iyarkkaiyennum ilayakanni ( santhi nilayam )
http://music.cooltoad.com/music/song.php?id=168664
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுகோ தூது விட்டாள்
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னை கண்டதாலோ
தன்னை எண்ணி கொண்டதாலோ
இலைகள் மரத்துகென்ன மேலாடையோ
இடையில் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ ?
கள்வனுக்கும் என்ன பெயரோ ?
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
மலையை தழுவிக்கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழக சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
கரையை தடவிச்செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச்செல்லும் மாற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
மாலைபொழுது ஆரம்பிக்கும் வேளையில் தலைவனும் தலைவியும் அருமையான இயற்கை சூழலில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் மனதில் பல எண்ணங்கள் பல ஆசைகள், ஆனால் அதை நேரடியாக கேட்டுவிட இயலாது. எப்பொழும் போல் தலைவனே ஆரம்பிக்கிறான், மறைமுகமாக. பாவம் இயற்கைதான் அவனிடம் மாட்டியது.
மாலைபொழுதின் ஆரம்பத்தில் வெள்ளிச்சம் குறைந்து கொண்டே வரும். அது அவனுக்கு இயற்கை என்னும் கன்னி தன் துணையை எண்ணி ஏங்கி சோபை இழப்பது போல் உள்ளதாம். ( தலைவியோட மனநிலையை, நைசா போட்டு வாங்கறதுக்காக :P ). இதற்கு அவளும் ஊம் கொட்டி விடுகிறாள் :P .
அடுத்து சூரிய அஸ்தமனம், அவள் முகத்தில் வைத்த பொட்டு போல் உள்ளது, அதுவும் கலைந்து மெதுவாக அவளது முகமெங்கும் பரவி, அவள் முகம் வண்ணமயமாகிறது ( இதில் உவமை மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. உவமேயத்தை அறிந்து கொள்வது நமது விருப்பம் :P :P ) உடனே தலைவியும் ( உஷார் பார்டி போல ) தாமரையை பார், அதற்கு சூரியனை பார்த்தாலே போதும். தாமரை தன் தலைவனுக்கு ( சூரியன் ) தூது விடுகிறதா என்று கூறுகிறாள் ( அதை போல் தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு அணுகுண்டை போடுகிறாள் :evil: :x ).
தலைவன் பார்த்தான், சரி நம்ம அணுகுமுறையை மாற்றுவோம் என்று தென்னைமரத்துக்கு வருகிறான். தென்னைஓலைகள் காற்றில் ஆடுவது, தலையை விரித்து ஆடுவதை போல் உள்ளதாம். இங்கே 'விரித்து' என்பதை 'விடுத்து' என பொருள் கொண்டால், தலைவன் இல்லாததால் தென்னையின் மனபோரட்டத்தை குறிக்கும். அடுத்த வரிகளை பற்றி இங்கே சொல்ல முடியாது :P :P ( இரண்டு பொருள் கொள்ளலாம் 8-) ). இந்த நிலையில் உள்ள தென்னை, தலைவியை பார்த்து நகைக்கிறதா ( அதாவது தலைவனை பக்கதில் வைத்து கொண்டு அணுக விட மாட்டென்னெங்கிறாளே என்று நினைத்து ) அல்லது தன் துணை தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தில் வெறுமையாக நகைக்கிறதா.
தலைவிக்கு தலைவன் தென்னையை பெண்ணாக உயர்த்தி பேசியது பிடிக்கவில்லை ( செல்லமான கோபம் :P ). இலைகள் என்ன அந்த தென்னைக்கு மேலாடை என்றால், அது இடையை மறைத்து கூட கட்டி கொள்ளவில்லையே ? தென்னையின் துணை யார் ? என்ன பெயர் ? ( ஆக மொத்தம் தலைவன் தலைவியை தென்னையின் மேல் பொறாமை கொள்ள வைத்து விட்டான் :redjump: )
தன் யுக்தி வேலை செய்து விட்டதை அடுத்து, தலைவன் தன் இச்சையை தெரிவிக்கிறான். தலைவியும் இன்னும் கொஞ்சம் நேரம் பொறு, அந்தி சாயட்டும், எனக்கும் சம்மதம் என்று கூறுகிறாள் :bluejump: :redjump:
Re: iyarkkaiyennum ilayakanni ( santhi nilayam )
Quote:
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
இயற்கையை பெண்ணாக உவமைப் படுத்திப் பார்க்கிறான் கவிஞன். இதனை நேரம் பளிச்சென காதலனுடன் பழகி சிரித்திருந்த இயற்க்கை, வீடு செல்லும் நேரம் வந்து விட்டதால்,
தன் காதலனை (சூரியனை :? ) பிரிந்து விடை பெறும் இருள் நேரம். முகம் வாட்டமடைகிறது. (பிரிவைக் குறிப்பிடும் நிறமும் இருள் தானே)
Quote:
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
இனி நாளை தான் தன் துணையை சந்திக்க முடியும் என்ற எண்ணத்தில், ஏங்குகிறாள்.. கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழக்கிறாள். (sun set)
Quote:
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
இயற்கையை பெண் என்று வரித்த பிறகு, அவளின் அங்கங்களான பச்சைப் புல்வெளியும் பொன்னிறத்து பூ அலங்காரமும்....ஆட... மெதுவாய் காற்றில் ஆட... அவள் அசைந்து அசைந்து விடை பெறுகிறாள்.
பிரியாவிடையாய் சூரிய முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவளின் முகம் (ஆகாயம்) மெல்ல மெல்ல சூரிய கிரணங்கள் முத்தமிட்டதால், வெளிர்ந்து, வெட்கத்தில் சிவந்து, விரிந்து வண்ணங்கள் பரவி (she bluses) விடை பெறுகிறாள் (the last kiss of the day)
Quote:
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுகோ தூது விட்டாள்
அவள் (இயற்கைக் கன்னி) தாமரையாய் சிரிப்பை உதிர்த்து (தாமரையும் சூரியனைக் கண்டே மலரும் என்பதால்) மெல்லச் விடை பெற்று, நாளை வருமாறு தலைவனுக்கு (சூரியனுக்கு) தூது விடுக்கிறாள்
Quote:
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னை கண்டதாலோ
தன்னை எண்ணி கொண்டதாலோ
பிரிவு துயரம் மெல்ல பரவ, 'நீ இன்னும் கொஞ்சம் நில்லேன்' என்று இயற்க்கை கன்னி, தென்னைத் தலை விரித்து இளநீரால் அழுது மன்றாடுகிறாள்.
இங்கு தான் தலைவன் / தலைவி வருகிறார்கள்
இந்த இயற்கை தன் காதலை எண்ணிக் கொண்டு கதறுகிறாளா? அல்லது நீ உன்னுடைய தலைவனுடன் இருக்கிறாய், தன் தலைவன் சூரியன் மறையப்போகிறான் என்று
உன்னைக் கண்டு பொறாமைப் படுகிறாளா?
Quote:
இலைகள் மரத்துகென்ன மேலாடையோ
இடையில் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ ?
கள்வனுக்கும் என்ன பெயரோ ?
தன்னையும் நாடகத்தில் இணைத்து விட்டதைக் கண்டு, தலைவி மேலும், தென்னையை இத்தனை அழகாய் பெண்ணாய் வரித்தாயே, அதன் இலைகள் தான் மேலாடையா, அல்லது இடையில் அணியும் நூலாடையா? அவளின் காதலன் யார், என்ன பேர் என்று அடுக்காய் வினாக்கள் தொடுக்கிறாள்.
Quote:
மலையை தழுவிக்கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழக சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
சரி இனி தென்னையை வரித்தால் கோபம் கொண்டு விடுவாளோ என்றெண்ணி அவளை வருணிக்க முற்படுகிறான்.
மலையை நீரோட்ட மேஹங்கள் தழுவி நிற்பது போல் அவள் இடையை கூந்தல் தழுவி நிற்க, அவள் நடை தேர் போல் இருப்பதாகக் கூறி, அடுத்த... அத்தியாயத்திற்கு (which is explicit) வழி வகுக்கிறான்.
Quote:
கரையை தடவிச்செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச்செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே
பேச்சை மாற்றி, காற்று எவ்வளவு ரம்யமாய் வீசுகிறது, சில் என்ற இந்த அருவியும் ஆறும், கால் நனைத்து சுகம் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரம் இதை ரசித்து, அந்தி-அழகின் அருகில் பேசியபடி இருப்போம் என சாமர்த்தியமாய் சொல்கிறாள்.