ரஞ்சனி சிவாவை தனக்கே தனக்கென்று மீட்பதில் கவனமாக இருக்கிறாள்.
சிவா-அமுதா திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது ரஞ்சனி தன் திட்டத்தில் வென்று விடுவாளா? ரஞ்சனியின் அப்பா ராஜரத்னம் வேங்கடத்தாளுக்கு பயந்து ஊரை விட்டுப் போவாரா? விறுவிறுப்பின் உச்சம் தொட்டு தொடர்கிறது, தொடர்.
சிவாவாக உதய், ரஞ்சனியாக மகாலட்சுமி, அமுதாவாக அகிலா, வசந்த்தாக வசந்த், ராஜரத்னமாக சிவன் சீனிவாசன், தங்கமாக நளிளி, ரோஜாவாக ஸ்ரீதேவி, வேங்கடத்தாளாக எஸ்.என்.பார்வதி நடிக்கிறார்கள். சுருளி என்ற வித்தியாசமான கேரக்டரில் சூர்யகாந்த் நடிக்கிறார்.
திரைக்கதை: பாபா கென்னடி. வசனம்: பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆரணன். இயக்கம்: தளபதி. தயாரிப்பு: ஜெயா டிவி.
நன்றி: தினதந்தி
Quote:
மீண்டும் சொக்கு - மயில் பிரிவு வருமா?
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வெற்றித்தொடர் `நாதஸ்வரம்', 600 எபிசோடுகளை தாண்டி இயல்பான கதைப்போக்கில் யதார்த்தமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தொடர் இப்போது கதையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறது. மர்ம மனிதனாக இருக்கும் ராஜேஷ், ராகினியை திருமணம் செய்து கொள்வானா? அல்லது இந்த திருமணத்தில் இருந்து ராகினி காப்பாற்றப்படுவாளா? கோபி கார் வாங்கிக் கொடுக்காததால் கோபப்பட்டு திருச்சிக்கு சென்ற மகேஷ் மீண்டும் அப்பா வீட்டுக்கு வருவாளா? ராகினியின் திருமணத்திற்கு வருவாளா? அடுத்து என்ன காய்களை மகேஷ் நகர்த்த இருக்கிறாள் என்பது சுவாரஸ்யமான விஷயம்.
புற்று நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் மூர்த்தி, அவனை நம்பிக்கையுடன் கவனித்துக் கொள்ளும் காமு... இவர்கள் இருவரும் சேர்ந்தும் அதற்கு பயனில்லாமல் இருக்கிறது. இவர்களின் கதி என்ன?
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மயில் மீண்டும் நாதஸ்வரம் வாசிக்கும் அளவிற்கு பழைய நிலைக்கு தேறி வருவாரா? மறுமணம் செய்து கொள்ள மறுக்கும் மகாவின் மனம் எப்படி மாறப்போகிறது? சித்தர் சொன்ன வாக்கின்படி மீனாட்சியின் மூத்த மகன் வரப்போகிறானா?
ஜெகநாதன் வீட்டில் உள்ள மொத்த நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கோகுல், தப்பித்து வெளிநாடு சென்று விடுகிறானா? கோகுலின் சுயரூபம் ஜெகநாதனுக்கு தெரிந்து விட்டதால், மலர்-கோபியை சேர்த்து கொள்வரா? அப்படி சேர்த்துக் கொண்டால் கோபி மிகப் பெரிய பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகி விடுவார். இதை மீனாட்சி, தெய்வானை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதனால் வரும் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளாலும், கார் விஷயத்தில் பரமுவுக்கும், மகேஷூக்கும் ஏற்பட்ட சண்டைகளாலும் மீண்டும் சொக்கு-மயில் இடையே பிரிவு வருமா? இதை சாமர்த்தியமாக எப்படி எதிர் கொள்ளப்போகிறார் சொக்கு?
இப்படி பல கேள்விகளுக்கு வரும் நாட்களில் நாதஸ்வரம் தொடரில் பதில் கிடைக்கும் என்கிறார் இயக்குனர் திருமுருகன். வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: சரத் கே.சந்தர், இசை: சஞ்சீவ் ரத்தன், எடிட்டிங்: பிரேம், கதை, தயாரிப்பு, இயக்கம்: எம்.திருமுருகன்.
நன்றி: தினதந்தி
Quote:
பயத்தின் உச்சக்கட்டம்
ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் ஒரு திகில் தொடர் `பியர் பைல்ஸ்.'
வாரம் ஒரு கதையாக வரும் இத்தொடரில், ஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரம் ஒரு கதையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த திகில் தொடரின் முதல் கதையாக மும்பையில் வசிக்கும் கர்ப்பிணி பெண் நீருவின் திகில் கதை இடம் பெறுகிறது. அவள் தன் கணவனுடன் புது வீட்டுக்கு குடி போக, அங்கு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. நீரு அதிர்ச்சியும் பயமும் கொள்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் குடி வரும் முன்பு அங்கு ஒரு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த உண்மை இவளுக்கு தெரிய வருகிறது. அந்த ஆவிதான் இவளை பல ரூபங்களில் பயமுறுத்துகிறது.
இந்த ஆபத்திலிருந்து நீரு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்றினாளா? ஆவியின் பிடியிலிருந்து மீண்டாளா? திகில் காட்சிகளுடன் வாரம் ஒரு கதையாக தொடர்கிறது.
நன்றி: தினதந்தி
Quote:
பொம்மலாட்டம்
http://www.dailythanthi.com/muthucha...1020/TV-10.jpg
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் புதிய தொடர், `பொம்மலாட்டம்'. மிகப் பெரிய கோடீஸ்வரனின் மகனான சந்தோஷ் எதற்கும் துணிந்தவன். இறைவன் பெண்களை படைத்தது தன் சுகத்திற்காக என்பதே இவனது கொள்கை. இவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பட்டியல் அதிகம்..
சந்தோஷின் தங்கை தேவி, பிறந்ததும் தாயை பறி கொடுத்தவள். தந்தை பாசத்திற்காக ஏங்கி அது கிடைக்காததால் ரவுத்திரமானவள். அதோடு பணமும் கொட்டிக் கிடப்பதால் இயல்பிலேயே திமிரும் சேர்ந்து கொள்கிறது. அண்ணனைப் போலவே எதற்கும் துணிந்தவள்.
சந்தோஷ் மற்றும் தேவிக்காகவே வாழ்ந்து வருபவர் அவர்களின் அப்பா சிதம்பரம். தேவி பிறந்தபோதே மனைவி இறந்து போன அதிர்ச்சி அவரை ரொம்பவே பாதித்தது. என்றாலும் பாசத்துக்கு குறைவில்லாமல் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். உறவும் நட்பும் கட்டாயப் படுத்தியும் மறுமணம் புரியாதவர்.செல்வம் தேடி அயல்நாடு சென்று அதனால் மகள் மற் றும் மகன் பாசத்தை இழந்தவர். பாசத்திற்காக ஏங்குபவர்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பாரதி சந்தோஷின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். அவளின் அழகு சந்தோஷை சுண்டியிழுக்க, அவளை வீழ்த்தும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.
ஆனால் பாரதியோ அவனை சிறிதும் சட்டை செய்தாளில்லை. அவள் மனம் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் கதிரை நேசிக்கிறது. கதிரும் பாரதியை உயிராக நேசிக்கிறான்.
சிதம்பரம், சந்தோஷ், தேவி, பாரதி, கதிர் என இந்த ஐந்துபேரும் ஆடும் ஆட்டம்தான் பொம்மலாட்டம்.
பாரதி-கதிரின் காதல் வீட்டுக்கு தெரிந்தால்? கதிரின் சினிமா இயக்குனர் கனவு நிறைவேறியதா? தன் அலுவலகத்தில் பணிபுரியும் பாரதியை சந்தோஷ் அடைந்தானா? தேவியின் திமிர் அடங்கியதா? அடக்கப்படுமா? சிதம்பரத்திற்கு பிள்ளைகளின் பாசம் கிடைத்ததா? அத்தனை கேள்விகளுக்கும் சுவாரசியமான கதைப்பின்னணியில் பரபரப்பான காட்சிகள் பதில் சொல்லும் என்கிறார், இயக்குனர் கே.ஷிவா.
கதையின் நாயகியான பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிரிஜா. பெங்களூரை சேர்ந்த இவர் தமிழ் தொடருக்கு அறிமுகம்.
நட்சத்திரங்கள்:- சிரிஜா, டெல்லி குமார், ஸ்ரீகுமார், அப்சர், ப்ரீத்தி, மகிமா, காத்தாடி ராமமூர்த்தி, கணேஷ்கர், சாய்ராம், விஜய் கிருஷ்ணராஜ், ஷீலா, சசி, கவுரிலட்சுமி, வித்யா அன்பு, ஜிதேந்த்ரா, முரளி, கரிஷ்மா.
இசை:- தினா, பாடியவர்: ஹரிகரன். பாடல்: கவிஞர் வைரமுத்து. கதை: எழுச்சூர் அரவிந்தன், திரைக்கதை: விவேக்சங்கர், வசனம்: தவமணி வசீகரன், ஒளிப்பதிவு: சங்கர், தயாரிப்பு: சான்மீடியா நிறுவனம். இயக்கம்: ஷிவா.
நன்றி: தினதந்தி
Quote:
சிந்து பைரவி-600
http://www.dailythanthi.com/muthucha...1020/TV-06.jpg
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் "சிந்து பைரவி'' தொடர், 600 எபிசோடை நிறைவு செய்தபடி தொடர்கிறது.
சிந்துவும், பைரவியும் வீருக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் படுத்திக்கொண்டது தொடரின் பிரதான அம்சம். அதேசமயம் வீருக்கே ஒரு பிரச்சினை என்றபோது, தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பது அவர்கள் விஷயத்தில் உண்மையானது. சத்யாவும் அவன் தங்கையும் வீருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதை தெரிந்து கொண்ட சிந்துவும் பைரவியும் வீருவை காக்கும் நோக்கில் கரங்கள் கோர்க்கிறார்கள்.
சத்யா மற்றும் அவனின் தங்கையின் சதி திட்டம் என்ன? சிந்துவும், பைரவியும் வீருக்காக என்ன தியாகம் செய்து அவனை காப்பாற்றினார்கள்? சத்யா மற்றும் அவனது தங்கையின் கதி என்ன ஆயிற்று? வீருக்காக ஒன்று சேர்ந்த சிந்துவும், பைரவியும் இணைந்தே இருப்பார்களா? பிரிவார்களா?
கேள்விகளுக்கு விடை சொல்ல வருகிறார்கள், சிந்துவும், பைரவியும்.
நன்றி: தினதந்தி
Quote:
நவராத்திரி கொண்டாட்டம்
மக்கள் தொலைக்காட்சியில் வரும் 23-ம்தேதி நவராத்திரி நிகழ்ச்சிகள் காலை 6.03 மணிக்கே தொடங்கி விடுகின்றன. காலை 6.30 மணிக்கும் மாலை 6.05 மணிக்கும் `ஒளி பெருக்கும் ஒன்பது நாட்கள்' என்ற தலைப்பில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள் பற்றிய சிறப்பினை விளக்கும் பாடல்கள் இடம் பெறுகின்றன. அதோடு தமிழ் இலக்கியம் சார்ந்த பக்தி பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கின்றன. இசை வல்லுனர் சிவா தலைமையில் இளம் பாடகர்கள் இடம் பெற்று ஒன்பது நாட்களும் சிறப்பு பாடல்களை பாடி சிறப்பிக்க உள்ளனர்.
மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `முத்திரை பதித்த மூவர்.' இன்றைய உலகில் பல போராட்டங்களையும் தாண்டி ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்மணிகளை கண் முன்னே கொண்டு வரும் நிகழ்ச்சி இது. கல்வி, செல்வம், வீரம் என இந்த மூன்று துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள், தங்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் தங்களது வெற்றியின் ரகசியத்தையும் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
Quote:
ஹவுஸ்புல்
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான கேம்ஷோ "ஹவுஸ்புல்.'' முற்றிலும் புதிய நிகழ்ச்சியான இது, ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் யாவரும் பயன் பெறும் வகையில் நேரடி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், வீட்டிலிருந்தபடியே முற்றிலும் எஸ்.எம்.எஸ். முறையை பயன்படுத்தி விளையாடலாம். இதில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது. முதல் இடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசாக காத்திருக்கிறது.
நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளுக்கிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து "ஹவுஸ்புல்'' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 எண்களை கொண்ட ஒரு குறுந்தகவல் பட்டியல் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த எண்களை வைத்து இந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக பங்கேற்கலாம்.
இந்த சுவாரஸ்யமான புத்தம் புது நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.
நன்றி: தினதந்தி
Quote:
மாயா
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், "மாயா.''
சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள்.
பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா?
கதை: இந்திரா சவுந்தர்ராஜன். இயக்கம்: பி.நித்தியானந்தம்.
நட்சத்திரங்கள்: ஈஸ்வரிராவ், அபிஷேக், வாணி, மோகன்ராம், ஜெகதீஷ் ராமன்.
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.
நன்றி: தினதந்தி
Quote:
கொஞ்சும் சலங்கை
தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நடனத்திலும் தனி முத்திரை பதித்த பிரபல நடிகை வெண்ணிறஆடை நிர்மலா, நடனத்திற்காக கலைமாமணி விருதும் பெற்றவர். இவர் பொதிகை தொலைக் காட்சியில் நடத்திவரும் நடன போட்டியே `கொஞ்சும் சலங்கை.' இந்த போட்டி நிகழ்ச்சியில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்குபெற்று அசத்தலாக கிளாசிக்கல் மற்றும் போக் நடனம் ஆடுகிறார்கள்.
நடுவராக இருந்து நிகழ்ச்சியை இயக்கி வழங்கும் வெண்ணிற ஆடை நிர்மலா, இந்த நிகழ்ச்சியில் தன் முத்திரை நடனங்களையும் ஆடி நடன ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
நடிகை சுதா நிகழ்ச்சியை தொகுத்தளிக்கிறார்.
இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நடனங்களையும், கிராமப்புற நடனங்களையும் வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் சிறுவருக்கு "பொதிகை இளமயில்'' பட்டம் வழங்கப்படுகிறது. அதுபோலவே `சிறந்த கிராமப்புற நடனம்', `சிறந்த அபிநயம்', `சிறந்த உடைஅலங்காரம்', `புதுமை நடனம்' ஆகிய பிரிவுகளிலும் நடன கலைஞர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
ஞாயிறு தோறும் பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை பொதிகை சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
நன்றி: தினதந்தி
Quote:
மனதில் உறுதி வேண்டும்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மனதில் உறுதி வேண்டும்.
கதையின் நாயகி பாரதி, தன் சம்பளத்தில் இரண்டு தங்கைகளை படிக்க வைப்பதோடு பெற்றோரையும் கவனித்து வருகிறாள். திடீரென ஒருநாள் தன் தந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் சொல்லி விட, பணத்திற்கு வகை தெரியாமல் திகைத்துப்போகிறாள்.
கதையின் நாயகன் திக்குவாய் திருநாவுக்கரசு, சித்தி வைத்தீஸ்வரியின் கொடுமையால் வெகுளியாக, படிப்பறிவு இல்லாமல் போனவன். வைத்தீஸ்வரி தனக்கு பிறந்த பிள்ளைகளை மட்டும் படிக்க வைத்து புத்திசாலியாக வளர்த்தாள். திருநாவுக்கரசுவின் அப்பா சுந்தரம் தன் மகனை மனிதனாக்க ஒரு நல்ல மருமகள் வேண்டுமென முடிவு செய்தவர், பாரதியை சந்திக்கிறார். அவள் தந்தையின் இருதய ஆபரேஷனை தன் செலவில் செய்து வைப்பதாக உறுதி சொன்னவர், பதிலுக்கு தன் திக்குவாய் மகனை மணந்து கொண்டு வாழ்நாள் முழுக்க திக்குவாயாக நடிக்க வேண்டும் என்கிறார். அவளும் சம்மதிக்கிறாள்.
திருமணத்திற்கு பின் பாரதி, தன் கணவன் திருநாவுக்கரசுவை படிக்க வைத்து புத்திசாலியாக்கினாளா? பாரதி ஊமையல்ல என்பது கணவன் திருநாவுக்கரசுவிற்கு தெரிந்தபோது என்ன முடிவு எடுத்தான்? தன் கணவனுக்கு அவன் சித்தி வைத்தீஸ்வரி கெட்டவள் என்பதை பாரதி எப்படி புரிய வைத்தாள்? கதை, திரைக்கதை வசனம்: எஸ்.சேக்கிழார். இயக்கம்: வி.சதாசிவம்.
நட்சத்திரங்கள்: ராம்ஜி, சஞ்சய்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா, பிரீத்தி, சுமங்கலி.
தயாரிப்பு: ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ்.
நன்றி: தினதந்தி
Quote:
லக்கா, கிக்கா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ரோஜா தொகுத்து வழங்கும் பிரம்மாண்டமான கேம் ஷோ "லக்கா கிக்கா.'' திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், திரையுலகினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நேயர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
ஐந்து பகுதிகளை கொண்ட இந்த கேம் ஷோ, முற்றிலும் யதார்த்தமான விளையாட்டுக்களை பிரதிபலித்து வருகிறது. முதல் பகுதியான `ரோஜா தி பாஸில்' மக்களின் கருத்துக்கணிப்புக்கு ஏற்ப போட்டியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். `ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற இரண்டாம் பகுதியில் போட்டியாளர்கள் தங்களது பன்முக திறமைகளை நிரூபித்து, அரங்கத்தில் இருக்கும் சிறப்பு விருந்தினர் தரும் பணமுடிச்சை பரிசாக பெறுவர். இரண்டாம் சுற்றின் முடிவில் குறைவான புள்ளிகளை உடைய போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீதே பந்தயம் கட்டி விளையாடும் வித்தியாசமான விளையாட்டு, "வை ராஜா வை'' எனும் மூன்றாம் பகுதி. இந்த சுற்றின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் நான்காம் சுற்றான `ராஜா ராணியில்' விளையாட தகுதி பெறுவர். இதில் ராஜா, ராணி என்னும் இரு கதவுகளில் ஒன்றில் மறைந்திருக்கும் பரிசை அதிர்ஷ்டத்தின் (லக்) மூலம் அடையும் போட்டியாளர், இறுதிச்சுற்றான அதிர்ஷ்ட சக்கரத்தை சுழற்ற வாய்ப்பு பெறுவார். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஜீ தமிழின் பம்பர் பரிசு காத்திருக்கிறது.
நன்றி: தினதந்தி
விஜய் டி.வி.யில் வெங்கட்பிரபு தொகுத்து வழங்கும் கோலிவுட் கிங்!
http://img1.dinamalar.com/cini//CNew...4435000000.jpg
Quote:
எப்பவும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டி.வி., இப்போது கோலிவுட் கிங் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. இதனை தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர் வெங்கட்பிரபு தொகுத்து வழங்குகிறார். தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த ரசிகர்களை வைத்து மிகமிக சுவையாக நடத்தப்படும் ஒரு குவிஸ் நிகழ்ச்சிதான் இந்த கோலிவுட் கிங்.
ஒவ்வொரு வாரமும் ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் ரசிகர்களை இந்த கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப்பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். நிகழ்ச்சியில், ஒரு வாரத்தில் சுமார் 50 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்களை நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிகொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கு பதில்களை *சரியாக சொன்ன ஒரு ரசிகர் அந்த வாரத்தின் கோலிவுட் கிங்காக தேர்ந்தெடுக்கப்படுவார்.
நிகழ்ச்சியின் முதல்வாரமாக கடந்தவாரம் அக்டோபர் 27ம் தேதி அஜீத் ஸ்பெஷல் எபிசோடாக இருந்தது. இந்தவாரம் நவ.4ம் தேதி ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சிம்ரன் கலந்து கொள்கிறார். சிம்ரன் ரசிகர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் பற்றிய சுவையான சுற்றுகளும் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறும். சனிக்கிழமை தோறும் இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியை டைரக்டர் வெங்கட்பிரபு தனது பாணியில் தொகுத்து வழங்க உள்ளார்.
ஜெயா டிவி புதிய தொடர் மாயா!
Quote:
ஜெயா டிவியில் மாயா என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பி.நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோடி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் ஈஸ்வரி ராவ், அபிஷேக், வாணி, ஜெகதீஷ் ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள். பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.